பெண்ணின் மனம் / pennin manam... by Mythili Ramjee

Discussion in 'Ideas & Discussion' started by Mythili Ramjee, Jan 27, 2019.

  1. Mythili Ramjee

    Mythili Ramjee New Member

    Joined:
    Oct 24, 2018
    Messages:
    21
    Likes Received:
    15
    Trophy Points:
    3
    Gender:
    Female
    காதல்... காதல் ... நிச்சயதார்த்தம் முதல் கல்யாணம் வரை...

    [​IMG]

    ஆம்...! காதலித்த அனுபவம் எனக்கு உண்டு... எப்போ? யாரை?
    நிச்சயதார்த்தம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்தே எங்கள் கல்யாண தேதி முடிவாயிற்று.

    அந்த ஆறு மாதங்களில் நான் இந்தக் காதல் உணர்வை முற்றிலுமாக அனுபவித்தேன் என்று சொல்லமுடியும். சொல்லுவார்களே சினிமாவில் தன் மனதிற்கு பிடித்த ஒருவர் முன்னால் வந்து நின்றால் இந்த பட்டாம் பூச்சி பறப்பது போலவும், மேனியில் ஒரு வித இதமான சிலிர்ப்பு உண்டாவது போலவும், வெட்கத்தில் முகம் சிவப்பது போலவும், ஒன்றும் தோணாமல் அடிக்கடி தனக்கு தானே சிரித்து கொள்வதும் எல்லாவற்றையும்.... எல்லாவற்றையும்...!

    அது ஒரு மறக்க முடியாத வசந்த காலம். அச்சம், பயம், துக்கம், துயரம், கவலை எதையும் அறியாத ஒரு காலகட்டம். இனிமையான அனுபவமிக்க நாட்கள். 24 வருடங்கள் முன்னாடி எல்லாம் இப்பொழுது போல் ஒவ்வொருவர் கையிலும் செல் போனோ அல்லது நெட்டோ இருந்ததில்லை. எங்களுக்கு வாட்ஸாப் கிடையாது, பேஸ் புக் கிடையாது. இருந்தது ஒரே ஒரு போன் தான். அதுவும் நான் அலுவலகம் சென்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வருவேன், வீட்டு பக்கத்திலேயே ஆபீஸ் இருந்தது, அந்த அரைமணி நேரத்தில் நான் சாப்பிட்டு அவர் எப்பொழுது போன் செய்வார் என்று காத்திருந்து அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையா என்று பார்த்து பார்த்து பேசிய சுகம். இப்பொழுது வருமா ?

    என்னதான் பேசினோமோ தெரியலே. இப்பொழுது இருவர் கையிலும் செல் போன் இருக்கிறது. வாட்ஸாப்ப் இருக்கு. ஆனால் பேசத்தான் விஷயம் இல்லை. "அப்புறம்? அப்புறம்?" என்று இழுக்க வேண்டியது.
    எதிர்கால வாழ்க்கை பற்றிய சில எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டோம். நாங்கள் பிறந்து வளர்ந்த கதைகள், சினிமா விமர்சனங்கள், கண்ணதாசன் பாடல்கள், இளையராஜாவின் இசை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

    குடும்பத்தை பற்றி நிறைய பேசினோம். கூட்டு குடும்பம் அதை எப்படி சமாளிப்பது, உறவுகளை பேணுவது போன்றவையும் எங்கள் பேச்சில் இருந்தன.

    எனக்கு அலங்காரம் செய்து கொள்ள மிகவும் இஷடம். மேக்கப் என்று நான் செய்து கொண்டதில்லை. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும் முதல் முதலாய் மேக்கப் செய்த அனுபவமும் உண்டு. என்னமோ நான் அழகாய் தெரிய வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன்.
    பெண்களே சத்தியமாக சொல்கின்றேன் அந்த இனிமையான காதல் அனுபவத்தை முடிந்தால் கட்டாயம் அனுபவித்துப் பாருங்கள்.

    கல்யாணத்திற்கு பிறகு உள்ள கால கட்டம் என்பது வேறு...வேறு. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி கல்யாண முஹூர்த்தம் வரையில் உள்ள கால அனுபவம் சொர்கலோகத்திற்கு இணையானது! அதனை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது..

    சொற்களுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள். கனவுகளில் தோன்றிய சில காட்சிகள் நேரில் கண்டால் தோன்றும் ஒரு இன்ப அதிர்ச்சி. தனக்கென்று ஒரு உறவு என்கிற பெருமித மிக்க ஒரு உணர்வு. ஏதோ ஒரு புதிய லோகத்திற்குள் நுழைந்து, இன்பத்தை சுவைக்க நேரம் நெருங்கிவிட்டது போல் ஒரு தூண்டல்... எல்லாமே ஒரு சுகமான தருணங்கள்... !!

    அனுபவித்த பெண்களுக்கு தெரியும் அதன் சுகம்...!
     

Share This Page