மகா சிவராத்திரியின் வரலாறு

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Feb 20, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதலே பக்தர்கள் சிவ ஆலயங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரியின் கொண்டாட்டத்தின் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது யதார்த்தமாக ஒரு வில்வ இலை கீழேயிருந்த சிவன் மீது விழ, அதுவே அவருக்கு அர்ச்சனையானது. அதனால், அகமகிழ்ந்த சிவனார், அவரை அடுத்த பிறப்பில் சக்கரவர்த்தியாக அவதரிக்கச் செய்தார். அவரே, முசுகுந்தச் சக்கர வர்த்தி. மன்னரான பின்னும், சிவ பக்தனாக இருந்து, இந்திரன் பூஜித்த விடங்க லிங்கத்தைப் பெற்று சிவனின் அருள் பெற்றார். Sponsored Learn from Global Purdue Experts! Simplilearn Sponsored Yogi Babu marries Manju Bhargavi in Tiruttani, grand… India Today குரங்கு வடிவில் இருந்த மன்னன் வரலாறு, கயிலாயத்தில் நடந்ததாகவும், காட்டில் வேடன் ஒருவனிடமிருந்து தப்பி காட்டில் இருந்தபோது வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்து விடிய விடிய கண் விழித்து தன்னையும் அறியாமல் சிவ அர்ச்சனை செய்ததாகவும் இரு வேறு புராணங்கள் சொல்லப்படுகின்றன. திருவண்ணாமலையின் தல வரலாறு நூலில் அடிமுடி காண முடியாத படி உயர்ந்த சிவன், 'லிங்கோத்பவர்' வடிவம் எடுத்து பக்தர்களை உணர வைத்த நாள் சிவராத்திரி என காணப்படுகிறது. சிவராத்திரியை 'லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வர். 'மகாநிசி காலம்' (நள்ளிரவுக்கு முன்னும், பின்னுமான ஐந்து நிமிடங்கள். அதாவது, நள்ளிரவு 11.55 - 12.05 வரை) என்று சாஸ்திரங்கள் சொல்லும் நள்ளிரவு நேரத்தில், சிவனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும். சிவராத்திரி, நான்கு காலங்களிலும் நான்கு விதமான அபிஷேகங்கள் சிவனாருக்குச் செய்யப்படும். முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம்; இரண்டாம் காலத்தில் பால், பஞ்சாமிர்தம்; மூன்றாம் காலத்தில் பழச்சாறுகள், நான்காம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது விசேஷம். சிவராத்திரி அன்று எல்லா சிவாலயங்களிலும் உள்ள சிவபெருமானை வழிபடுவது புண்ணியத்தைத் தரும். ஆனாலும், சிவராத்திரியின் மகிமையால் உண்டான சப்தவிடங்கத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், பஞ்ச சபைகள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். முடிந்தவரையில் வில்வ இலைகளால் சிவனாரை அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை அவருக்கு உகந்தது என்பதால், அதனையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால் 'சுபிட்சம்' உண்டாகும்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?


  முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.

  சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும், சிவராத்திரியின் மகிமை தெரியுமா?

  ►சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.
  ►ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

  ►பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும்.

  ►வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

  ►அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.  செய்யக்கூடாதவை!

  ►பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

  ►சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகா சிவராத்திரி விரத முறை: சிவராத்திரியில் செய்ய கூடாத முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?

  மகா சிவராத்திரி தினத்தில் நாம் எப்படி விரதம் இருந்து பூஜை செய்து வழிபட வேண்டும், அதனால் கிடைக்கும் பலன் என்ன, சில விஷயங்களை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம். சில விஷயங்கள் நம் சிவ விரதத்தை முறித்து நம் வழிபாட்டுக்கு முழுமையான பலன் கிடைக்காமல் போகலாம். அவைகள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

  நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய பூஜை

  [​IMG]
  மகா சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, இறைவனின் அருளைப் பெறக்கூடிய அற்புதமான திருநாள். இந்த நாளில் நாம் நான்கு ஜாமங்களில் செய்ய வேண்டிய அபிஷேக அர்ச்சனை, ஆராதனை என்ன என்றும், செய்யக் கூடாத முக்கிய விஷயங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்.
  முதல் ஜாமம் செய்ய வேண்டியது:
  பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்யவும், ரிக்வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிவராத்திரி பூஜைகள்

  இரண்டாம் ஜாமம்:
  பால், தயிர், நெய் கலந்த ரவை அதனுடன் சர்க்கரை கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்த வேண்டும். பின்னர், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேத பாராயணம் செய்யவும்.
  மூன்றாம் ஜாமம்:
  தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல், மல்லிகைப் பூக்களால் அலங்காரம், வில்வ இலைகளால் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம் செய்யவும்.
  நான்காம் ஜாமம்:
  கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்தல், நந்தியா வட்டை மலர் சாற்றி வழிபடுதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேதம் பாராயணம் செய்யலாம்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகா சிவராத்திரியில் செய்யக்கூடாத விஷயங்கள்:


  மகா சிவராத்திரியில் செய்யக்கூடாத விஷயங்கள்:
  மகா சிவராத்திரி தினத்தில் சில நடைமுறை பழக்கங்கள் அன்று நாம் செய்ய கூடாதவைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
  பொதுவாக நாம் சிவ ராத்திரி தினத்தில் சிவனை தரிசனம் செய்ய அருகில் உள்ள சிவாலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் பக்தர்களுக்கு அவர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வரிசையில் நிற்பவர்களுக்குப் பலரும் அன்னதானம் கொடுப்பது வழக்கம்.
  அன்னதானம் எல்லா தானங்களிலும் மிக முக்கிய, உன்னத தானம். இருப்பினும், சிவ ராத்திரி வழிபாடு என்பது அன்று முழுவதும் விரதமிருந்து, உணவு, உறக்கத்தை துரந்து இறைவனை எண்ணி வழிபடக்கூடிய மிக அற்புத நாள்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அன்னதானம் தவறில்லை


  கோயிலில் அன்னதானம் வழங்குவது தவறில்லை. ஆனால் அதை வாங்கி உண்ணும் பக்தர்களின் விரதம் முறிவது அவர்களுக்கே தெரியாத விஷயமாக உள்ளது.
  அனைவராலும் விரதம் இருக்க முடியாது என்பது நிதர்சனம். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவர்கள் உடல் நிலையைப் பொருத்து உணவு எடுத்துக் கொள்வது அவசியம் தான்.
  ஆனால், அதைத் தவிர பலரும் இறைவனுக்காக விரதமிருந்து சிவனை வழிபட ஆலயங்களுக்கு செல்வதுண்டு.
  மனிதர்களுக்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்களான உணவு, நல்ல தூக்கம். இவை இரண்டையும் விலக்கி சிவனுக்காக விரதமிருக்கக்கூடியது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
  இந்த இரண்டையும் விலக்கினால், நம் ஐம்புலன்கள் தானாகவே அடங்கும். அதன் மூலம் இறையுணர்வு நாம் பெற முடியும். நினைத்த எண்ணங்கள் சித்தியாகும்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிவ ராத்திரியும், வைகுண்ட ஏகாதசியும்:

  சிவ ராத்திரியும், வைகுண்ட ஏகாதசியும்:
  வைகுண்ட ஏகாதசியும் இதே போன்ற நோக்கத்திற்காக தான் கடைப்பிடிக்கப்படுகிறது.

  சிவ ராத்திரி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:
  சிவ புராணம், கோளாறு பதிகம் படித்தல், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அதோடு நடராஜர் பத்து, பரமசிவ ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம்.
  திருமந்திரம் படித்தலும், பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தல் மிக நல்லது.
  மற்ற நாட்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தால் கிடைக்கும் பலனை காட்டிலும், சிவ ராத்திரி தினத்தில் உச்சரிக்க நூறு மடங்கு அருட்காட்சம் கிடைக்கும்.
  சிவ ராத்திரி அன்று மாலை 6 மணிக்குள் குளித்து சிவாலயத்திற்குச் செல்லுங்கள். பணிக்கு செல்பவர்கள் பணி முடித்து திரும்பியதும் குளித்து கோயிலுக்கு சென்று, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிவ சிந்தனையில் தியானம் செய்தாலே போதுமானது.
  சிவ நாமத்தை உச்சரிப்பது நல்லது.
   

Share This Page