புதிய வீடு

Discussion in 'Non Fiction' started by NATHIYAMOHANRAJA, Jan 8, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  புதிய வீடு வாங்க முன்பணம் திரட்டுவது எப்படி?


  சென்னை போன்ற நகரத்தில் 10 லட்சத்துக்குள் சொந்த வீடு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள வீடுகளை வாங்குபவர்கள், அந்த வீட்டுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுவதுடன், வீட்டின் தொகையில் சுமார் 15 முதல் 20 சதவிகித பணத்தையும், முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கிறது. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் 10 லட்சம் ரூபாய் விலையில், ஒரு படுக்கையறை கொண்ட வீடு கிடைப்பது கடினம் குறைந்தபட்சம் 15 முதல் 20 லட்சங்களாவது தேவைப்படும்.
  இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகள், வீடு வாங்குபவருக்குக் கை கொடுக்காது. எனவே, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கும் நபர், முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், வீட்டுக் கடனுக்கான முன்பணம் எனச் சுமார் 3 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும். இதுவே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடாக இருந்தால் 4 லட்சம் வரையும், 25 லட்சம் விலையுள்ள வீட்டுக்கு சுமார் 5 லட்சம் வரையும் செலவிட வேண்டியிருக்கும். நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு 4 லட்சம் அல்லது 5 லட்சம் ரூபாயைத் திரட்டுவது என்பது கடினமான காரியம்தான்.
  இதுபோன்ற பெரிய தொகையைத் திரட்ட, நகையை அடமானம் வைத்தல், வட்டிக் கடன் வாங்குதல், பூர்விக வீடு அல்லது நிலத்தை விற்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை நடுத்தரக் குடும்பங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் இதற்கு வேறு மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறார்கள்.
  பணம் திரட்ட ஆலோசனைகள்
  வாடகை வீட்டில் இருக்கும் ஒருவர் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், அதற்கான முன்பணத்தைத் திரட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகை என்பதே சராசரியாக 6 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். எனவே, மாதம் தோறும் இந்தப் பணத்தைச் சேமித்தாலே குறிப்பிடத்தக்க அளவு மிச்சப்படுத்தலாம். இதற்குச் சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுவது லீசுக்கு வீட்டை எடுப்பது.
  சென்னையில் தற்போது பல இடங்களில் வீடுகள் லீசுக்குக் கிடைக்கின்றன. சொந்தமாக வீடு வைத்திருப்பவர் இன்னொரு வீட்டை வங்கிக் கடன் மூலம் வாங்க நினைத்தால், தனது வீட்டை லீசுக்கு விட்டு, அதில் கிடைக்கும் தொகையை முன்பணமாகக் கொடுத்து புதிதாக ஒரு வீட்டை வாங்கி விடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புதிய வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் தொகையுடன், மேலும், சில ஆயிரங்களைச் சேர்த்து, மாதத் தவணையை வாங்கிக் கட்டி விடலாம் என்பதே சிறந்த யோசனையாக இருக்கிறது. இதுபோன்ற எண்ணம் உடையவர்கள் சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருவதால், லீசுக்கான வீடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
  இது ஒருபுறம் என்றால், ஒரு வீட்டை லீஸ் எடுப்பதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் அல்லவா… அதை எப்படித் திரட்டுவது? உதாரணமாக 6 ஆயிரம் ரூபாய் மாத வாடகை உள்ள ஒரு வீட்டை லீசுக்கு எடுக்க அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதுபோன்ற சமயத்தில் சம்பந்தப்பட்ட நபர் பணியாற்றும் அலுவலகத்திலேயே, வட்டியில்லா கடனாக, ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இது அவரின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளப்படும். வாடகை கொடுப்பதற்குப் பதிலாக இப்படி மாதத் தவணையில் அலுவலகக் கடனைச் செலுத்தினால், ஒன்றரை முதல் 2 ஆண்டுகளில், அவரின் கையில் 2 லட்சம் ரூபாய் இருக்கும்.
  ஒருவேளை அலுவலகத்தில் கடனுதவி கிடைக்காவிட்டால், வங்கிகளில் தனிநபர் கடன் பெறலாம். பொதுத்துறை வங்கிகளில் ஒருவர் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதனை 2 ஆண்டுகளில் செலுத்துவதாக இருந்தால், அதிகபட்சமாக மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு வீட்டிற்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை வாடகை கொடுக்கும் ஒருவர், மாதம் தோறும் வாடகை கொடுக்காமல் 10 ஆயிரம் ரூபாய் செலுத்துவது சாத்தியமான விஷயம்தான்.
  இதில், சாதகமான விஷயம், 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் லீசுக்கு எடுத்த வீட்டுக்காக வங்கியில் கடனாக வாங்கிய 2 லட்சம் ரூபாய் அவருக்கு முழுதாகச் சொந்தமாகி விடும். வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணையும் 2 ஆண்டுகளில் முடிந்து விடும். அதற்குப் பிறகு ஒரு ஆண்டில், அதே லீஸ் வீட்டில் தங்கும் பட்சத்தில், வாடகைத் தொகை அல்லது வங்கிக் கடனுக்கான மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்காது. எனவே அவரால் அந்த ஒரு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து விட முடியும். ஒரு வீட்டை லீசுக்கு எடுத்த 3 ஆண்டுகளில், அந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்கும் என்பதால், அதனை முன்பணமாகக் கொண்டு புதிய வீட்டையும், வங்கிக் கடன் மூலம் அவரால் எளிதாக வாங்கிவிட முடியும்.
  ஒருவேளை குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளால், புதிய வீடு வாங்குவதை ஒருவர் தள்ளிப்போட நினைத்தாலும், அவரிடம் உள்ள பணத்துடன், மேலும் ஒரு லட்சத்தைச் சேர்த்து வேறு ஒரு வசதியான வீட்டை, லீசுக்கு எடுத்துக் கொள்ள முடியும். அல்லது அதே வீட்டில் இருக்க விரும்பினாலும், வீட்டின் உரிமையாளரிடம் பேசி லீஸ் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். இது 2 விதங்களில் லாபமளிக்கக் கூடிய விஷயம். முதலில் லீஸ் தொகை அதிகரிப்பதால், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை வேறொருவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விட விரும்ப மாட்டார்.
  இரண்டாவது, லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு, அதிக அளவு தொகை அந்த வீட்டைக் காலி செய்யும்போது கிடைக்கும். இதனால், ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணம் 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை மிச்சமாகும். அதனைத் தொடர்ந்து சேமித்து வந்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த கடன் தொகையில் புதிதாக ஒரு வீட்டை வங்கிக் கடன் மூலம் எளிதாக வாங்கிட முடியும்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வீடு கட்டும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமா


  வீடு கட்டும்முன் இதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசிய மா?
  நீங்கள் புது வீடு கட்டுகிறீர்களா? அப்படியென்றால் இவைகளெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
  கேள்வி :
  ஐயா, நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும் இடையிடையில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகிறது. எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும்? எந்த விஷயங்களை முதலில் கடைபிடிக்க வேண்டும்? எங்களுக்கு தகுந்த ஆலோசனையை வழங்கவும்.
  பதில் :
  1. உங்களுடைய இடம் திசைகாட்டிக்கு எவ்வாறு உள்ளது?
  2. உங்களுடைய இடம் சதுரம் அல்லது செவ்வகமாக உள்ளதா?
  3. உங்களுடைய இடம் ஒழுங்கில்லாமல் இருக்கும்போது சதுரம் அல்லது செவ்வகமாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதா?
  4. சரியான வரைபடம் உள்ளதா?
  5. நீங்கள் கட்டக்கூடிய வீட்டிற்கு உண்டான தோராய மதிப்பீடு உள்ளதா?
  6. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகளை நீங்கள் கடைபிடித்து உள்ளீர்களா?
  7. நீங்கள் வீடு கட்ட தொடங்கிய மாதத்திலிருந்து வீட்டை முடிக்கக்கூடிய மாதங்கள் வரை இயற்கை உங்களுக்கு பலவகையில் சாதகமாக இருக்குமா? என்ற விவரங்களை முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அதாவது மழைக்காலம், குளிர்காலம், வெயில்காலம் போன்ற விவரங்கள்.
  8. பூமி பூஜை போடுவது, நிலை வைப்பது, ரூபிங் போடுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற பல விஷயங்களை அனுபவப்பட்டவர்களை வைத்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறகு வீட்டு வேலையை தொடங்கி இருக்கிறீர்களா?
  9. உங்களுடைய வீட்டைக் கட்டத் தொடங்கியதும் எதை முதலில் கட்ட வேண்டும்? எதை இரண்டாவது கட்ட வேண்டும் என்கிற விவரங்களை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டீர்களா? வரிசைப்படி கட்டும்போது பொருளாதாரம் மற்றும் நேரத்தை மீதம் செய்ய முடியும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துள்ளீர்களா?
  10. நீங்கள் புதிதாக கட்டக்கூடிய வீட்டினால் உங்களுடைய தற்போதைய தொழிலில் எந்த பின்னடைவு மாற்றமும் ஏற்படாமலும், உங்களுடைய வாழ்க்கைத்தரம் மேலும் உயரவும், உறவுகளில் விரிசல் எதுவும் ஏற்படாத வண்ணமும், உங்களுடைய எண்ணங்கள் மேம்படவும், உங்களுக்கு சரியான வாஸ்து நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளாரா?
  ஒரு நல்ல வாஸ்துப்படியான வீட்டை உருவாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. இருந்தபோதும் நீங்கள் ஒரு நல்ல வீட்டை உருவாக்கிவிட்டீர்கள் என்றால் அந்த வீடு எதிர்வரும் நான்கு தலைமுறையை மிக மிக சிறப்பாக வைத்துக்கொள்ளும்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகள்!!


  வீடு கட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிக அளவிலான பணத்தை செலவு செய்து உருவாக்க கூடிய ஒரு தங்கும் இடம் என்றே கூறலாம். இதை நமக்கு பிடித்த மாதிரி கட்டுவது முக்கியமல்ல வாஸ்து பகவானுக்கு பிடித்தமாதிரியாக கட்ட வேண்டும் அப்போது தான் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வீடு கட்டுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
  வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகள்:-

  • மேல்நிலை நீர்த் தொட்டி வைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதை, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடிப் பகுதியில் அமைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மாட்டு தொழுவம் அமைப்பதென்றால் வடக்கு அல்லது வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைப்பது நல்லது.
  • நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இடமோ அல்லது வீடோ விலைக்கு வந்தால் வாங்குவது நல்லது. மாற்றாக தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
  • வீட்டில் தலைவாசலுக்கு நேர் குத்தலாக குளியலறை மற்றும் கழிப்பறையை அமைக்கக் கூடாது. அது மட்டுமில்லாமல் நடைப்பாதையிலும் கழிவறை அமைக்கக் கூடாது.
  • சமையல் அறைக்கு முன்னதாக வடக்கு அல்லது கிழக்கு திசையில் கழிப்பறை மற்றும் குளியலறை அமைத்தால் பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடும்.
  • தெருவின் மட்டத்தை விட தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோயை ஏற்படுத்தும். எனவே தெருவின் மட்டத்தை விட உயரமாக வீட்டின் தளத்தை அமைக்க வேண்டும்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  புதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் முறை!!


  புதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் முறை:-

  மனையின் வடகிழக்கு பகுதியில் பள்ளம் தோண்டி ஐந்து சுமங்கிலிகளை தண்ணீர் குடத்துடன் ஒருவர் பின்னர் ஒருவராக பள்ளத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த கலவையை ஊற்ற வேண்டும். வாழை இலையில் கடலை, அவல், பொரி, நாட்டு சர்க்கரை கலந்து வைக்க வேண்டும். பின்னர் நெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி குடும்ப தலைவி விளக்கேற்ற வேண்டும்.
  வாழை இலையில் உங்களுக்கு விருப்பமான மூன்று கனிகளை வைக்கலாம். இரண்டு தேங்காயை நீர் சிந்தாமல் உடைத்து வைக்க வேண்டும். தேங்காய் தண்ணீர் சிந்திவிட்டால் அதனுள் நீர் ஊற்றி வைக்க வேண்டும். அதன் பின்னர் கற்பூரம் ஏற்றி 108 முறை வாஸ்து காயத்ரி மந்திரத்தை சொல்லி கடவுளின் பாதத்தில் பூக்களை தூவ வேண்டும். அதன் பின்னர் எலுமிச்சை பழம், கற்பூரம் எடுத்து தென் மேற்கு, தென் கிழக்கு, வடகிழக்கு, வட மேற்கு ஆகிய பகுதியில் கற்பூரம் வைத்து எலுமிச்சை பழத்தை இரண்டாக பிழிந்து தரையில் போட வேண்டும்.
  பின்னர் மனையின் எட்டு திசைகளிலும் குங்குமம், மஞ்சள், பூ ஆகியவற்றை பூமியில் போட வேண்டும். அதன் பின்னர் வீடு கட்டுபவர் 9 சுமங்கிலியின் கையிலிருந்து செங்கலை வாங்கி பள்ளம் தோண்டிய இடத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியவாறு அடுக்க வேண்டும். அதன் பிறகு நவதானியங்களை போட்டு தீபாரதனை காட்ட வேண்டும். பூஜைக்கு வந்தவர்கள் அனைவரையும் கிழக்கு முகமாக நிற்க சொல்லி முதலில் எலுமிச்சை பழத்துடன் கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி தெருவில் போட வேண்டும். இதே போல தேங்காய் மற்றும் பூசணிக்காயிலும் கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி தெருவில் போட்டு உடைக்க வேண்டும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வாஸ்துப்படி மனையின் தரத்தை நிர்ணயிக்கும் முறை பற்றி தெரியுமா?

  வாஸ்துப்படி மனையின் தரத்தை நிர்ணயிக்கும் முறை:-

  • மனையின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் மட்டும் வீதிகள் அமைந்தால் அதை முதல் தர மனை என்று வாஸ்து குறிப்பிடுகிறது.
  • வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசையிலும் வீதிகள் அமைந்தால் அவை இரண்டாம் தர மனைகள் ஆகும்.
  • வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் வீதிகள் அமைந்தால் அந்த மனைகளை மூன்றாம் தர மனைகள் என பிரிக்கின்றனர்.
  • வடகிழக்கு திசை, வடமேற்கு திசை, தென் கிழக்கு ஆகிய திசைகளில் நேர்த்திசையாக அமையாமல் தென் மேற்கு திசைகளை நோக்கி அமையும் மனைகள் நான்காம் தர மனைகள் என பிரிக்கப்படுகிறது.
   

Share This Page