புள்ளி ராஜா M.B.B.S

Discussion in 'Forum Games & Chat' started by NATHIYAMOHANRAJA, Jun 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  • நோயாளி: வயிறு எரியுது டாக்டர்..
  டாக்டர்: நான் இன்னும் பீஸ் எவ்வளவுன்னு சொல்லவே இல்லியே?...

  • பல் டாக்டர்: "வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல."
  மற்றவன்: "ஏன் என்னாச்சு."
  பல் டாக்டர்: "பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக் கொடுக்கிறாரு..."

  • நர்ஸ் :- டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!
  டாக்டர் :- அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

  • நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
  டாக்டர் : ஆமாம் ,
  நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
  டாக்டர் : ?????

  • நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
  டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..

  • அர்த்த ராத்திரியில் அந்த டாக்டர் கத்தியோட எங்க போறாரு ?
  "அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம் ".

  • நோயாளி : வயிறு எரியுது டாக்டர்
  டாக்டர் :எப்போதிலிருந்து?
  நோயாளி : என் மனைவி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்.

  • என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!

  • ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு
  அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!

  • பேஷண்டுக்குத்தான் தூக்கத்துல நடக்கிற வியாதி. . . சரி நர்ஸ் ஏன்
  பின்னாலேயே நடக்கிறாங்க..?
  அவங்களுக்கு தூக்கத்துலேயே கண்காணிக்கற வியாதியாம் ..!

  • நோயாளி: டாக்டர்... டாக்டர்.. எனக்கு வயித்துல ரயில் ஓடற மாதிரி அடிக்கடி சத்தம் கேட்குது டாக்டர்.
  டாக்டர்: (வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு) அப்படியா... எனக்கு ஒண்ணும் கேட்கலியே...
  நோயாளி: ஒருவேளை சிக்னல்ல நிக்குதோ!


  • அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
  ஒரு பேஷண்டுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்புன்னதும் உடைக்க கடப்பாரை தேடுறாரு!

  • நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
  நபர் : ஏன்?
  நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

  • டாக்டர் மு.முத்தண்ணா : "சோமு...... நீ....ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி
  கொண்டு வந்திருந்தா, பிழைக்கவெச்சிருக்கலாமே!"
  சோமு : "என்ன டாக்டர் ஸார் நீங்க.....என் மாமா விஷம் குடிச்சே பத்து
  நிமிஷம் தான் ஆகுது...."

  • நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது.
  கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?
   
  Tamilsurabi likes this.

Share This Page