ரயில் பயணம்

Discussion in 'Short Stories' started by nagalakshmi sermathai, Mar 12, 2020.

?

உங்கள் கருத்து

  1. பிடிச்சிருக்கு

    0 vote(s)
    0.0%
  2. பிடிக்கவில்லை

    0 vote(s)
    0.0%
  3. ஏதோ

    0 vote(s)
    0.0%
Multiple votes are allowed.
  1. nagalakshmi sermathai

    nagalakshmi sermathai New Member

    Joined:
    Mar 12, 2020
    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    ஒரு அழகான கதை ....

    ஒரு அழகான கிராமம்.. பசுமையான இடத்துல அழகான வீடு அங்க ஒரு அம்மா அவங்க பையன் மட்டும் வாழ்ந்து வந்தாங்க ரொம்ப வருசமா ...அந்த குட்டி பையன் பெயரு அஸ்வந்த் அந்த அம்மா பெயரு பார்வதி ...

    அந்த பையன் இப்ப பெரிய பையனா வளர்ந்துட்டான் .. பார்க்க விஜய் மாதிரி அவ்வளவு அழகு... அவனுக்கு வேலை கிடைச்சி மும்பைக்கு வந்தான் ... நல்ல வீடு, வேலை, சம்பளம் ஆனா அவனுக்கு ஒரு குறை எப்பவும் இருந்துச்சு 'நம்ம அம்மா அங்க தனியா இருக்கங்களேன்னு' ... அவன் அன்னைக்கு இரவு முடிவு பண்ணன் அம்மாவும் கூட்டிகிட்டு இங்க வந்துரலாம்னு ... உடனே அஸ்வந்த் புறப்பட்டான் அவன் கிராமத்துக்கு ...

    அன்று இரவு

    இடி மின்னலுடன் பயங்கர மழை பெய்கிற நேரத்துல ஒரு பொண்ணு தனியா ரயில் நிலையத்துல கைபேசில திட்டிகிட்டு இருந்த அவள பார்த்ததும் "அப்ப என்னடா இவ்வளவு அழகு" னு தோணுச்சு ஆனா சொல்லவில்லை... அவள பார்த்துகிட்டே இருந்தேன் ...

    ட்ரெயின் வந்துருச்சு ...

    அவள இனி பார்க்க முடியாது-னு வருத்தமா என் இடத்துல உட்க்கார்ந்தேன் ... டக்குனு பார்த்த என் முன்னாடி அவ உட்க்காந்துருக்க ... எப்படி அவ கிட்ட பேசணும்னு முடிவு பண்ணிட்டேன் ..

    "நான் அஸ்வந்த்"

    ஒரு திமிரோட அவ பேசுனா "நான் மாலா"

    "ரொம்ப அழகான பெயர்ங்க, இந்த பெயர்ல இருக்கிற எல்லாரும் ரொம்ப அழகா இருப்பாங்க அத நேர்ல இன்னைக்கு பார்த்துட்டேன்"

    "அஸ்வந்த் பெயர் இருக்கிறவங்க ரொம்ப பொய் சொல்லுவாங்கனு கேள்விப்பட்டேன் இன்னைக்கு நேர்ல பார்த்துட்டேன்" சொல்லிட்டு அவ உதட்ட கொஞ்சம சுழிச்ச அந்த சுழில நான் விழுந்துட்டேன் ...

    அவ கிட்ட நான் பேச ஆசைப்படுறத அவ புரிஞ்சிகிட்ட அவளே என் கிட்ட கேள்வி கேட்ட ..
    "அப்புறம் அஸ்வந்த் எங்க போறீங்க ?.."


    "என் அம்மாவ கூப்பிட போறேன் ......." என் கதைய சொன்னேன்

    "நானும் மும்பைல தான் இருந்தேன்.. இப்ப வேலை பிடிக்கல அதன் என் ஊருக்கு போறேன் நான்"

    "ஏன் வேலை பிடிக்கல..?"

    என்னை அவ ஒரு சிரிப்போடு கண்ணுல கேள்வியோடு பார்த்த

    "இல்லை.. சும்ம தெரிஞ்சிக்கலாம்னு... கேட்க கூடாத கேள்வின வேண்டாம்.."

    "அப்படி இல்லை ... சொல்லுறேன் ... நான் ஒரு பையன விரும்புனேன் அவனும் ஆனா போக போக அவன் மாறிட்டான் அவன் கூட மட்டும் பேசணும் வேற யாரு கூட இல்ல, சந்தேகம் எதுக்கு எடுத்தாலும் என் மேல பத்தியமா மாறிட்டான் .. எனக்கு பிடிக்கல சொல்லி பார்த்தேன் கேட்கல அதன் வேண்டாமுன்னு சொல்லி வந்துட்டேன்"

    "நல்லதுங்க ... " நான் ஒரு சந்தோஷத்தோட சொன்னேன் அவ என்னை பார்த்துகிட்டே சிரிசிக்கிட்டே "ஹ்ம்ம்"னு சொன்ன ...

    "அஸ்வந்த் ... உங்களுக்கு என் மேல விருப்பம் ஏதும் இல்லைல ...??"

    "அட ... நான் எங்க பொய் சொல்ல போறேன் சுத்தமா இல்லை ..." னு ஒரு சின்ன புன்னகையோடு சொன்னேன்... அவ சிரிச்சிகிட்டே ஜன்னல் கம்பி வழியா வேடிக்கை பார்த்த... அப்ப நான் "ரொம்ப பிடிக்கும் என் அம்மாக்கு அப்புறம் உங்கள தான் ரொம்ப பிடிச்ச பெண்ணா நீங்க தான் "

    அவ அப்ப என்னை பார்த்து சின்னதா சிரிச்ச ... அவ கூட நானும் சிரிச்சேன் ... மும்பைல இருந்து 3 நாட்கள் ஆச்சு எங்க ஊருக்கு வர ... அவ மதுரைல இறங்குன ... அங்க 10 நிமிஷம் ரயில் நிக்கும் ...

    "அஸ்வந்த் .. உன்னை எனக்கு தெரியும் நான் சொன்ன கதை பொய் ... ஏதும் கேட்க்காத சொல்லாத... நான் எந்த பையனையும் விரும்பல உன்னை என் அப்பார்ட்மெண்ட்ல பார்த்தவுடனே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு உன் கிட்ட பேச முயற்சி பண்ணேன் ஆனா நீ என்னை கவனிக்கல ... போறான்னு தெரிஞ்சி நானும் என் ஊருக்கு கிளம்புனேன் உனக்காக எதிர்பார்க்காமலே கிட்ட பேசுனா... அந்த ஒரு நொடிக்காக எவ்வளவு நாள் நான் காத்திருந்தேன்னு தெரியுமா ..?.. இப்ப கூட என் அம்மா அப்பா பார்க்க இருக்கிற இடம் தான் என் இடம்னு வந்தேன் ... புரிஞ்சிக்கோ..."

    "அப்பர்டெமெண்ட்ல எப்ப பார்த்த மாசமா உனக்கு என்னை தெரியும் ?.."

    "அந்த ஹோலி பண்டிகை என் தோழி அபர்ணாக்கு வர்ணம் பூசுறேன்னு உனக்கு பூசுனேன் அப்ப இருந்து.. பார்த்தவுடனே உன்னை பிடிச்சுப்போச்சு.."

    "அப்ப என்கிட்ட நீ பேசுனது எல்லாமே பொய் .."

    ட்ரெயின் நகர ஆரம்பிச்சது .... அவன் என்னை வெறுக்கிறது அவன் கண்ணுல பார்த்தேன் ...

    வீட்டுக்கு போன உடனே என் அம்மாவ கட்டி பிடிச்சி அழுதேன் ... நடந்த சொன்னேன் ..."ச்ச ... இதுக்கு நீ அழலாமா ??... கண்ணை துடைச்சிக்கோ அவன் புரிஞ்சிப்பான் ... வா சாப்பிட .."

    சிவங்கை மாவட்டம் கல்லால் கிராம்மம் ..

    கதவு தட்டுற சத்தம் ...

    "யாரா இருக்கும் இந்த நேரத்துல..??.." புலம்பிட்டே கதவை திறக்கிற ..
    " அஸ்வந்த் ... என்ன தம்பி இப்படி ஊருக்கு சொல்லாம வந்துருக்க .?.. ஏதும் முடியலப்பா .??.."


    "இல்லை அம்மா.. உன்னை ஊருக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் .."

    "இப்ப எதுக்கு இந்த பேச்சு ... வா வந்து சாப்பிடு .."

    2 நாட்கள் ஆச்சு அவளை மறக்க முடியல ....

    "ஏன்டா 2 நாள்ல அமைதியா இருக்க .."

    "அப்படி ஏதும் இல்ல அம்மா .."

    " சரி டா .... அம்மா ஒரு கதை சொல்லட்டா ..??.. "

    "சொல்லுங்க அம்மா .."

    "என்னை பார்த்துட்டு உன் அப்பாக்கு ரொம்ப பிடிச்சி போச்சு ... என்னை கல்யாணம் பண்ண ஆசைபட்டாரு அதுக்காக நிறைய பொய் சொன்னாரு .. எனக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி மண்டப மேடைல வச்சு உண்மையை சொன்னாரு ... 'நான் ஒரு ரவுடி.. தண்ணி அடிப்பேன் ... என் மேல கேஸ் இருக்கு .. என் வீட்ல இருக்கிறவங்களுக்கு கூட என்னை பிடிக்காது ... ஆனா ஒண்ணு இதுக்கு அப்புறம் நான் மாறுவேன் உனக்காக என் மேல நம்பிக்கை இருந்த சொல்லு இல்லன நீ எந்திரிச்சு போ யாரும் உன்னை கேள்வி கேட்கமாட்டாங்க...' இப்படி உங்க அப்பா சொன்ன பிறகு அவர் மேல மதிப்பு அதிகம் ஆயிருச்சு அவரை மனசு இல்லை .. அவரு சொன்ன மாதிரியே எனக்காக வாழ்ந்தாரு நமக்காக ..."

    "எப்படி அம்மா அப்பாவ நம்புனா ..??"

    "அவர் கண்ணுல தெரிஞ்சது என்னை எவ்வளவு நேசிக்கிறாருன்னு .." என் அம்மா சிரிச்சிகிட்டே என் அப்பா பத்தி சொல்லும் போது தெரிஞ்சது மாலா என்னை எவ்வளவு விரும்புனனு ....

    "எப்ப டா ஊருக்கு கிளம்புறோம் ..??"

    "அம்மா இன்னும் ஒரு வாரத்துல ... "

    1 வாரமும் ஆச்சு... ஊருக்கு கிளம்பி ட்ரெயின்ல ஏறினோம் ..
    ட்ரெயின் மதுரை-ல நின்னுச்சு...

    "அம்மா உன் மருமகளா காட்டவா ..?"
    நேர அவ வீட்ல தான் நின்னோம் .....காலிங் பெல் அடிச்சோம் கதவு திறந்தாங்க ..


    "யார் நீங்க ...?..." மலாவோட அம்மா கேட்க

    "நான் அஸ்வந்த் உங்க பொண்ணு கேட்டு வந்துருக்கோம் .."
     

Share This Page