மார்கழி மாத ராசி பலன்கள் 2019

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Dec 16, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மேஷம்

  மேஷம்: தனது ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி காரிய சாதனை செய்யும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 7 ல் இருப்பதால் உங்கள் ஆளுமை அதிகரிக்கும். எந்த சூழ்நிலையையும் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனித்தன்மையை நிரூபிப்பீர்கள். இருப்பினும் மாத பிற்பகுதியில் கவனம் தேவை. வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. எனினும் எதிர்பாராத தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக நிலுவையில் இருந்த பணம் கை வந்து சேரும்.

  பேச்சை விட செயலில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மனதில் உற்சாகம், தைரியம் அதிகரிக்கும். உங்கள் பிரச்னைகளை தீர்க்க சரியான முடிவை எடுத்து, தைரியமாக செயல்படுத்துவீர்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். ஷேர் மார்க்கெட் விஷயங்களில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. கூட்டாளிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்தத்தொழிலில் இருப்பவர்கள் தங்கள் திறமையாலும், கடின உழைப்பாலும் அதிக வருமானம் பெறுவீர்கள்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 19, 20 ,21, 28, 29, 30, 31.

  சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 23, 24, 25. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

  பரிகாரம்: சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரரை செவ்வாய் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ரிஷபம்

  ரிஷபம்: பல மடங்கு பலம் இருந்தாலும், அன்பிற்கு அடங்கி நிற்கும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் 9 ல் சஞ்சரிப்பது அனுகூலமான பலன்களைத் தரும். தந்தை வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிகளை ஆரம்பிக்க சரியான நேரம்.
  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக்களும், மூத்தோர்களின் உபதேசமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தன வரவு உண்டு. இருந்தாலும் வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் அனைவருடனும் இணைந்து பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பிரச்னைகள் மற்றும் வீண் விவாதங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. புதிய தங்க நகை ஆபரணங்களை வாங்குவீர்கள். உங்கள் முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்து நீங்கும்.

  உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புக்கள் வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்னைகளில் தலையிடாமல் தள்ளிப்போடுவது நல்லது. எந்த விஷயத்திலும் பொறுமையும், நிதானமும் அவசியம்.வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது. இல்லற வாழ்வில் அதிக கவனம் தேவை. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக விழிப்புடன் இருங்கள். தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 21 ,22, 23, 30, 31. ஜனவரி 1, 2, 3 ,4.

  சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 25, 26, 27 வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் பொறுமை, விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

  பரிகாரம்: நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மிதுனம்

  மிதுனம்: தன்னிடம் உள்ள திறமைகளை சரியான தருணத்தில், சரியாகப் பயன்படுத்தி முன்னேறும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புத பகவான் உங்கள் ராசிக்கு 6 ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
  மற்றவரிடம் விரோதம் பாராட்ட வேண்டாம். கோபத்தை தவிருங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை தேவையான அளவு இருக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வெளியூர்பயணங்களில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனங்களை பழுது பார்க்கும் சூழல் ஏற்படும். குழந்தைகள் உடல்நிலையில் பாதிப்பு வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் சிறு, சிறு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

  வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. திருமணத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு,திருமண முயற்சிகள் கைகூடும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்கள், எந்த விஷயத்தையும் கவனமாக கையாளுங்கள். அவசரம் வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்கள் முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத தனவரவும், அதிர்ஷ்டமும் உண்டு. எதிர்பாலினத்தவரிடையே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இரவு நேர உறக்கத்தை தவிர்க்க வேண்டாம். பயணங்களில் உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 23, 24, 25.ஜனவரி 1, 2, 3, 4, 5, 6.

  சந்திராஷ்டம நாட்கள்: 28, 29, 30 உறவுகளில் பிரச்னை வர வாய்ப்புள்ளதால், எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள்.

  பரிகாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கடகம்

  கடகம்: தானுயர்ந்து, தன்னை சார்ந்தவர்களையும் உயர்த்தும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 2 ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. உங்களின் எல்லா முயற்சிக்கும் இறையருள் துணை புரியும். தாயின் உடல்நிலை ஆரோக்கியமடையும். தாய் மற்றும் உறவினர்களின் ஆதரவு உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை.

  குழந்தைகள் உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வடைவீர்கள். மாத முற்பகுதியில் கணவன் மனைவிக்குள் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும், பிற்பகுதியில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் உங்கள் திறமை முழுவதும் வெளிப்படும். உங்கள் தனித்திறமையால் அனைவரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

  எந்த சூழ்நிலையையும் சமாளித்து, சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களிடையே புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மனைவி வழியில் தனவரவு, சொத்து கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. இரவு நேர தூக்கத்தை தவிர்க்க வேண்டாம். வேற்று மதத்தினர்களால் ஆதாயம் உண்டு. மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26, 27 ஜனவரி 4, 5, 6, 7, 8.

  சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 30, 31. ஜனவரி 1. மறைமுக எதிரிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

  பரிகாரம்: சென்னை தியாகராஜ நகர் பாண்டிபஜாரில் உள்ள அகஸ்தியர் கோயிலுக்கு திங்கட் கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிம்மம்

  சிம்மம்: வாழ்வில் வெற்றி, தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு உயரும் சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரித்தாலும் கிரகண தோஷம் ஏற்படுவதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். வீண்விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சகோதர, சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும். முயற்சிகளில் தடை ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான
  முயற்சிகள் கைகூடும்.

  குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகள் உடல்நிலையில் பாதிப்பு என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்னைகளில் தற்போது தலையிட வேண்டாம். சிறு, சிறு மனகுழப்பம் வந்து நீங்கும்.எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்துவதற்கு முன் நன்கு சிந்தித்து செயல்படுங்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். காதல் விஷயங்களில் தற்போது அமைதி காப்பது நல்லது.

  தந்தை வழியில் ஆதாயம் உண்டு. உங்கள் வாழ்விற்கு தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டு. தெய்வ அனுகிரஹம் உள்ளதால் அனைத்து பிரச்னைகளையும் கடந்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காலநேரம் கருதாமல் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், உங்களுக்கு வரவேண்டிய மதிப்பும், மரியாதையும் தாமதமாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 28, 29, 30. ஜனவரி 6, 7, 8, 9, 10, 11.

  சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 2, 3, 4 குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

  பரிகாரம்: பூம்புகார் அருகில் உள்ள சூரியனார் உச்சி கிளான் கோட்டம் சிவ சூர்யன் பெருமானை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கன்னி

  கன்னி: எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புத பகவான் உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால், மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் நலனுக்காக தேவையானவற்றை செய்வீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டு. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். வாகன பயணங்களில் கவனம் தேவை.

  குடும்பத்தினருடன் இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருகை அதிகரிக்கும். தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். ஆவணங்களை சரிபார்த்து வாங்கவும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சக ஊழியர்களிடம் கவனம் தேவை. மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும்.

  எந்த பிரச்னையாக இருந்தாலும், அவசரப்பட்டு செயல்படாமல், நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. கடினமான உழைப்பால் உங்கள் ஆசைகளை நிறைவேற்றி க்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பல வகையில் பணவரவு அதிகரிக்கும். முதலீடுகளால் லாபம் உண்டு.
  பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில நேரங்களில் வீண் செலவுகள் உண்டாகும்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 30, 31. ஜனவரி 1, 9 ,10, 11, 12, 13.

  சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 4, 5, 6 வாகன பயணங்களில் ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளிடம் கவனம் தேவை.

  பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சிங்கப்பெருமாளை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  துலாம்

  துலாம்: தன் ரசனைக்கேற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் படைத்த துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்கில் சஞ்சரிப்பதால் தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். புதிய நிலம், வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். உங்கள் சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடையே கருத்துவேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

  குழந்தைகள் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால், கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. எதிரிகளால் சிறு பிரச்னை வர வாய்ப்புள்ளதால் எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். வெளியூர் பயணங்களில் உங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். தம்பதியர்களுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லறத்தில் மகிழ்ச்சி உண்டு. மனைவி வழி சொத்து சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும்.கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தந்தை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். தந்தையின் மூலம் தனவரவு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிகள் கைகூடும். உங்கள் உத்தியோகம் மற்றும் தொழிலில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கண்ணும் கருத்துமாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். உங்கள் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 2, 3, 4, 9, 10, 11. டிசம்பர் 11, 12, 13.

  சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 6, 7, 8. காரியங்களில் தடை ஏற்படும். புதிய முயற்சிகளை தவிருங்கள்.

  பரிகாரம்: ஸ்ரீ ரங்கத்திலுள்ள திருவரங்கப்பெருமானை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விருச்சிகம்


  விருச்சிகம்:தீர்க்கமான முடிவெடுத்து வேகமாக செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமாகும். வீண் விரயங்கள் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. உங்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டு. உங்கள் பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் கவனமுடன் செயல்படுங்கள். எந்த பிரச்னைகளையும் பெரிது படுத்த வேண்டாம். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும், திடீர் பொருளாதார உயர்வு ஏற்படும். சகோதர, சகோதரிகளால் விரயம் ஏற்படும்.

  புதிய முயற்சிகளை இந்த கால கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களால் பிரச்சினை வந்து நீங்கும். இருப்பினும் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
  நீண்ட நாளாக குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்னைகள் காலதாமதம் ஆனாலும் சாதகமாக அமையும். தற்போது பங்கு சந்தை விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

  எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன லாபமும் உண்டாகும். மனைவியால் ஆதாயம் உண்டு. மனைவி வழியில் தன வரவும், சொத்து சேர்க்கையும் உண்டாகும். உங்கள் செயல்களுக்கு உங்கள் மனைவி உறுதுணையாக இருப்பார். புதிய நகை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். தந்தையால் அனுகூலம் உண்டு. வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் அணுகுமுறையும், நிர்வாகத்திறனும் மற்றவர்களால் பாராட்டப்படும்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 17, 18 ஜனவரி 4, 5, 6, 13, 14.

  சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 9, 10 ,11 வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். விழிப்புடன் செயல்படுங்கள்.

  பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமானை செவ்வாய்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தனுசு

  தனுசு: அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என நினைக்கும் பொதுநல விரும்பிகளான தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசியில் இருப்பது நன்மை என்றாலும், தற்போது இந்த மாதம் முற்பகுதியில் உங்கள் ராசியில் ஐந்து கிரகங்கள் சேர்க்கை பெறுவதால் எதிலும் பொறுமையை கடைபிடியுங்கள். அவசரப்பட்டு முடிவெடுப்பதையும், செயல்படுவதையும் தவிருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனம் தேவை. யாரையும் வாக்கு விரோதம் செய்து கொள்ள வேண்டாம். சகோதர, சகோதரிகளால்
  ஆதாயம் உண்டு.

  உங்கள் குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். மாத பிற்பகுதியில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாயின் உடல் நிலையில் சிறு, சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகளின் செயல்களால் பெருமை படக்கூடிய சூழல் உருவாகும். குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும்.
  நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் சிறு, சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. நீண்ட நாளாக திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு, திருமண முயற்சிகள் கைகூடும். தந்தையின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.
  தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்து பிரச்னைகளில் தற்போது தலையிட வேண்டாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் ஆளுமை அதிகரிக்கும். சிறு, சிறு பிரச்னை வந்தாலும், அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வேலை வாய்ப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் முயற்சிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் நீங்கள் பொறுமையால் பெருமை அடையலாம்.

  அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 19, 20, 21, 22, 23. ஜனவரி 6, 7, 8.

  சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 11, 12, 13. எதிர் மறை சிந்தனை மற்றும் கோபத்தை தவிர்க்கவும்.

  பரிகாரம்: தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரரையும், குருபகவானையும் வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகரம்

  மகரம்: உழைப்பு மட்டுமே உயர்வு தரும் என்பதை உறுதியாக நம்பும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதாலும், இந்த மாத முற்பகுதியில் உங்கள் ராசிக்கு பன்னிரண்டில் ஐந்து கிரகங்களின் சேர்க்கை இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல், வீண் செலவுகள் அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் எதிலும் கவனமாக செயல்படுங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற விஷயங்களை தவிருங்கள். மற்றவர்களை நம்பி எந்த விஷயத்தையும் ஒப்படைக்க வேண்டாம். பூர்வ புண்ணிய பலமும், தெய்வ பலமும் அதிகமிருப்பதால் அனைத்தையும் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

  குழந்தைகளால் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு பெருமையைத் தேடி தரும். நீண்டநாளாக முயற்சித்த வங்கி கடன் தற்போது கிடைக்கும். எதிரிகளால் லாபமுண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவிக்குள் மாத முற்பகுதியில் சிறு, சிறு பிரச்னைகள் வந்தாலும், மாத பிற்பகுதியில் அன்யோன்யம் அதிகரிக்கும். தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம், நிலம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சகோதர, சகோதரிகளால் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
  மனைவி வழியில் தன வரவு உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பார்கள்.
  தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். புகழ், பெருமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய
  முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

  அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 9, 10, 11. டிசம்பர் 21 ,22, 23, 24, 25.

  சந்திராஷ்டம நாட்கள்:டிசம்பர் 17, 18. ஜனவரி 13, 14.வீண் விரயங்கள் மற்றும் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

  பரிகாரம்: திருகொள்ளிக்காடு அக்னீஸ்வரரையும், சனிபகவானையும் சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
   

Share This Page