பாயாசம்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆரஞ்சு பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • பால் - 4 கப்,
    • சர்க்கரை - முக்கால் கப்,
    • கண் டென்ஸ்டு மில்க் - அரை கப்,
    • நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் - 3,
    • ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை.
    • ஆரஞ்சு எஸன்ஸ் - சில துளிகள்,

    உணவு செய்முறை : ஆரஞ்சு பாயாசம்

    • Step 1.

      முதலில் ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்த்து, கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆறியதும் எஸன்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள்.
    • Step 2.

      ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி சிறு துண்டுகளாக்குங்கள். அவற்றைப் பாலில் சேர்த்து, மேலும் குளிரவைத்துப் பரிமாறுங்கள்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சப்போட்டா பாயாசம்


    சமைக்க தேவையானவை

    • சப்போட்டா பழம் - 2,
    • பால் - 4 கப்,
    • சர்க்கரை - அரை கப்,
    • கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்,
    • முந்திரிப்பருப்பு, நெய் - சிறிதளவு,
    • ஏலக்காய் தூள் - சிறிது,
    • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

    உணவு செய்முறை : சப்போட்டா பாயாசம்

    • Step 1.

      முதலில் பாலில் சர்க்கரையைப் போட்டு நன்கு கொதிக்கவைத்து, பிறகு அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்குங்கள்.
    • Step 2.

      பழத்தை நன்கு கழுவி தோல், விதை நீக்கி மிக்ஸியில் நன்கு அடித்து, இறக்கி வைத்திருக்கும் பாலுடன் இதை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
    • Step 3.

      பின்னர் பழத்தை போடும்முன் முந்திரி வறுத்துப்போட்டு, குங்குமப்பூவும் போடுங்கள். இதைக் குளிரவைத்துப் பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும்.பரிமாறவும்
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சௌசௌ பாயாசம்


    சமைக்க தேவையானவை

    • சௌசௌ - 1,
    • ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை.
    • சர்க்கரை - அரை கப்,
    • பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன்,
    • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - சிறிதளவு,
    • வெனிலா எஸன்ஸ் - 2 சொட்டு,
    • பால் - 2 கப்,
    • நெய் சிறிதளவு,

    உணவு செய்முறை : சௌசௌ பாயாசம்

    • Step 1.

      முதலில் சௌசௌவை நன்கு கழுவி, தோல் சீவி, துண்டு துண்டாக நறுக்கி நீர் விட்டு குக்கரில் வேகவிடுங்கள்.
    • Step 2.

      வெந்தவுடன் எடுத்து, மிக்ஸியில் போட்டு மைபோல் அரைத்து, அதனுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்க வையுங்கள்.
    • Step 3.

      நன்கு கொதித்தவுடன் மீதி பாலையும் சேருங்கள். கடைசியில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடித்த ஏலம் போட்டு இறக்குங்கள். ஃபுட் கலர் போட்டு கலந்து, வெனிலா எஸன்ஸ் 2 சொட்டு விட்டு இறக்குங்கள்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பீர்க்கங்காய் பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • பீர்க்கங்காய் - 2,
    • பால் - 3 கப்,
    • ஆப்பிள் க்ரீன் ஃபுட் கலர் - சிறிதளவு,
    • சர்க்கரை - முக்கால் கிலோ,
    • கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
    • ஏலக்காய் (பொடித்தது) - ஒரு சிட்டிகை அல்லது வெனிலா எஸன்ஸ் (தேவைப்பட்டால்) - ஒரு சொட்டு.
    • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு,

    உணவு செய்முறை : பீர்க்கங்காய் பாயாசம்

    • Step 1.

      முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி, நன்கு கழுவி சிறுசிறு துண்டாக நறுக்கியபின், ஒரு துண்டை வாயில் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
    • Step 2.

      ஏனெனில் சில வகை காய் கசப்புத்தன்மையுடன் இருக்கும் பிறகு அதை குக்கரில் வேக வைத்து மைபோல் அரைத்து, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகுமளவு கொதிக்கவையுங்கள்.
    • Step 3.

      பிறகு அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் ஃபுட் கலர் பவுடரையும் கலந்துவிடுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலம் பொடி செய்ததையும் அதில் போடுங்கள். வேண்டுமென்றால் பிடித்தமான எஸன்ஸ் ஒரு சொட்டு விட்டு மிதமான சூட்டில் பரிமாறலாம்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இளநீர் பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • பால் - 4 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், இளநீர் இளம் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்
    • சர்க்கரை - ஒரு கப்.

    உணவு செய்முறை : இளநீர் பாயாசம்

    • Step 1.

      முதலில் பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நேந்திரம்பழ பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • நேந்திரம்பழம் – 3,
    • அச்சு வெல்லம் – 10,
    • தேங்காய் – 1,
    • ஏலக்காய்தூள் – சிறிதளவு.

    உணவு செய்முறை : நேந்திரம்பழ பாயாசம்

    • Step 1.

      முதலில் நேந்திரம்பழங்களை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவேண்டும் .
    • Step 2.

      பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, பழம் மூழ்கும் அளவு நீர் விட்டு கொதிக்கவையுங்கள்.
    • Step 3.

      முக்கியமாக அடிக்கடி கிளறிவிடுங்கள். பின் சிவப்பு நிறம் வரும்வரை கிளற வேண்டும்.பின் தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
    • Step 4.

      பிறகு வெல்லத்தை நன்றாகப் பொடித்து, நீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, பழக்கூழில் சேர்த்து கிளறவும்.
    • Step 5.

      முதலில் இரண்டாம் பாலை பாயசத்தில் விட்டு கிளறி, சிறிது பக்குவமாக வந்தபின் முதல் பாலையும் அதில் விட்டு நன்கு கிளறுங்கள். பொடித்த ஏலக்காயை அதில் போட்டு இறக்குங்கள்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரிச் நட்ஸ் பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • பாதாம்பருப்பு – 50 கிராம்,
    • பிஸ்தா பருப்பு – 50 கிராம்,
    • ஏலக்காய்தூள் – சிறிதளவு,
    • நெய் – சிறிதளவு,
    • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் வறுத்து போட – சிறிதளவு,
    • பால் – இரண்டரை கப்,
    • சர்க்கரை – ஒரு கப்,
    • குங்குமப்பூ – சிறிது.
    • முந்திரிப்பருப்பு – 50 கிராம்,

    உணவு செய்முறை : ரிச் நட்ஸ் பாயாசம்

    • Step 1.

      முதலில் மூன்று வகை பருப்புகளையும் முதல் நாள் இரவே தண்ணீரில் மூழ்கும்படி ஊறவிடவும் . மறுநாள் நீரை வடித்துவிட்டு, பாதாம், பிஸ்தா பருப்புகளின் தோல் நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுங்கள்.
    • Step 2.

      அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் முந்திரி, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப்போட்டு, ஏலத் தூளையும் போட்டு இறக்கும் முன், குங்குமப்பூ தூவி இறக்குங்கள். உட ல் இளைத்தவர்கள், குழந்தைகள் போன்றோருக்கு இந்த பாயசத்தை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரவை - சேமியா பாயாசம்

    சமைக்க தேவையானவை

    • சர்க்கரை – ஒன்றேகால் கப்,
    • பால் – அரை கப்,
    • நெய் – அரை கப்,
    • ஏலக்காய்தூள் – சிறிதளவு.
    • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் – தேவைக்கேற்ப,
    • ரவை – கால் கப் (அல்லது) ஜவ்வரிசி – கால் கப்,
    • சேமியா – அரை கப்,

    உணவு செய்முறை : ரவை - சேமியா பாயாசம்

    • Step 1.

      முதலில் ரவையை வறுத்து ஒன்றேகால் கப் தண்ணீரில் வேகவிடவேண்டும் . பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவேண்டும்.
    • Step 2.

      வெந்த பிறகு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும் . பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள்.
    • Step 3.

      பொடித்த ஏலக்காயைப் போட்டு இறக்குங்கள். பின்னர் ரவைக்கு பதில் ஜவ்வரிசியையும் சேர்த்து இந்த பாயசத்தை செய்யலாம்.
     

Share This Page