பிக்பாஸ்

Discussion in 'Celebrity Speech' started by NATHIYAMOHANRAJA, Aug 21, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,610
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பிக்பாஸ் ஸ்கூல்... ஆசிரியர்களாக மாறிய கஸ்தூரி, சேரன்!

  பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக இன்று பள்ளி மாணவர்கள் போல வேடமிட்டுள்ளனர்.

  100 நாட்கள் வரை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 57 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

  கடந்த வாரத்தில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் எவிக்‌ஷன் மூலமாக நடிகை அபிராமி குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.

  இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில், சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர்.

  இதனை தொடர்ந்து இன்றைய புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் பள்ளியாக மாறியுள்ளது. கஸ்தூரியும் சேரனும் ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் மாணவர்களாகவும் மாறியுள்ளனர்.  அதில், சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் குறும்பு செய்யும் மாணவர்களாகவும் ஆசிரியர் கஸ்தூரியை ஆயம்மா கஸ்தூரி என்று கலாய்ப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,610
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்!


  பிக்பாஸ் போட்டியாளரான நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

  கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

  இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.

  அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.


  இந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருநாள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.
   

Share This Page