புரிய வைத்த பாசம்...! By Mythili Ramjee

Discussion in 'Short Stories' started by Mythili Ramjee, Dec 8, 2018.

 1. Mythili Ramjee

  Mythili Ramjee New Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  21
  Likes Received:
  15
  Trophy Points:
  3
  Gender:
  Female
  [​IMG]

  " லலிதா... சூடா ஒரு காபி வேணும் " குரலில் கொஞ்சம் அதிகாரம் இருந்தது.
  ராஜன் வேலையிலிருந்து ஒய்வு பெற்று 6 மாதங்கள் ஓடிவிட்டன. தனியார் கம்பெனியில் தான் வேலை செய்தார். இப்பொழுது பென்ஷன் எல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லா கடனும் போக பி. எப் . பணம் 2 லட்சம் கையில். அவ்வளவுதான்.
  " இதோ வந்துட்டேன். கொஞ்சம் இருங்கோ " லலிதாவின் குரலில் சற்று சோர்வு தெரிந்தது.
  " சரி சரி. சீக்கிரம் வா. நான் பார்க் போகணும். குமார் வரேன்னு சொல்லிருக்கான். அப்படியே காலாற நடந்துட்டு பக்கத்து கோதண்டராமரையும் சேவிச்சுட்டு வருவேன். டிபன் அரிசி உப்புமா பண்ணிடு. " சொல்லிக்கொண்டே போனவரின் கையில் காபி கொடுத்தாள் லலிதா.
  ராஜனின் போன் அடித்தது.
  "நாளைக்கு பொண்ணு பார்க்க போகலாமா?" தரகர் கேட்க
  "ஓ ! போலாமே. சரியா சாயங்காலம் 4 மணிக்கு வந்திடறோம்னு சொல்லுங்கோ." ராஜன் சொல்லி போனை வைத்தார்.
  கெட்டி மேளம் முழங்க ராஜனின் ஒரே மகன் ஸ்ரீராமிற்கும் ஸ்ரீநிதிக்கும் கல்யாணம் முடிந்தது.
  கல்யாணம் ஆன இரண்டு மாதங்களில் ஸ்ரீராமிற்கு பெங்களூருக்கு மாற்றல் வந்து இருவரும் அங்கு சென்றனர்.
  மாதாமாதத்திற்கு செலவிற்கு பணம் அனுப்பினான் ஸ்ரீராம்.
  ஒரு வருடத்தில் , திடீரென்று மாரடைப்பால் லலிதா இறைவனடி சேர்ந்தாள்.
  ஒடுங்கிப் போனார் ராஜன். காரியங்கள் முடிந்தன.
  தன்னை அவர்கள் கூட அழைத்து செல்வான் ஸ்ரீராம் என்று நினைத்த ராஜனுக்கு ஏமாற்றம்.
  "அப்பா ! நாளைக்கு நைட் நாங்க கிளம்பறோம். நீ பத்திரமா இரு. முடிஞ்சப்ப வந்து பார்க்கிறேன். " ஸ்ரீராம் சொல்லி விட்டு தூங்க சென்றான்.
  இடி விழுந்தாற் போல் இருந்தது ராஜனுக்கு.
  லலிதா புகைப்படம் முன் நின்று உண்மையாகவே அழுதார்.
  பின்பு மனதை தேற்றிக் கொண்டார். வேறு வழி இல்லை என்று முடிவு எடுத்தார்.
  பெங்களூரு சென்றவுடன் போன் செய்தான் ஸ்ரீராம். இரண்டு வார்த்தை பேசிவிட்டு முடித்தான்.
  வீடு வெறிச்சோடி இருந்தது. மூச்சுக்கு மூச்சு " லலிதா. லலிதா " என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்.
  மனம் இறுகிவிட்டது போல் உணர்தார்.
  "ஒரு பத்து நிமிஷம் சேர்ந்தாப்போல உட்கார விடமாட்டேன். ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பேன். அவளும் சலிக்காமல் செய்வாள் . ஒய்வு எடுக்க போய்ட்டா. " மனதை தேத்திக்கொள்ள முயற்சித்து தோற்றார்.
  காலையில் எழுந்து வாசலில் பேப்பர் எடுத்து வந்தார்.
  சோபாவில் படிக்க உட்கார்ந்தார். 15 நிமிடங்கள் கழித்துதான் தனக்கு இனி கையில் காபி வராது என்கிற உணர்வு வர "ஓ ! " என்று கதறி அழுதார்.
  பின்பு நிதானமாக எழுந்து பாலை எடுத்து காய்ச்சினார்.
  ப்ரு கலந்து எடுத்து வந்தார். காபி சுவை நாக்கை கசக்க வைத்தது. அப்பொழுதுதான் தனக்கு ருசித்தது காபியால் அல்ல மனைவியின் அன்பும் காதலும்தான் என்று உணர்ந்தார்.
  " லலிதா. நீ கூட இல்லைனா என்ன? எனக்கு துணையா இருக்க மாட்டியா என்ன? நான் தைரியமா இருக்க போறேன். சமையல் செய்ய கொஞ்சம் கொஞ்சம் பழகிக்கறேன். நீ கிச்சேன்ல இருந்தப்ப நான் ஹால்லே ஜாலியா டீ.வி பார்த்துண்டு உட்கார்ந்ததில்லையா ? பரவா இல்லை நீ ரெஸ்ட் எடுத்துக்கோ நான் செய்யறேன். " மனதில் பேசிக்கொண்டே காபியை சாப்பிட்டார் .
  3 மாதங்கள் விரைந்து சென்றன. முதல் இரண்டு மாதங்கள் பணம் அனுப்பினான் ஸ்ரீராம்.
  மூன்றாம் மாதம் வரவில்லை. போன் வந்தது.
  " அப்பா. எனக்கு இங்க பைனான்ஸ் கொஞ்சம் கெடுபிடி. சமாளிச்சுக்கோ . ரெண்டு மாசம் கழிச்சு அனுப்பறேன். "
  ராஜன் " சரி.." என்ற ஒற்றை பதிலில் போனை வைத்தார்.
  “ இதெல்லாம் தெரியுமா லலிதா உனக்கு.அதான் உன் நகை , பாத்திரம் எல்லாம் பத்திரமா என்கிட்டே கொடுத்து இது நம்ம கடைசி காலத்திற்கு என்று சொன்னியோ ? “
  வாய் விட்டு அழுதார்..
  நகைகளையும் , பாத்திரங்களையும் தன் நண்பன் கூட சென்று விற்றார். . பணத்தை பாங்கில் போட்டார்.
  வீடு லலிதா பேரில் இருந்தது. ஆனால் அவள் தானும் , ராஜனும் உயிருடன் இருக்கும் வரை வீட்டை விற்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் . தங்கள் இருவரின் மரணத்திற்கு பின்பே இதனை அனுபவிக்க தன் வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்று உயில் எழுது சட்ட பூர்வமாய் பதிவு செய்திருந்தாள்.
  வீட்டு வாடகை தொல்லை இல்லை. அதனால் சமாளித்து விடலாம் என்கிற தைரியம் வந்தது ராஜனுக்கு.
  முற்றிலுமாக பணம் அனுப்புவதை நிறுத்தியே விட்டான் ஸ்ரீராம்.
  ஒரு வருடம் முடிந்து தீபாவளி வந்தது.
  அதற்கு இரண்டு நாட்கள் முன்னாடியே ஒரு பார்சல் வந்தது ஸ்ரீராமிற்கு அப்பாவிடமிருந்து.
  " ஸ்ரீராம். தீபாவளிக்கு உனக்கும் என் மாட்டுப் பெண்ணிற்கும் டிரஸ் வாங்கி அனுப்பி இருக்கேன். ஏதோ எனக்கு தெரிந்ததை வாங்கி இருக்கேன். சந்தோஷமா இருங்கோ . " அப்பா
  பார்த்தவுடன் இதயம் சுக்கு நூறானது . "சே...! நாம அப்பாவை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க
  வில்லை. ஆனால் , அவர் நம்மளுக்கு டிரஸ் வாங்கி அனுப்பி இருக்கார். எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். அவரோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்கவே இல்லை. தனியா அவரை விட்டுட்டு இங்கே நாங்க சந்தோஷமாய் ? " தன்னையே வெறுத்தான் ஸ்ரீராம்.
  மனைவியை அழைத்துக் கொண்டு இரவே சென்னை சென்றான்.
  அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
  " டேய். எழுந்திருடா. என்ன இது ? என்ன அவ்வளவு பெரிய குற்றமா பண்ணிட்டே ? ஒன்னும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். லலிதா என் கூடதான் இருக்கா. நீ கவலைப் படாதே. " ராஜன் தேற்றினார்.
  " இல்லை பா. இனி நீ தனியா இங்க இருக்க வேண்டாம். எங்க கூட வந்திடு. " கெஞ்சினான் ஸ்ரீராம்.
  " வரேண்டா. கொஞ்ச காலம் இங்கே இருக்கேன். அப்பறம் வேறு யாரு இருக்கா எனக்கும். நீதானே? "
  மனம் திருந்திய மகனை அன்போடு அணைத்துக் கொண்டார்.
  கண்களை துடைத்துக் கொண்டான். சந்தோஷமாய் தீபாவளி கொண்டாடினர்.
  ஆறு மாதங்களில் மாற்றல் வாங்கி அப்பா கூடவே வந்தனர்.
   
  HELEN MARY and kani _mozhi like this.
 2. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  730
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice..
   
 3. kani _mozhi

  kani _mozhi Well-Known Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  412
  Likes Received:
  269
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice. Pethavangala pillangalum purinjikanum. Pillangala pethavangalum purinjikkanum
   

Share This Page