புயலாக வந்தாய் / Puyalaga Vanthai by divya

Discussion in 'Serial Stories' started by Divya nithi, May 9, 2019.

  1. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    22
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hlo frnds,,,, na ennudaya mudhal story ah upload pannalam nu nenaikkuren,,, Plz give me u r supports
     
    Tamilvanitha and Tamilsurabi like this.
  2. Tamilsurabi

    Tamilsurabi Administrator Staff Member

    Joined:
    Sep 11, 2014
    Messages:
    313
    Likes Received:
    214
    Trophy Points:
    43
    Welcome to Tamilsurabi Divya

    All the best .........
     
    Divya nithi likes this.
  3. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    22
    Trophy Points:
    8
    Gender:
    Female
  4. Thamaraikannan

    Thamaraikannan Active Member

    Joined:
    Feb 8, 2019
    Messages:
    143
    Likes Received:
    80
    Trophy Points:
    28
    Gender:
    Female
    Occupation:
    Homemaker
    Location:
    Tamilnadu
    Welcome divya. All the best.
     
    Divya nithi likes this.
  5. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    857
    Likes Received:
    542
    Trophy Points:
    93
    Gender:
    Female
    welcome & all the best divya
     
  6. Tamilvanitha

    Tamilvanitha Well-Known Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    471
    Likes Received:
    327
    Trophy Points:
    63
    Gender:
    Female

    Hi

    All the best

    When will you post your story .
     
    Divya nithi likes this.
  7. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    22
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Today mam
     
  8. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    22
    Trophy Points:
    8
    Gender:
    Female
    புயல்-1

    அந்த அறையில் அமர்ந்து இருந்தவனின் மனத்தில் தோன்றியது இதுதான்

    ‘இன்ட்ரெஸ்டிங்’ காரணம் – அவள்.

    யேய் உன் மனசுல என்ன பெ‌ரிய இவனு நினைப்பா, நானும் உன்கிட்ட ரெண்டு வாரமா பேச ட்ரை பண்ணறேன் பேச முடியல, அப்றம் முந்தாநாள் ஹலோனு பேச வந்தா மேலையும், கீழேயும் பாத்துட்டு நீ பாட்டுக்கு போற…….. மொத்தத்துல இதோ இங்க வந்து நிக்குது,,,,,, எல்லாமே உன்னால்தான் என்று பேசிக்கொண்டே போனவளை சற்றும் சட்டை செய்யாமல் அடுத்து என்ன இல்லை அவ்ளோதானா என்பது போல் சாய்ந்து உட்கார்ந்து நெட்டி முறித்தான்.

    அட பனைமரத்துக்கு பொறந்தவனே எவ்ளோ நீளமா மூச்சு திணற திணற பேசிட்டு இருக்கேன் நீ என்னடா அசால்டா உக்காந்து இருக்க, ச்சே மௌனி பங்கம் டி இது அதுவும் மரண பங்கம்…… . இவன சும்மா விட கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு

    தோ பாரு ஏதோ ரெண்டு பேருக்கும் நடக்க கூடாதது நடந்துருச்சு (அடியே நடந்தது கல்யாணம் டி என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லு வாசிக்கிறவங்க தப்பா நெனைச்சுக்க போறாங்க) (அவ அப்டிதா நாம சரியா புரிஞ்சிபோம்), அதையே சாக்கா வச்சு என்கிட்ட இளிச்சு இளிச்சு பேசுறது ( புள்ளைக்கு அவன பத்தி இன்னும் சரியா தெரியல போல), என்கிட்ட வரது இதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன். அப்றம் நான் அந்த ரூம் யூஸ் பண்ணிக்கிறேன், தேவை இல்லாம ரூம்க்கு வர வேலை வச்சுக்காத என்று இடைவெளி இல்லாமல் பேசி விட்டு அந்த அறையில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று விட்டாள். ( இவள பத்தி தெரிஞ்சே அந்த குட்டி ரூம இந்த ரூம்முக்குள்ள கட்டி வச்சிருப்பான் போல).

    அவளின் பேச்சில் தோன்றிய புன்னகையை அடக்கி அவள் பேசியவற்றை ரீவைண்ட் செய்து பார்த்தவனுக்கு முகம் சிவக்க அவளை நோக்கி நடந்தான்.

    கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டோமோ பேசுவோம் என்ன பண்ணிற போறான் என்று தன்னை சமாதானம் பன்னி கொண்டு இருந்தவளின் அறைக்கு சென்று அவளை சட்டென்று அருகே இழுத்து கழுத்தை பிடித்துருந்தான்.

    அவன் செய்கையில் அதிர்ந்தவளின் கண்கள் குளமாக அவனிடமிருந்து தன்னை விடுவிக்க போராட அவன் அழுத்தம் கூடியது.

    டேய் விடுடா என்ன என்று திக்கி திணறி சொல்ல,,,,,

    இதான் இதுக்குத்தான் இந்த தண்டனை முதல்ல என்னை மரியதை இல்லாம பேசுறது நிப்பாட்டு, யார்டி நீ ஏதோ உ‌ரிமை இருக்குறவ மாதிரி நீ பாட்டுக்கு வா, போ, டா னு சொல்லுற என்று பிடியை தளர்த்த இருமிக் கொண்டே விலகியவள் அவனை முறைத்து பார்த்தாள்,,,,,

    என்னடி முறைப்பு? ஆக்ட்சுவலா நான் சொல்லனும்னு நெனைச்சத நீ சொல்லிட்ட அதனால மட்டும் தா உனக்கு இந்த சின்ன தண்டனை. (அட கொலகாறா இது சின்ன தண்டனையா) (மைண்ட் வாய்ஸ்)

    நீ பேசுனத வச்சு பாத்தா இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லன்னு தெரியுது பின்ன ஏன் ஓகே சொன்ன?

    நீங்க இப்போ பேசுனத வச்சு பாத்தா கூடாத உங்களுக்கும் இஷ்டம் இல்லன்னு தெரியுது நீங்க ஏன் ஓகே சொன்னிங்க?

    எதிர் கேள்வி கேட்டவளின் கைகளை பற்றி மணிக்கட்டை அழுத்த வலியில் முகம் சுருக்கியவளைக் பார்த்து, என் கேள்விக்கு பதில் சொல்லி பழகு எதிர்த்து பேசுறத நிப்பாட்டு.

    ஏன் ஏன் பேச கூடாது நான் என்ன நீங்க வச்ச ஆளா? இல்ல நீங்க வச்ச அடிமையா? நீங்க சொன்னத கேக்க என்னய என்னனு நெனச்சிங்க? இந்த மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், நான்லாம் காலேஜ்லயே……..

    ஸ்ஸ்ஸ் உன் கதைய நிப்பாட்டு, வாய திறந்தா மூடுறது இல்ல போல, நீ அவ்ளோ நேரம் பேசும் போது நான் சும்மா இருந்தேன்ல இப்போ என்னோட குவஸ்டீனுக்கு ஆன்ஸ் பண்ணு.

    ஆமா எனக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்ல, என்னய கம்ப்பெல் பன்னி, மிரட்டி ஒத்துக்க வச்சாங்க.

    மிரட்டலுக்கு பயன்படுற ஆள் இல்லயே நீயி நீதா பெரிய இவளாச்சே என்று அவளின் பேச்சை வைத்தே நக்கல் அடிக்க,,,,

    அட டேய் உன் ஞாபக சக்தில தீய வக்க என்று சாபமிட்டுவிட்டு (மனசுக்குள்ள தாங்க) உயிர் போயிரும்னு மிரட்டுனா பயம் வரும்.

    பார்ரா உயிர் மேல அவ்ளோ ஆசையா என்று கேட்டு வைக்க

    அவன் கேள்வியில் கடுப்பாகி உன்னய கல்யாணம் பண்ணினதுக்கு நான் செத்தே போயிருப்பேன். அம்மா அப்பா சாகுறோம்னு மிரட்டுனாங்க போதுமா?? என்று சற்று கண்ணீர் எட்டி பார்க்க கூறினாள்.

    ஓஹ்

    என்ன ஓஹ்

    ஒன்னில்ல எதனால இஷ்டம் இல்லன்னு தெரிஞ்சுக்கலாமா?

    நா ஒருத்தர லவ் பண்றேன் வேற ஜாதி அவர் சோ ஒதுக்காமல் என்னய கட்டாயப்படுத்தி உன் தலையில கட்டிட்டாங்க என்று கண்ணீர் வழிய கூறியவளைக் கண்டு ஒரு முறை இமைகளை அழுத்தமாக மூடி திறந்தான். பின் விருட்டென்று அவளை விட்டு சென்று விட்டான்.

    சென்றவனின் உள்ளம் கொதித்துக் கண்டிருந்தது. ஜாதி, ஜாதி, ஜாதி ச்சே இதெல்லன்ன இவனுங்க என்ன செத்தா போயிடுறானுக. ***** பசங்க, ச்சே என்று பின்னந்தலையை அழுந்த கத்திக் கொண்டு ஆழ மூச்செடுத்து மீண்டும் அவளை நாடி சென்றான்.

    குழம்பி போய் இருந்தவளிடம் ஒற்றை கேள்வி

    இன்னும் அவன லவ் பண்றியா?

    ஆமா!

    மீண்டும் விருட்டென்று சென்று விட்டான்.

    இவளுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை, வாம்மா மின்னலு மாதிரி வந்துட்டு வந்துட்டு போறான் என்ன பன்ன போறான். என்ன நடக்குது இங்க என்று குழம்பி தலையை பிய்த்துக் கொண்டாள்.

    புயல் தொடரும்….
     
    kavitha11, Rabina and jayalashmi like this.
  9. jayalashmi

    jayalashmi Active Member

    Joined:
    Nov 12, 2017
    Messages:
    304
    Likes Received:
    246
    Trophy Points:
    43
    Gender:
    Female
    நல்ல தொடக்கம்...வாழ்த்துக்கள்
     
    Divya nithi likes this.
  10. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    857
    Likes Received:
    542
    Trophy Points:
    93
    Gender:
    Female
    nice start..
     
    Divya nithi likes this.

Share This Page