மொடக்குறிச்சி அருகே 2 ஆயிரம் கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 13, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,430
    Likes Received:
    469
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையிலான அலுவலர்கள் நேற்று முள்ளாம்பரப்பு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 10 கரும்பு ஆலைகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் இடத்தை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஐந்து ஆலைகளில் சூப்பர் பாஸ்பேட், அஸ்கா சர்க்கரை (ஜீனி) கலந்து உருண்டை வெல்லம் தயாரிப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து கலப்படம் செய்த 2 ஆயிரம் கிலோ உருண்டை வெல்லத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஆலைகளில் இருந்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பரிசோதனை முடிவுகள் ஆவணப்பூர்வமாக கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
     

Share This Page