முகம் பளிச்சென்று பளிச்சிட......

Discussion in 'Beauty Tips' started by Aathisakthi, Aug 18, 2017.

 1. Aathisakthi

  Aathisakthi Member

  Joined:
  Jun 19, 2017
  Messages:
  25
  Likes Received:
  41
  Trophy Points:
  13
  Gender:
  Female
  மீண்டும் நானே...

  இன்னொரு அழகு குறிப்போடு...

  நான் பதிவேற்றும் அழகு குறிப்புகள் எல்லாம் பார்த்தவை, கேட்டவை, படித்தவை மட்டுமல்ல, நானே எனக்கு செய்து பார்த்தவையும் கூட..

  சோ ரிசல்ட்ஸ் நல்லா வந்தா மட்டுமே சேர் செய்வது...

  சரி இப்போ சொல்ல போற குறிப்பு.. நம்ம முகத்துக்கு தான்... எளிய பொருட்களை வைத்து நாமே அழகா ஒரு க்ரீம் தயார் செய்யலாம்..

  தேவையான பொருட்கள்...

  1. தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

  2. நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்

  3. கற்றாளை ஜெல் - 2 ஸ்பூன்

  4. ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

  5. வைட்டமின் e எண்ணெய் - 3 கேப்சூல்

  செய்முறை..

  மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சுத்தமான சிறு டப்பாவில் விட்டு, ஸ்பூன் கொண்டு நன்கு முட்டையை அடித்து கலக்குவது போல் கலக்கினால் சற்று நேரத்தில் எண்ணெய் தன்மை போய் க்ரீம் போல் மாறிவிடும்.. அப்படியே பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.. வேண்டும் நேரத்தில் எடுத்து உபயோகப் படுத்தலாம்..

  நான் மேற் கூறிய அளவு, ஒரு வாரத்திற்கு வேண்டுமளவான க்ரீம் வரும்..

  தினமும் குளிப்பதற்கு முன் முகத்தை வெறும் நீரில் கழுவி துடைத்துவிட்டு, இந்த க்ரீமை கொஞ்சமாக முகம் முழுவதும் தடவி ஒரு இருபது நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.. பின் வழக்கம் போல் சோப் போட்டு முகம் கழுவலாம்..

  எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், ஒருநாளுக்கு ஒருமுறை செய்தால் போதும்.. நார்மல் ஸ்கின் ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் நாளுக்கு காலை மாலை இரண்டு வேலைகளிலும் செய்யலாம்...
   
  S.B.Nivetha and saravanakumari like this.

Share This Page