மொக்கை தத்துவங்கள்

Discussion in 'Forum Games & Chat' started by NATHIYAMOHANRAJA, Jun 14, 2019 at 1:23 PM.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    • வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
    • பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!
    • ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்! பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…
    • வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள். வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.இதுதான் உலகம்.
    • நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்.அதை நீ ஒப்பு கொள்ளும் போது…
    • ஆசை படுவதை மறந்து விடு!ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!
    • தூசி பட்ட கண்களும், காதல் பட்ட இதயமும், எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…
    • ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம் ,ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்கமுடியாது ......
    • சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து.
    • குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
    • ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது.
    • தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்.கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்
    • ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
    • காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
    • டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினாஅது ஆபரேஷன் தியேட்டர்.
    • தினமும் காலண்டரைக் கிழிக்கிறதுபெரிய விஷயமில்லை;
      ஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்....
    • குக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது.கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது?
    • என்ன தான் வாழை தார் போட்டாலும் அதை வைத்துக்கொண்டு ரோடு போட முடியுமா?
    • காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..
    • Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..
    • பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
    • பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது. பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது.
     
    Shruthi likes this.
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    திருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )
    கீழே படியுங்கள்


    ராஜா:இதற்காக தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்
    ரோஜா:என்னை விட்டு விலக நினைப்பாயா?
    ராஜா:இல்லை இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
    ரோஜா :நீ என்னை விரும்புகிறாயா ?
    ராஜா : ஆமாம் நிச்சயமாக
    ரோஜா :என்னை ஏமாற்றி விடுவாயா?
    ராஜா :அதை விட நான் இறப்பதே மேல்
    ரோஜா :எனக்கொரு முத்தம் தருவாயா ?
    ராஜா:கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகபெரிய சந்தோசமான தருணம்
    ரோஜா "என்னை திட்டுவாயா ?
    ராஜா :ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?
    ரோஜா :நீ கடைசி வரை என் கூடவே இருப்பாயா ?
    ராஜா :ம்ம்ம்ம்

    திருமணத்துக்கு பின் கீழே இருந்து
    மேலே படியுங்க

    கணவன் மனைவி ஜோக்ஸ்

    • மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
    கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

    • மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம். 
கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

    • மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
    கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

    • ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
    கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
    கணவன் :இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

    • கணவன் : உனக்காக எங்க அப்பா அம்மா எல்லோரையும் விட்டிட்டு வந்தனே என்னோட காதல் தான் பெரிசு...
    மனைவி : இல்லைவே இல்லை, உனக்காக நான் என்னோட கணவனையே விட்டிட்டு வந்திருக்கிறேன். அப்போ என் காதல் தான் பெரிசு...

    • மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
    கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு

    • அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ? என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?
    • உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை? பேய்க் கதைதான்...!

    • என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்.. பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.

    • மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

    கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!


    • மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
    கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
    மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
    கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க

    • கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா? மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
    கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...


    • கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
    நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
    மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
     
    Shruthi likes this.

Share This Page