மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்!

Discussion in 'Technology News' started by NATHIYAMOHANRAJA, Nov 13, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வாஷிங்டன் : முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் மாநாட்டில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

  ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில்செயல்பட கூடிய இந்த ஸ்மார்ட்போன், கேலக்சி எஃப் ஸ்க்ரீன் திறந்த நிலையில் 7.3 அங்குள்ள டிஸ்பிளேவில் டேப்லெட் போன்று பயன்படுத்தக் கூடியதாகவும் மடங்கிய நிலையில் 4.58 அங்குள்ள டிஸ்பிளேவுடன் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  ஓஎல்இடி பேனல் வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த போனை ஸ்மார்ட்போனாகவும் டேப்லெட் ஆகவும் பயன்ப்படுத்தலாம். இரண்டு சிம் கார்டு வசதி 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி என்று சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை சுமார் 1லட்சத்து 10 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’

  ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’ என்ற விழாக்கால சிறப்பு விளக்குடன் கூடிய ஒலிபெருக்கி வகை, இதன் சுடர் ஒளி மற்றும் வயர்லெஸ் ஒலிப்பெருக்கி, விழாக்கால மனநிலையை அமைதுத்தருகிறது.

  பண்டிகைக்காலம் என்பது, குடும்பத்தார்களின் ஒன்றுகூடல், உணவுகள், அரவணைப்பு மற்றும் உரையாடல்கள் கொண்டது; இவை அனைத்துடனும் சிறுது இசை மற்றும் ஒளி சேரும் பொழுது இந்த குடும்ப ஒன்றுகூடல் மேலும் சிறப்படைகிறது.

  ஜெப்ரானிக்ஸ், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப சாதனங்கள், ஒலிப்பெருக்கிகள், கைபேசி/அன்றாட தேவையான பொருட்கள் ஆகியவைகளின் முன்னோடி “ஆட்டம்” என்னும் 60 LED ஒளி விளக்குகளுடன் கூடிய ஒலிப்பெருக்கி, தீபம் போன்ற வடிவிலான ஒளியை வெளிப்படுத்தி, எப்படிப்பட்ட விழாவையும் சிறப்பிக்கிறது.

  விழாக்கள் என்றாலே அதில் இசை ஒரு இன்றியமையாத முக்கியமான அம்சம்,ஆனால் அதனுடன் சிறிது ஒளியை சேர்க்கும் பொழுது அந்த விழா சிறப்படைகிறது. ‘ஆட்டம்’ விழாக்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது, உங்களின் இல்லங்களை தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே ஒளிமயமாக்குங்கள். இந்த ‘ஆட்டம்’ ஒலிப்பெருக்கி, இனிமையான மற்றும் அமைதியான சூழலில் மிதமான தீப ஒளியில் ஓய்வெடுக்க நினைக்கும் அனைவருக்கும் மன அமைதியை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமான பாடல்களை கேட்டு, உங்கள் இல்லத்தின் தோற்றம் மற்றும் உள்ளுணர்வை மாற்றுங்கள்.

  சிறியதாக இருப்பினும் சிறந்த நவீன வசதிகளுடன், ‘ஆட்டம்’ ஒலிப்பெருக்கி ஒரு ஆர்ச் ஐ போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 60 LED விளக்குகள் மூலம் இதமான மஞ்சள் நிற ஒளியினால் உங்கள் இல்லத்தை அலங்கரிக்கிறது. மிகச் சிறந்த ஒலியுடன் கூடிய ஒரு சிறந்த கூடிய பொழுதுபோக்கை நிச்சயமாக அனுபவிக்கலாம்.

  இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இரண்டு விதமான சலுகைகளுடன் வருகிறது, ஆதாவது நீங்கள் உங்கள் விருப்ப பாடல்களை BT மூலம் வயர்லெஸ் முறையில் கேட்கலாம் அல்லது மைக்ரோ SD Card மூலம் கேட்கலாம். நடுப்புறத்தில் உள்ள பட்டன்கள் மூலம் நீங்கள் பாடல் வரிசைகளை மாற்றலாம் அல்லது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் மேலும் இதில் உள்ள விளக்கை இயக்க ஒரு பிரத்யேக சுவிட்ச் உள்ளது.

  இந்த புதிய வெளியீடை பற்றி ஜெப்ரானிக்ஸ் இன் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி – பேசும் பொழுது, “நாங்கள் எங்களது புதிய பண்டிகை கால படைப்பான 2 இன் 1 ஒலிப்பெருக்கி மற்றும் விளக்கைக் கொண்ட இந்த படைப்பின் மூலம் மிகுந்த பெருமிதம் அடைகிறோம்; இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி ஒரு சிறந்த பண்டிகை கால பொருளாகவும், விளக்குகள் கொண்டு ஒளிர்வதால் நண்பர்களுக்கு பரிசாகவும் அளிக்க சிறப்பாக இருக்கும்.

  இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கிகள் கருப்பு நிறத்தில் இந்தியாவின் முன்னணி கடைகளில் முழுவதும் விற்பனையில் உள்ளது.
   

Share This Page