பெரியம்மை !!!!

Discussion in 'General Discussion' started by malarmathi, Jun 14, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  பெரியம்மை உலகை பல நூற்றாண்டுகளாக உலுக்கி கொண்டிருந்தது . எகிப்திய மம்மிக்களின் முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கிறது என்பதை யோசித்தால் எவ்வளவு காலமாக பெரியம்மை உலகை ஆட்டிப்படைத்து இருக்கும் என்பதைப் புரிய வைக்கும் .

  எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு அந்நோய் வந்து சேர்ந்தது . உலகம் முழுக்கப் போர் மற்றும் வியாபாரம் செய்யப் போனவர்களின் உபயத்தில் நோய் பரவியது . ஒரு வருடத்தில் மட்டும் நான்கு லட்சம் பேர் நோயால் இறப்பது வருடாந்திர நிகழ்வானது . பிழைத்தாலும் விடாது கருப்பு போல மூன்றில் ஒரு நபருக்கு கண்பார்வை காலி . முகம் முழுக்கத் தழும்புகள் ; எண்ணற்ற மரணங்கள் என்று உலகம் பீதியில் உறைந்து போயிருந்தது .

  அம்ஹெர்ஸ்ட் எனும் ஆங்கிலேய தளபதி பெரியம்மை கிருமியை அமெரிக்கப் பழங்குடியின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்த யோசனை எல்லாம் தெரிவித்தான் ; அம்மை குத்துதல் என்கிற முறை இந்தியா,சீனா,ஆப்ரிக்கா ஆகியவ்ற்றில் பிரபலமாக இருந்தது .

  பெரியம்மையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுதலை பெற்ற நபரின் மருக்களில் பாலை எடுத்து இயல்பான மனிதர்களுக்குக் குத்துவார்கள் . இதுதான் அம்மை குத்துதல் .

  ஏகப்பட்ட நபர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு அந்தத் திரவம் கிடைக்காது . வீரியமும் ஒரே மாதிரி இல்லாமல் இருந்தது . இப்பொழுது தான் எட்வர்ட் ஜென்னர் காட்சிக்கு வருகிறார் . இளவயதில் மருத்துவம் பயின்றுவிட்டு ஊர் திரும்பியவர். பிரபல ஜான் ஹன்டரை பார்த்தார் . அவரிடம் எண்ணற்ற விஷயங்களை அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டார் .

  அவரின் வழிகாட்டுதலில் குயில்களைப் பற்றி ஆய்வு செய்தார் . அதில் குயில்கள் பிற பறவைகளின் கூடுகளை எடுத்துக் கொள்வதும் வளர்ப்பு பறவையை ஏமாற்றுவதையும் சொன்னார் .

  நடுவில் ஹைட்ரஜன் பலூனை சொந்தமாகத் தயாரித்துப் பறக்க விட்டு விளையாடிக்கொண்டு இருந்தார் ஒரு பிரபலமான பழமொழி இங்கிலாந்தில் இருந்தது ,"பசு மேய்க்கும் பெண்களும் பளிச்சான முகம் பெரியம்மையால் போகாது !" என்பதே அது . பசுவை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்குப் பெரியம்மை வந்து பார்த்ததே இல்லை மக்கள் . இதை நகர்புற வாசிகள் முட்டாள்தனம் என்றனர் ஜென்னர் இதைக் கவனித்தார் . அப்பொழுது தான் பசு அம்மையால் பாதிக்கப்படும் பொழுது அதன் புண்களில் இருந்து வரும் திரவம் இவர்களின் உடம்பில் செலுத்தப்படுவதால் நோய் எதிர்ப்பு உருவாவதை கண்டார் .

  சாரா நெம்ப்ஸ் எனும் பெண்ணின் கைநகத்தில் இருந்து பசுவின் நோய்க்கிருமியை எடுத்துப் பிப்ஸ் எனும் எட்டு வயது பெரியம்மை பாதிக்கப்பட்ட சிறுவனின் உடம்பில் செலுத்தினார் / பையன் பிழைத்துக்கொண்டான் . மதபீடங்கள் கடவுள் கொடுக்கும் தண்டனை இது என்று சொல்லிக்கொண்டு இருந்தது . இதை ஏற்க மறுத்தார்கள்.

  ராயல் கழகத்தில் இன்னமும் நன்றாக ஆராய்ச்சி செய்து ஆதாரத்தோடு வா என அனுப்பி விட்டார்கள் . போனார் தன் பதினோரு மாத பையன் உட்படப் பல பேருக்கு அதே நோய்க்கிருமியை சுத்திகரித்துப் பயன்படுத்தினார் . எல்லாரும் பிழைத்துக் கொண்டார்கள்.
   

Share This Page