பிரபலமான செய்திகள்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  என்னோட கடைசி ஆசையா மட்டும் நிறைவேற்றுங்க.! பறவை முனியம்மாவின் மனதை உருக்கும் கோரிக்கை.!

  மதுரை அருகேயுள்ள பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா. இன்றளவும், இவரின் நாட்டுப்புற பாடலுக்கென்று தனி மவுசு உண்டு. சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள்.
  [​IMG]
  கிராமத்து பாடல் இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று உற்சாகமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள். இவ்வாறு புகழில் வாழ்ந்த பரவை முனியம்மா இன்று வாய்ப்புகள் இல்லாமல், வயோதிகம் கொடுத்த நோயின் காரணமாக மிகவும் வறுமையில் வாடி வருகிறார். இதனால், இவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைப்பு நிதியாக 6 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைத்து வந்தது.
  இந்நிலையில், தனது மாற்றுதிறனாளி மகனுடன் வசித்து வரும் பரவை முனியம்மா, தற்போது பேட்டி ஒன்றில் பேசிய போது, தனது உடல் நலம் சரியில்லை என்றும், தனக்கு வழங்கி வரும் நிதி உதவியை தனது இறப்புக்கு பிறகு தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு வழங்க வேண்டும் என்றும் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
  [​IMG]
  இதேவேளை, நாட்டுப்புறப் பாடல்களில் தீவிரமாக இருந்த பரவை முனியம்மாள் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றவர். அவரின் தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கை நிறைய சம்பளம் !! உதறித்தள்ளிவிட்டு இளம்பெண் செய்யும் வேலையை பாருங்க !! உச்சத்தில் பறக்கும் தமிழச்சியின் கதை !!


  தொழில்நுட்ப வளர்ச்சியால் விவசாயம் செய்வது ஒரு நேர்த்தியான விஷயமாக மக்களின் மனதில் அமைவதில்லை.ஆனால் அதையும் மீறி விவயாசம் சிலர் மனதில் ஒரு ஆணித்தரமான இடத்தை பிடித்திருக்கும்.மேலும் நல்ல வேலையை விட்டுவிட்டு கூட விவசாயம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
  அதுபோல பொறியியல் படித்துவிட்டு கைநிறைய சம்பளம் வாங்கிய சென்னைப்பெண், வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தில் இறங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
  [​IMG]
  தஞ்சை மாவட்டம், பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி தேன்மொழி. இந்த தம்பதியின் ஒரே மகள் குறிஞ்சிமலர். கடந்த 2018ல் சொந்த ஊரில் பொறியியல் முடித்துவிட்டு சென்னைக்கு போன குறிஞ்சி மலர் கைநிறைய சம்பளம் கிடைத்தபோதும், சொந்த ஊரில் பணிசெய்ய வேண்டும் என தரிசு நிலத்தை விளைநிலமாக்க முடிவு செய்தார். இதற்காக சொந்தக்காரர் ஒருவரின் தரிசு நிலத்தையும் தேர்வு செய்தார்.
  [​IMG]
  உறவினரில் இரண்டரை ஏக்கரில் குறிஞ்சிமலர் 1500 தேக்கு மரங்கள் நட்டுள்ளார். அடுத்த ஆண்டே இதில் ஊடுபயிராக மிளகு செடியும் நட முடிவு செய்துள்ளார். குறிஞ்சிமலர் இதுபற்றி சொல்லும்போது, ‘’வேலைக்கு போகல. விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், எல்லாரும் சிரிச்சாங்க. பிடெக் படிக்க அஞ்சு லட்சம் செலவு செஞ்சுருக்கோம். இனி கல்யாணம் பண்ணணும்ன்னா நல்ல வேலை வேணும்ன்னு சொன்னாங்க.
  [​IMG]
  ஆனா நான் விவசாயம் செய்யதுல உறுதியா இருந்தேன். குமிழ் சந்திரசேகர்ன்னு ஒருத்தரு எனக்கு வழிகாட்டியா இருந்தாரு. அந்த அனுபவத்தில் வீட்டு பக்கத்திலேயே அவரை, பாகல், புடலை, பீர்க்கன், புளிச்சகீரை பயிர் சாகுபடி செஞ்சேன். அதிலேயே நல்ல மகசூல் வந்துச்சு. வரும் காலத்தில் முன்னோடி பெண் விவசாயியாக மாறுவதே ஆசை’’என நெகிழும் குறிஞ்சி மலர் சாப்ட்வேர் படித்துவிட்டு நிஜவேரை தேடி பயணிக்கிறார்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பிரபல பாடகியை கட்டாயப்படுத்தி முத்தமிட்ட போட்டியாளர் !! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த கூத்த பாருங்க !!


  குடும்பத்தாய்மார்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நம் நேரத்தைப்போக்க பெரிதும் உதவி செய்வது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அந்த வகையில் விஜய் டிவியில் தினசரி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
  அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்படை இருக்கிறது. அந்தவகையில் அப்படியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர், நடுவரான பாடகி நேஹா கக்கரிடம் தன்னை நினைவில் இருக்கிறதா? எனக் கேட்கிறார்.
  [​IMG]
  உடனே அவரை உற்சாகப்படுத்தி வாழ்த்த நேஹா அந்த போட்டியாளரை கட்டிப்பிடிக்கிறார். அப்போது அதை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்ட போட்டியாளர் உடனே எல்லை மீறி நடுவருக்கு முத்தம் கொடுக்கிறார்.
  தொகுப்பாளர் உடனே அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். சுற்றிலும் கேமராக்கள் சூழ, அந்த போட்டியாளர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சேனல் தரப்போ அதையே டீசராக போட்டு பரபரப்பை இன்னும் ஏற்றிவிட்டது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கடற்கரையில் பள்ளிச்சீருடையில் இளம்ஜோடி செய்த மோசமான செயல்.. ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

  தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவின் சங்கத்திற்கு முன்பாக நி ர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவையும் திரும்பிப் பார்க்க ஒட்டுமொத்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
  தெலுங்கில் பிரபல நடிகையான ஶ்ரீரெட்டி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை உறவுக்கு அழைத்து பின்னர் ஏமாற்றியதாக தெலுங்கு சினிமாவின் பல்வேறு முக்கிய நடிகர்களின் பெயரை கூறி ஒரு சில ஆதாரங்களையும் வெளியிட்டு, நடிகை ஸ்ரீரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
  [​IMG]
  தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என நடிர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டினை வைத்தார். ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டினை மறுத்த லாரன்ஸ் அவரை நேரில் அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.
  தற்போது ஸ்ரீ ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ரெட்டி டைரி என்ற படமும் தயாராகி வருகின்றது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
  சென்னையில் பல இடங்களுக்கு சென்றுவரும் ஸ்ரீரெட்டி சமீபத்தில் ஆண் ஒருவர் காருக்குள் வைத்து சு ய இ ன்பம் காணும் காட்சியினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தினார்.
  [​IMG]
  இந்நிலையில் சென்னை கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் சென்ற ஸ்ரீரெட்டி அங்கு பள்ளிச்சீருடை அணிந்த காதல் ஜோடி நெருக்கமாக நின்றுகொண்டு முத்தத்தை பறிமாறிய காட்சியினை அவரது நண்பர்கள் காணொளியாக பதிவு செய்ய, அதனை ஸ்ரீரெட்டி தற்போது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  இதுநாள் வரைக்கும் பிரபலங்களின் லீலைகளை மட்டும் வெளியிட்டு வந்த ஸ்ரீரெட்டி தற்போது பொதுஇடங்களில் இம்மாதிரியான முகம்சுழிக்கும் அநாகரீக காட்சியினையும் வெளியிட துவங்கியுள்ளார்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  திருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை !! குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி !!

  தமிழ்நாட்டை பொறுத்தவரை போலிச்சாமியார்களின் அடாவடி எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.என்னதான் தொழில்நுட்ப முன்னேறினாலும் சாமியார்களால் ஏமாறும் ஆண்களும் பெண்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
  சென்னையில் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்ணுக்கு குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி மோசடி செய்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.தியாகராயநகரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் வித்யாவுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
  [​IMG]
  இந்நிலையில் செல்வியின் உறவினர் மாலதி என்பவர் அவருக்கு சாமியார் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அப்போது அந்த சாமியார் வித்யாவிற்கு செய்வினை இருப்பதாகவும், அதை நீக்கினால் உடனடியாக குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.
  மேலும் சாமியார் கேட்ட ரூ 1 லட்சத்தை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வியும், வித்யாவும் வந்தனர்.அங்கு வந்த சாமியார், செல்வியிடம் ஒரு லட்ச ரூபாயினை வாங்கிய பின்னர் செய்வினை நீக்க, பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய பொருள்கள் மற்றும் கோழி ஆகியவற்றை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
  [​IMG]
  ஆனால் வெகுநேரம் ஆகியும் சாமியார் திரும்பி வராததால் ஏமாற்றம் அடைந்த செல்வி இது குறித்து பொலிசில் புகாரளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதோடு மோசடி சாமியாரை தேடி வருகிறார்கள்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  [​IMG]
  இன்று திருமணம் !! ஆனால் முதல் நாள் இரவு காதலனுடன் மணப்பெண் செய்த விபரீத காரியம் !! கதறும் பெற்றோர் !!

  இந்த நூற்றாண்டில் கூட காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவிப்பதில்லை.அந்த வகையில் பல குற்றங்கள் இதனால் ஏற்படுகின்றன.தற்கொலை செய்வது அல்லது காதலனுடன் ஓடிவிடுவது என பல்வேறு சமாச்சாரங்கள் நடந்தவண்ணம் உள்ளன.அதுபோல ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு ஓடி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியான மாதவரத்திற்கு உட்பட்ட சாஸ்திரி நகர் எனுமிடத்தில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார்.
  இவர் அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவருகிறார். இவருடைய மகளின் பெயர் மோனிகா. அதே பகுதியில் கார்த்திக் என்பவர் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
  [​IMG]
  ஆனால் இவர்களுடைய காதலுக்கு மோனிகாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக அவருக்கு நெல்லூரில் உள்ள உறவினருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று மோனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
  ஆனால் மோனிகா நேற்று தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு ஓடி விட்டார். உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. விரக்தியில் மாதவரம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
  [​IMG]
  காவல்துறையினர் தேடியதில் மோனிகாவும் கார்த்திக்கும் திருவேற்காடு கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மாதவரம் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். இருவரும் மேஜர் என்பதால் இருவரது பெற்றோருக்கும் அறிவுரை கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது மாதவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  திருமணத்திற்கு தயாரான நடிகை நயன்தாரா !! கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா !! அடக்கடவுளே !!

  தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரத்யேகமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்தவொரு நடிகையும் வெகுகாலம் தங்களது கேரியரில் நிலைத்து நிற்பதில்லை ஆனால் அதை உடைத்து வெகுகாலமாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நயன்தாரா.
  கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
  [​IMG]
  இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது.இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே திருமனத்தை முடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  மேலும், திருமணத்தை கேரளாவில் உள்ள சர்ச் அல்லது லண்டனில் வைத்து கொள்ளலாம் என்று நயன் குடும்பத்துடன் ஆலோசித்து வருவதாகவும், தன் திருமணத்திற்காக இத்தாலியில் உள்ள ஒரு பிரபல ஆடை வடிவமைப்பாளரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புடவைக்கு அவர் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
  [​IMG]
  இதுமட்டுமல்லாது, நயன் சில காதல்தோல்விகளை சந்தித்து பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதால், திரையுலகில் யாரையும் அழைக்க விரும்பவில்லையாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மனைவியுடன் கள்ள உறவு !! சொல்லியும் கேக்காத நண்பர் !! இப்படி ஒரு தண்டனையை கொடுத்த கணவர் !!

  மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வது அல்லது கணவனுக்கு தெரியாமல் மனைவி வேறு நபருடன் தொடர்பு வைத்துக்கொள்வது தற்போது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் தினமும் இதுபோன்ற செய்திகள் அதிகமாக வந்தவண்ணம்தான் உள்ளன.
  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டியைச் சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பெரியசாமி. 43 வயதான பெரியசாமி முன்னாள் ராணுவ வீரர். திருமணமான இவரும் இவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், பெரியசாமி, தனது தந்தை ராமமூர்த்தியுடன் வசித்து வருகிறார்.
  [​IMG]
  இந்த சூழலில்தான், திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகரைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும்(40) பெரியசாமிக்கும் இடையே தொழில் ரீதியான அறிமுகம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாயினர். இப்படி போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் பெரியசாமி கடத்தப்பட்டார்.
  விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி சரண்யாவுக்கும்(32) அவரது நண்பர் பெரியசாமிக்கும் கள்ள உறவு இருந்ததை கண்கூட பார்த்துவிட்ட செந்தில்குமார், இதனை கண்டித்துள்ளார். ஆனாலும் பெரியசாமியும் சரண்யாவும் அடிக்கடி போச்சம்பள்ளிக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.
  [​IMG]
  இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமாருக்கும் பெரியசாமிக்கும் இடையே தகராறு உண்டானது. அதன் பின்னர் தனது கூட்டாளிகளின் உதவியுடன் பெரியசாமியைக் கடத்திய செந்தில்குமார், பெரியசாமியின் உயிர் உறுப்பினை சிதைத்து, கொன்று புதைத்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த போலீஸார் பெரியசாமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செந்தில்குமாரையும் அவரது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  துடிக்க வைத்த காதுவலி !! பஞ்ச் Budsஐ உள்ளே விட்டு பார்த்த இளைஞர் !! வெளியே வந்ததை பார்த்து மயங்கி விழுந்த இளைஞன் !!

  பிரிட்டன் நாட்டில் இளைஞர் ஒருவரின் காதுகளில் சிலந்தி தஞ்சம் புகுந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டன் நாட்டில் கென்ட் நகரம் அமைந்துள்ளது. இங்கு லியம் கோமஸ் என்ற 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
  செவ்வாய்க்கிழமையன்று மாலையில் வேலையை முடித்தவுடன் வீடு திரும்பிய போது, வீட்டில் நிறைய சிலந்திகள் இருப்பதை கண்டு அசௌகரியமாக உணர்ந்துள்ளார்.பின்னர் சிலந்திகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு உறங்கிய, லியமுக்கு காலை எழுந்தவுடன் பயங்கரமான வலியும், காதடைப்பும் ஏற்பட்டது.
  [​IMG]
  இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டார். பின்னால் காது குடையும் பட்ஸ் உபயோகித்து காதை குடைந்தார். அப்போது அவருடைய பட்ஸில் சிலந்தியின் கால் வந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் உள்ளே சிலந்தி முழுவதுமாக இருப்பது தெரிந்துள்ளது.
  [​IMG]
  பின்னர் நன்றாக குடைந்த போது சிலந்தியை முழுவதுமாக வெளியே எடுத்துள்ளார். பின்னர் காது வலியிலிருந்து முழுவதுமாக விடைபெற்ற லியம், தூங்கும்போது இயர்மஃப் அணிந்துகொண்டு தூங்குகிறார்.இந்த செய்தியானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   

Share This Page