மோடி அரசே

Discussion in 'Open Talk' started by NATHIYAMOHANRAJA, Jul 31, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    1,681
    Likes Received:
    71
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பெட்ரோல் விலைஏற்றம் ஏன்,அதை எதற்காக குறைக்கவில்லை என்று அதிமேதாவித்தனமாகவும்,அதிபுத்திசாலித்தனமாகவும் கேட்பதாக நினைக்கும் பாஜக விற்கு ஒட்டு போட மாட்டேன், நோட்டாவுக்குத்தான் என்று கூவும் மனிதர்களுக்காக: இந்தபதிவு.
    மோடி அரசால் பெட்ரோல் விலையுர்வை குறைக்காவிடிலும் தினம் தினம் விலை ஏற்ற இறக்கத்தை குறைக்கலாமே என கேட்பது நியாயமான கேள்வியே.
    தினம் ஏற்றி இறக்குவதற்கு பதிலாக மாசம் இவ்வளவு ஏறும் அல்லது இறங்கும் என அரசால் திட்டமிட முடியாதா? திட்டமிட்டு செயல்படுத்த முடியாதா எனவும் கோபப்படலாம்.
    தினம் தினம் ஏற்றி இறக்குவதால் ஏழை எளியமக்களின் அன்றாட திட்டமிடல் பாதிக்கறதே ஏதும் செய்ய முடியாதா எனவும் ஆதங்கப்படுகீறார்கள்.
    இது நியாயமே. எனக்கும் அந்த எதிர்பார்ப்பு உண்டு. மோடி அரசு அதை நோக்கி சென்றுகொண்டிருக்கீறது. அப்படி என்ன செய்கிறது என பார்ப்போம்.
    பெட்ரோலிய விலையை நாட்டுக்குள்ளே நிலையாக அல்லது தின ஏற்றம் இறக்கம் இல்லாமல் வைத்திருக்க இரண்டு விஷயங்கள் தேவைப்படும்.
    சுத்திகரிப்பு செய்யாத பெட்ரோலியத்தை வாங்கி சேமித்து வைக்க பாதாள சுரங்கங்கள்.
    ஓரளவுக்கு நிலையான அந்நிய செலாவணி செலவு. அதாவது டாலருக்கு நிகரான ருபாயின் மதிப்பு அவ்வளவாக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருத்தல்.
    இந்த இரண்டையும் நீண்டகால திட்டமிடல் செய்தால் ஒழிய கொண்டுவரமுடியாது.
    ஆனால் சில பல குறுக்கு வழிகளை கையாளலாம். டாலருக்கு நிகரான ருபாயின் மதிப்பு அவ்வளவு நிலையாக இல்லாவிடினும் டாலரை விடுத்து நமது பணத்திலேயே எண்ணைய் வாங்கலாம்.
    ஈரான் இப்படி நமது பணத்திலேயே வாங்க ஒப்புக்கொண்டது. நமக்கு ஐம்பதாயிரம் கோடிக்கும் மேலே பணம் மிச்சமாகியிருக்கும். ஆனால் பத்து வருடங்களாக நாட்டை ஆண்ட கான்கிரஸ் களவாணிகளோ ஈரானுக்கு பணம் திரும்ப கொடுக்காமல் கடன் வைத்திருந்ததுகள்.
    மோடி அரசே அந்த கடனை பணமாகவும் அரிசி மற்றும் இன்ன பிற பொருட்களை பண்டமாற்றிலும் கொடுத்து அடைத்தது.
    இன்றைக்கு வெனிசுவேலா நாடும் இதே போல நமது பணத்திலேயே எண்ணைய் விற்க ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கொள்முதல் விலை இன்னமும் குறையும்.
    இதிலே இன்னோன்னும் செய்யலாம். அது நீண்டகால ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வது. இவ்வளவு லட்சம் பேரல்களை இவ்வளவு ருபாயிக்கு மாச மாசம் வாங்கிக்கொள்கிறேன் என ஒப்பந்தம் போடலாம். இதையும் போட்டிருக்கிறார்கள்.
    அதிலே ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது. அது ஒருவேளை உள்நாட்டு உபயோகம் குறைந்தாலோ அதிகரித்தாலோ என்ன செய்வது?
    அதனால் என்ன வாங்கும் எண்ணையை சேமித்து வைத்திருந்து பின்பு பயன்படுத்திக்கொள்ளவேண்டியது தானே என கேட்டுவிடலாம்.
    ஆனால் இது எண்ணைய் என்பதால் அதுவும் சுத்திகரிக்கப்படாத எண்ணைய் எனப்தால் சும்மா எல்லாம் பேரலிலே பிடித்து வைத்துவிடமுடியாது. அதற்கு என தனி பாதாள சேமிப்பு கிடங்குகள் கடட்வேண்டும்.
    இப்படி முதலிலே கட்ட ஆரம்பித்தது அமெரிக்காதான். அங்கே 727 மில்லியன் பேரல்கள் அதாவது எழுபது கோடியே 27 லட்சம் பேரல்கள். இது அமெரிக்காவின் 60 நாள் இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும்.
    இந்த இடத்திலே எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் போன்றவற்றீலே இருக்கும் பெட்ரோல், டீசலை கணக்கிலே எடுக்காமல் இந்த கையிருப்பு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
    அதாவது மொத்த கையிருப்பு வேறு, இந்த சேமிப்பு கிடங்கு கையிருப்பு வேறு. அமெரிக்க தனியாக 90 நாள் கையிருப்பு வைத்திருக்கும். நாமும் 60 நாள் கையிருப்பு வைத்திருப்போம். ஆனால் அது ஒட்டுமொத்த கையிருப்பின் கணக்கு.
    இது தனியாக சேமிப்புக்கான கணக்கு.
    சரி இதிலே என்ன பிரச்சினை என கேட்கிறீர்களா? மோடி அரசு வந்த பின்பு தான் இந்த அவசர கால எண்ணைய் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன. அதிலே கையிருப்பும் வைக்கப்பட்டது.
    கார்கில் போரின் போதே இந்த பிரச்சினை சொல்லப்பட்டு உடனே கட்டவேண்டும் என திட்டம் போட்டார்கள். 2003 இல் அப்புறம் கூட்டு பொரியல் என எல்லாம் நடந்து ஆட்சியும் மாறி 2006 இல் திட்ட வரைவு ஒன்று கொண்டு வந்தார்கள்.
    எப்போது? 2003 இல் ஆரம்பிச்சு 2006 வரைக்கும் பேசிட்டே இருந்திருக்காங்க.
    அப்புறம் ஒருவழியா விசாகப்பட்டினத்திலே முதல் சேமிப்பு கிடங்கு கட்டனும் என 2008 இல் அடிக்கல் நாட்டினாங்க. எப்போது 2008 இல். அப்போ 2012 இல் இது முழுமையான நிரப்பிடுவோம் அப்படீன்னாங்க.
    செய்யல். 2015 இல் தான் கட்டி முடிச்சு 2016 இல் தான் நிரப்பினானங்க. விசாகப்பட்டினத்திலே 9 மில்லியன் பேரல்கள் அதாவது 90 லட்சம் பேரல்கள் இருப்பு வைக்கமுடியும்.
    இந்தியாவின் தினப்படி தேவை நாற்பத்தொரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் பேரல்கள். அப்படீன்னா ஒரு ரண்டு நாளைக்குத்தான் இது தாங்கும்.
    இதே மாதிரி ஒரு பத்து பதினஞ்சு கட்டினா ஒரு மூனு மாச கையிருப்புக்கும் ஆகும். விலை குறையும் போது வாங்கிப்போட்டு விலை ஏறும்போது சமாளிக்கலாம் என 2015 பட்ஜெட்டிலே திட்டம் போட்டு இப்போ மூனு இடத்திலே கட்டியிருக்காங்க.
    மங்களூரிலே ஒரு கோடி பேரல்கள் கையிருப்பு கர்நாடகா பதூரிலெ 2 கோடி பேரல்கள் கையிருப்பு என கட்டி முடிச்சு நிரப்ப ஆரம்பிச்சாச்சு.
    இதிலே மங்களூரிலே எண்ணைய் நிரப்ப துபாய் தேசிய எண்ணை நிறுவனத்தோட ஒப்பந்தம் போட்டிருக்காங்க. அதிலே நிரப்பி வைக்கும் வாடகையா மூன்றீல் ஒரு பங்கு எண்ணெய் இலவசமா கிடைக்கும்.
    மோடி துபாய் போயி ஒப்பந்தம் போட்டுவந்தார்.
    இது இல்லாம இன்னும் 9 கோடி பேரல்கள் கையிருப்பு வைக்க நாலு இடங்களிலே கட்டிட்டு இருக்காங்க. இந்த வருட இறுதிக்குள்ளே அவை முடிவடையும்.
    நம்ம வெறுமனே சும்மா ஒரு மூனு கோடி பேரல் அவசரத்துக்கு வைச்சிருக்கோம்.
    சீனா 40 கோடி பேரல்கள் கையிருப்பு.
    அமெரிக்கா 70 கோடி பேரல்கள் கையிருப்பு.
    இந்த 40 கோடி பேரல் கையிருப்பு சீனா கடந்த பத்து வருடங்களிலே கட்டியது. நாமளும் கடந்த பத்து வருடத்திலே 40 கோடி பேரல் கையிருப்பு வைச்சிருந்தா?
    90 நாளுக்கான இருப்பு இருந்திருக்கும்.
    அதாவது விலை ஏறீனாலும் இறங்கினாலும் மூனுமாசம் நமக்கு நேரமிருக்கும்.
    விலை தீடீரென ஏறும்போது இந்த அவசர இருப்பிலே இருந்து எடுத்து பயன்படுத்தலாம்.
    இதை இப்போ நாம பேசிட்டுத்தான் இருக்கோம். அமெரிக்கா இத ரொம்ப நாளா செஞ்சுட்டு வருது. 2005 இல் ஜார்ஜ் புஷ் இத செஞ்சார். 18 வருசமா அவிங்க செய்யறத பார்த்து செய்யறதுக்கு கூட கான்கிரஸ் களவாணிகளால் முடியல.
    இத பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் சொல்லியிருக்கார். நாங்கள் நீண்டகால திட்டம் தருவோம் என.
    அந்த நீண்டகால திட்டம் என்பது, தினப்படி விலை உயர்வு இல்லாமல் பார்த்துக்கொள்வது
    விலை ஏறினால் அவசர இருப்பிலே இருந்து எடுத்து சமாளிப்பது. விலைகுறையும் போது வாங்கி இருப்பு வைப்பது.
    இதை விட தனித்தனியா தனி ஆவர்த்தனம் வாசிச்சுட்டு மக்கள் பணத்தை வீணடிக்கும் 19 பெட்ரோலிய கம்பெனிகளை ஒன்னாக்கி ஒரே கம்பெனி ஒரே பெட்ரோல் ஒரே விலைன்னு கொண்டு வருவதும் ஒரு திட்டம். அதுவும் கூடிய விரைவிலே நடக்கும்.
    பெட்ரோலிய உபயோகத்தையே குறைப்பது என்பது இன்னோர் நீண்ட கால திட்டம் அதை தனியா பார்க்கலாம்.
    மோடி அரசு என்ன செய்ய முடியுதோ அதை செய்யுது. ஆனால் சும்மா மந்திரத்திலே மாங்காய் விழனும் அப்படீன்னா நடக்காது.
    சுட்டிகள் கொடுத்திருக்கேன். ஆதாரம் தேவைப்படுவோர் படிச்சிட்டு வந்து பேசுங்க இல்லாட்டி சேதாரம் பலமா இருக்கும்.
     

Share This Page