பாட்டி வைத்தியம்

Discussion in 'General Health Tips' started by malarmathi, Apr 16, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

  பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்

  வயிற்று வலி குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.

  முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.

  அத்திப் பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்.
   
  kani _mozhi and Athvika like this.
 2. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

  ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
   
  kani _mozhi, Sangee26 and Athvika like this.
 3. Athvika

  Athvika Member

  Joined:
  Feb 14, 2018
  Messages:
  61
  Likes Received:
  27
  Trophy Points:
  8
  Gender:
  Female
  super tips
   
 4. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  நெஞ்சு சளி

  தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

  தலைவலி

  ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

  தொண்டை கரகரப்பு

  சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

  தொடர் விக்கல்

  நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்

  வாய் நாற்றம்

  சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

  வயிற்று வலி

  வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
   
  kani _mozhi and Sangee26 like this.
 5. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  மூக்கிலிருந்து ரத்தம் வருவது பற்றி பீதியடைய வேண்டாம். மூக்கிலிருந்து ரத்தம் வந்தவுடன், நகத்தினால் சொரிந்து கொள்ளத் தோன்றும். ரத்தத்தை பார்த்தவுடன் பீதி அடையாமல் மனதை அமைதி படுத்தி நமக்கு நாமே இது கொஞ்சமான ரத்தம் தான் அதிகமில்லை என்று சொல்லிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக நினைக்காமல் என்ன காரணத்தினால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது என்று தெரிந்து கொண்டு அதை சரி செய்ய வேண்டும். ஆனால் வீட்டிலேயே சுலபமாக சரி செய்ய கூடிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

  அதிகமாக தும்மல் வருவது, மூக்கை தேய்ப்பது, குளிர் காலத்தில் வீசும் உலர்ந்த காற்று, காயங்கள், அலர்ஜி, சைனஸ் போன்ற சுவாச கோளாறுகள், மலேரியா, டைபாய்டு போன்ற சிலவகை காய்ச்சல்கள். மூக்கிலிருக்கும் குறிகிய ரத்த நாளங்கள் வீங்கும் போது தொடர்ந்து ரத்தம் வரலாம். மூக்கில் யாரவது தாக்கும் போது கூட அடிபட்டு, அதிர்ச்சியில் ரத்தம் வரலாம். மூக்கிலுள்ள இரு ஜோடி ரத்த நாளங்களில் அடி பட்டாலும் ரத்தம் வரும். மூக்கிலிருந்து ரத்தம் வரும் சரியான காரணத்தை அறிந்து கொண்டால், நாம் அதற்கான சரியான சிகிச்சை பெற வசதியாக இருக்கும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தில் பல வகைகள் உள்ளன.

  மூக்கில் ரத்தம் வடிதல்
  அ. முன்புறம் ரத்தம் வடிதல் - மூக்கிலுள்ள ரத்த நாளங்களில் அடி பட்டால் வரும் ரத்தம். இதற்கு கேசெல்பக் ப்ளக்ஸஸ் என்று பெயர்.

  ஆ. பின்புறம் ரத்தம் வடிதல் - தொண்டைக்கு அருகில் உள்ள ரத்த நாளங்களில் அடி பட்டால் இவ்வாறு ரத்தம் வரும். இது இருபது நிமிடங்கள் வரை நீடிக்கும். முன்புற ரத்தம் வடிதலை விட அதிகமான ரத்தம் வடிந்தால் இதற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

  எப்படி சரி செய்வது?
  எப்படி இருந்தாலும் பயப்பட தேவை இல்லை. பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் மூக்கிலிருந்து ரத்தம் வருவது பல சமயங்களில் தீங்கற்றதாகவே இருக்கும். வீட்டிலேயே சுலபமாக வைத்தியம் செய்து கொள்ளலாம்.
  மூக்கிலிருந்து ரத்தம் வருவதை சரி செய்ய தேவையானவை

  எஸென்ஷியல் எண்ணெய்
  2-3 சொட்டு லாவெண்டர் எண்ணெய் அல்லது சைப்ரஸ் எஸென்ஷியல் எண்ணெய்
  • ஒரு கப் தண்ணீர்
  • ஒரு காகித துண்டு எண்ணையை தண்ணீரில் கலக்கவும்.

  2. காகித துண்டை அதில் முக்கி அதில் உள்ள நீரை பிழியவும்.

  3. அந்த காகித துண்டை மூக்கில் வைத்து மென்மையாக இரண்டு நிமிடங்கள் அழுத்தவும். உங்களுக்கு எண்ணையால் தொந்தரவு இல்லை என்று தெரிந்தால் நேரடியாக இரு துளிகள் மூக்கினுள் விடலாம். ரத்தம் நிற்கும் வரை இரு நிமிடங்களுக்கு ஒருமுறை இதை செய்ய வேண்டும். சைப்ரஸ் எண்ணெயில் காயங்கள் மற்றும் மூக்கிலிருந்து வடியும் ரத்தத்தை நிறுத்தும் காரணிகள் உள்ளன. அதுவே மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை நிறுத்துகிறது. லாவண்டர் எண்ணெய் மூக்கிலுள்ள காயங்களை குணப்படுத்துகிறது.

  வெங்காயம்

  தேவையானவை
  1/4 வெங்காயம் பஞ்சு வெங்காயத்தை துருவி அதிலுள்ள சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  பஞ்சை அதில் நனைத்து பாதிக்கப்பட்ட மூக்கின் மேல் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  அல்லது எளிதாக ஒரு வெங்காயத் துண்டை மூக்கினடியில் வைத்து அதன் வாசணையை நுகரலாம்.

  தேவைப்படும்போது எல்லாம் இதை செய்யலாம்.

  சீன மருத்துவர்கள் ரத்தம் உரைதல் மற்றும் ரத்தப்போக்கிற்கு வெங்காய சாற்றிலிருந்து வரும் நெடி சிறந்த மருந்து என்று கண்டறிந்துள்ளனர்.
   
  Athvika and Tamilvanitha like this.
 6. Tamilvanitha

  Tamilvanitha Active Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  260
  Likes Received:
  188
  Trophy Points:
  43
  Gender:
  Female
  useful tips
   
  Athvika likes this.
 7. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

  கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

  ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
  இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

  சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

  திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
  முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

  ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
   
  Athvika and Prabha_kannan like this.
 8. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  உடம்பை குறைக்க இயற்கை வழிமுறைகள்

  சோம்பு தண்ணீர்


  தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.

  அமுக்கிரா வேர்
  மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

  சுரைக்காய்
  வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள்.

  பப்பாளி காய்
  பப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும்.

  எலுமிச்சை சாறு
  தினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.

  வெங்காயம், பூண்டு
  கட்டாயம் சமையலில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும்.

  அருகம்புல் ஜூஸ்
  அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

  மந்தாரை வேர்
  மந்தாரை வேரை 1 கப் நீரில் போட்டு காய்ச்சி, நீர் பாதியாக குறைந்ததும், வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை பாதியாக குறையும்.

  வாழைத்தண்டு ஜூஸ்
  வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.

  நடைப்பயிற்சி
  தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.

  கொள்ளு தேனீர்
  கொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம்.

  கல்யாண முருங்கை
  கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும்.
   
  Athvika and Prabha_kannan like this.
 9. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  477
  Likes Received:
  291
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Good informations .
   
  malarmathi likes this.
 10. Athvika

  Athvika Member

  Joined:
  Feb 14, 2018
  Messages:
  61
  Likes Received:
  27
  Trophy Points:
  8
  Gender:
  Female
  Nice shares
   
  malarmathi likes this.

Share This Page