புரட்டாசி மாத ராசி பலன் – 2019

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Sep 25, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கும்பம்:

    கும்ப ராசி அன்பர்களே, அனைத்திலும் புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருக கடினமாக உழைப்பீர்கள். ஒரு சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். நண்பர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தாருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புது வீடு வாங்கும் யோகம் அமையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல்களும் பண விரயமும் உண்டாகும். நீங்கள் விரும்பியபடியே ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மீனம்:

    மீன ராசி அன்பர்களே,பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வு வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. பூர்விக சொத்துக்களின் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். வெளியில் இருந்து வர வேண்டிய பணம் சிறிய தாமதித்து பின் கைக்கு வரும். சற்றும் எதிர்பாராத வகையில் கடன் ஏற்படும். பழைய கடனை அடைக்க புது கடன் வாங்க வேண்டிவரும். குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு நீங்கள் முக்கிய காரணமாக இருப்பீர்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
     

Share This Page