மழை நிலவே / MazhaiNilave by Gory vicky

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Apr 10, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  343
  Likes Received:
  237
  Trophy Points:
  43
  வணக்கம் தோழமைகளே


  நம் தள எழுத்தாளர் கௌரி விக்கி தமது அடுத்த படைப்புடன் வந்துவிட்டார்


  கதை தலைப்பு "மழை நிலவே "

  வாழ்த்தி வரவேற்கிறோம் ......
   
  Gory vicky likes this.
 2. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  343
  Likes Received:
  237
  Trophy Points:
  43
  "மழை நிலவே "

  அத்தியாயம் 1

  ஊரே களைகட்டியது கோவில்திருவிழாவினால். எங்கு பார்த்தாலும் சந்தோஷ முகங்களும் கலகலபேச்சுக்களுமாகவே இருந்தது. ஐந்துவருடங்களுக்கு பின் கோவில் திருவிழாமறுபடியும் நடக்கிறதென்றால் இருக்காதாபின்னே. எங்கு பார்த்தாலும் சிறு சிறுகடைகளும் நடைபாதை கடைகளுமாககொண்டாட்டத்துக்கு குறை இல்லை . சிறுவர்களுக்கு ராட்டினங்களும் மிட்டாய்கடைகளுமாக கண்ணை பறித்தன .

  இளவட்டங்கள் ஊரையே ரெண்டுபடுத்திக்கொண்டிருந்தனர் . அவர்களின் பார்வையெல்லாம் அங்கே சுற்றி வரும்இளம்பெண்களை சுற்றியே வந்தது.அங்கேஇருந்த பஞ்சுமிட்டாய் கடையின் அருகில்நின்று வெகு நேரமாக கால் மாற்றி கால்நின்று வெறுத்து போயிருந்தான் முகிலன். பாவம் அவனும் எவ்வளவு நேரமாக தனகாத்திருப்பது? வரவேண்டியவள்வரவில்லையே!

  அவனுடன் இருந்த நண்பர்கள் எல்லாம்குதூகலமாக சைட் அடித்தபடியும்கலகலத்தபடியும் இருந்தனர். இவன் மட்டும்பார்வையை மக்கள் செல்லும் வழிநோக்கிப்போவதும் பின் திரும்பிமீழ்வதுமாக இருந்தான். "வருவாளாமாட்டாளா? நான் காத்திருப்பேன் என்றுதெரியும் தானே. அப்படி இருந்தும் ஏன்இன்னும் வரவில்லை. ஒரு வேளை வீட்டில்எதுவும் பிரச்சனையோ ? விடவில்லையோ ? போய் பார்க்கலாமா?" யோசித்தபடியேநின்றிருந்தான் .

  அவனது ஆருயிர் நண்பன் திலீபன் "என்னமுகிலா? எங்கயோ வெறிச்சு பார்த்திட்டேஇருக்கியே . என்ன விஷயம் ? எதாவதுபிரச்சனையா ?" என்றதும் தான் புரிந்தது தன்னை எல்லாரும் பார்ப்பது .


  "அப்படிலாம்ஒன்னும் இல்லை மச்சான் . சும்மா தான்வேடிக்கை பார்க்கிறேன் . ஆமாம் எங்கேஉன்னோட ஆளு ? இன்னிக்குகாட்டேறேன்னு சொன்னியே ?" என்றுசொல்ல ,

  "அடப்பாவி அப்போ நான்காட்டினப்போ பார்க்கலையா ?" என்றுமுகிலனை பார்த்து முறைத்தவன் இவனிடம்

  "சொல்லு முகிலா என்ன பிரச்சனை ?" என்றான் .

  நண்பனெல்லவா சரியாக யூகித்தான் எதோபிரச்சனை என்று. முகிலனுக்கு நன்குதெரியும் திலீபனிடம் பொய் சொல்லவோஎதையும் மறைக்கவோ முடியாதென்று . அதனால் தன மனதை அழுத்தும்பிரச்சனையை பற்றி சொல்ல நண்பனின்மனம் அறிந்த திலீபனோ "அந்த புள்ளயாடா ? எப்படிடா ? குனிஞ்ச தலையை நிமிராவேமாட்டாளே டா ? எப்படி முகிலா?" சுற்றுப்புறம்மறந்து குரலை உயர்த்த அவனது வாயைபொத்தினான் முகிலன்.

  "கத்தியே எல்லாருக்கும் சொல்லிருவபோலயே . மெதுவா பேசேன் மச்சான் ." பாவமாய் கேட்டான் முகிலன் . திலீபனுக்குஆச்சரியமாகி போனது . தன் நண்பனுக்குஇப்படி எல்லாம் பயப்பட கூட வருமா? அவனுக்கு தெரிந்த முகிலன் எதற்கும்யாருக்கும் அஞ்சாதவன் . முகிலனும்திலீபனும் சிறுவயதிலிருந்தே நல்லநண்பர்கள் . முகிலன் அந்த ஊர் பெரியகுடும்பத்தின் ஒரே வாரிசு . ஆறடி உயரமும்தேக்கினை போன்ற தேகமும் கருகருமீசையும் ஆளை மயக்கும் தோற்றமும்கொண்டவன் .

  இவனின் மீது காதல் கொண்ட பெண்கள்ஏராளம் . அனால் இன்று வரை தன் நண்பன்யாரையும் ஏறெடுத்து பார்த்ததை திலீபன்கண்டதில்லை . சில சமயம் இவன் என்னமுனிவனா என்று கூட தோன்றியதுண்டு . அனால் அப்படிப்பட்டவன் இன்று ஒருபெண்ணின் வரவிற்கு இப்படி தன்னுடையவேலை எல்லாம் விட்டுவிட்டு வந்துநிற்கிறான் என்றால் உண்மையில் அந்தபெண் மிகவும் கொடுத்து வைத்தவள் தான்என்றே தோன்றியது .

  நண்பனின் தொளைத்தட்டி அவனுக்குநானிருக்கிறேன் என்ற நம்பிக்கையைகொடுத்தபடி இருக்கும்போதே திடீரெனமுகிலனின் பார்வை எங்கோ பரபரத்தது . நண்பனின் பார்வையை தொடர்ந்து திலீபன்பார்க்க அங்கு தோழிகளுடன் மெல்லஅன்னநடை பயின்று வந்தாள் நித்திலா . மஞ்சள் வர்ண பாவாடையும் சிவப்பு வர்ணதாவணியும் அணிந்து எதோ தேவலோககந்தர்வ கன்னிகையாகவே தோன்றினால்

  நித்திலாவிற்கு தனக்காக ஒருவன்காத்திருக்கிறான் என்றுகூட தெரியாதுபோல. அவள் தன தோழிகளுடன் எதோ பேசிசிரித்தவாறே அங்கிருந்த கடைகளில்என்னென்ன இருக்கிறது என்று பார்க்கதொடங்கினாள் .
  முகிலன் அவளருகேசென்று


  "நிலா " என்றழைக்க அவளோ காதே கேளாதவள் போல் கடந்து சென்றாள் .

  "என்னடா முகிலா ?" கேள்வியாக திலீபன்பார்க்க இவனோ அங்கு எதுவுமே நடவாததுபோல அவள் பின் செல்ல தயார் ஆனான் .

  நிலவு தொடரும் !!!!!!


  அன்பு நட்பூஸ்!! முதல் எபிசோட் கொஞ்சம் சின்னதா இருக்கும். மன்னிச்சூ. அடுத்த எபிசோட்ல இருந்து பெரிதாக வருவாள் மழைநிலா
   
  Rabina and Suganyasomasundaram like this.
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  729
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice start sis...
   
 4. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  448
  Likes Received:
  306
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice start
   
 5. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  343
  Likes Received:
  237
  Trophy Points:
  43
  மழை நிலவே --2


  தனக்காக ஒருவன் காத்திருப்பதைப் பார்தததாகவோ இல்லை அவன் தன் பின்னே வருவதை கண்டுகொண்டதாகவோ கூட காட்டிக் கொள்ளாமல் தன் தோழிகளுடன் நித்திலா அடுத்தடுத்த கடைகளை பார்க்கப் போனாள். முகிலனும் அயராது அவள் பின்னோடு சென்றான். இவன் பின்னால் சென்று திலீபனுக்கோ “என்னடா நடக்குது இங்கே” மனநிலை தான்.

  தன் நண்பனை எப்போதும் மிடுக்காகவே பார்த்துவிட்டு இப்போது இப்படி ஒரு பெண்ணின் பின்னே வெறெதையும் பற்றி லட்சியம் செய்யாமல் செல்வதைப் பார்க்க ஒருபக்கம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. அப்படியென்ன அந்தப் பெண்ணிடம் கண்டுவிட்டானென இவன் இப்படி போகிறான் என்ற ஆதங்கமே மிஞ்சியது.

  “டேய் மச்சான்! என்னடா ஆச்சு! அந்தப் பிள்ளை தான் உன்னை கண்டுக்கவே இல்லையே. எதுக்குடா இப்படி அவ பின்னாடியே போற?” என்றான் திலீபன். ஒருநிமிடம் நின்று அவனை ஆழ்ந்த பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு “இத்தனை பேர் சுத்தி இருக்கும் போது அப்படித்தான்.” என்றான். பின் எதுவுமே நடவாதது போல் மீண்டும் பின்தொடரும் வேலையைத் தொடங்கினான்.


  வேறு யாராவதாக இருந்தால் திலீபன் “போடா நீயுமாச்சு உன் ஃபாலோ பண்ற வேலையுமாச்சு” என்று விலகியிருப்பான். ஆனால் போவது தன் உயிர் நண்பனானதால் இவனும் அவன் பின்னால் செல்லத் தொடங்கினான். “டேய் முகிலா! இதெல்லாம் நல்லாவா இருக்கு? இப்படி பொம்பளபிள்ளைங்க பின்னாடி சுத்தறதை யாராவது பார்த்தா என்னாகறது?” என்று கூட கேட்டுப் பார்த்தான்.

  இதற்குள் வளையல் கடையை ஆக்கிரமித்திருந்த பெண்கள் கும்பல் அங்கிருந்து மெல்ல கீழே பூக்கடை போட்டிருந்த பெண்ணிடம் பேரம் பேச அமர்ந்தனர். திலீபன் தான் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதாய் நித்திலாவின் அருகில் சென்றவன் “ஏங்க இது உங்களுக்கே நல்லாருக்கா? ஒருத்தன் அப்போதுலேர்ந்து உங்க பின்னாடியே வர்றானே, அவனை என்னனு கேட்போம்னு யோசிக்க மாட்டீங்களா?” என்றாள் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

  முகிலன் இவன் ஏதாவது பேசி ஏடாகூடம் செய்யப்போகிறான் என்ற பயத்தில் இவனது கையைப் பிடித்து இழுத்த வண்ணம் இருந்தான். இவர்கள் இருவரையும் ஒருமுறை முறைத்துப் பார்த்த நித்திலா “யாருக்கு பேசனுமோ அவங்களை அந்த தேரடி‌ப் பக்கமா வரச் சொல்லுங்க. என்ன பேசனுமோ பேசிரலாம்.” என்று விட்டு நகன்றாள்.

  திலீபன் எப்புடி என்பதாய் முகிலனைப் பார்க்க அவனோ அங்கே நின்றால் தானே! அவன் தேரடிப் பக்கமாய் பறந்துவிட்டானே. இவர்கள் இப்படி பேசுவதற்கே ஆள் வைத்து தான் பேசுகிறார்கள் என்றால் இவர்களுக்குள் என்ன தான் ப்ரச்சனை? என்று யோசித்தபடி மெல்ல தேரடியை நோக்கி நடந்தான் திலீபன்.

  தேரடியை அடைந்த முகிலன் 'அவள் வருவாளா' என்று கிழக்கும் மேற்குமாய் பார்த்தபடி நின்றிருந்தான். “ஹுக்க்ம்ம்” என்று இவனுக்குப் பின்னிருந்து யாரோ செறுமுவது கேட்டது. திரும்பும் முன்னமே அவனுக்குத் தெரிந்தது அவள் அவனவள் தான் என்று. மெல்லத் திரும்பியவன் “நிலா! ஏன் என் மேல கோவமா இருக்க? நானும் காலைல இருந்து இங்கேயே தான் உனக்காக காத்திருக்கேன் தெரியுமா?” என்றான் பாவமாய்.

  “இந்தா! இப்படி பாவமாலாம் முகத்தை வச்சுகிட்டு பேசக்கூடாது. அவ்வளவு அக்கறை இருக்கிறவன் தான் ரெண்டு வாரமா ஆளைக்காணோமா? வந்துட்டாங்க நிலா கலான்னு. போவியா!” என்று கடுகாய் பொறிந்தாள் நித்திலா. சரி ஆளு செம்ம கோவத்துல இருக்கா. நாம் கொஞ்சம் சைலணடா தான் இருக்கனும் என்று முடிவெடுத்த முகிலன் “நான் பாவமில்லையா” என்று முழிக்க அடுத்த கட்ட தாக்குதலுக்கு ஆளானான்.

  “இந்த திருட்டு முழி தானே வேணாங்கிறது. இப்படியே அப்புறாணி மாதிரி நடிக்காத. தெரியும் தானே உனக்கு, நான் உனக்காக காத்திருப்பேன்னு. ரெண்டு வாரமா காணாமப் போய்ட்டு இப்போ வந்து கதை பேசறத பாரு. ஏன் இப்படி பண்ண மாமா?” என்றாள் நித்திலா.

  இப்போது நிலாவை தன்புறம் இழுத்துக் கொண்டு முகிலன் “உனக்கே தெரியுமே நிலா! நம்ம தோப்புல காய்ப்பறிப்பு நடக்குது. பார்க்க ஆளில்லை. நாந்தான் போய் நிக்கனும். அதான் வரமுடியல. எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்செல்லம் இப்படி கோவப்பட்டா நான் என்ன பண்றது?” என்றான் அவளது காது மடல்களை கவ்வியபடி.

  “ஐயா ராசா நீங்க பெரிய பண்ணக்காரரு தான். எப்பவுமே வேலைவேலைன்னு இருக்க பெரிய தொழிலதிபர் தான். உங்களுக்கு எங்களப் பார்க்க வர நேரமிருக்காது தான். இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்களாம்? போய் வேலைய பார்க்க வேண்டியது தானே” என்றாள் அவனிடம் இருந்து விடுபட முயன்றபடி.

  “இப்படி கோவிச்சா நான் என்ன செய்ய நிலா. நான் பாவமில்லையா” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான் முகிலன். “வேலையிருக்குனு தெரிஞ்சவரு எதுக்கு என்னை மாந்தோப்புக்கு வரச்சொன்னாங்களாம்? கேனச்சி மாதிரி நான் வந்து காத்துக்கிடந்தேன். அதுவும் வீட்டுல அவ்வளவு ப்ரச்சனையை வச்சுகிட்டு” என்றாள் கோபமாக.

  “ஐயோ மறந்தே போனேன் நிலா. மன்னிச்சிருடா தங்கம். அன்னிக்கு அந்த ஏழுவழி உரண்டைய இழுத்திட்டான். அதுல பஞ்சாயத்தா போச்சு. அந்த குழ்பபத்துல மறந்துட்டேன் நிலா. மாமனை மன்னிச்சிருடா” என்றான் பதறிப்போய். “ஹுக்க்ம்ம் இன்னிக்கு பார்க்க வர்றத மறந்தவரு நாளைக்கு எங்களை மறக்கமாட்டீங்கனு என்ன நிச்சயம். நித்திலா!! நல்ல ஆளைப்பார்த்த காதலிக்க!! போதும்யா சாமி “ என்று அவனிடம் இருந்து விலகி கோபமாக தள்ளிச் சென்று நின்று கொண்டாள்.

  அவளின் பின்னோடு போய் இடையோடு அணைத்தபடி முகிலன் “அப்படிலாம் மறக்கக்கூடிய ஆளா நீ நிலா. என் உயிரோட கலந்துட்டடீ. இன்னுமா புரியல உனக்கு? அதான் பேசாம வா கல்யாணம் கட்டிக்கலாம்னு சொன்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்கற. நான் என்ன தான் செய்யட்டும் சொல்லு. எவ்வளவு நாள் நானும் காத்திருக்க?” என்றான் முகிலன் அவளது தோள்களில் தன் இதழ்களைப் பதித்தவாறே.

  கிறங்கிப்போய் இருவரும் நின்ற நேரம் “ஓ இந்த வேலை பண்றதுக்கு தான் நீ வீட்டில அவ்வளவு காரணம் சொல்லிட்டு வந்தியா? சிறுக்கி உனக்கு இவ்வளவு திமிரா? வாடி வீட்டுக்கு” உறுமலாய் குரல் வந்த திசையை நோக்கி இருவரும் பதறி திரும்ப……..

  நிலா வருவாள்!!!!!!
   
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  729
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice update
   
 7. dharshini

  dharshini Well-Known Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  376
  Likes Received:
  289
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice start .. all the best
   
 8. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  343
  Likes Received:
  237
  Trophy Points:
  43
  மழை நிலவே 3

  குரல் வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தால் அங்கே கோவமாக நின்று கொண்டிருந்தான் மருது . மருது நித்திலாவின் அத்தை மகன். அவனுக்கு தான் நித்திலா என்று இத்தனை நாள் பேசியிருந்தார்கள் . அவனுக்குமே நித்திலா என்றால் ரொம்ப பிடிக்கும் . இத்தனை நாளும் தன மாமன் மகள் தனக்கு தான் என்ற கனவில் இருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக சற்று சந்தேகம் வர தொடங்கியது .

  அவனது கூட்டாளி பாண்டி ஓரிரு முறை நித்திலாவை வேறு யாருடனோ களத்துமேட்டிலும் கம்மாய்ப்பக்கமும் பார்த்ததாக சொல்லும்போது அலட்சியமாக நினைத்தவன் இன்று எதேச்சையாக இங்கு திருவிழாவுக்கு வந்த இடத்தில வைத்து தன நித்திலாவை வேறு ஒருவனுடன் அதுவும் கட்டியணைத்தபடி காணவும் அவனால் கோவத்தை கட்டுப்படுத்த இயலவில்லை .

  இவர்களை நெருங்கி வந்தவன் நித்திலாவின் கைககளை இறுக பிடித்தவன் அவளை முறைத்தபடியே "எனக்கு சொந்தமானவன் நீ . வேற யாரும் எனக்கு சொந்தமான பொருளை தொடுவதை நான் விரும்ப மாட்டேன். நீ போ வீட்டுக்கு." என்று உறுமினான். மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கிபோனாள் நித்திலா. அவளது மறுக்கரத்தைப் பற்றி இருந்த முகிலன் "நிலா பயப்படாதே எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் நானிருக்கிறேன்." என்று கரங்களை ஒருமுறை அழுத்தி உறுதி கூறினான்.

  "நிலாவா ? அவ என்னோட மாமன் மகள் நித்திலா. இந்த செல்லப்பேரு வச்சு கூப்பிடறதெல்லாம் வேணாம் . எங்க வீட்டுப்பெண்ணை நாங்க பார்த்துப்போம். நீ மூடிட்டு போடா ." வேண்டுமென்றே முகிலனை வெறுப்பேற்றும் விதமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு நித்திலாவை பிடித்து தரதரவென இழுத்தபடி நடந்தான்.

  திரும்பித்திரும்பி முகிலனையே பார்த்தபடி அழுத்தவாறே நடந்தாள் நித்திலா. அவள் போன பாதையையே பார்த்தபடி நின்றிருந்த முகிலனின் தோளில் யாரோ கை போட யாரென்று திரும்பி பார்த்தால் கோபமாக முறைத்தபடி நின்றிருந்தான் திலீபன் ."யார்ரா மாப்பிள்ளை அவன். பாக்கவே கோமாளி மாதிரி இருக்கான். அவன் உன்னை பார்த்து கை நீட்டி பேசிட்டு போறான் . நீயும் பார்த்திட்டு சும்மா இருக்கியே?" என்றான் கடுப்பு தாங்காமல் .

  எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கும் தன் நண்பனிடம் "என்னடா ஆச்சு? ஏன் இப்படி ஒன்னுமே பேசாம இருக்க? யாரு அவன்? " என்று மீண்டும் உலுக்க, முகிலன் "அவன் தான்டா நிலாவோட மாமா பையன் . அவனுக்கு தான் நிலாவை கல்யாணம் செஞ்சு தர்றதா பேச்சாம் ." என்று இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு குரலில் சொன்னான் .

  "பார்க்கவே கிறுக்கனாட்டம் இருக்கான். இவனுக்கு அந்த பொண்ணா? என்ன மாப்பிள்ள இவனெல்லாம் உனக்கு போட்டியா ? தூக்கிறலாமா ?" என்றான் திலீபன் . அவனுக்கு அவன் ஆதங்கம். இருந்திருந்து தன நண்பனுக்கு இப்போது தான் ஒரு பெண்ணை பிடிச்சிருக்குனு சொல்றான் . அது பொறுக்கலையா ? திலீபனுக்கு இப்போதே போய் அந்த மருதுவை அடித்து போட்டுவிட்டு அந்த பெண்ணை தூக்கி கொண்டுவந்து தன் நண்பனிடம் சேர்க்க வேண்டுமென தோன்றியது . "இருக்கட்டும் திலீபா . நேரம் வரும்போது சொல்றேன் . அப்போ இவனை பார்த்துக்கலாம் . வா போகலாம் " என்று நண்பனின் தோள்களில் கைபோட்டு அவனை அழைத்துச்சென்றான் முகிலன் .


  அங்கே நித்திலாவின் வீட்டில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டவளாய் கூனி குறுகி நின்றாள் நித்திலா . அவளது தாய் புடவை தலைப்பில் வாய்மூடி மௌனமாக அழுதபடி தன்னுடைய கணவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் . நித்திலாவின் தந்தை முருகலிங்கம் நடுவீட்டில் போடப்பட்டிருந்த பெரிய ஊசலில் உட்கார்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

  அவருக்கு அருகில் நிமிர்ந்து நின்றபடி தன மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு தான் ஏதோ பெரிதாக சாதித்ததை போல இருந்தான் மருது . அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை நித்திலா. நித்திலாவின் தாய் விசாலம் தன் கணவன் எந்த முடிவெடுத்தாலும் அது சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உடையவர். ஆனால் அவருக்கே பிடிக்காத விஷயம் இந்த மருதுவுக்கு தன்னுடைய பெண்ணைக்கொடுப்பதாக சொன்னது தான்.

  மருதுவிற்கு எந்த வேலையும் கிடையாது . அவர்கள் தந்தை வழியில் சொத்து என்று பெரிதாக எதுவும் இல்லை. முருகலிங்கமாக பார்த்து தன அக்காவின் நலனுக்காக என்று தன்னுடைய சில வயல்களை கொடுத்திருந்தார். அதையும் பார்த்துக்கொள்ளும் வேலை கூட இந்த மறுத்து செய்வதில்லை. தன் மகளை தரும்படி அக்கா தன்னிடம் கேட்டபோது முதலில் தயங்காதான் செய்தார் .

  ஆனால் முருகலிங்கத்தின் அக்கா சாரதா நித்திலா மனைவியாக வந்தால் தன் மகன் பொறுப்பானவனாக மாறிவிடுவான் என்றும் சொந்தம் விட்டு போகக்கூடாது என்றும் தான் தன் மருமகளை மகளாக பார்த்துக்கொள்வதாகவும் பேசியே காரியத்தை சாதித்தார் . விசாலத்திற்கு மனதே இல்லை. அவருக்கு தன் நாத்தனாரின் பணத்தாசை பற்றியும் தெரியும் மருதுவின் பொறுப்பற்ற தன்மையை பற்றியும் தெரியும்.

  இருப்பினும் கணவன் வாக்கு கொடுத்து விட்டாரே என்று அமைதி காத்தார் . இப்போது மகள் எவனோ ஒருவனுடன் தேரடியில் இருந்ததை பார்த்ததாக சொல்லி கையோடு கூட்டிவந்ததை பெரிய சாகசமாக மார்தட்டும் மருதுவை பார்க்க வெறுப்பு ஒருபுறமென்றால் மகள் அப்படி யாருடன் இருந்தாளோ என்ற பயம் ஒருபுறம் .

  நித்திலா இப்படி செய்தாள் என்றால் அதை நம்பக்கூட முடியவில்லை அவரால். பொதுவாக நித்திலா அதிகம் பேசும் குணமல்ல. அவளுண்டு அவளது வேலையுண்டு என்று எப்போதும் அமைதியாக தான் இருப்பாள் . அவள் இப்படி செய்தாள் என்று நம்புவது தனக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் தன் கணவர் எப்படி , என்ன முடிவெடுப்பாரோ என்ற குழப்பமும் பயமும் அதிகமாக இருந்தது.

  முருகலிங்கம் நீண்ட யோசனைக்கு பின் மெல்ல தன் மகளிடம் "அம்மாடி உனக்கு இவனை பிடிக்கலையா? அதான் அப்படி செஞ்சியா?" என்று சாந்தமாகவே கேட்டார். "என்ன மாமா அவளை போய் கொஞ்சிகிட்டு இருக்கீங்க . நான்தான் கண்ணால பார்த்தேனே. நாலு அறைவிட்டு ரூமுக்குள்ள போட்டு பூட்டி வைங்க மாமா . அம்மாகிட்ட அடுத்த முகூர்த்த தேதி பார்க்க சொல்றேன். கழுதையை தாலியை கட்டிட்டு அப்புறமா வச்சுக்கலாம் இந்த பஞ்சாயத்தை ." என்றான் மருது பொறுமையின்றி .

  அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் தன் மகளையே பார்த்திருந்தார் முருகலிங்கம். "எனக்கு இவங்களை பிடிக்கலப்பா . எனக்கு இவங்க கூட கல்யாணம் வேண்டாம் பா ." என்று அவருடைய காலைக்கட்டிக்கொண்டு அழுதாள் நித்திலா."அதெல்லாம் கல்யாணம் பேசி முடிவே பண்ணியாச்சு . இப்போ போய் வேண்டாம்னு சொல்ல முடியாது " அவசரமாக சொன்னான் மருது.

  அவனை திரும்பி முருகலிங்கம் ஒரு பார்வை பார்க்க அவன் அமைதியானான். "இவனை பிடிக்கலைன்னா அப்பாகிட்ட சொல்லிருக்கலாமே தாயி?" என்று பரிவாக கேட்டார். "அப்பா என்னை மன்னிச்சிருங்கப்பா . என்கிட்டே கேக்குமுன்னமே நீங்க அத்தைக்கு வாக்கு கொடுத்துட்டீங்க . அதுக்கு அப்புறமா நான் எப்படி வந்து சொல்லனு பயந்துட்டே இருந்தென்பா. ஆனாலும் கட்டாயம் சொல்லிருப்பேன் பா." என்று தொடர்ந்து அழுதாள் நித்திலா .

  மகளின் தலையை மெல்ல வருடியபடி "உனக்கு பிடிக்காத எதையும் இந்த அப்பா செய்ய மாட்டேன். எங்கக்காகிட்ட நான் பேசிக்கறேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் "மாமா என்ன பேச்சு மாறுது? இதெல்லாம் நல்லா இல்ல . சொல்லிட்டேன் . எனக்குதான் நித்திலா " என்றான் மருது . அவனை திரும்பி ஒரு முறை முறைத்தார் முருகலிங்கம் . "என் பொண்ணை அடிக்கணும்னு நீ சொன்னதுக்கே உனக்கு பொண்ணு குடுப்பதில்லைனு முடிவுபண்ணிட்டேன். வீட்டுக்கு போ. நான் அக்காகிட்ட அப்புறமா வந்து பேசிக்கறேன் ." என்று சற்றே உயர்ந்த குரலில் சொன்னார்.

  வேறு வழியின்றி தலையை தொங்கபோட்டபடி அங்கிருந்து அகன்றான் மருது . அவனுக்கு நன்கு தெரியும் தன் மாமனை முறைத்துக்கொண்டு எதுவும் நடக்காதென்று .எல்லாம் அம்மா பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் வீட்டை நோக்கி போனான்.

  முருகலிங்கம் தன் மகளிடம் "யாரம்மா அந்த பையன் ?" என்று கேட்டார்.அவர் மருதுவை கையாண்ட விதமே கிளப்பிய ஆச்சர்யத்தில் இருந்து மீளாத விசாலமும் மகளையே பார்க்க நித்திலாவும் தந்தையிடம் "இந்த ஊர் பெரிய வீட்டுக்காரங்க மகன் முகிலன் பா " என்றதும் விசாலம் மயங்கி விழுந்தார்.


  .....................
   
  Rabina likes this.
 9. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  729
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice ud.
   
 10. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  343
  Likes Received:
  237
  Trophy Points:
  43
  மழை நிலவே 4

  மயங்கிச் சரியும் தன் மனைவியைப் பாய்ந்து தாங்கிக் கொண்டார் முருகலிங்கம். “சாலா! சாலா” தன் மனைவியின் கன்னத்தை தட்டி அவளை எழுப்பி முயன்றார். இதற்குள் நித்திலா போய் தண்ணீர் எடுத்து வர விசாலத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.


  “அம்மா எழுந்திரும்மா” என்று நித்திலாவும் ஒருபுறம் அழைக்க முருகலிங்கத்தின் சாலா ஜபம் அவரை நினைவுக்குக் கொண்டு வந்தது. தான் முகிலனின் குடும்பப் பின்புலத்தினைப் பற்றி சொல்லவும் அம்மா ஏன் மயங்கி விழுந்தாள் என்ற கேள்வி அவளை அரித்தது.
  மெல்ல தன் கண்களைத் திறந்தவள் தன் கணவன் ஆர்வத்துடன் தன்னையே பார்ப்பது புரிய உடனே சட்டென எழுந்து உட்கார்ந்து “ஒன்னுமில்லைங்க காலைல சரியா சாப்பிட நேரம் கிடைக்கல. அதான் ஒருமாதிரி கண்ணைக் கட்டிருச்சு. இப்போ சரியாப் போச்சு. உங்களுக்கு காப்பித் தண்ணிக் கலக்கவா?” என்றார்.


  மனைவி மயங்கிச் சரிந்ததன் காரணம் புரியாத பொறுப்பற்ற கணவனல்ல முருகலிங்கம். ஆனாலும் அவள் தன்னைச் சமாதானப் படுத்த முயல்வது புரிந்து சரியென்று தலையை அசைத்தார். மறந்தும் தன் மகளின் புறம் திரும்பியும் பாராமல் கணவனுக்கு காப்பி கலக்க சென்றார் விசாலம்.

  அம்மாவின் பின் செல்ல முயன்ற நித்திலாவை “நித்திம்மா நீ உட்காரு. அவ வருவா.” என்று தடுத்து நிறுத்தினார் முருகலிங்கம். அப்பா தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறார் என்பது புரிய அமர்ந்தவள் அவரையே பார்த்திருந்தாள். “நித்திம்மா அப்பா உன்னிஷ்டத்துக்கு மாறா எதுவும் செஞ்சதில்லைன்னு உனக்கு தெரியும் தானே” என்றார் மகளைப் பார்த்து.

  “ஆமாம்” என்றாள் நித்திலா. “உன்னுடைய நியாயமான ஆசைகள் எல்லாத்தையும் அப்பா நிறைவேத்தியிருக்கேன். இப்பவும் உனக்கு நம்ம மருதுவைப் பிடிக்கலைன்னதும் அப்பா அந்த கல்யாணத்தை நிறுத்திட்டேன். இதெல்லாம் எதுக்கு இப்போ சொல்றேன்னு நீ யோசிக்கலாம்” என்று நிறுத்தினார்.

  அவர் அப்படி நிறுத்தியதிலேயே பெரிதாக ஏதோ சொல்ல வருகிறார் என்பது புரிய அவர் முகத்தையே எதுவும் பேசாமல் பார்த்திருந்தாள் நித்திலா. “நீ எந்தப் பையனைக் காட்டியிருந்தாலும் நான் சரின்னு சொல்லியிருப்பேன். ஆனா யார் குடும்பம் எனக்கு ஆகாதோ, யாரு நம்மளை கேவலமா பார்க்கிறாங்களோ அவங்க வீட்டுப் பையனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறியேம்மா. நான் என்ன சொல்வேன்?” என்றார்.

  அப்பா என்ன சொல்கிறார் என்பது புரியவே நித்திலாவுக்குச் சற்று நேரம் பிடித்தது. 'ஓ அதனால் தான் அம்மா நாம் சொன்னதும் மயங்கி விழுந்தாளா?' என்று தோன்றியது. ஏதோ பெரிய புதிரின் பக்கங்கள் சரியாக அதனதன் இடத்தில் போய் அமர்ந்து சரியான பதில் கிடைத்ததாய் தோன்றியது.

  இந்த முகிலன் நமக்கு உறவா? அல்லது பகையா? அதுவும் தீராத பகைபோல் தெரிகிறதே. அப்படி என்ன பகையோ? ஒருநொடிக்குள் உலகம் சுற்றி வரும் மனம் ஆயிரம் கேள்விகளை அவள் முன் வைத்தது. அப்பாவாக பார்த்து தனக்கு எல்லாம் சொன்னால் தான் உண்டு என்பது மட்டும் புரிந்தது. அம்மா எப்படியும் எதுவும் சொல்ல மாட்டாள். தான் கேள்வி கேட்போம் என்று தானே தன் புறம் திரும்பாமலே உள்ளே சென்றாள்.

  இவளையே பார்த்திருந்த முருகலிங்கம் “உனக்கிப்போ ஒன்னும் புரியாது நித்திம்மா. அப்பா உனக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். அப்புறமா நீயே சொல்லு அப்பா என்ன செய்யனும்னு” என்றார். சரியென்பதாய் தலையை ஆட்டி கதை கேட்க தயாரானாள் நித்திலா.

  “இத்தனை நாட்களில் நம்ம வீட்டுக்கு அப்பா குடும்பத்தைச் சேர்ந்தவங்க வந்து போய் நீ பார்த்திருப்ப. ஆனா உங்கம்மா வீட்டைச் சேர்ந்தவங்க யாராவது வந்து பார்த்திருக்கியா?” என்றார். இல்லை என்று தானாய் தலையசைந்தது நித்திலாவுக்கு.

  இதுவரை தான் இதைப்பற்றி யோசித்தது கூட இல்லையே. அம்மா இதுவரை தன் பிறந்த வீட்டைப்பற்றியோ தன் தாய் வீட்டாரைப் பற்றியோ பேசியது கூட இல்லையே. அவளைப் பொறுத்தவரை அவள் உலகமே தானும் தன் தந்தையும் மட்டுமே. தானாவது அம்மாவிடம் அவளது வீட்டாரைப் பற்றி இதுவரை கேட்டிருக்கலாமோ? எவ்வளவு தன்னலத்துடன் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது நித்திலாவிற்கு.

  “இந்த ஊர் பண்ணைக்காரங்க வீட்டு மகதான்மா உங்கம்மா. என்னைக் காதலிச்ச ஒரே குத்தத்துக்காக மொத்த குடும்பமும் உங்கம்மாவை ஒதுக்கி வச்சுட்டாங்க.அவளும் காதலா குடும்பமான்னு வந்தப்போ காதல் தான் முக்கியம்னு அவங்களை எல்லாம் விட்டுட்டு எனக்காக எல்லாத்தையும் மறந்து இருபத்தியிரண்டு வருஷமா என்னுடன் தன்னை சேர்த்துகிட்டா.” உருகிப்போன குரலில் பேசினார்.

  “ஏன்ப்பா அவங்க வீட்டில் உங்களை ஏத்துக்கல?” என்றாள் நித்திலா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கும் தன் தகப்பனை மறுக்க என்ன காரணம் இருக்க முடியும்? வசதியிலும் குறைவில்லையே.அப்படியிருக்க ஏன் இப்படி இத்தனை வருஷப் பிரிவு?

  அதற்கும் பதில் சொன்னார் முருகலிங்கம். “நான் அப்போ ரொம்ப சாதாரண குடும்பம் மா. வசதியெல்லாம் இல்லை. உங்கம்மாவுக்கு பக்கத்து ஊர் நாட்டாமை வீட்டில் மாப்பிள்ளை பார்த்து பேசியிருந்தாங்க. அந்நேரம் பார்த்து உங்கம்மா என்னத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நிக்க அவங்களுக்கு கோபம். உங்க தாத்தா கோபத்துல உங்கம்மாவை அடிக்கப் போக, நான் உங்கம்மாவைக் கூட்டிகிட்டு அப்போ வந்தது தான் இன்னிக்கு வரைக்கும் ஒரே ஊர்ல தான் இருக்கோம்னு பேரு, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கிறதில்லை” என்றார் முருகலிங்கம்.

  இவ்வளவு நடந்திருக்கா? என்று அதிர்ச்சியாக இருந்தது நித்திலாவுக்கு. இதை எப்படி ஜீரணிப்பது என்று கூடத் தெரியவில்லை. “ஆரம்பத்துல எங்களை ஊரைவிட்டே ஒதுக்கி வச்சிருந்தாங்க. ஆனா நானும் ஓரளவு வசதி வாய்ப்புன்னு வந்து நாலு பேருக்கு வேலை குடுக்கிற அளவுக்கு வந்ததும் வேற வழியில்லாம ஊருக்குள்ள சேர்த்துக்கிட்டாங்க. அன்னிக்கு உங்கம்மா கையைப் பிடிச்சுகிட்டு அந்த வீட்டு வாசலிறங்கினவன் தான் உங்கப்பா. இப்போ உனக்காக போய் அந்த வீட்டு வாசப்படி மிதிக்கனும்” என்றார்.

  அவர் சொல்வதே அவளுக்குத் தூக்கிவாரிப் போட “அப்படி ஒன்னு நடக்கனும்னா அது என் பொணத்தை தாண்டி தான் நடக்கும்” என்று ஆத்திரத்துடன் கூறினார் விசாலம்.
   
  Tamilvanitha and Rabina like this.

Share This Page