நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் காய்கறிகள்

Discussion in 'General Health Tips' started by malarmathi, Mar 7, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  357
  Likes Received:
  303
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  [​IMG]
  நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க வேண்டுமா? அப்ப இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க...
  என்ன தான் நம்மிடம் பணம் கொட்டிக் கிடந்தாலும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லாவிட்டால், அந்த பணம் நம்மிடம் இருப்பதற்கு இல்லாமலேயே இருக்கலாம். ஒருவரது உடலை நோய்கள் அதிகம் தாக்குவதற்கு முதன்மையான காரணம், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பது தான். நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒருவர் வலிமையுடன் வைத்துக் கொண்டால், எப்பேற்பட்ட நோய்களின் தாக்கத்தில் இருந்தும் உடலைப் பாதுகாக்கலாம்.
  உடலினுள் உள்ள செல்களை பாதுகாக்கவும், சரிசெய்யவும் வைட்டமின் சி அவசியமானதாகும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றை சளி பிடித்திருக்கும் போது உட்கொண்டால், விரைவில் விடுபடலாம். அதேப் போல் வைட்டமின் டி குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும். ஆகவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்பட்டு, உடலைத் தாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படும்.
  ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதற்கான ஒரே சிறப்பான வழி உணவுகள் தான். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒருவர் அதிகம் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும். அதேப் போல் கேன் உணவுகள், தானியங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டால், அதுவே நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.
  உங்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் காய்கறிகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து உடலைத் தாக்கும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். சரி, இப்போது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் காய்கறிகள் என்னவென்று காண்போம்.


  பசலைக்கீரை
  கீரைகளுள் ஒன்றான பசலைக்கீரையில் ஜிங்க் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். பசலைக்கீரையில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆகவே உங்களது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க நினைத்தால், பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிடுங்கள்.
  கடற்பாசி

  கடற்பாசியில் உள்ள ஃபூகோடைன் என்னும் சிக்கலான கார்போஹைட்ரேட், உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். மேலும் கடற்பாசியில் பாலை விட 14 மடங்கு அதிகமாக கால்சியம் நிறைந்துள்ளது. இதனை ஒருவர் சாலட்டில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம், சாலட் சுவையாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும்.
  காலிஃப்ளவர்

  காலிஃப்ளவரில் உள்ள க்ளுட்டாதியோன், உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை வலிமையாக எதிர்த்துப் போராடும். இந்த சுவையான காய்கறியை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இந்த காய்கறி உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போன்று செயல்பட்டு, உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்துவிடும். முக்கியமாக இந்த காய்கறி மார்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது.
  காளான்

  காளானில் உள்ள புரோட்டீன், வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கனிமச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். காளானில் மைசீலியம் உள்ளது. அதோடு இதில் உள்ள பீட்டா க்ளுக்கான்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்தும். ஆகவே நீங்கள் சைவ பிரியர்களானால், காளானை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.
  ப்ராக்கோலி

  பசலைக்கீரையைப் போன்றே ப்ராக்கோலியும் சுவையான ஓர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் போதுமான அளவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் வைட்டமின்களான ஏ, சி மற்றும் ஈ போன்றவை அதிகம் இருப்பதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. முக்கியமாக இந்த காய்கறியை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட்டாமல், மிதமான அளவில் வேக வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள முழு சத்துக்களையும் பெற முடியும்.
  பூண்டு

  பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆய்வு ஒன்றில் 12 வாரம் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தவர்களுக்கு, பூண்டு சாப்பிடாதவர்களை விட சளி அல்லது காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்தது. மேலும் ஒவ்வொரு வாரமும் 6 பற்களுக்கு மேல் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு, வயிற்று புற்றுநோய் வரும் வாய்ப்பு 50% குறைவாகவும், மலக்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 30% குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. எனவே உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், தினமும் 1-2 பல் பூண்டு சாப்பிடுங்கள்.
  சர்க்கரைவள்ளிக் கிழங்கு

  சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிடுவோம். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் இதன் தோல் தான் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை முதலில் எதிர்த்துப் போராடும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ உள்ளது. ஒருவர் வாரத்திற்கு 2 முறை 1/2 கப் வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று சிறப்பாக இருக்கும்.
  பீட்ரூட்

  ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை பீட்ரூட்டில் அதிகம் உள்ளது. இது உடலின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். ஆய்வு ஒன்றில் 500 மிலி பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளது. இது ஒருவரது உடலியல் செயல்பட்டை மேம்படுத்தும்.
  வெங்காயம்

  வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பட்டை மேம்படுத்த உதவும். அதோடு வெங்காயம் சுவாச பிரச்சனைகளைத் தடுத்து, சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். வெங்காயத்தை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படுவதோடு, வேறு சில நோய்களின் தாக்கங்களும் குறையும்.
  கேரட்

  கேரட்டில் கண்களின் செயல்பாடு மற்றும் பார்வைத் திறனை மேம்படுத்தும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் கேரட்டில் பீட்டா கரோட்டீனும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் கேரட்டில் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் வளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே ஒருவர் கேரட்டை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அவர்களது பார்வை தெளிவாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும்.
  தக்காளி

  தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமான அளவில் நிறைந்துள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்குதலைத் தடுக்கும். அதோடு தக்காளியில் பீட்டா-கரோட்டீன் மற்றும் இதர நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே தக்காளியை ஒருவர் அப்படியே சாப்பிடலாம் அல்லது சமையலில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
  அஸ்பாரகஸ்

  அஸ்பாரகஸ் என்பது தண்டு போன்று காணப்படும் ஓர் காய்கறி. இது உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். அஸ்பாரகஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள க்ளுட்டாதியோனைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தைப் போக்கும். ஆகவே இந்த காய்கறி கிடைத்தால், தவறாமல் வாங்கி சமைத்து சுவையுங்கள்.
   
  janaki and jayalashmi like this.
 2. janaki

  janaki Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  210
  Likes Received:
  132
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Useful information. Thank you
   

Share This Page