நெஞ்சிலாடும் நேசப்பூவே / Nenjilaadum NesaPoove BY Mithra

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Oct 18, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,277
  Likes Received:
  1,037
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  வணக்கம் தமிழ்சுரபி வாசக நெஞ்சங்களே

  அனைவருக்கும் இனிய சரஸ்வதி ஆயுத பூஜை வாழ்த்துக்கள்


  நமது தளத்திற்கு வந்திருக்கும் புது எழுத்தாளர் - மித்ரா

  வரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறது தமிழ்சுரபி ...


  கதையின்பெயர்- நெஞ்சிலாடும் நேசப் பூவே
   
  Mithra26 likes this.
 2. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,277
  Likes Received:
  1,037
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  வாழ்த்துக்கள் மித்ரா

  [​IMG]
   
  Mithra26 likes this.
 3. Mithra26

  Mithra26 Member

  Joined:
  Oct 18, 2018
  Messages:
  37
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  வணக்கம் நண்பர்களே,

  நான் இத்தளத்திற்கு புதிது, இங்கு என் படைப்பை உங்களோடு பகிர்ந்து கொள்ளகிறேன். நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக குறைகளை குறிப்புடுங்கள் நட்பாக, வாசகர்களாக உங்களிடம் இருந்து வரும் விமர்சனங்களையும் விவாதங்களையும் வரவேற்கிறேன்.

  பல எழுத்தாளர்கள்,பெரியவர்கள், பெரியார்கள் கூறிய ஒன்றைத்தாத்தான் நானும் கதையாக எடுத்துள்ளேன் என்னால் முயன்றவரை அதை சிறப்பாக சொல்லவே முயற்சிக்கிறேன் இறைவனின் அருளும் தங்களின் ஆதரவையும் வேண்டியே தொடங்குகிறேன்.


  நெஞ்சிலாடும் நேசப் பூவே - மித்ரா

  நாயகன் : ப்ருத்விராஜ்

  நாயகி : இலக்கியா

  கதை : புலரும் காலைப் பொழுதை
  முழு மதியும் பிரிந்து போவதில்லையே

  தன்னவனை தேடி இரவெல்லாம் தனிமையில் அலைந்த வெண்மதி, தன் உடல் கரைய, உயிர் பிரியும் நேரமும் தன்னைவனை பார்த்துவிட மேற்க்கு வான் நோக்கி ஏங்கியிருந்த நேரம் வெகு தொலைவில் சிறு ஒளிக்கரம் ஒன்று தோன்றி அவளின் ஏக்கத்தை அதிகப்படுத்தியது.

  பல இன்னல்களை கடந்து தன்னவளின் முழு வதனம் காண கிழக்கு வானில் மேலெழுந்த ஆதவன் எதிர்திசை பார்க்க, சிறிதாய் இருந்த பிறை மதியும் அவன் கண் முன் காணமல் கரைந்து போனாள்.

  அதில் உக்கிரம் கொண்டவன் தன் அத்தனை ஒளிக்கரத்தையும் நீட்டி பூமியையே எரிக்க முயன்றான்.
  அந்த வெம்மைக்குள் மதியும் கரைந்து உயிர் துறந்தாள் ஆனால் அவள் மீண்டும் நாளை உயிர் பெற்று வருவாள் தன்னவனை தேடி, ஓடோடி வருவான் அவனும் அவளை காண. பல ஆயிரமாண்டுகளாக அந்த காதலர்களின் முயற்சி மட்டும் நின்றபாடில்லை.
   
 4. Mithra26

  Mithra26 Member

  Joined:
  Oct 18, 2018
  Messages:
  37
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  வாய்ப்பளித்ததற்கும், தளம் அமைத்து கொடுத்தற்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி.
   
 5. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  372
  Likes Received:
  241
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Congrats dear. All the best
   
  Mithra26 likes this.
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  560
  Likes Received:
  337
  Trophy Points:
  63
  Gender:
  Female
  all the best
   
  Mithra26 likes this.
 7. Suganyasomasundaram

  Suganyasomasundaram Active Member

  Joined:
  Nov 23, 2017
  Messages:
  206
  Likes Received:
  121
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  Chennai
  Location:
  Chidambarm
  Nice....wonderful lines..
   
  Mithra26 likes this.
 8. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  557
  Likes Received:
  343
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Hi
  Eppo story start ?
   
  Mithra26 likes this.
 9. Mithra26

  Mithra26 Member

  Joined:
  Oct 18, 2018
  Messages:
  37
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  images(9)-01.jpeg

  நேசம் 1

  ஓரு வீட்டில் நீயும் நானும்

  ஒன்றாக வாழும் நேரம்

  எதிர்பார்த்தே இருந்தேன் பலகாலம்  தன்னவனை தேடி இரவெல்லாம் தனிமையில் அலைந்த வெண்மதி, தன் உடல் கரைய, உயிர் பிரியும் நேரமும் தன்னைவனை பார்த்துவிட மேற்க்கு வான் நோக்கி ஏங்கியிருந்த நேரம் வெகு தொலைவில் சிறு ஒளிக்கரம் ஒன்று தோன்றி அவளின் ஏக்கத்தை அதிகப்படுத்தியது.  பல இன்னல்களை கடந்து தன்னவளின் முழு வதனம் காண கிழக்கு வானில் மேலெழுந்த ஆதவன் எதிர்திசை பார்க்க, சிறிதாய் இருந்த பிறை மதியும் அவன் கண் முன் காணமல் கரைந்து போனாள். அதில் உக்கிரம் கொண்டவன் தன் அத்தனை ஒளிக்கரத்தையும் நீட்டி பூமியையே எரிக்க முயன்றான்.  அந்த வெம்மைக்குள் மதியும் கரைந்து உயிர் துறந்தாள் ஆனால் அவள் மீண்டும் நாளை உயிர் பெற்று வருவாள் தன்னவனை தேடி, ஓடோடி வருவான் அவனும் அவளை காண. பல ஆயிரமாண்டுகளாக அந்த காதலர்களின் முயற்சி மட்டும் நின்றபாடில்லை.  தை மாதத்தின் அதிகாலை தாண்டியிருந்த நேரம், குளிர் இழுத்து மூடியிருந்த போர்வையை தாண்டி உடல் வருடியதில் நித்திரை களைந்தான் ப்ருத்விராஜ். இரவு வெகு நேரம் விழித்திருந்ததின் விளைவு விழித்தும் கண் திறக்க மனமின்றி தன்னவளின் கன்னம் உரசும் இதமும், மார்புச் சூடும் வேண்டி அவன் கைகள் அவளை தேடி மெத்தையில் துழாவியது.  அவளில்லை, ஏமாற்றம் மட்டுமே இருந்தும் அவள் வாசம் அந்த மெத்தையில் நுகர்ந்தான். அவன் மெத்தையில் புதிதாய் பெண்ணின் வாசம், அவன் வீட்டிலும் புதிதாய் அதிகாலை காபி வாசம். அதை ஆழ்ந்து உள்ளிழுத்து சுவாசித்தவாறே எழுந்து சோம்பல் முறித்தான். நன்கு விடிந்தும் அவன் வேலையை தொடராததை அவனுக்கு உணர்த்த ஜன்னல் வழி ஆதவனும் நுழைத்து வந்துவிட்டான்.  பொங்கிய சுடு வெண்பாலில் கசக்கும் கரு நிற டிக்காக்ஷன் ஊற்றி கலக்கிக் கொண்டிருந்தாள் இலக்கியா. சாதாரண நூல் சேலையில் அதிகாலை பனிமலர் போல் மென்மையான சருமம், மலரின் இதழ் தோட்ட பனித்துளிகள் போல் தலையில் சுற்றியிருந்த வெண்மை நிற தூவலையிலிருந்து வெளிப்பட்ட காது, கழுத்தோர முடியிலிருந்து நீர் சொட்டி முதுகில் முத்து முத்தாய் படித்திருந்தது.  திடீரென அவள் எதிர்பாரா நேரம் ப்ருத்வியின் கரங்கள் அவள் இடையை அழுத்தி அணைக்க, பின் முதுகில் அவனிதழும்,மீசையும் உரசி கூச்சமூட்ட முத்தமிட்டான். ஆயிரம் முத்தங்கள் பெற்றிருந்தாலும் அவனிதழ் முத்தம் ஒவ்வொரு முறையும் புதிதாக மாறி அவளை சிலிர்க்க செய்தது.  காபி கப்பை சிறிது நகற்றி வைத்தவள் அவன் கைகளை விலக்கி திரும்பி நின்று முறைத்தாள். "லேட்டாச்சி, இதுல எப்போ நீங்க ஜாக்கிங் போயிட்டு வந்து, ஸ்டேஷன்க்கு எப்போ கிளம்புறது?" என்றாள் அதட்டலாக.  மறுப்பாய் தலையசைத்துக் கொண்டவன் முதல் நாளே அதட்டலா? அதுவும் என்னிடமே என எண்ணியவன் இடையில் இருந்த அவன் கரத்தை நகற்றி வயிற்றில் கிள்ள, "ஐயையோ மாமா தெரியாம சொல்லிட்டேன் விட்டுடுங்க!" அவன் அணைப்பிலிருந்து வலியுடன் விலக போராடினாள்.  ஏதோ மனமிறங்கி அவன் கைகளை விட்டு விட்டு கள்ளச்சிரிப்பு ஒன்றை தூவினான். அவன் சிரிப்பின் அர்த்தம் அவளல்லவா அறிவாள். எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு நொடியில் விலக்கியவள் அவன் கைகளில் காபி கப்பை திணித்து அவனையும் கிட்ச்சனிலிருந்து வெளியே தள்ளினாள்.  வந்து கவனிச்சிக்கிறேன் என்பது போல் ஒரு பார்வை பார்த்த ப்ருத்வி கிரௌண்ட்க்கு கிளம்பிச் சென்றான். அவன் செல்லவும் நிம்மதி மூச்சு விட்டவள் அவன் கிள்ளிய இடத்தை தேய்த்துக் கொண்டு சமையல் வேலையை கவனிக்க தொடங்கினாள். இட்லியை ஊற்றி வைத்தவள், கொத்தமல்லி இலைகளை கிள்ளி வைத்து அலசி அரைத்து சட்னியும் தயார் செய்து கொண்டிருந்தாள்.  இனி இப்படி தான் தன் வாழ்வு, ஒவ்வொரு விடியலும் இப்படி தான் என்பதை மனதில் பதிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். ப்ருத்வியோடு ஒரு நாள் வாழ்வு என்பது ஒருயுகம் வாழ்ந்து விட்டதை போன்று நிறைவை தந்தது. அதிகாலை அவன் கொஞ்சலில் தொடங்கி, அவனுக்கா சமைத்து, வாசல் வரை வழியனுப்பி, மாலை அவனுக்கா அவன் நினைவோடு காத்திருந்து, இரவில் தன் மடியில் தலை சாய சிகை கோதி பல கதைகள் பேச வேண்டும். இந்த வீட்டில் தான் தங்கள் குழந்தைகள் தளிர் நடை பயிலுமோ என்றெல்லாம் கற்பனையில் அமிழ்ந்திருந்தாள்.  ஜாக்கிங் முடித்து வந்தவன் குளித்து உடை மாற்றிக் கொண்டிருக்க, அறைவாசலில் வந்து நின்றவள் அவனை விழிவிரிய ஆச்சர்யமாக பார்த்தாள். யூனிபார்ம் இல்லாது பட்டு வேஷ்டியை மடிப்பிட்டு கட்டிக்கொண்டு இருந்தான்.  வெள்ளை பனியன் மட்டுமே அணித்திருந்தவனின் கழுத்தில் தங்கச்சங்கிலி நீர் துளிகளில் பளபளத்தது. திண் தோள்கள், வலுவேறிய நீண்ட புஜங்கள், ஆறடியை நெருங்கிய உயரத்தில், அளவான உடல்வாகுடன் திராவிட முக சாயலில் மாநிறத்தில் நின்றிருந்தான்.  தினமும் செய்யும் உடற்பையிர்ச்சியில் உரமேறிய உடல் அவனை அழகன் என்பதை தாண்டி கம்பீரமானவனாக காட்டியது. போலீஸ்காரன் என்ற ஆடையாளத்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டியது எப்போதும் உதட்டில் உறைந்திருக்கும் இளநகை. அலை அலையான கருங்கேசம் முன் நெற்றியில் விழ, வேஷ்டியை கட்டி முடித்து முடியை உதுக்கியவாறு நிமிர்ந்தான்.  தன்னையே பார்த்தவாறு இல்லையில்லை ரசித்தவாறு நின்றிருந்த இலக்கியாவை கண்டு கொண்டவன், "எவ்வளவு நேரமா என்னை சைட் அடிக்கிற?" என கண்சிமிட்டி இதழ் விரிய கேட்டான்.  "நாலு நிமிஷமா!" என்றவள் சட்டென பார்வையை மீட்டுக் கொண்டாள்.  ப்ருத்வியின் சுவாசம் அவள் மேல் படரும் அளவிற்கு நெருங்கி வர அவள் கதவில் சாய்ந்தவாறு தலை குனிந்தாள். அவளை உரசாது கோவைப்பழமாய் சிவந்த அவள் உதட்டின் ரேகைகளை வருடியவாறு, "இந்த உதடு பொய் சொல்லுது அதுவும் போலீஸ்காரன் கிட்டையே" என கிசுகிசுத்தான்.  பேசயியலாது தலையை மட்டும் மறுப்பாய் அசைத்தாள். உதடை விடுத்து அவள் புருவங்களையும், இமைகளையும் மென்மையாய் வருடியவன், "நாலு வருஷமா இந்த கண்ணு என்னையே தானடி பார்த்துகிட்டு இருக்கு" என்று இதழொற்றினான்.  "ம்ம்ம்...மாமா..." என அவள் கிசுகிசுக்க, மொத்தமாக அவளிடத்தில் மயங்கி தான் விழுந்தான்.  தெளியாத மயக்கம் அவளுள் மூழ்க துடித்தன உணர்வுகள், அவள் கழுத்து வளைவில் இதழ் உரசிக் கொண்டிருந்தவன் அவள் நிலை புரிய சட்டென விலகினான். அவளோ கன்னங்கள் சிவக்க இன்னும் சுவற்றில் ஒட்டியவாரே நின்றிருந்தாள்.  ஒரு பார்சலை அவளிடம் கொடுத்தவன், "சீக்கிரம் ரெடியாகிவா" என விலகிச் சென்றான். ப்ருத்வி கொடுத்த பட்டாடையை உடுத்திக் கொண்டு, தலை உலர்த்தி பின்னலிட்டு பூச்சூடி வந்தாள். அதற்குள் ப்ருத்வி அவளுக்காக நெய் தோசை ஊற்றி வர இருவரும் உண்டுவிட்டு கிளம்பினர்.  அவர்கள் அமர, கார் காவலர் குடியிருப்பு நுழை வாயிலை கடந்து வெளியே வந்து கொண்டிருந்தது. தன் அலைபேசியை எடுத்தவன் யாரிடமோ பேசியவாறு வர, இலக்கியா வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தாள். சென்னை பெருநகரம் ஊர்ந்து செல்லும் வாகன நெரிசல், வானுயர் கட்டிடங்கள் என அனைத்தும் புதிதாக விழி விரிய பார்த்தாள்.  அவளுக்கு என்னவோ அது ஒன்றும் பிடிக்கவில்லை, இருப்பினும் எல்லாவற்றையும் ப்ருத்விக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். வழியில் கோவில் ஒன்றை கடந்து செல்ல பார்த்துவிட்டவள் மெல்ல அவன் கைகளை சுரண்டினாள். போனில் பேசியவாறு வந்தாலும் பார்வை முழுவதும் அவள் மேலே தான் இருந்தது, ஆகையால் அவள் செய்கையின் அர்த்தம் உணர்ந்தவன் பேசி முடித்து விட்டு, "சுந்தர் அண்ணா அந்த கோவில் கிட்ட கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க" என்று எப்போதும் போல் சிரித்தான்.   
  Divya s and kannamma 20 like this.
 10. Mithra26

  Mithra26 Member

  Joined:
  Oct 18, 2018
  Messages:
  37
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  ஐயோ இவர் முன்னாடி போய் இப்படி சிரிக்கிறாரே என பார்வையால் கெஞ்ச, அவனோ மேலும் வசீகரிப்பது போல் சிரித்தான் அவளால் பதிலுக்கு முறைக்க தான் முடித்தது. அவரும் அம்மன் கோவில் வாசலில் நிறுத்த, இறங்கி சென்று இருவரும் வணங்கி வந்தனர். அடுத்ததாக கார் நின்றது பதிவாளர் அலுவகம் முன்பு தான்.  அதுவரை இலகுவாக இருந்த இருவரின் மனதிலும் கனமேறியது. ஊரில் இளவரசன் போல் வாழ்ந்து வந்தவன், தன் அண்ணன் மணமேடைக்கு அவனை அழைத்து வர, அண்ணி மூன்றாம் முடிச்சிட, தோழிகள் கேலிபேச, பாட்டிகள் ரகசியம் பேச, பெற்றோரும்,பெரியோரும் ஆசிர்வதிக்க எப்படி நடக்க வேண்டிய தங்கள் திருமணம் இப்படி நடக்க இருக்கிறதே என்று நினைக்கும் போதே அவள் கண்கள் கலங்கியது.
  அவனுக்கோ மனதில் பெரும் குற்றவுணர்வு தங்கள் காதலுக்காக நான் எதுமே செய்யாது அவள் மட்டும் எத்தனை கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறாள் ஆனால் நானோ அவளுக்கு இன்னும் கஷ்டத்தை தானே தரப்போகிறேன். இவள் தாங்குவாளோ? இறைவா! எந்த ஆண்மகனும் திருமணமான முதல் நாளே காதல் மனைவிக்கு செய்ய கூடாத செயலை நான் செய்ய இருக்கிறேனே! என்னும் போதே அவனுக்கு இதயம் வலித்தது.  ஆனால் அதற்கும் மேல் இருவருக்கும் யோசிப்பதற்கு நேரமேயில்லை. திருமணத்தை கையெழுத்திட்டு பதிவு செய்தனர். ப்ருத்வியுடன் பணிபுரியும் காவலர் நண்பர்கள் இருவரும், அவர்களின் தம்பி மருத்துவர் பரத் என மூன்று பேர் மட்டுமே இருக்க, அவர்கள் முன்னிலையில் மாலை மாற்றினார்.  நண்பன் தந்த மாங்கல்யத்தை வாங்கிய ப்ருத்வி அதை இலக்கியவாவின் கழுத்தில் அணிவித்து மூடிச்சிட்டான். இலக்கியாவின் கண்கள் கலங்க நிலைத்த பார்வையாக மாங்கல்யத்தை வெறித்தவாறு இருந்தாள்.  நண்பர்கள் மூவரும் ப்ருதிவின் கரம் பற்றி, தோளோடு அனைத்து வாழ்த்து கூறினார். "அண்ணா மேரேஜ் சேர்ட்டிபிகேட் தர ஒரு மணி நேரம் ஆகுமாம் நீங்க கிளம்புங்க, நான் வாங்கிட்டு ஏர்போட்ல வந்து தரேன்" என பரத் கூற, மணியை பார்த்துவிட்டு சரியென்று தலையாட்டிட்டான்.  தன் புது மனைவியோடு கிளம்பினான். அதுவரை அனைத்துமே மென் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் ஹோட்டல் அழைத்து வரவும் புரியாத பார்வை பார்த்தாள். வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் எங்கே அழைத்து செல்கிறான் அவளுக்கு என்னவென்று புரியவில்லை.  ப்ருத்விக்கு விலக்கி கொண்டிருக்க நேரமில்லை, அவன் புன்னகையை தொலைத்து ஏதோ யோசனையுடனே இருந்தான். அவளுக்குமான உணவை ஆடர் செய்தவன், அவளையும் உன்ன வைத்து தானும் உண்டுவிட்டு ஏர்போர்ட் கிளம்பினான். காலையில் ஒன்பது மணிக்கு திருமணம், ஒன்பதரைக்கு உணவுண்டனர், ஒன்பது நாற்பத்தைந்துக்கு ஏர்போர்ட் உள் இருந்தனர். எல்லாம் திட்டமிட்ட பயணம் அவளிடம் எதுவும் கூறவில்லை.  மெல்ல அவன் கைகளை சுரண்டி அழைத்தவள், "நாம இப்போ எங்க போறோம் மாமா?" என்றாள்.  அவள் கேள்வியில் சற்று நேரம் தொலைத்திருந்த புன்னகையை தேடி எடுத்துக் கொண்டவன், "புது பொண்டாட்டியை கூட்டிட்டு எங்க போவாங்கலாம், எல்லாம் நம்ம ஹனிமூன்க்கு தான்" என கண்சிமிட்டினான்.  பொது இடத்தில் இப்படி பேசுகிறானே என நினைத்தவள் அதற்கும் மேல் கேள்வி கேட்கவில்லை. பத்து முப்பதுக்கு பிளைட் பரத்தும் திருமண சான்றிதழை கொண்டு வந்து தர நன்றி கூறி வாங்கிக் கொண்டவன் இலக்கியாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.  அடுத்த ஒன்றரை மணி நேரம் பயணம் முடித்து அவர்கள் இறங்கியது தூத்துக்குடி ஏர்போட்டில். வெளியில் அவன் நண்பன் சேகர் காருடன் காத்துக் கொண்டிருந்தான் அவனிடம் காரின் சாவியை வாங்கிக் கொண்டான்.  "மாதவன் வந்துட்டான்னா?"  "இல்லை ப்ருத்வி நாளைக்கு தான் வாரான்"  "சரிடா..."  எதுவோ சொல்ல நினைத்து சொல்லாது விட்டுவிட்டான் சேகர். அவள் அமரவும் காரை ஸ்டார்ட் செய்தான் ப்ருத்வி. இலக்கியாவிற்கு புரிந்து விட்டது அவன் தங்கள் ஊருக்கு தான் அழைத்து செல்கிறான் என்று. ஏனோ இனம் புரியாத பயமும் கலக்கமும் அவளை அழுத்தியது. மனம் தைரியம் தொலைத்து வெம்பி ததும்பியது, அவன் அருகில் இருந்தும் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தாள்.  அவள் முகத்தில் இருந்த கலக்கத்தை கண்டு கொண்டான் இருந்தும் எதுவும் ஆறுதல் சொல்லவில்லை. அடுத்ததாக மூன்று மணி நேர பயணம் எப்போது கண்மூடி உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஊரின் எல்லையை நெருங்கி இருந்த நேரம் சாலையோரம் வண்டியை நிறுத்தி விட்டு அவள் கன்னத்தில் தட்டி எழுப்பினான்.  தூக்கத்திலிருந்து விழித்த குழந்தையை போல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவளை காண்கையில் ப்ருத்விக்கு உள்ளம் உருகியது. சட்டென அவளை இழுத்து தன் நெஞ்சோடு இறுக்க அணைத்துக் கொண்டான். அவளுக்கோ எதுவுமே புரியவில்லை. சற்று விலகியவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்து தலை கோதியவாறு அவள் விரலோடு விரல் கோர்த்தான்.  "இலக்கியா என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தானே! நான் என்ன சொன்னாலும் ஏத்துப்ப தானே!"  "ஹ்ச்சு..." என்ன இது அர்த்தமற்ற கேள்வி அவளைவிட அவன் மீது தானே அவள் நம்பிக்கை முற்றிலும் இருந்தது. இன்றல்ல என்றும் அவன் மேல் கொண்ட காதலும், நம்பிக்கையும் துளியும் குறைந்துவிடாது.  "அதுக்கில்ல நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். இதனால உனக்கு தான் வலியும் வேதனையும் அதிகம், எனக்காக இதை செய்வியா?"  சத்தியமாக அவளுக்கு புரியவில்லை. தனக்கு வலியென்றால் அவனுக்கும் வலிதானே, "நமக்கா நம்ம காதலுக்கா" என கண்மூடி திறந்து தைரியமுடன் கூறினாள்.  அதில் ப்ருத்வி வசீகரமாய் புன்னகைக்க எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். மறுநொடி அவள் இதழ் அவன் இதழலுக்குள் சிறைப்பட்டிருந்தது நீண்ட நெடிய பொழுதுகளாக நீட்டித்து விட முடியாது தவித்தான். மனதில் ஒரு குற்றவுணர்வு, உயிரையே பிரிவது போன்ற தவிப்பு அவனிடத்தில்.  என்னதான் அவனுக்கு சமாதானம் கூறினாலும் ஏற்கனவே கலக்கத்தில் இருந்தவளுள் காரணமறியா கவலை ஒன்றும் கலந்தது. இருவருக்குமே அந்த நேரம் ஆறுதலாய் ஒரு இதழொற்றல் தேவையாக இருந்தது. அந்த முத்தத்தில் வேறெந்த வித உணர்வையும் இருவரும் உணரவுமில்லை பரிமாறவுமில்லை.  சில நிமிடங்களில் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தான் அவன் ஊரை நோக்கி அவர்கள் திருமண வாழ்வின் தொடக்கத்தை நோக்கி. இனிமையாக அமையும் என்று எதிர்பார்க்க இயலாது.
   

Share This Page