புளிப்பொங்கல்

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Feb 11, 2019 at 6:51 PM.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,850
    Likes Received:
    351
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தேவையான பொருட்கள் :
    உடைத்த அரிசி ரவை - 200 கிராம்
    புளி - 100 கிராம்
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 100 மில்லி
    உப்பு - தேவையான அளவு.
    செய்முறை :
    அரிசி ரவையை நன்றாக கழுவி வைக்கவும்.
    ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்து அதில் புளியைக் கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலை அரிசி ரவையுடன் சேர்க்கவும்.
    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர்
    ரவை கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
    மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.
    சுவையான புளிப்பொங்கல் ரெடி.
     

Share This Page