பெண்களுக்கான_டிப்ஸ்

Discussion in 'Health tips For Women' started by NATHIYAMOHANRAJA, Feb 21, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,430
  Likes Received:
  469
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  திராட்சை சாற்றை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து முகத்தை கழுவினால் சருமமானது எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காணப்படும். மேலும் தினமும் இதை தொடர்ந்து செய்து வந்தால் சரும வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
  பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களானது பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் குறைபாட்டை நீக்க உதவுகிறது. மேலும் இது பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
  பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க சோயா பீன்ஸ் உதவுகிறது. இதில் உயர்தர புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரையுடன் சேர்த்து தினமும் இருமுறை பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  குழந்தை பெற்ற பெண்கள் வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி பின்பு அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரக்கும்.
  முகம் பளிச்சிட பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் ஊறவைத்து முகம் கழுவினால் முகம் நன்றாக பளிச்சிடும்.
  சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் நன்றாக வதக்கி மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினசரி காலை மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
  காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய் மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக அரைத்து புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் புண் குணமாகும்.
  தயிரை தலைக்குத் தேய்த்து நன்றாக ஊறவைத்து பின்னர் சிறிது நேரம் கழித்து சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது குறையும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வதை முற்றிலும் நிறுத்தலாம்.
  பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரப்பை அதிகரிக்க பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
  இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்து படுத்து காலையில் எடுத்தால் மூளை மற்றும் கண்களுக்கும் குளிர்ச்சி ஏற்படும். மேலும் பேன் மற்றும் பொடுகு தொல்லை அகலும்.
  கரப்பான் புண்கள் இருந்தால் மஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டையும் நன்றாக அரைத்து பூசி வந்தால் புண் விரைவில் ஆறி விடும்.
  பல்வலி உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.
   

Share This Page