மாண்புமிகு மாணவன்

Discussion in 'Forum Games & Chat' started by NATHIYAMOHANRAJA, Jun 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  • ஆசிரியர்:ஒரு மணி நேரமா கரடியா கத்துறேன் புரியலேங்கிறியே
  மாணவன் : கரடி பாஷை எல்லாம் எனக்கு தெரியாது......

  • மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
  ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.

  • ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?அது வாயில்லா பிராணி சார்.
  • ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்
  மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.

  • வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
  பையன்: "STICK NO BILLS"

  • ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
  மாணவர்கள்: புரியல சார்...

  • ஒரு ஆசிரியர் வகுப்பில் ஒரு தேர்வு வைத்து, முடிவைக் கொடுத்தார். ஒருவனுக்கு 12 புள்ளிகள் கிடைத்தது. ஆனால் அந்த மாணவ்ன் சிரித்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடன், 12 புள்ளிகளை எடுத்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறாயே ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், நான் எந்த கேள்விக்கும் சரியான பதில் எழுதி இருக்கவில்லை. அப்படி இருந்தும் 12 புள்ளிகளைப் போட்ட மடையன் யாரென்று நினைத்து சிரிக்கிறேன் என்றான்.

  • டீச்சர்:முதல் மாசம் ஜனவரி ,ரெண்டாவது மாசம் பெப்ரவரி பத்தாவது மாசம் என்ன ?
  மாணவன் :டெலிவரி டீச்சர்


  • டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
  மாணவன். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

  • ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
  மாணவன் : தெரியாது சார்
  ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
  மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.


  • ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?
  மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.

  • ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்?
  மாணவன் : சகோதர பாசம்!

  • ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
  சிறுவன் : தூங்க வைக்கிறது நீங்க ,எழுப்புறது நானா?
  என்ன கொடுமை சார் இது ?


  • ஆசிரியர்:எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?
  சிறுவன் :நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க?
  ஆசிரியர்:நா‌ன் எ‌ப்போடா சொ‌ன்னே‌ன்.
  சிறுவன் :நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே? மற‌ந்து‌ட்டீ‌ங்களா?


  • டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற பொண்ணோட சுத்துன , இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற?
  மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம்
  டீச்சர் : ???!!!

  • ஆசிரியர்: What is your name?
  மாணவன்: என்னுடைய பெயர் சூர்ய பிரகாஷ்!
  ஆசிரியர்: நான் ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்!
  மாணவன்: My Name is Sunlight!


  • ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
  அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

  • ஆசிரியர்: இடுக்கண் வருங்கால் நகுக...
  மாணவன்: நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?
   

Share This Page