பலன்களை அள்ளித்தரும் சூரிய நமஸ்கார மந்திரம்

Discussion in 'Fitness & Easy workouts' started by NATHIYAMOHANRAJA, Feb 11, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மனிதர்களாய் பிறந்த நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவே இப்பிறவியை எடுத்திருக்கிறோம். அப்படி மிகச் சிறந்த செயல்கள்கள் பல புரிய நமது உடலிலும், மனத்திலும் மிகுந்த உற்சாகம், மனஉறுதி மற்றும் சுறுசுறுப்பு தேவைப்படுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களிடம் அது இருப்பதில்லை. காரணம் பெரும்பாலான மக்களிடம் அதிகாலை துயிலெழும் பழக்கமில்லை. அதிகாலை எழுந்து சூரியனை வணங்குபவருக்கு அனைத்து நலங்களும் ஏற்படுவதாக வேதங்கள் கூறுகின்றன. அந்த வகையில் சூரிய நமஸ்காரம் மந்திரம் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம். சூரிய நமஸ்கார மந்திரம் ஓம் ஹ்ராம் மித்ராய நமஹ ஓம் ஹ்ரீம் ரவியே நமஹ ஓம் ஹ்ரூம் சூர்யாய நமஹ ஓம் ஹ்ரைம் பானவே நமஹ ஓம் ஹ்ரௌம் கசாய நமஹ ஓம் ஹ்ரஹ பூஷ்ண நமஹ ஓம் ஹ்ராம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ ஓம் ஹ்ரீம் மரீசயே நமஹ ஓம் ஹ்ரூம் ஆதித்யாய நமஹ ஓம் ஹ்ரைம் ஸவித்ரே நமஹ ஓம் ஹ்ரௌம் அர்க்காய நமஹ ஓம் ஹரஹ பாஸ்கராய நமஹ
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சூரிய நமஸ்காரம் பலன்கள்


  இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் கூறி வழிபடுவது நல்லது. ஞாயிற்று கிழமையன்று விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டிற்கு வெளியில் சூரியன் உதிக்கின்ற போது, அந்த சூரியனை பார்த்த படி இம்மந்திரத்தை 10 முறை அல்லது 108 முறை கூறி வழிபடுவதன் மூலம் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டாகும். உடலின் எல்லா பகுதிகளிலும் இந்த மந்திரத்தின் அதிர்வு சென்று உடலுக்கு புத்துணர்வை தரும். மன அழுத்தத்தை குறைக்கும். உடலின் உறுப்புக்கள் அனைத்தும் நன்கு வேலை செய்ய இந்த மந்திர அதிர்வுகள் துணைபுரியும். இதை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினால் ஒருவருக்கு பல நன்மைகளை அளிக்கும். நாம் வாழும் இப்பூமியையும் நவ கோள்களுடன் சேர்த்து சூரிய குடும்பம் என்று கூறப்படுகிறது. கோடான கொடி வருடங்களுக்கு முன்னாள் இந்த பூமி உட்பட நவ கோள்களும் இந்த சூரியனின் வெடிப்பிலிருந்து உருவாகியது நாம் அறிவோம். அக்காலம் தொட்டு இக்காலம் வரை சூரியன் இந்த பூமியில் வாழும் மரம் செடி, கொடி, விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகிய எல்லா உயிர்களுக்கும் மிகுந்த ஆற்றலை தருகிறது என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும். நமது நாட்டின் ஜோதிட சாத்திரத்தில் சூரிய பகவான் அனைத்திற்கும் காரகனான இருக்கிறார் எனக் கூறுகிறது. மேலும் இந்த சூரியன் ஒரு ஜாதகரின் தந்தைக்கும் மற்றும் அந்த ஜாதகரின் உடலிலுள்ள எலும்புகளுக்கும் காரகனாக இருக்கிறார். நவீன விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் சூரிய ஒளி நமது எலும்புகளை பலப்படுத்தும் எனக் கூறுகிறது. எனவே சூரியனின் மிகுந்த நன்மையான ஆற்றல் வெளிப்படும் விடியற் காலை நேரத்தில் இம்மந்திரத்தை கூறி வழிபடுவது பல நன்மைகளை கொடுக்கும்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அதிகாலையில் இந்த மந்திரத்தை சொன்னால் அன்றைய நாள் அமோகமாக இருக்கும்.

  நம் வாழ்க்கையில் யாராவது நமக்கு சிறு உதவி செய்தாலே அவர்களுக்கு பல முறை நன்றியை தெரிவிப்போம். அப்படி இருக்கும்போது நம் உலகம் இயங்குவதே அந்த சூரிய பகவானின் மூலமாகத்தான். நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான ஆதாரங்களையும் நமக்கு தருபவர் அந்த சூரிய பகவான். சூரியன் இல்லையேல் நம்முடைய இந்த உலக வாழ்க்கை இல்லை. நம்மில் பலர் சூரியனை இரண்டு கைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் கும்பிட்டு வணங்குவோம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்த சூரியனுக்கு நன்றியை சொல்லி, அவரைப் போற்றும் வகையில் சூரியபகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வணங்குவது இன்னும் சிறந்தது. - Advertisement - சூரியனின் காயத்ரி மந்திரம் தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழியிலும் உள்ளது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்தை பார்த்து, இரண்டு கைகளையும் சேர்த்து, நம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அந்த பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம். சூரிய நமஸ்கார மந்திரம் தமிழில்: ‘காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’ சூரிய நமஸ்காரம் மந்திரம் சமஸ்கிருதத்தில்: ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் சூரிய பகவானின் இந்த மந்திரத்தை தொடர்ந்து அவரைப் பற்றிய சிறப்பான தகவல்கள் சிலவற்றை காண்போம். சூரியன் சிவபெருமானின் வலது கண்ணாக இருக்கின்றார் என்பதை புராணங்கள் கூறுகின்றது. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரியநாராயணர் என்றும் அழைப்பார்கள். சூரிய பகவானை வழிபடும் விரதமானது ரதசப்தமி ஆகும். இது தை மாதத்தில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகின்றது. ரதசப்தமி அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணிப்பதை தொடங்குகின்றன. இந்த நாளில் சூரிய உதயத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதம் சூரிய உதயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம் இவற்றை சூரியனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இந்த தினத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பண்டங்களை பசுவிற்கு தானமாகக் கொடுப்பது நல்லது. வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரியனுக்கு நைவேத்தியம் படைப்பது இன்னும் சிறந்தது. ரதசப்தமி அன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடிய தனமானது பல மடங்கு புண்ணியத்தை நமக்கு தேடித்தரும். இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் துன்பப்படாமல் வாழ்வதற்கு தேவையான அருளை வழங்க வேண்டுமென்று நாம் அனைவரும் அந்த சூரிய பகவானை பிராத்திப்போம்.
   

Share This Page