நெஞ்சுக்குள் நுழைந்தவனே( ளே ) - Nenjukkul Nulainthavane (le) By Kodiuma

Discussion in 'Kodi Uma Stories' started by kodiuma, Jan 4, 2016.

  1. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    hi ranya thanks a lot da
    unakku pidichathil me happy da
    happy womens day
    tom next ud oda varen da
    keep supporting da
     
  2. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    hi padma sis thanks a lot sis
    wishing u also a happy womens day sis
    naalaikku ud undu sis
    keep supporting sis
     
  3. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    [​IMG]

    அத்தியாயம் – 16

    அங்கே அரண்மனையில் ப்ரியா , தன்னை மறந்த யோசனையில் இருந்தாள் . அவளின் யோசனை எல்லாம் அருவிக்கரையில் , திவாகர் பேசிய விஷயத்தில் இருந்தது .

    “ நான் கட்டின தாலிக்கு மதிப்பு கொடுக்கிறேன் சொன்னான் , அப்படினா அவன் என்னை ஏத்துகிட்டான் . ஆனா முழுசா என்னை ஏத்துக்க இன்னும் டைம் வேனும் சொல்லுறான் , அப்போ அவன் காதலுக்காக நாம இன்னும் காத்து இருக்கணும் “ என்று ப்ரியா எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது , அவள் காதை பிடித்து திருகினான் திவாகர் .

    “ வந்த வேலையை பார்க்காம அப்படி என்ன கனவு உனக்கு , எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் உன்னை . அப்படி என்ன கனவோ , முதல போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா “ என்று திவாகர் அவளை விரட்டினான் .

    “ ஆஆஆ... இந்த காது திருகிற வேலையை நீ இன்னும் விடலையா . சரி சரி முறைக்காத நான் குளிச்சிட்டு வரேன் , கொஞ்சம் சிரி உர்ர்ன்னு உன்னை பார்க்க நல்லாவே இல்லை “ என்று அவனுக்கு பலிப்பு காட்டிவிட்டு குளிக்க சென்றாள் .

    “ ஷப்பா .. இவளை எல்லாம் எப்படி இந்த வேவு வேலைக்கு , இந்த அஜய் மாம்ஸ் அனுப்ப நினைச்சாங்க . அவ தனியா வந்து இருந்தா , இப்படியே கனவு உலகத்துல தான் இருந்து இருப்பா . நல்ல வேலை இவ கூட நானும் போறேன் சொன்னது நல்லதா போச்சு , இல்லைனா இங்க நடக்குறது என்னனு தெரிஞ்சிக்கவே முடியாது “ என்று எண்ணிக் கொண்டு அவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டதை பார்க்க தொடங்கினான் .

    அதற்குள் ப்ரியா குளிக்க சென்று ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் , அவனுக்கு கண் மண் தெரியாத கோவம் வந்தது . குளியலறை கதவை அவன் தட்ட போகும் சமயம் , அவள் வெளியே வந்தாள் .

    வெளியே வந்தவளை பார்த்து , அவன் கண்கள் அவள் மேனியை தான் தழுவியது . அவளோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் , அவனிடம் தன் செல்லை கொடுத்து அவனை பிடித்து குளியலறைக்குள் தள்ள முயன்றாள் , ஆனால் அதற்குள் அவன் சுதாரித்து விட்டான் .

    “ ஹே என்ன எதுக்கு இப்படி உள்ள தள்ளுற , நான் எல்லாம் குளிச்சிட்டேன் “ என்று கூறி விட்டு அவன் கண்கள் மேலும் அவள் மேனியில் ஊர்வலம் வந்தது .

    “ நான் டிரஸ் மாத்தனும் , அப்புறம் நான் பக்கத்து ரூம் ல நடந்த பேச்சுவார்த்தையை வீடியோ எடுத்து இருக்கேன் . அதை பாருங்க , நான் அதுக்குள்ள டிரஸ் மாத்திருவேன் “ என்று அவனை உள்ளே தள்ளுவதில் முனைந்தாள் .

    “ ஆமா நான் நேத்து சொன்னது மறந்து போச்சா , நான் இந்த கல்யாணத்தை மதிக்கிறேன் சொன்னேன் ல . அப்புறம் எதுக்கு என்னை உள்ளே தள்ளுற , நான் உன் புருஷன் தான ப்ரியா சும்மா நீ என் முன்னாடியே டிரஸ் மாத்து “ என்று திவாகர் அவளை சீண்டினான் .

    அவளோ வெட்கத்தில் நெளிந்தாள் , அவன் இப்படி எல்லாம் சொல்லுவான் என்று நினைக்கவில்லை . அவன் பார்வை வேறு அவளை ஏதோ செய்தது , படபடப்பாக வேறு இருந்தது .

    அவள் துணியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் செல்ல முற்படவும் , அவன் தடுத்தான் . பின்னர் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு , அவன் உள்ளே சென்றான் அவளின் செல்லை எடுத்துக் கொண்டு .

    “ அவன் பார்வை என்னை இப்படி படபடக்க வைக்கும் நினைக்கல , விட்டா இங்க நானே மாத்தி விடுறேன் சொல்லுவான் போல கள்ளன் “ என்று மனதிற்குள் அவனை நினைத்துக் கொண்ட வேகமாக உடையை மாற்றினாள் .

    “ நான் டிரஸ் மாத்திட்டேன் , வெளியே வரலாம் “ என்று கூறிவிட்டு குளியலறை கதவை திறந்து விட்டாள் .

    “ ஆமா இந்த வீடியோ நீ எப்போ எடுத்த , இந்த லேடி யாரு எல்லா டிடைல்ஸ் வேணும் “ என்ற அவன் முகம் சீரியஸாக மாறவும் அவள் மனதிற்குள் கடமை கண்ணாயிரம் வந்துட்டான் என்று நினைத்துக் கொண்டாள் .

    “ இப்போ தான் குளிக்கலாம்ன்னு உள்ளே போனப்போ , பக்கத்து ரூம் ல யாரோ பேசின மாதிரி இருந்தது . நான் செல் கைல வச்சு இருந்தேனா , அதான் அந்த ஜன்னல் வழியா இறங்கி அடுத்த ரூம் ல என்னால முடிஞ்ச வரைக்கும் நான் அவங்க பேசுறதை வீடியோ எடுத்தேன் “ என்று அவள் கூறியதை கேட்டு அவனுக்கு கோவம் வந்தது .

    “ ஹே அறிவு இல்லை , இந்த சர்கஸ் வேலை எல்லாம் இன்னும் விடலையா நீ . நாம இருக்கிறது ரெண்டாவது மாடி , கீழே விழுந்தா என்னவாகும் தெரியுமா . இன்னொரு தடவை இப்படி செய்த , அப்புறம் நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது “ என்று அவளை திட்டி தீர்த்து விட்டான் .

    அவனின் கோவம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது , பின்னே மனதில் காதல் இல்லாமல் இப்படி ஒரு வார்த்தை கூற முடியாதே . எத்தனையோ தடவை இப்படி எல்லாம் செய்து இருக்கிறாள் , அப்பொழுது எல்லாம் குரங்கு என்று கிண்டல் செய்வானே தவிர இப்படி கோவப்பட்டது கிடையாதே .

    அதுவே ப்ரியாவிற்கு அவனுக்கு தன் மேல் , காதல் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள போதுமானதாக இருந்தது . ஆனால் அவன் உணர்ந்தானா என்று தான் தெரியவில்லை , கூடிய சீக்கிரம் உணர்ந்து கொள்ளுவான் என்று அவளுக்கு இப்பொழுது நம்பிக்கை வந்தது .

    “ மாம்ஸ் உங்களுக்கு நான் ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் , கொஞ்சம் அதை பாருங்க அப்புறம் நாங்க இன்னும் கொஞ்சம் டிடைல்ஸ் சேகரிச்சு சொல்லுறோம் . நீங்க கிளம்பிடீன்களா , சரி மாம்ஸ் நாங்க பார்த்து இருக்கிறோம் , நீங்களும் பார்த்து வாங்க “ என்று கூறிவிட்டு போனை வைத்தான் திவாகர் .

    “ அதுக்குள்ள எங்க அண்ணாவுக்கு சொல்லிடீங்க போல , செம வேகம் தான் . சீக்கிரம் வாங்க கீழே போகலாம் , எனக்கு பசிக்க வேற செய்யுது “ என்று கூறிவிட்டு அவனை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள் .

    கீழே இவர்கள் வந்ததை பார்த்து விழி விரித்து பார்த்தாள் நாயகி , அவளுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை . நாயகி அங்கே சித்தூர் சென்று இருந்த பொழுது , இவர்கள் தான் இங்கே கிளம்பி வந்து விட்டதால் அவளுக்கு தெரியாமல் போனது .

    தேவராஜ் அவர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தவும் , அவளுக்கு திவாகர் இன்ஸ்பெக்டர் எனவும் அவள் முகத்தில் அப்பட்டமாக பயம் தெரிந்தது முதலில் . ஆனால் காரணம் இல்லாமல் தேவராஜ் , இங்கே அவர்களை தங்க வைத்து இருக்க மாட்டான் என்று நம்பி அவள் சிறிது பயம் தெளிந்தாள் .

    நாயகியின் கண்களில் உள்ள பயத்தை , குறித்துக் கொண்டான் திவாகர் . ப்ரியாவோ நாயகி யார் என்று , ஈஸ்வரியிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் .

    ஈஸ்வரிக்கு அவளை பற்றி சொல்ல பெரிதாக தோன்றவில்லை , ஆனால் தன் தோழிக்கு பிரியமான மருமகள் கேட்கிறாள் என்று அவளை பற்றி தனக்கு தெரிந்ததை எல்லாம் கூறினார் .

    “ ச , இப்படி ஒரு பிறவியா . கண்டிப்பா அண்ணி இந்த நாயகியை சும்மா விட போறது இல்லை , எப்படி எல்லாம் சதி வேலை பார்த்து இருக்கு இந்த அம்மா “ என்று மனதிற்குள் பொருமினாள் ப்ரியா .

    “ நீங்க இன்னைக்கு எந்த இடத்துக்கு சுத்தி பார்க்க போறீங்க , சொன்னா நான் என் ஆள் ஒருத்தனை உங்க துணைக்கு அனுப்புவேன் “ என்று தேவராஜ் கூறவும் , திவாகர் மனதிற்குள் சிரித்தான் .

    “ இன்னைக்கு நாங்க இங்க தான் , இங்க இன்னைக்கு இவ நாட்டுக்கோழி சமையல் செய்ய போறேன் சொன்னா “ என்று திவாகர் கூறவும் , ப்ரியாவிற்கு மனதிற்குள் பயம் பிடித்தது .

    “ அட பாவி அன்னைக்கு சும்மா வாய்க்கு வந்ததை சொன்னேன் , அதுவும் எனக்கு நாட்டு கோழி வைக்க தெரியாது . இப்படியா டா நீ மாட்டி விடுவ , மவனே மேலே ரூம்க்கு நீ வந்து தான ஆகணும் அப்போ கவனிச்சுக்கிறேன் டா உன்னை “ என்று மனதிற்குள் கருவிக் கொண்டாள் .

    “ ரொம்ப சந்தோசம் டா கண்ணா , கல்பு நாட்டுகோழி குழம்புன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் டா . உனக்கு என்ன தேவையோ அது எல்லாம் இந்த சமையல்கார அம்மா கிட்ட கேளு டா , உனக்கு எடுத்து கொடுப்பாங்க “ என்று ஈஸ்வரி அவளை அழைத்துக் கொண்டு சமையலறையில் விட்டு சென்றார் .

    “ ஹையோ இந்த கல்பு நாட்டுகோழிக்கு நான் எங்க போவேன் , டேய் திவாகர் இன்னைக்கு உன்னை சும்மா விட போறது இல்லை டா . கூகிள் ஆண்டவர் தான் உதவி பண்ணனும் , ஹையோ பார்த்து பண்ணா இந்த அம்மா என்ன நினைக்கும் “.

    “ முதல நாம ரூம்க்கு போய் மனபாடம் பண்ணிட்டு வந்திடலாம் , அப்புறம் வந்து அவங்க கிட்ட சொல்லி செய்ய சொல்லலாம் “ என்று எண்ணிக் கொண்டு அவள் அதை செயல்பற்றினாள் .

    மனபாடம் செய்து வைத்து அதை கிட்செனில் அந்த அம்மாளுக்கு அவள் சொல்லிக் கொண்டு இருந்த பொழுது , அவள் செல்லில் மெசேஜ் வந்ததற்க்கான அறிகுறி தெரிந்தது . உடனே அதை அவள் அதை திறந்து பார்த்தால் , திவாகர் ஆல் தி பெஸ்ட் என்று அனுப்பி இருந்தான் கூடவே சிரிக்கும் ஸ்மைலி உடன் .

    இவளுக்கு வந்த ஆத்திரத்துக்கு , பதிலுக்கு கோவம் கொண்ட ஒரு ஸ்மைலியும் , டிஷ்யூம் என்று ஒரு குத்து கையையும் அனுப்பி வைத்தாள் .

    அங்கே இப்படி ஒரு பக்கம் அவனின் சீண்டலும் , இவளின் சண்டையுமாக நாட்டுகோழி தயாரானது .

    இங்கே அஜயும் , அபியும் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர் . அஜய் , திவாகருக்கு வந்து விட்ட செய்தியை மெசேஜ் மூலம் தகவல் சொல்லி விட்டான் .

    பின்னர் நாளை காலை அங்கே தங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறிவிட்டு , அபியை அழைத்துக் கொண்டு அவன் புக் செய்து இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றான் .

    ஹோட்டல் அறைக்குள் நுழையும் வரைக்கும் அமைதியாக இருந்த அபி , உள்ளே வந்ததும் அவனை பொரிந்து தள்ளினாள் .

    “ டேய் நேரா அங்க போக போறோம் சொல்லிட்டு , இப்போ எதுக்கு இங்க ஹோட்டல் ல ரூம் போட்டு இருக்க “ என்று அபி பொரிந்தாள் .

    “ எல்லாம் காரணமா தான் , முதல குளிச்சிட்டு வா , அப்புறம் நான் உனக்கு சொல்லுறேன் “ என்று கூறிவிட்டு அவன் பெட்டியை திறந்து அவன் வேலை பார்க்கவும் , இவள் முணுமுணுத்துக் கொண்டே குளிக்க சென்றாள் .

    அதன் பின் அவனும் குளித்து விட்டு வரவும் , அறைக்கே உணவை வரவழைத்தான் . அபிக்கு பசி இருந்ததால் , சாப்பிட்டு முடித்தவுடன் தெம்பாக அவனோடு சண்டையிடலாம் என்று எண்ணிக் கொண்டு சாப்பிட தொடங்கினாள் .

    சாப்பிட்டு முடித்தவுடன் , அஜய் அவளிடம் திவாகர் அனுப்பிய வீடியோவை காண்பித்தான் . அதில் நாயகிக்கும் , தேவராஜுக்கும் நடந்த உரையாடல் இருந்தது .

    “ இது தான் நமக்கு தெரிஞ்சது தான , அந்த பூதம் தான் வீட்டுக்கே வந்து மிரட்டுச்சே , அப்புறம் என்ன இருக்கு இதுல இப்போ “ என்று அபி கேட்டாள் .

    “ இது ஒரு பகுதி தான் , இன்னொரு பகுதி பாரு தேவராஜ் கூட இன்னொருவர் பேசுறதை “ என்று வேறு ஒன்றை எடுத்து காட்டினான் அஜய் .

    அதில் அந்த தேவராஜுடன் அவளின் தந்தையின் தாய் மரகதம் , அவனை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்தார் .

    “ ஏன்டா எந்த உரிமையில் நீ அந்த பணத்தை கேட்குற , உனக்கு சேர வேண்டியது தான் வந்தது ல அப்புறம் என்ன . அது என் பையன் என் பேத்திக்காக சேர்த்து வச்சது , அதை உன் கிட்ட கொடுக்க முடியாது “.

    “ நீயும் உன் அம்மாவும் முதல இங்க இருக்கிறதே தப்பு , என் பேத்தி இப்போ வக்கீல் வேற , அவ்வளவு சீக்கிரம் அவளை நீ ஏமாத்த முடியாது தெரிஞ்சிக்கோ . நீயா வெளியே போனா நல்லது , அவ வந்து துரத்தினா அப்புறம் உனக்கு தான் அசிங்கம் யோசிச்சிக்கோ “ என்று சீறினார் மரகதம் .

    “ ஹா ஹா நீ என்னை பத்தி என்ன நினைச்ச கிழவி , அவ என்னை விரட்ட போறாளா . அது அவளால முடியவே முடியாது , ஏன்னா அவ துருப்பு சீட்டு என் கிட்ட தான இருக்கு “.

    “ என்ன புரியலையா , நீ தான் அந்த துருப்பு சீட்டு . உன்னை எதுக்கு உயிரோட விட்டு வச்சு இருக்கேன் நினைச்ச , எல்லாம் காரணமா தான் . அந்த நாயகிக்கு வெறும் அம்பது கோடி தான் கிடைக்கும் , ஆனா எனக்கு ஆயிரம் கோடி சொத்து , இந்த மாளிகை , வைர நகை கடை எல்லாம் “.

    “ இதை எல்லாம் நான் அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவேனா , அதுவும் உன் பேத்தி என் கைல கிடைச்சா அடுத்த நிமிஷம் அவளை என் பொண்டாட்டியா வச்சு காரியத்தை சாதிச்சிருவேன் “ என்று திமிராக அவன் பேசவும் கொந்தளித்தார் மரகத பாட்டி .

    “ ஒரு வேளை அவ யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா , அப்போ என்ன செய்வ “ என்று கிண்டல் தொனியில் கேட்டார் மரகத பாட்டி .

    “ இப்போ வரைக்கும் எனக்கு வந்த தகவல் படி அவளுக்கு கல்யாணம் ஆகல , ஆனா எனக்கு தெரியாம அப்படி கல்யாணம் நடந்து இருந்தா , அவ கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும் கூட எனக்கு தெரியும் “ என்று கண்களில் சீற்றம் கொண்டு கூறினான் .

    இதை எல்லாம் வீடியோ மூலம் பார்த்த அபிக்கு , அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை . அவள் அஜயின் முகம் பார்க்கவும் , அவனோ மிகவும் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டு இருந்தான் .

    “ என்ன யோசிக்கிறீங்க அஜய் , இன்னும் வேற எதுவும் இருக்கா . நீங்க அதை என் கிட்ட சொல்ல தயங்குரீங்களா , எதுனாலும் சொல்லுங்க “ என்று தவிப்புடன் கேட்டாள் அபி .

    “ ச ச உன் கிட்ட நான் எதுவும் மறைக்க மாட்டேன் டா , இப்போ அங்க போக ஒரு திட்டம் வேணும் . இப்போ நான் அதை தான் யோசிக்கிறேன் , வேற ஒன்னும் இல்லை டா “ என்று கூறி அவளை ஆறுதலாக அணைத்து கொண்டான் அஜய் .

    அதற்குள் மித்ரனிடம் இருந்து அவனுக்கு போன் வரவும் , அதை எடுத்து அவன் பேசினான் . அங்கே அவன் கூறிய தகவல்களை எல்லாம் கேட்டு கொண்டவன் , மனதில் ஒரு திட்டத்துடன் நாளை அங்கே தேவராஜை சந்திக்க முடிவு எடுத்தான் .

    “ யார் இப்போ போன் ல , கண் ல ஒளி தெரிஞ்சது “ என்று அபி கேட்கவும் அஜய் சிரித்தான் .

    “ மித்ரன் தான் , அவன் சில விசயம் சொன்னான் , உடனே அங்க போக ஒரு திட்டம் கிடைச்சது , அதான் கண்ணுல ஒளி போதுமா “ என்று அவளை இழுத்து அணைத்தான் அஜய் .

    “ அப்போ இப்போவே போகலாமா , போய் அவன் சிண்டு முடியை பிடிச்சு வெளியே தள்ளிடலாம் “ என்று ஆர்வமாக அபி கேட்கவும் , அஜய் முறைத்தான் .

    “ ஆரம்பிச்சிடியா , பிளான் போட்டு இருக்கேன் இப்போ தான் . எந்த அளவு அது சரி வரும்ன்னு பார்க்கணும் , அப்புறம் தான் அங்க போறதை பத்தி யோசிக்கணும் “ என்று அஜய் கூறவும் அவள் உதடை சுளித்தாள் .

    சுளித்த அவள் உதடுகளை பார்த்தவனின் பார்வை மாறியது , அதை கவனித்தவள் மனது படபடக்க தொடங்கியது . அதற்குள் அஜய் அவளை தன்னருகே இழுத்து அணைத்து , அவள் இதழை சிறை செய்தான் .

    எவ்வளவு நேரம் நீடித்ததோ இதழ் தீண்டல் , அறையில் இருக்கும் போன் அலறி அவர்களை இவ்வுலகிற்கு அழைத்து வந்தது . முதலில் அஜய் தான் சுதாரித்தான் , அவளிடம் இருந்து மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு விலகி அவனின் போனை எடுத்தான் .

    அபிக்கு அப்பொழுது கூட படபடப்பு அடங்கவில்லை , துடிக்கும் தன் இதழ்களை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியே பால்கனிக்கு சென்று நின்று கொண்டாள் .

    அந்த மாலை நேரத்து இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்தவளை , பின்னாடி இருந்து அணைத்தான் அஜய் .

    “ என்ன மேடம் இங்க வந்துடீங்க , இன்னும் படபடப்பு அடங்கலையா . அது அடங்க நான் ட்ரீட்மென்ட் எதுவும் தரவா , வேண்டாமா “ என்று அவள் காதில் கிசுகிசுத்தான் .

    “ சும்மா இருங்க அஜய் , எனக்கு கூசுது “ என்று அவனை தன் பிடியில் இருந்து விளக்கி உள்ளே சென்றாள் .

    அவள் பின்னோடு சிரித்துக் கொண்டே வந்தவன் , அவளை மீண்டும் வம்பிழுத்துக் கொண்டு அவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான் .

    பின்னர் சிறிது நேரம் கழித்து , நாளை காலை அங்கு செல்ல தன் திட்டத்தை கூறினான் . அதை கூர்ந்து கேட்டவள் , அவனிடம் எல்லாம் சரியாக இருக்குமா என்று கேட்டாள் .

    “ அது எல்லாம் சரியா இருக்கும் , நீ கவலையே படாத . உனக்கு எப்போவும் நான் கூடவே இருப்பேன் சரியா , எதை பத்தியும் கவலை படாத தைரியமா இரு “ என்று அவளை தேற்றினான் .

    பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் நன்றாக தூங்கினர் . மறுநாள் கடவுளை வேண்டிக் கொண்டு தங்கள் திட்டத்தோடு , அந்த அரண்மனை நோக்கி சென்றனர் .

    அரண்மனை வாசலில் இவர்களை பார்த்த தேவராஜ் , காவலாளியை அழைத்து அவர்களை உள்ளே விடுமாறு கூறினான் . தேவராஜிற்க்கு தன்னை தேடியே அவள் வந்ததை அறிந்து சந்தோஷப்படுவதா , துக்கப்படுவதா என்று தெரியவில்லை .

    ஏனெனில் நேற்று தான் ஒரு வக்கீலாக அபி எந்த அளவு தைரியசாலி என்று அவனுக்கு தெரிந்து இருந்தது . கண்டிப்பாக ஏதோ திட்டத்துடன் தான் அவள் , இங்கே வந்து இருக்க வேண்டும் என்று எண்ணினான் .

    அதற்க்கு தகுந்தது போல் தான் அவளும் பேச தொடங்கினாள் , ஒரு ஆளுமையோடு .

    “ என்ன மாமா உனக்கு ஆயிரம் கோடி சொத்து தான வேண்டும் , அதுக்கு ஏன் இப்படி கொலை எல்லாம் செய்ற . ஆமா அது என்ன உனக்கு ஆயிரம் , இந்த நாயகியம்மாள்க்கு அம்பது “ .

    “ என்ன நாயகி அம்மா உனக்கு தெரியாதா , வெறும் அம்பது மட்டும் கொடுத்துட்டு தப்பிக்க பார்க்கிறார் போல “ என்று அங்கே நாயகிக்கும் , தேவராஜுக்கும் சிண்டு மூட்டி விட்டாள் .

    “ என்னது ஆயிரம் கோடியா , ஆமா என் கிட்ட நூறு கோடி சொத்து தான சொன்ன . அதுல பாதி எனக்கு , பாதி உனக்குன்னு . நல்ல வேளை இப்போவாவது தெரிஞ்சதே , அப்போ அதுல பாதி பாதி பிரிச்சிக்கலாம் “ என்று கிடுகிடுக்குபிடி போட்டாள் நாயகி .

    “ ஒய் என்ன லந்தா , இந்த பாரு என்னை பகைச்சிக்காத சொல்லிட்டேன் . இல்லை அப்புறம் உனக்கு தான் நல்லதுக்கு இல்லை , ஒழுங்கா கையெழுத்து போட்டுட்டு , இங்க என் பொண்டாட்டியா இருக்கிற வழியை பாரு “ என்று அபியை பார்த்து சீறினான் தேவராஜ் .

    “ அப்படி போட முடியாதுன்னா என்ன செய்வ , ஆமா எனக்கு கல்யாணம் நடந்தது உனக்கு தெரியாது ல . இதோ இவர் தான் என் புருஷன் அஜய் நந்தன் , பெரிய பிசினஸ் மேன் மட்டும் இல்லை தாதா கூட “ என்று கெத்தாக அவள் அஜயை அறிமுகப்படுத்தி விட்டு , அவனோடு கை கோர்த்து நின்றாள் .

    அதை பார்த்த தேவராஜ் , பார்வையால் அஜயை எடை போட தொடங்கினான் . அவன் எடை போடா தொடங்கவுமே , அஜய் அவனை தீர்க்கமாய் பார்த்தான் .

    அந்த பார்வையில் தேவராஜ் ஒரு நிமிடம் ஆடி தான் போனான் , விட்டால் கண்ணாலே குடலை உருவி விடுவான் போல் இருந்தான் அஜய் . அதற்குள் கீழே வந்த திவாகரும் , ப்ரியாவும் தங்கள் நாடகத்தை நடத்த தொடங்கினர் .

    “ ஹே அபி நீ என்ன பண்ணுற இங்க , ஆமா அஜய் சார் கூட வந்து இருக்க , என்ன விஷயம் “ என்று திவாகர் கேட்டான் .

    “ அட பாவி , உலக மகா நடிப்பு டா சாமி. இவன் இடத்துக்கு தகுந்த மாதிரி எப்படி எல்லாம் இருக்கான் , இவன் கிட்ட நாம ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல “ என்று எண்ணினாள் ப்ரியா .

    “ ஹாய் திவா அண்ணா , எப்படி இருக்கீங்க . ஆமா என்ன இப்படி கேட்குறீங்க , நான் அஜயை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் . அப்புறம் இந்த மாளிகை என் அப்பாவோடது , என் சொத்தை இதோ என் மாமா தேவராஜ் அனுபவிச்சிகிட்டு இருக்கார் “.

    “ அதான் நியாயம் கேட்டு போகலாம் வந்தோம் , அப்படியே என் பாட்டியை பார்க்க வந்து இருக்கோம் . ஆமா நீங்க எங்க இங்க , உங்களுக்கு எப்படி இவங்களை தெரியும் “ என்று அபி கேட்டாள் .

    “ வாறே வா , இந்த அண்ணி கூட சூப்பரா பேசுறாங்க . சரி நாமளும் என்ட்ரி கொடுக்க வேண்டியது தான் , அப்போ தான் இந்த ஆட்டதுக்குள்ள ஆட முடியும் , இல்லைனா பச்சை பிள்ளைன்னு ஒதுக்கிருவாங்க “ என்று எண்ணிக் கொண்டே ப்ரியா அபி கேட்ட தகவலை அவளுக்கு கூறினாள் .

    இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த தேவராஜின் அன்னை ஈஸ்வரி , மகனிடம் கிசுகிசுக்க தொடங்கினாள் .

    “ ஏன் டா தேவா போற போக்கை பார்த்தா , இவங்க நம்மகிட்ட எல்லா சொத்தையும் வாங்கிட்டு தான் போவாங்க போல . இப்படி மசமசன்னு நிற்காம ஏதாவது யோசிச்சு செய் டா , இல்லைனா சொத்து நம்ம கையை விட்டு போயிரும் “ என்று அவனை உசுபேற்றினார் .

    “ அதை தான் என்ன செய்யன்னு யோசிக்குறேன் , இவங்க என்ன திட்டத்தோட வந்து இருக்காங்கன்னு இன்னும் புரியல . அது தெரிஞ்சா அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம் , நாமளா பேசி மாட்டிக்க கூடாது “ என்று அவன் எச்சரிக்கை செய்தான் .

    இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்கும் நேரம் , அரண்மனை வாசலில் ஒரு பத்து போலீஸ் ஜீப் வந்து நின்றது . அரண்மனைக்குள் வந்த ஒரு உயர் அதிகாரி , தேவராஜ் , நாயகியம்மாள் , ஈஸ்வரி ஆகியோரை கைது செய்தனர் .

    “ ஹல்லோ எதுக்கு இப்போ எங்களை கைது செய்றீங்க , முதல நாங்க யார் தெரியுமா . அர்ரெஸ்ட் வாரென்ட் இல்லாம கைது செய்ய கூடாது , அது இருக்கா உங்க கிட்ட “ என்று தேவராஜ் கத்தினான் .

    “ அது இல்லாம கைது செய்ய நாங்க என்ன முட்டாளா , அஜய் சார் சரியான நேரத்துல நீங்க எங்களுக்கு தகவல் கொடுத்ததற்கு நன்றி சார் . இங்க பாரு தேவராஜ் எதுனாலும் இனி நீ கோர்ட் ல பேசு , இப்போ ரொம்ப துள்ளினா நான் என்கௌண்டர் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன் “ என்று அந்த உயர் அதிகாரி கூறவும் அவன் அடங்கினான் .

    திடிரென்று போலீஸ் வருவதை எதிர்பார்க்கவில்லை அபி , திரும்பி அஜயை முறைக்க தொடங்கினாள் .

    “ செல்லம் அவன் இங்க நம்மள கொல்ல அவன் ஆட்களுக்கு சைகை செய்ததை பார்த்தேன் , அதான் உடனே போலீஸ்க்கு தகவல் சொல்ல வேண்டியதா இருந்தது “ என்று அஜய் கூறினான் .

    “ அப்போ இங்க போலீஸ் வர வைக்க நீ எல்லா ஏற்பாடும் முன்னாடியே பண்ணிட்ட அப்படித்தான , சரி கோர்ட் ல நான் வாதாட போறேனா இல்லை மித்ரன் அண்ணாவா “ என்று அவனை தீர்க்க பார்வை பார்த்து கேட்டாள் அபி .

    “ இதுல என்ன சந்தேகம் உனக்கு , ரெண்டு பேரும் சேர்ந்து தான் வாதாட போறீங்க “ என்று அவளின் பார்வையை தாங்கி நின்றான் அஜய் .

    இப்படியே பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் , சிறிது நேரம் கழித்து சட்டென்று சிரித்தனர் . இவர்களை பார்த்த திவாவும் , ப்ரியாவும் தான் குழம்பி போய் நின்றனர் .

    நெஞ்சில் நுழைவான் (ள்)...








     
    2 people like this.
  4. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    hi friends naan next epi koduthu irukken , plz read and share ur views friends innum length a kodukka ninaichen story a but innum two uds thaan irukkum innum so silent readers plz comments poda vaanga pa

    yethum mistakes na kooda thiruthikkalaam

    waiting for ur comments friends ..
     
  5. Amudha

    Amudha New Member

    Joined:
    Jul 7, 2015
    Messages:
    17
    Likes Received:
    7
    Trophy Points:
    3
    Hi Uma...Very nice...going good...
     
    2 people like this.
  6. Ranya

    Ranya Active Member

    Joined:
    Sep 5, 2015
    Messages:
    76
    Likes Received:
    166
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Uma
    Superb update dear... Why they are laughing???
    Priya,dhiva matum ila padicha nanum kulambi poi than iruken
    seekiram next update kodunga pa ... I m eagerly waiting
     
    2 people like this.
  7. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    hi amudha thanks a lot da
    keep supporting ma :)
     
  8. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    hi ranya thans a lot ma
    ha ha yen sirichaanganu next ud la soluren da
    keep supporting da :)
     
    2 people like this.
  9. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    [​IMG]

    அத்தியாயம் – 17

    மறுநாள் கோர்ட் வளாகத்தில் , போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கிய நாயகி , ஈஸ்வரி அவர்களோடு வந்து இறங்கிய தேவராஜிடம் ஏதாவது செய்து வெளியே கொண்டு வருமாறு , கண்களால் அவனிடம் செய்தி அனுப்பினர் .

    அவனும் தான் எல்லாம் பார்த்துக் கொள்வதாக கூறி , அவர்களுக்கு தைரியம் கொடுத்தான் . அதன் பின் அவன் வக்கீல் வைத்தியிடம் , கண்களால் அவருக்கும் செய்தி அனுப்பினான் .

    அவரும் புரிந்து கொண்டு , தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவனை வழி அனுப்பினார் . இனிமேல் வக்கீல் தான் சொன்னதை செய்து விடுவார் என்று நம்பி , அவனும் கோர்ட்டிற்குள் சென்றான் .

    கோர்ட்டில் இவர்கள் முறை வரவும் , மூவரையும் கூண்டில் ஏற்றினர் . அங்கே அரசு வக்கீலாக இவன் சார்பாக வாதட மித்ரன் அமர்ந்து இருப்பதை பார்த்து , அவன் அதிர்ந்தான் .

    அது மட்டும் இல்லாமல் இவனுக்கு எதிராக வாதாட , ஒரு பக்கம் அபிமித்ரா இருந்தாள் . இதை பார்வையாளர்களின் பகுதியில் இருந்து பார்த்த ப்ரியா , முகம் தெளிந்து அங்கே இருந்த திவாவை பார்த்து சிரித்தாள் .

    அவனும் பதிலுக்கு சிரித்தான் , இதை தான் அன்று அஜயும் , அபியும் நினைத்து சிரித்தனர் என்பதையும் உணர்ந்தான் .

    “ டேய் தேவராஜ் உனக்கு கண்டம் ஆரம்பிச்சுருச்சு டா , மவனே உன்னால இனி தப்பிக்கவே முடியாது . எங்க அஜய் மாம்ஸ் என்னடா சும்மா போலீஸ் கிட்ட மாட்ட வைக்குறாரே பார்த்தேன் , விவரமா கோர்த்து விட்டு இருக்கார் இந்த ரெண்டு வக்கீல் கிட்ட “ .

    “ மாம்ஸ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க , அதான் நீங்க ஹீரோவா இருக்கீங்க போல . ஷப்பா இனி வேடிக்கை பார்க்க வேண்டியது தான் , சூடு பறக்க போகுது இங்க “ என்று எண்ணிக் கொண்டே அவன் நடக்க போகும் வாதத்தை பார்க்க தயாரானான் .

    நீதிபதி வந்து ப்ரோசீட் என்று வாதத்தை தொடங்கி வைக்கவும் , மித்ரன் முதலில் தேவராஜுக்காக வாதாட தொடங்கினான் .

    “ மை லார்ட் , என் கட்சிகாரர் தேவராஜ் ஒரு பெரிய அரண்மனையில் வசிப்பவர் . சமுதாயத்தில் பெரிய பதவியில் இருப்பவர் , போலீஸ் தேவையில்லாமல் யாரோ செய்த குற்றத்திற்கு இவரை கைது செய்து அழைத்து அந்து இருக்கின்றனர் “.

    “ இதை நான் கடுமையாக காவல் துறைக்கு கண்டனம் தெரிவிக்குறேன் , செய்யாத ஒரு குற்றத்திற்கு என் கட்சிகாரர் இங்கே குற்றவாளியாக நிறுத்தப்பட்டு இருக்கிறார் “ என்று மித்ரன் வாதாடவும் தேவராஜ் குழம்பினான் .

    “ இவன் நமக்காக தான் வாதாடுறானா , ஒரே குழப்பமா இருக்கே “ என்று குழம்பினான் தேவராஜ் .

    அவன் குழப்பத்திற்கு முற்றுபுள்ளி வைப்பது போல் , அடுத்து நடந்த வாதாடு அமைந்தது .

    “ மை லார்ட் இவர் இருக்கிற அரண்மனை , முதலில் அவருக்கு சொந்தமானது இல்லை . அதற்க்கான ஆதாரம் இதோ இங்கே , இந்த பத்திரத்தில் இருக்கிறது “ .

    “ வக்கீல் மித்ரன் சொன்னது போல் , தேவராஜ் சமுதாயத்தில் பெரிய பதவியில் தான் இருக்கிறார் . ஆனால் அவர் வசிக்கும் பதவிக்கு பெயர் கந்துவட்டி தேவராஜ் , அவர் செய்யாத கொலை கொள்ளை கிடையாது “.

    “ கையில் ஆதாரம் வைத்துக் கொண்டு தான் , போலீஸ் இவரை கைது செய்து இருக்கின்றனர் . அவர் செய்த குற்றத்திற்கு தான் இப்பொழுது இங்கே போலிஸால் , கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிற்கிறார் “ என்று அபிமித்ரா பதில் வாதம் வைத்தாள் .

    “ அப்படி என்ன குற்றம் செய்தார் என்று , உங்களால் கூற முடியுமா அபிமித்ரா . அவருக்கு இருக்கும் சொத்திற்கு , அவர் குற்றம் என்ன செய்து இருக்க முடியும் “ என்று மித்ரன் பதில் வாதம் வைக்கவும் , இப்பொழுது தேவராஜுக்கு விஷயம் புரிந்தது .

    “ அடபாவி நீ போட்டுக் கொடுக்க கொடுக்க , அவ அதை பிடிச்சிகிட்டு ஒன்னு ஒண்ணா எடுத்து விட்டுகிட்டு இருக்கா . நல்லா வருவீங்க டா , எப்படி எல்லாம் யோசனை பண்ணுறீங்க “ என்று நொந்து கொண்டான் தேவராஜ் .

    அவனிற்கு ஒன்று நன்றாக புரிந்தது , இனி தப்பிக்க முடியாது வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் தான் கழிக்க போகிறோம் என்று . எங்கே எந்த இடத்தில் கோட்டை விட்டான் என்று அவன் யோசித்தும் , எதுவும் புலப்படவில்லை அவனுக்கு .

    அதற்குள் அங்கே வக்கீல் இருவருக்கும் வாக்குவாதம் சூடு பிடிக்க , அவனின் கவனம் அங்கே சென்றது .

    “ மை லார்ட் என் கட்சிகாரர் வைர நகை வியாபாரம் செய்து , அதில் வரும் பணத்தில் தான் குடும்பம் நடத்துகிறார் . வக்கீல் அபிமித்ரா தேவையில்லாமல் என் கட்சிகாரரை சீண்டுகிறார் “ என்று மித்ரன் கூறவும் தலையில் கை வைத்து விட்டான் தேவராஜ் .

    “ டேய் வக்கீல் வைத்தி எங்க டா போன , ஹையோ இவங்களே பேசி என்னை உள்ள தள்ளிருவாங்க போல . வெளியே வர முடியாதபடிக்கு , எல்லா கதவையும் அடைச்சு வைக்குறாங்க “ என்று புலம்பினான் தேவராஜ் .

    “ மை லார்ட் அவர் அந்த கடைக்கு pattern rights கூட வாங்கவில்லை , அதுவும் இல்லாமல் அந்த கடையில் நிறைய அரசுக்கு எதிராக சில சட்ட விரோத காரியங்களை செய்து வருகிறார் . அதற்கான ஆதராம் இந்த போடோஸ் , வீடியோஸ் எல்லாம் உங்கள் அனைவரின் பார்வைக்கு வைக்குறேன் யுவர் ஹானர் “ என்று அபிமித்ரா அங்கே அது அனைத்தையும் சமர்பித்தாள் .

    அதை எல்லாம் பார்வையிட்ட நீதிபதி , அபியை மேற்கொண்டு கூறுமாறு கூறினார் . அவளும் அவன் செய்த அணைத்து வேலைகளையும் , ஒன்று விடாமல் கூறி அதற்கான ஆதாரத்தையும் கொடுத்தாள் .

    “ யுவர் ஹானர் நான் நாயகியம்மாளை விசாரிக்க விரும்புகிறேன் “ என்று அவள் கூறவும் ப்ரோசீட் என்றார் .

    கூண்டில் இருந்த நாயகியம்மாளை பார்த்து , அபி நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள் . நாயகியோ அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தாள் , ஆனால் அதை அலட்சியப்படுத்தி அவளிடம் கேள்வி கணைகளை தொடுத்தாள் .

    “ உங்களுக்கும் இந்த தேவராஜுக்கும் என்ன சம்மந்தம் , அவர் யாரு உங்களுக்கு . அப்புறம் நீங்க எதுக்காக அவர் கிட்ட பணம் கேட்டீங்க , அதுவும் அம்பது கோடி “ என்று முதல் கேள்வியிலே நாயகியை தடுமாற வைத்து விட்டாள் .

    “ ஹ அவன் எனக்கு தம்பி மாதிரி , அவன் கிட்ட நான் எனக்கான பணம் தான் கேட்டேன் . அது எனக்கு சேர வேண்டியது , அதனால தான் கேட்டேன் “ என்று அப்பொழுதும் அழுத்தமாக கூறியவளை பார்த்து , அவளை ஓங்கி அறையலாம் போல் தோன்றியது அபிக்கு , இருந்தாலும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தாள் .

    “ யுவர் ஹானர் என் கட்சிகாரர் நாயகி , அவருடைய சொத்தை தான் கேட்டு இருக்கிறார் “ என்று அவருடைய சொத்தில் அழுத்தம் கொடுத்தான் மித்ரன் .

    அதில் இருந்த உள்குத்தை புரிந்து கொண்டு , மனதிற்குள் சிரித்துக் கொண்டு இருந்தான் அஜய் . ஆனால் இந்த உள்குத்தை பற்றி தெரியாமல் , நாயகி வாயை விட்டார் .

    “ ஆமா என் சொத்தை தான் நான் கேட்குறேன் , நான் என்னமோ அடுத்தவங்க சொத்தை கேட்ட மாதிரி இந்த பொண்ணு பேசுது “ என்று நாயகி வெடித்தாள் .

    “ யுவர் ஹானர் நான் ஈஸ்வரி அம்மாளை விசாரித்துவிட்டு , இதற்க்கான பதிலை கூறுகிறேன் மை லார்ட் “ என்று அபி கூறினாள் .

    அதன் பின் ஈஸ்வரி கூண்டில் ஏறவும் , அவருக்கான கேள்விகளை கேட்க தொடங்கினாள் அபி .

    “ உங்க பையன் செய்ற அனியாயத்தை நீங்க தட்டி கேட்க மாட்டீங்களா , இல்லை நீங்களும் துணைக்கு போறீங்களா அவரோட . அப்புறம் இந்த அரண்மனை உண்மையில் யாரோடது , அந்த சொத்து எல்லாம் யாரோடது எல்லா உண்மையும் சொல்லிட்டா உங்களுக்கு தண்டனை கிடைக்காம கூட பண்ணிரலாம் “.

    “ அதனால இங்க யார் என்ன நினைப்பாங்க , எல்லாம் யோசிக்கிறதை விட்டுவிட்டு நீங்க தைரியமா உண்மையை சொல்லுங்க “ என்று அவருக்கு தூண்டில் போட்டு பார்த்தாள் அபி .

    அது நன்றாக வேலை செய்தது , அவர் உண்மையை கூற தொடங்கும் சமயம் தேவராஜ் கண்களால் கூறாதே என்று எச்சரித்தான் . அதை சரியாக புரிந்து கொண்ட ஈஸ்வரி , அதை அலட்சியப்படுத்தினார் .

    அவருக்கு ஜெயிலில் களி திங்க அறவே பிடிக்கவில்லை , அதற்க்கு உண்மையை கூறினால் வெளியே தன்னால் முடிந்த வேலை பார்த்துக் கொண்டு , பிடித்த உணவை சாப்பிடவாவது செய்யலாம் என்று எண்ணினாள் .

    ஆகையால் அவர் அணைத்து உண்மைகளையும் கூற தொடங்கினார் . அதில் வெளி வந்த ஒவ்வொரு விஷயமும் , அபியின் நெஞ்சை வலிக்க செய்தது .

    “ என் தம்பி சொத்து தான் இது எல்லாம் , இதோ இந்த பொண்ணு அபி தான் அதுக்கு வாரிசு . எங்களுக்கு அந்த சொத்தை எப்படியாவது அடையணும் தோனுச்சு , அதான் இந்த பொண்ணு கிட்ட கையெழுத்து வாங்கிட்டா நாம அதை அனுபவிக்கலாம் நினைச்சு திட்டம் போட்டோம் “ .

    “ ஆனா அதுல நிறைய சிக்கல் , இவ எங்க இருக்கான்னு தெரியாம இருந்தது . அப்புறம் அவ ஒரு குறிப்பட்ட வயசு வந்த பின்னாடி தான் , அவ நினைச்சா எங்களுக்கு சொத்தை கொடுக்க முடியும் “.

    “ அதனால அவ இருக்கிற இடத்தை கண்கானிச்சிகிட்டே இருந்தோம் , திடிர்னு இடையில் காணாம போயிட்டா . அவ எங்க படிக்கிறா எதுவுமே தெரியல , ஆனா அவ வக்கீலா வெளியே வந்தவுடன் தான் நாங்க திரும்ப அவளை நெருங்க முயற்சி பண்ணோம் “.

    “ அதுக்குள்ள எங்களுக்கு வேறு சில பிரச்சனை எல்லாம் வந்தது , அதை சமாளிச்சு நிமிர்ந்த பிறகு தான் அன்னைக்கு நியூஸ் ல இவ இருக்கிற இடம் தெரிஞ்சது “.

    “ உடனே நாங்க நாயகியை விட்டு , அவ கிட்ட முதல் பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு , அப்படியே அவளை கூட்டிட்டு வர சொன்னோம் . ஆனா அதுக்குள்ள அவளே வந்து எங்களை இங்க வந்து நிறுத்திட்டா , இதான் உண்மை “ என்று ஈஸ்வரி கூறி முடித்தார் .

    தேவராஜ் அவனின் அம்மாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான் , ஆனால் அவரோ தனக்கு விடுதலை கிடைக்காதா என்ற ஏக்க பார்வையுடன் அங்கே அடுத்து என்ன நடக்கும் என்று பார்த்துக் கொண்டு இருந்தார் .

    “ யுவர் ஹானர் நானும் இந்த கேசில் ஒரு முக்கிய சாட்சி , ஆகையால் என் தரப்பு வாதத்தை நான் இந்த கூண்டில் இருந்து கூற அனுமதி வேண்டுகிறேன் “ என்று அபிமித்ரா கூறவும் அவர் தலையசைத்தார் .

    அபி கூண்டில் ஏறி ஜெயனிடம் இருந்து பெற்ற தகவல்களையும் , இங்கே தேவராஜ் செய்த சில சட்ட விரோதமான காரியங்களையும் கூறினாள் . தனக்கு வந்த ஒவ்வொரு ஆபத்தையும் , அவளின் அக்கா நஸ்ரிமா காப்பாற்ற முனைந்ததை , அதன் பின் அவளின் இறப்பு எல்லாம் கூறி முடித்து வெடித்து அழுது அங்கேயே அமர்ந்தாள் .

    அஜய் உடனே யாரையும் சட்டை செய்யாமல் , அவளின் அருகே விரைந்து சென்று அவளை தாங்கினான் . எல்லோரின் பார்வையும் அங்கே நிலைத்து இருப்பதை பார்த்து , இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தேவராஜ் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றான் .


    அனால் அவனின் நோக்கம் அறிந்த திவாகர் , அவனை பிடித்து நிறுத்தினான் . இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை , பின்னர் திவாகரின் மேற்பார்வையில் தான் அங்கே அணைத்து போலிசும் இயங்குகிறது என்பதை அவன் கண்ணசைவில் புரிந்து கொண்டான் .

    “ ஹ ஹ உங்க வீட்டுக்கு நான் என்ன விருந்து சாப்பிட வந்தேன் நினைச்சியா , உன்னை வேவு பார்க்க தான் டா வந்தேன் . நீ பண்ண தில்லு முள்ளு எல்லாம் , எப்படி இப்போ வெளியே வந்தது நினைக்குற “ என்று நக்கல் செய்தான் திவாகர் .

    தன்னை சுற்றி வலை பின்னிவிட்டதை அறிந்து , பேசாமல் அமர்ந்து விட்டான் தேவராஜ் . ஆனால் மனதிற்குள் அபியின் மேல் வன்மம் வளர்த்துக் கொண்டு இருந்தான் .

    “ எனக்கு கிடைக்காத சொத்து , இந்த சொத்துக்காக எங்க அப்பா உயிரை விட்டார் . அந்த சொத்து எனக்கு கிடைக்கலைனாலும் , உனக்கு கிடைக்க விட மாட்டேன் . அது மட்டுமா நீ எப்படி சந்தோஷமா இருக்கன்னு நானும் பார்க்குறேன் டி “ என்று மனதில் கருவினான் தேவராஜ் .

    ஆனால் பாவம் அவனுக்கு தெரியவில்லை , இன்னும் சிறிது நேரத்தில் தான் இந்த உலகத்தை விட்டே போக போகிறோம் என்று .

    அதற்குள் இங்கே அபி , அஜயின் உதவியால் தன்னை சுதாரித்துக் கொண்டாள் . நீதிபதியும் சாட்சியங்களை வைத்து ஆராய்ந்து பார்த்து விட்டு , தேவராஜ் , நாயகிக்கு ஆயுள் தண்டனையும் , ஈஸ்வரிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார் .

    அதற்குள் அஜய் , அபியை அழைத்துக் கொண்டு அங்கே ப்ரியா , ஜெசியுடன் அனுப்பி வைத்தான் . அவர்களோடு பாதுகாப்பிற்க்காக மருதன் , செல்வம் உடன் சென்றனர் .

    இங்கே திவாகர் அவனுக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளிடம் , சில உத்தரவை பிறப்பித்து விட்டு அஜய் இருக்கும் இடத்திற்கு வந்தான் . அங்கே ஜானும் , மித்ரனும் அவனோடு இருந்தனர் .

    அவர்களை பார்த்த தேவராஜ் , கனல் பார்வையை வீசிவிட்டு போலீஸ் வேனில் ஏறினான் . இங்கே அஜய் , அதை அலட்சியப்படுத்திவிட்டு , எல்லோரையும் அழைத்துக் கொண்டு நேராக ஒரு பாழடைந்த ஒரு பங்களாவிற்கு , காரை செலுத்தினான் .

    அங்கே இவர்களுக்கு பின்னால் , தேவராஜ் இருக்கும் போலீஸ் வேன் வந்தது . இவர்கள் அங்கே நிற்கவும் , வேனில் இருந்து திமிராக தேவராஜ் இறங்கினான் .

    “ டேய் என்ன டா என்னை என்ன நினைச்சீங்க , பாரு போலீஸ் எல்லோரையும் விலை கொடுத்து வாங்கிட்டேன் . உங்களை துரத்தி எதுக்கு பின்னாடி வந்து இருக்கேன் நினைசீங்க , உங்க கதையை தீர்த்து கட்ட தான் டா “.

    “ அப்படியே அந்த அபியை கூட நான் விட போறது இல்லை , ஏன் உங்க ஒருத்தனையும் விட்டு வைக்க போறது இல்லை . அந்த சொத்தை எப்படி என் கைக்கு கொண்டு வரதுன்னு , எனக்கு தெரியும் டா “ என்று கொக்கரித்து சிரித்தான் .

    ஆனால் அவன் சிரித்த சிரிப்பை விட அதிகமாக , அங்கே அனைவரும் சிரித்துக் கொண்டு இருந்தனர் . ஏனென்று புரியாமல் அவன் பார்த்தான் , அதற்க்கு அஜய் தான் சிரிப்பை நிறுத்தி விட்டு அவனுக்கு விளக்கம் கொடுத்தான் .

    “ ஹா ஹா டேய் நீ எங்களை பிடிக்க வந்தியா , போடா டேய் உன்னை இங்க வர வச்சதே நாங்க தான் டா . என்ன முழிக்குற , இவங்க யாரும் போலீஸ் கிடையாது , நாங்க செட் செய்த ஆளுங்க “.

    “ ஆமா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா , என் அபியை நீ விட்டு வைக்க மாட்டேன் சொல்லுவ “ என்று அவனை ஓங்கி அடித்து தரையில் வீழ்த்தினான் .

    “ ஆமா யார் சொத்து யார் அனுபவக்கிறது , ராணி வாழ்க்கை வாழ வேண்டிய என் அபியை இப்படி அனாதையாய் வளர்க்க வச்சுடீங்களே பாவிகளா . ஆமா உனக்கு ஏன் ஆயுள் தண்டனை தெரியுமா , அபி அப்பா அம்மாவை உங்க அய்யா ஆக்சிடென்ட் பண்ணி விட்டாரே நியாபகம் இருக்கா “.

    “ அதுக்கு அப்புறம் இப்போ அபியை கொல்ல , நீ ஆள் அனுப்பினியே , சொத்து பறிக்கும் முயற்சி எல்லாத்துக்கும் சேர்த்து தான் உனக்கு அந்த தண்டனை . இந்த கூட்டத்துல நாயகி உனக்கு துணையா இருந்தா , ஆனா உங்க அம்மாவுக்கு சில விஷயம் எல்லாம் தெரியாது “.

    “ அதனால அவங்களுக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை தான் , கூடிய சீக்கிரம் அவங்க அந்த தப்பை உணர்ந்து வந்துடுவாங்க . ஆனா நீ கேடி அதான் உன்னை தீர்த்துகட்ட இப்போவே முடிவு பண்ணிட்டோம் “ .

    “ எல்லாத்துக்கும் மேல நீ என் அபியை படுத்தினதுக்கு தான் டா , இப்போ இந்த முடிவு “ என்று அஜய் கூறிக் கொண்டே அவனை பின்னி எடுத்து விட்டான் .

    மித்ரன் அவன் பங்கிற்கு அவனை அடித்து துவைத்து எடுத்து , தன் தந்தையின் சாவுக்கு அவனை பலி தீர்த்துக் கொண்டான் . பின்னர் அவன் மயங்கி இருக்கவும் , அப்படியே அவனை வேனில் ஏற்றி அதை ஆக்சிடென்ட் போல் காட்டி அவனை கொன்று விட்டனர் .

    இதை எல்லாம் முடித்துவிட்டு , மித்ரன்க்கு விடை கொடுத்துவிட்டு அஜய் , ஜான் , திவாகர் சித்தூர் வீடு நோக்கி சென்றனர் . அங்கே வீட்டுக்குள் நுழைந்தவுடன் , அங்கு உள்ள அலங்காரங்களை எல்லாம் பார்த்து மூவரும் குழம்பினர் .

    காரை பார்க் செய்துவிட்டு , மூவரும் வீட்டுக்குள் நுழையும் சமயம் மணி ஆச்சு நில்லுங்க என்று கத்தினார் . அதிர்ந்து போய் அங்கேயே ஆணியடித்தது போல் நின்றனர் .

    “ டேய் காரியம் முடிச்சிட்டு அப்படியே வீட்டுக்குள்ள வந்துருவீங்களா , பின் பக்க தொட்டி ல போய் நல்லா குளிச்சிட்டு அங்க நான் கொடுக்கிற துணியை உடுத்திட்டு வாங்க முன்னாடி “ என்று கட்டளையிட்டார் .

    அப்பொழுது தான் அவர்களுக்கு புரிந்தது , மணி ஆச்சி எதற்கு அப்படி கூறினார் என்று . உடனே அவர்களும் அவர் சொன்னதை செய்து , அவர் கொடுத்த உடையை பார்த்து வாய் பிளந்து நின்றனர் .

    “ என்ன டா இது பட்டு வேஷ்டி கொடுத்து இருக்காங்க , இன்னைக்கு என்ன விசேஷம் டா . இந்த ஆச்சி ஏன் டா , அப்போ அப்போ இப்படி ஷாக் எல்லாம் கொடுக்குது “ என்று ஜான் சலித்துக் கொண்டான் .

    “ ஆச்சி இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்காங்க , அங்கே நம்ம சொந்தம் எல்லாம் குழுமி இருக்கிறதை பார்த்தா ஏதோ விளங்கம் இருக்க போகுது நினைக்குறேன் மாம்ஸ் “ என்று திவாகர் கூறினான் .

    “ டேய் அப்படி எல்லாம் இருக்காது , ஆச்சி நம்ம நல்லதுக்கு மட்டும் தான் டா எதுவும் செய்வாங்க . இப்போ கூட நாம பண்ண காரியத்துக்கு , அப்படியே பின்னாடி போய் தலைக்கு குளிச்சிட்டு தான வர சொன்னாங்க “ என்று அஜய் அவர்களை சமாதானப்படுத்தினான் .

    வாசலில் வந்து நின்ற மூவருக்கும் , ராதா அஜயின் தாய் ஆரத்தி எடுத்தார் அவர்களை முறைத்துக் கொண்டே . அஜய்க்கு தன் தாய் கோவமாக இருப்பது தெரிந்தது , அவரை சமாதனப்படுத்த அவன் ஆரத்தி எடுத்து முடிக்கவும் அவன் அண்ணையை கட்டிக் கொண்டு கொஞ்ச தொடங்கினான் .

    அவனை பின் பற்றி மற்ற இருவரும் அதை கடை பிடித்தனர் , அப்பொழுது என் பொண்டாட்டியை விடுங்க டா என்று கத்திக் கொண்டே வந்தார் அஜயின் தந்தை ரவிகிருஷ்னா .

    “ முதல உள்ள வாங்க டா , பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு இப்போ சமாதானமா “ என்று அவர் ஒரு பக்கம் பொருமிவிட்டு உள்ளே சென்றார் .

    “ மாம்ஸ் விஷயம் எதுவோ சீரியஸ் போல மாம்ஸ் , வாங்க சீக்கிரம் உள்ளே போய் என்னனு பார்க்கலாம் “ என்று திவாகர் வேகமாக அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே விரைந்தான் .

    அங்கே ஹாலில் போடபட்டு இருந்த கல்யாண மேடையை பார்த்து , அசந்து நின்றனர் . ஒரு கல்யாண மண்டபம் ஹிந்து முறைப்படியும் , மற்றொன்று முஸ்லிம் முறைப்படியும் , அடுத்தது கிருஸ்துவ முறைப்படியும் இருந்தது .

    “ என்ன டா பார்வை , நேராமாகுது வாங்க டா . அஜய் முஸ்லிம் இடத்துல போய் நில்லு , திவா ஹிந்து இடத்துல நில்லு , ஜான் கிறிஸ்துவ இடத்தில் நீ நில்லு . ஐயரே நீங்க மந்திரம் ஒதுங்க , நீங்க ஒதுங்க பாய் , பாதர் நீங்களும் ஆரம்பிங்க “ என்று எல்லோரையும் விரட்டிக் கொண்டு இருந்தார் .

    மூன்று ஜோடிகளின் திருமணம் அவர்கள் மனம் போல் , பெரியவர்களின் ஆசியுடன் அங்கே கோலாகலமாக நடந்து முடிந்தது . பின்னர் ஒரு பெரிய அறிவுரை அங்கே மூன்று ஜோடிகளுக்கும் நடந்தது , அதை கேட்டு நொந்து போய் விட்டனர் மணமகன்கள் .

    “ டேய் மாப்பிள்ளை எப்போ டா நம்மள உள்ள ரூம் க்கு விடுவாங்க , நீங்களாவது அப்போ அப்போ பார்துகுறீங்க டா . ஆனா என் பாடு தான் டா மோசம் , நான் இங்க அங்க அலைஞ்சு என் ஆள் கூட ரொம்ப நேரம் இருக்கவே முடியல “.

    “ போன் ல கூட ரொம்ப நேரம் பேச முடியல டா , உடனே அடுத்த வேலை வந்திடும் . கொஞ்சம் ஆச்சியை கருணை காட்ட சொல்லு மச்சி . முதல லவ் பண்ணவன் தான் பேர் , எனக்கு அடுத்து லவ் பண்ணவன் எல்லாம் எங்கேயோ போயிட்டான் “ என்று புலம்பி தள்ளினான் ஜான் .

    அவன் புலம்பல் ஆச்சியின் காதுக்கு எட்டியதோ என்னவோ , அவனை மட்டும் ஜெஸியின் அறைக்கு அனுப்பி வைத்தார் . மற்ற இருவரையும் அடுத்து ஒரு மணி நேரத்துக்கு அவர் பிடியில் வைத்துக் கொண்டார் .

    “ ஆச்சி ப்ளீஸ் முடியல , கொஞ்சம் எங்களை கருணை காட்டி ரூம் க்கு அனுப்புங்க “ என்று கெஞ்சினான் அஜய் .

    “ சரி நீ மட்டும் போ , இவன் கிட்ட நான் இன்னும் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு “ என்று அவர் திவாகரை பிடித்து வைத்து விட்டார் .

    அஜயோ சந்தோஷமாக அங்கு இருந்து கிளம்பி , நேராக அவனின் செல்லத்தை பார்க்க அறைக்கு சென்றுவிட்டான் . திவாகரோ ஆச்சியை முறைத்துக் கொண்டு இருந்தான் .

    “ இன்னும் உன் மனசுல அந்த ஸ்வேதா இருக்காளா “ என்று கேட்டார் ஆச்சி .

    இதை கேட்ட திவாகர் அதிர்ந்தான் , அவனின் கருவாச்சி மட்டுமே இபொழுது அவனின் நினைவுகளில் இருக்கும் பொழுது அவன் ஸ்வேதாவை ஏன் நியாபகம் வைத்து இருக்க போகிறான் .

    தன் ஆச்சியிடமும் அதையே சொல்லி , அவரின் இந்த கேள்விக்கு வருத்தம் அடைந்தான் .

    “ நான் எதுக்கு கேட்டேனா , அவ சிவப்பு இல்லை கருப்பு பாரு அதான் கேட்டேன் . நாளைக்கே ஒரு வெள்ளை தோல் மினுக்கிட்டு , நல்ல பொன்னே உன் கண்ணு முன்னாடி வந்தா என்ன செய்வன்னு எனக்கு தெரியனும் “ என்று அடித்துக் கேட்டார் .

    “ ஆச்சி அப்போ நான் ஏதோ தப்பு செய்துட்டேன் , அதுக்காக நான் இப்போ என் கருவாச்சி மேல உயிரையே வச்சு இருக்கேன் . உலக அழகியே வந்தாலும் , நான் என் கருவாச்சியை தான் விரும்புவேனே தவிர , யாரையும் ஏறடுத்து பார்க்க மாட்டேன் “ என்று கத்தியே விட்டான் .

    ஏனெனில் அவரது ஒவ்வொரு கேள்வியும் , சாட்டையடியாக அவன் மனதை கூறு போட்டு கிழித்தது . ஆச்சி அதன் பிறகு தனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்ததால் , அதை தெளிவு படுத்திக் கொள்ள கேட்டதாக கூறினார் .

    அவரின் மனதில் இருந்த பயம் அவனுக்கு புரிந்தது , தன் முட்டாள்தனத்தால் எந்த அளவுக்கு ஒவ்வொருவரையும் கஷ்டப்படுத்தி இருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தான் .

    “ ஆச்சி நான் உங்களுக்கு வாக்கு தரேன் , நான் ப்ரியாவை நல்லா பார்த்துப்பேன் . அவளை நான் என் உயிரா நினைக்குறேன் , கண்டிப்பா அவளை கை விட மாட்டேன் “ என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு மேலே அவனின் கருவாச்சியை காண வந்தான் .

    அங்கே அவள் சந்தோஷமாக , துயில் கொண்டு இருந்ததை பார்த்து மனம் நிறைந்தான் .

    “ அடியே இப்போ இன்னைக்கு பார்த்தா நீ இப்படி தூங்குவ , இரு டி உன்னை எப்படி எழுப்புறேன்னு பாரு “ என்று எண்ணிக் கொண்டே அவளை தூக்கிக் கொண்டு குளியலறைக்கு அழைத்து சென்று , ஷவர்க்கு அடியில் நிற்க வைத்து தண்ணீரை திறந்து விட்டான் .

    அதில் பதறி தூக்கத்தில் இருந்து வெளியே வந்தவள் , அங்கே சிரித்துக் கொண்டு இருந்த திவாகரை பார்த்து முறைத்தாள் . அவனோ அதை கண்டு கொள்ளாமல் , அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான் .

    “ என்னை பார்த்தா சிரிப்பா வருதா உங்களுக்கு “ என்று கூறிக் கொண்டே அவனை அங்கே ஷவர்க்கு அடியில் இழுத்து , அவனையும் தண்ணீரில் நனைய வைத்தாள் .

    அவள் பிடித்து இழுத்தததால் , அதில் தடுமாறி அவனின் கைகள் அவள் வெற்றிடையில் பதிந்தது . அதில் சிலிர்த்து அவள் அவனிடம் இருந்து விடுபட முயன்றாள் , ஆனால் அவனின் பிடி இரும்புப் பிடியாக இருந்தது .

    “ ஹே கருவாச்சி உன்னை எனக்கு பிடிக்கும் டி , ஆனா முழுசா உன் மேல காதல் வந்தது எப்போ தெரியுமா . நீ என்னை பத்தி கவிதையா எழுதி இருந்தியே உன் டைரியில் , அப்போ தான் டி உன்னோட காதலின் ஆழம் தெரிஞ்சது “.

    “ இருந்தாலும் உன்னை சீண்டி பார்க்க எப்போவும் தோணுமே , அப்படி தான் பிடிவாதமா இருந்தேன் . ஆனா கோவில் ல வச்சு நீயே தாலி கட்ட துணிஞ்ச பாரு , அப்போவே முடிவு பண்ணிட்டேன் உன்னை இனி எதுக்காகவும் விட கூடாதுன்னு “ என்று அவளின் மேல் வந்த காதலை தெரிவித்தான் திவாகர் .

    அதை கேட்ட ப்ரியா அவனை மேலும் இறுக்கிக்கொண்டு , அவனுக்கு முத்தமழை பொழிந்தாள் . அதில் அவன் மேலும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு , அவளின் செயலை தான் வாங்கிக் கொண்டு முன்னேறினான் .

    நெஞ்சில் நுழைவான் (ள்)....



     
  10. kodiuma

    kodiuma Active Member

    Joined:
    Dec 26, 2014
    Messages:
    175
    Likes Received:
    89
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    house wife
    Location:
    siv
    hi friends i have given the next ud still one more epi to go plz read and share ur views friends ..

    next ud will be tom or tue and wed will start a new story friends ..

    keep supporting
     

Share This Page