மாடி தோட்டம் டிப்ஸ்/MADI THOTTAM

Discussion in 'Green revolution /pasumai Ulagam' started by NATHIYAMOHANRAJA, Dec 3, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பிளாஸ்டிக் பைகளைத் தயார்

  செடிகள் வளர்ப்பதற்கான பிளாஸ்டிக் பைகளைத் தயார் செய்வது எப்படி: தென்னைநார்க் கழிவு கட்டியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கத்தரிக்கோல் கொண்டு சீலிடப்பட்ட பகுதியைக் கத்தரித்துப் பிரிக்க வேண்டும். தென்னைநார்க் கழிவுக் கட்டிகளுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்க வேண்டும். ஐந்து முதல் பத்து நிமிடங் களுக்குக் காத்திருக்க வேண்டும். தற்போது தென்னைநார்க் கழிவு நான்கு முதல் ஐந்து மடங்காக உப்பி அதிகரிக்கும். அதிகப்படியான நீர் வெளியேறிச் செடிகள் அழுகாமல் இருக்கப் பையின் பக்கவாட்டில் நான்கு துளைகளை இடவேண்டும்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விட்டின் பின்புறம் தோட்டம்

  நமது விட்டின் பின்புறம் தண்ணீர் புழங்கும் இடத்தில் செடிகளை வைக்கலாம் அது தண்ணீர் தேவையை குறைக்கும், நாம் பயன் படுத்தும் தண்ணீரே அதற்கு போதுமானது .
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கீரை, கொத்தமல்லி, புதினா வளர்ப்பு

  அடிகடி தேவைப்படும் கீரை புதினா கொத்தமல்லி செடிகளை பயிரிடலாம் :  1. மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்க நினைத்தால், எல்லா காய்களையும் ஒரேடியாக போட்டு பயிர் செய்ய வேண்டாம். முதலில் கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சின்ன தொட்டியில் வைத்து பயிர் செய்யலாம்.
  2. கொத்தமல்லி, புதினா, பாலாகீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கனிக்கீரை, மிளகுதக்காளிக்கீரை, ஆகியவற்றை வீட்டு மாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மண் தயாரிக்கும் முறை

  [color=rgba(0, 0, 0, 0.87)]தரமான மண் தயாரிக்கும் முறை [/color]

  மண் விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. சாதாரண மண், அதிக எடை கொண்டது. எனவே கோகோ பீட் என்று சொல்லக்கூடிய தேங்காய்நாரில் தயாரிக்கப்படும் ஒரு வகையான மண்ணை கொண்டு செடிகளை பயிர் செய்வதே கட்டிடத்துக்கு பாதுகாப்பானது. இதன் எடையும் குறைவு. தண்ணீரையும் நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ளும். இதனுடன், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரத்தையும், இயற்கையான பூச்சி கொல்லி மருத்துகளையும் பயன்படுத்த வேண்டும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தண்ணீர் ஊற்றும் முறை :

  செடிகளை வளர்ப்பதற்கு ஏற்ற பைகளில் செடிகளை வளர்க்கும்போது, மிகவும் கவனம் தேவை. தென்னைநார்க் கழிவு ஊடகம், செடிகள், பருவநிலை, பைகளின் அளவு, செடியின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு, அதற்கேற்றவாறு நீரை ஊற்ற வேண்டும். கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீரூற்ற வேண்டும். தென்னைநார்க் கழிவைப் பயன்படுத்துவதால் (அது இயற்கையாகவே தண்ணீரைத் தக்கவைக்கும் தன்மை கொண்டிருப்பதால்) பொதுவாக ஒருமுறையும் கோடைக் காலத்தில் இரண்டு முறையும் செடிகளுக்கு நீரூற்ற வேண்டும். அதிகப்படியாக நீரை ஊற்றினால் சத்துகளை வெளியேற்றிப் பூஞ்சானங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தப்படும். செடிகளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்போது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற அவசியமில்லை.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  செடி விதை நேரடி விதைப்புமுறை

  வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இடம் தேர்வு செய்தல்

  மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீர்க்கசிவைத் தடுப்பதற்கு 4 X 4 சதுர மீட்டரில் பிளாஸ்டிக் விரிப்புகளை விரிக்கவும்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  காய்கறி கழிவுகள்

  உரம் தயாரிப்பது ஈசிதான். ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில், ஆங்காங்கே ஓட்டை போட்டு வைக்க வேண்டும். அதில் காய்ந்த இலைகள், காய்கறி கழிவுகள் - அதாவது காய்கறி தோல்கள், புளித்த தயிர் ஆகியவற்றை ஒன்று மாற்றி ஒன்றாக, அடுத்தடுத்த லேயர் ஆக போட்டு வைக்க வேண்டும். காய்கறிகள் மட்கும்போது, அதில் இருந்த தண்ணீர் வெளியேறும். அதற்கு மரத்தூள், காகிதம் போன்றவற்றை போட்டு வைத்தால், அவை நீரை உறிஞ்சு கொள்ளும். இல்லை என்றாலும் பக்கெட்டின் அடியில் சிறிய துவாரமிட்டு அங்கு ஒரு சின்ன கிண்ணம் வைக்கலாம். அதில் சேரும் தண்ணீரையும் செடிக்கு பயன்படுத்தலாம்.
   

Share This Page