பாயாசம்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பாசிப்பருப்பு பாயாசம்


    சமைக்க தேவையானவை

    • பாசிப்பருப்பு............1கப்
    • தேங்காய்................2 மேசைக்கரண்டி
    • திராட்சை.......15
    • தேங்காய்................2 மேசைக்கரண்டி
    • ஏலக்காய்........6
    • முந்திரி................10
    • பால்...............1 டம்ளர்
    • வெல்லம்.............11/4 கப்
    • கேரட்..........1 மேசைக்கரண்டி

    உணவு செய்முறை : பாசிப்பருப்பு பாயாசம்

    • Step 1.

      முதலில் பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு வேகவைக்கவும். பின்பு வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும்.தேங்காய், பாதி முந்திரி, தோல்நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
    • Step 2.

      மீதி முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்தெடுக்கவும்.பின்னர் அதே வாணலியில் கேரட்டையும் போட்டு வதக்கி எடுக்கவும்.அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.
    • Step 3.

      பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும்.கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.பின்பு பரிமாறவும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிவப்பு அவல் பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • சிவப்பு அவல் - 1 கப்
    • ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
    • முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)
    • பால் - 3 கப்
    • சர்க்கரை - 1/2 கப்
    • பாதாம் - 5 (பொடியாக நறுக்கியது)

    உணவு செய்முறை : சிவப்பு அவல் பாயாசம்

    • Step 1.

      முதலில் சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும் . பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
    • Step 2.

      அதனுடன் அவல் சேர்க்கவேண்டும் . பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்க்கவும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பூந்தி பால் பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • பூந்தி(உப்பு,காரம் இனிப்பு இல்லாத)-1கப்
    • சர்க்கரை-ஒன்னரை கப்
    • பால்-அரை லிட்டர்
    • ஏலக்காய்-2
    • முந்திரி,திராட்சை-சிறிது

    உணவு செய்முறை : பூந்தி பால் பாயாசம்

    • Step 1.

      முதலில் உப்பு, காரம் இனிப்பு எதுவும் இல்லாத பூந்தியை எடுத்துகொள்ளவும்.பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவேண்டும் .
    • Step 2.

      பிறகு காய்ச்சிய பாலில் சக்கரையை போட்டு கரைந்ததும்,பூந்தியை போட்டு ஒரு நிமிடம் வேக விடவேண்டும் .
    • Step 3.

      பின்னர் ஏலப்பொடி மற்றும் நெய்யில் வருத்த முந்திரி திராட்சை போட்டு கிளறி இறக்கவும்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தேங்காய்பால் பாயாசம்


    சமைக்க தேவையானவை

    • தேங்காய் - ஒன்று (பெரியது)
    • பச்சரிசி - அரை ஆழாக்கு
    • ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    • வெல்லம் - கால் கிலோ
    • காய்ந்த திராட்சை - 10 கிராம்
    • முந்திரி - 10 கிராம்

    உணவு செய்முறை : தேங்காய்பால் பாயாசம்

    • Step 1.

      சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.
    • Step 2.

      மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.
    • Step 3.

      நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும். கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இளநீர் நுங்கு பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • நுங்கு(பொடியாக அரிந்தது) - அரை கப்
    • இளநீர்வழுக்கை பொடியாக அரிந்தது - ஒன்று + அரை கப்
    • தேங்காய் பால்(தடிப்பானது) - ஒரு கப்
    • பால் - கால் கப்
    • இளநீர் - ஒரு கப்
    • முந்திரியகொட்டை (கஜூ) - 50 கிராம்
    • ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
    • பால் டின்(கன்டென்ஸ்ட்மில்க்) - அரை டின்
    • பிளம்ஸ் - 50 கிராம்

    உணவு செய்முறை : இளநீர் நுங்கு பாயாசம்

    • Step 1.

      முதலில் ஒரு பாத்திரத்தில் பால், இளநீர் வழுக்கை நுங்கு, பொடியாக அரிந்தது , தேங்காய்பால் , பால் டின் - கன்டென்ஸ்ட் மில்க் , இளநீர், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவேண்டும் .
    • Step 2.

      பின் கலக்கியவற்றை சிறிய கிண்ணங்களில் ஊற்றி அதன் மேல் முந்திரிக்கொட்டை , பிளம்ஸ் ஆகியவற்றை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடலைப்பருப்பு பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • கடலைப்பருப்பு - ஒரு கப்
    • பால் - அரை லிட்டர்
    • வெல்லம் - 2 கப்
    • நெய் - தேவையான அளவு
    • முந்திரிப்பருப்பு - 12
    • துருவிய தேங்காய் - ஒரு மூடி

    உணவு செய்முறை : கடலைப்பருப்பு பாயாசம்

    • Step 1.

      முதலில் கடலைப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும் .பின்பு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவேண்டும் .
    • Step 2.

      பின்பு பருப்பு ஆறியவுடன் துருவிய தேங்காய், சிறிதளவு முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
    • Step 3.

      பின் வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் அரைத்த விழுது, நெய் விட்டு கிளறவேண்டும் .
    • Step 4.

      இப்பொழுது நன்கு கெட்டியானவுடன், காய்ச்சிய பால், ஏலக்காய்ப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பூசணிக்காய் பாயாசம்


    சமைக்க தேவையானவை

    • மஞ்சள் பூசணிக்காய் - 200 கிராம்
    • தேங்காய் - 1/2 மூடி
    • சுக்கு தூள் - 1 பின்ச்
    • வெல்லப்பாகு - 150 கிராம்
    • நெய் - 4 ஸ்பூன்
    • ஏலத் தூள் - 2 பின்ச்
    • வறுத்த முந்திரி பருப்பு,வறுத்த தேங்காய் கொத்து - 1/2 கப்

    உணவு செய்முறை : பூசணிக்காய் பாயாசம்

    • Step 1.

      முதலில் தேங்காயில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பாலெடுக்கவேண்டும் . இது முதல் பால்..பிறகு தண்ணீர் சேர்த்து வடிகட்டி கிடைக்கும் நீர்த்த பால் இரண்டாம் பால்.
    • Step 2.

      இப்பொழுது நெய்யில் முந்திரி பருப்பையும் ,குட்டி வில்லைகளாக நறுக்கின தேங்காயையும் வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும் .
    • Step 3.

      பின்னர் மஞ்சள் பூசணிக்காயை சதுரங்களாக நறுக்கி நெய் விட்டு ஒரு பரந்த கடாயில் வதக்கவேண்டும் .
    • Step 4.

      பின் வதக்கி தண்ணீர் விட்டு பூசணிக்காய் நன்கு வெந்து உடைய தொடங்கியதும் ஒரு கரண்டியால் நன்கு மசித்து விடவும்.
    • Step 5.

      பின்னர் நன்கு மசிந்து வெந்ததும் வெல்லப்பாகு தேவைக்கு சேர்த்து கொதிக்க விடவும்.
    • Step 6.

      பின்பு பூசணிக்காயோடு பாகு கலந்து சற்று வற்றும்பொழுது இரண்டால் பால் சேர்த்து கொதிக்க விடவும். அதுவும் சிறிது வற்றிய பின் முதலாம் பால் சேர்த்து திக்காக வற்றி வரும்பொழுது நெய்யில் வறுத்த முந்திரி பருப்பும் ,சுக்கு பொடி,ஏலப்பொடி,தேங்காய் கொத்தும் சேர்த்து இறக்கவும்
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிம்பிள் சேமியா பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • பால் - இரண்டு டம்ளர்
    • சாப்ரான் - இரண்டு சிட்டிக்கை
    • ஏலக்காய் - ஒன்று
    • பாம்பினோ சேமியா - ஒரு கைபிடி ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு குழிகரண்டி
    • நெய்யில் வறுத்த முந்திரி - சிறிது

    உணவு செய்முறை : சிம்பிள் சேமியா பாயாசம்

    • Step 1.

      முதலில் பாம்பினோ சேமியாவை சிறிது நெய் விட்டு சிவற வறுத்து எடுத்து வைக்கவேண்டும் .
    • Step 2.

      பிறகு பாலை ஏலக்காய் மற்றும் சாப்ரான் சேர்த்து காய்ச்சி கால் பாகம் வற்ற விடவேண்டும் .பிறகு வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து வேக விடவும்.
    • Step 3.

      பின்னர் வெந்ததும் கன்டெஸ்ட் மில்க் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி இரக்கவும்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜவ்வரிசி பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • ஜவ்வரிசி - கால் கப்
    • நீர் - ஒரு கப்
    • நெய் - ஒரு தேக்கரண்டி
    • முந்திரி, திராட்சை - தேவைக்கு
    • சர்க்கரை - அரை கப்
    • பால் - 1 கப் - 1 1/2 கப்
    • ஏலக்காய் தூள்
    • பாதாம், பிஸ்தா

    உணவு செய்முறை : ஜவ்வரிசி பாயாசம்

    • Step 1.

      முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 2 விசில் வைத்து எடுக்கவும்.
    • Step 2.

      பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும் .பின்பு பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
    • Step 3.

      அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்
    • Step 4.

      இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து எடுக்கவும். பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா சேர்த்து பின்பு பரிமாறவும்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,129
    Likes Received:
    512
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிவப்பு அவல் பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • சிவப்பு அவல் - 1 கப்
    • ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
    • முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)
    • பால் - 3 கப்
    • சர்க்கரை - 1/2 கப்
    • பாதாம் - 5 (பொடியாக நறுக்கியது)

    உணவு செய்முறை : சிவப்பு அவல் பாயாசம்

    • Step 1.

      முதலில் சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும் . பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
    • Step 2.

      அதனுடன் அவல் சேர்க்கவேண்டும் . பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்க்கவும்.
     

Share This Page