ராஜினாமாவை ஏற்க மாட்டோம்!’ - பாக்யராஜுக்கு கரம்கொடுத்த எழுத்தாளர் சங்கம்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 2, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மாட்டோம்'' எனத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
  [​IMG]
  ``சர்கார் படத்தின் கதை பிரச்னையில், சம்பந்தப்பட்ட உறுப்பினர் புகாரில் உண்மை இருந்தது எனத் தெரிந்ததால் நடவடிக்கை எடுத்தேன். இயக்குநர் முருகதாஸிடம் கதை பிரச்னை தொடர்பாகக் கெஞ்சினேன். ஆனால், அவர் உடன்படவில்லை. இந்த விவகாரத்தின்போது தேவையில்லாத அசௌகரியங்கள் ஏற்பட்டது. இதற்குக் காரணம் தேர்தல்ல நின்னு ஜெயிக்காம, நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்தது தான் என நினைக்கிறேன். இதனால் பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனக் கூறி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் இயக்குநர் கே.பாக்யராஜ். மேலும் ராஜினாமா கடிதத்தையும் சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினர் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.

  இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சங்கம், ``ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். எனவே, எப்போதும் போல நீங்களே எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வீர்கள்" எனக் கூறி பாக்யராஜுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த மார்ச் மாதம்தான் எழுத்தாளர் சங்கத் தலைவராக அனைவராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமுகமாகச் சென்ற தலைவர் பதவிக்கு `சர்கார்’ மூலம் பிரச்னை வந்தது. இதனால் 6 மாதத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
   

Share This Page