பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயம்

Discussion in 'Temples and worship' started by selvi, Jun 11, 2015.

  1. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,501
    Likes Received:
    2,494
    Trophy Points:
    113
    Gender:
    Female
    பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயம்


    [​IMG]

    யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகின்ற பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் நேற்றாகும். யாழ்.குடாநாட்டின் கரையோரப் பகுதியில் 62.29 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு, புதுமையும் அழகும் மிக்க புனித அந்தோனியாரின் ஆலயத்தைத் தன்னுள் கொண்டு அமைந்துள்ள கிராமமே பாஷையூர் கிராமமாகும்.

    பாஷையூர் என்ற பெயர் வரக்காரணமாக அமைந்தது- கி.பி. 3 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மன்னார், மாந்தை பிரசித்தி பெற்ற இறங்குதுறையாக விளங்கியதால் கொழும்பு செல்லும் பயணிகள் கொழும்புத்துறையை சிறிய துறைமுகமாக முன்னைய காலங்களில் பயன்படுத்தி வந்தனர்.

    கொழும்பு செல்வதற்கான அனுமதி பத்திரங்கள் பெறுவதற்கு பாஷையூரில் விநியோகிக்கப்பட்டதால் இக்கிராமத்திற்கு ”பாசூர்” என்று பெயர் ஏற்பட்டதாக இக்கிராமத்தின் மூதாதையர்கள் மத்தியில் வாய்மொழி கதை உண்டு.

    இதற்கு இன்னுமொரு சரித்திரக் கதையும் உண்டு. அதாவது, யாழ்பாடி என்னும் ஒருவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை அரசாண்ட பரராஜசிங்கனின் அரச சபையில் தனது திறமையை வெளிப்படுத்தியதால், அவனது திறமையைக் கண்டு வியந்த அரசன் யாழ்பாடிக்கு பரிசாகக் கொடுத்த மணல்மேடுதான் தற்போது பாஷையூர் என்று அழைக்கப்படும் கிராமம் என சரித்திரக் கதைகள் கூறுகின்றன.

    மேலுமொரு உதாரணமாக, ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் பாஷையூரில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது குறித்து 1775 ஆம் ஆண்டு யாழ்.ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருந்த போர்த்துக்கேயர் செப வழிபாடுகளை நடத்த ஒரு சிறு குடிலை இக்கிராமத்தில் அமைத்தனர் என்றும், அப்போது அங்கே ஒரு புனித அந்தோனியார் திருச்சொரூபம் எழுந்தருளியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிற்பட்ட காலங்களில் சங்கிலிய மன்னன் ஆட்சிக் காலத்தில் போர்த்துக்கேயரின் வழிப்பாட்டுத் தலங்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி பல வேதகலாபனைகள் நடந்தேறியிருக்கின்றது. புனிதரின் வழிபாட்டிடமும் ஒருசமயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    1814 ஆம் ஆண்டுகளில் இந்திய நாட்டின் கோவா மாநிலத்திலிருந்து ஒறிற்றோரியன் சபையைச் சேர்ந்த குருவானவரான அருட்திரு யோக்கிம் கபிரியேல் அடிகளாரின் முயற்சியால் இக்கிராமத்தில் முருகைக் கல்லினாலான ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் அமைப்பாக இரு பக்கங்களிலும் பாலை மரங்களினாலான தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றின் முகப்பாரம் தாங்குவதற்கும் அமைப்பும் உருவாக்கப்பட்டது.

    அக்குருவானவரை அடுத்து பின்னர் இப்பங்கிற்கு வந்த குருவானவரான அருட்திரு விக்டர் டெலாண்டெஸ் அடிகளாரின் அயராத முயற்சியினால் 106 அடி நீளமும் 38 அடி அகலமும் கொண்ட ஆலயம் இருபதாயிரம் ரூபா செலவில் 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கட்டடப்பட்டது. இவ்வாலயக் கட்டடம் உரோமாபுரியின் கலைநுட்பங்களுக்கு அமைய இக் குருவானவரின் ஆலோசனையின் பேரில் அமையப்பெற்றது. அவர் புனிதரின் இக்கோவிலுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையின் நிமித்தம் அவர் இறந்த பின்பும் அவரது உடல் ஆலயத்தின் மேற்குப் பக்கமாக உள்ள கோவில் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு, அதில் அவருடைய பெயர் மற்றும் பிறந்த, இறந்த திகதிகள், சேவையில் இருந்த காலம் என்பன குறிப்பிடப்பட்டு உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

    அதற்குப் பிற்பட்ட காலங்களில் அவதாது,1935 ஆம் ஆண்டு அப்போது பங்குத்தந்தையாகவும் பின்னர் ஆயராகவும் இருந்த எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் முயற்சியினால் இரண்டு கோபுரங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆலயத்தின் நடுவே காணப்படும் சிம்மாசனமானது, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்து என்னும் சிற்பக் கலைஞரால் செதுக்கப்பட்டதாகும்.

    இன்றுவரை காணப்படும் சிங்காரத் தேரும் 1950 ஆம் ஆண்டு அவராலே வடிவமைக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கையின் போதும் இத்தேருக்கு எதுவித சேதமும் ஏற்படாமல் அப்படியே காணப்பட்டது. ”காலாதிகாலமாய் பவனி வந்த தேரும் பழுதின்றி நின்றதய்யா. அது பவள ரதமே ஐயா” என்ற பாடலும் இயற்றப்பட்டது.

    இராணுவ நடவடிக்கையினால் ஆலயத்தின் கூரைப் பகுதிகள் ஷெல் வீச்சுத் தாக்குதல்களில் சேதம் ஏற்பட்டும், அற்புதமாக அவரின் திருசொரூபம் உட்பட ஏனைய சொரூபங்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படாமல் இருந்தமை இங்கு குறிப்பிடக் கூடிய விடயமாகும்.
     
  2. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,501
    Likes Received:
    2,494
    Trophy Points:
    113
    Gender:
    Female
    கோவிலுக்கென பெரிய வெள்ளிக்கிழமைகளில் கல்லறை ஆண்டவரின் உடலை பவனியாக கொண்டு செல்வதற்கென ஆசந்தி, புனித அந்தோனியாரும் புனித செபஸ்தியாரும் எழுந்தருளியிருக்கும் இருப்பிடமும் அவராலே அந்தச் சிற்பியாலே உருவாக்கப்பட்டது. சிம்மாசனத்தின் நடுவே காணப்படும் புனித அந்தோனியாரின் உயர்ந்த திருச்சொரூபம் உரோமிலிருந்து எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் திருப்பொளிவு செய்யப்பட்டது. இங்கே காணப்படும் திருச்சிலுவைப் பாதை படங்கள் அனைத்தும் 1918 ஆம் ஆண்டளவில் பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். அவை இன்று வரை இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு எப்போது உருவாக்கம் பெற்றது என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியளவில் தெரியாது, சரித்திர கால புகழ்பெற்று விளங்கும் இவ்வாலயத்தின் திருவிழா யூன் மாதம் 13 ஆம் திகதி பெருவிழா காண்பது புனிதரின் பக்தர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியே. மேலும் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு இத்தாலி நாட்டின் பதுவையிலிருந்து எடுத்துவரப்பட்ட அந்தோனியாரின் திருப்பண்டம் (புனித அந்தோனியாரின் உடலின் ஒரு சிறிய பகுதி) இவ் ஆலயத்திற்கும் கொண்டுவரப்பட்டு, ஒரு இரவு பூராகவும் பொதுமக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அந்த வகையில் நேற்று மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையைத் தொடர்ந்து கொடிச் சீலை ஆலயத்திலிருந்து பவனியாக எடுத்துவரப்பட்டு மைதானத்தின் நடுவே நடப்பட்டிருக்கும் கொடி மரத்தில் கொடியேற்றப்படுட்டு வருடாந்த பெருந்திருவிழாவின் கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள குழந்தை இயேசு சிற்றாலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றன. மூன்றாம் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு கடல் நடுவே எழுந்தருளியிருக்கும் புனித அந்தோனியார் சொரூபத்தில் வழிபாடுகள் இடம்பெறும். எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை திருவிழாத் திருப்பலி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதாவது இத்திருவிழாத் திருப்பலி பாஷையூர் கிராமத்தின் மைந்தனும் பாகிஸ்தான் நாட்டின் ஆயருமான விக்டர் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



    தொகுப்பு: எம்.ஞானகீதன், பாஷையூர், யாழ்ப்பாணம்.
     

Share This Page