பலவகை நிறத்தில் உள்ள பழங்களின் பயன்கள்...!

Discussion in 'Diet and Healthy Eating' started by NATHIYAMOHANRAJA, Oct 8, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,451
  Likes Received:
  469
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஒவ்வொரு வகை நிறத்திலும் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் குறிப்பிட்ட பண்பினையும் குறிப்பிட்ட நோய்களை தடுக்கும் அல்லது குறைக்கும் தன்மையும் பெற்றுள்ளன. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் பழம் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.

  பழங்களை ஜூஸாக சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும்.

  மஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதோடு, ரத்தம் சுத்தமடையும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும் தன்மை உடையது.

  சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம். இவை ரத்தத்தை விருத்தி செய்யும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

  ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்

  ஆரஞ்சு நிற பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.

  பச்சை நிறப் பழங்கள் உடலின் வளர்சிதை மாற்றங்களில் பங்களிக்கின்றன. டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் சாப்பிட்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.

  ப்ரவுன் நிறப் பழங்கள் குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.

  ஊதா நிற பழங்களுக்கு ரத்த அழுத்தத்தைக் குரைக்கும் வல்லமை உண்டு. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும்.

  [​IMG]
   
  Shruthi likes this.

Share This Page