நிறம் மாறும் லிப்ஸ்டிக்!

Discussion in 'Technology News' started by NATHIYAMOHANRAJA, Oct 3, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  உதட்டுச் சாயத்தையும், அறிவியல் விட்டுவைக்கவில்லை. 'பிளஷ் அண்ட் விம்சி' என்ற லிப்ஸ்டிக் நிறுவனம், உடலின் வெப்பநிலை, வேதியல் தன்மைக்கு ஏற்றபடி, நிறத்தையும், அடர்த்தியையும் மாற்றிக் கொள்ளும் விந்தை லிப்ஸ்டிக்கை அறிமுகப்படுத்திஇருக்கிறது.
  பொதுவாக, தனக்கு ஏற்ற லிப்ஸ்டிக் நிறத்தை, தேடிதேடித் வாங்குவதுதான் பெண்களின் வழக்கம். ஆனால், எந்தவித உயிர்களையும் வதைக்காமல் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த லிப்ஸ்டிக், உடலின் தன்மைக்கேற்ப மாறும் தன்மையுடன் இருப்பது, பேஷன் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
  இதன் ரகசிய தொழில்நுட்பத்தை தெரிவிக்காவிட்டாலும், கோகோ வெண்ணெய், ஆலிவ் மற்றும் திராட்சை விதை எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி தயாரித்திருப்பதாகவும், பிளஷ் அண்ட் விம்சி அறிவித்துள்ளது.
  போதாக்குறைக்கு, இதைத் தயாரிப்பதற்கு டவுன் சின்ட்ரோம் உள்ளோர், போரில் அங்கமிழந்த ராணுவத்தினர், முதியோர் போன்றோரை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகவும், பிளஷ் அண்ட் விம்சி அறிவித்துள்ளது.
   

Share This Page