ராவணாம்பிகை/ Ravanaambigai By Chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, May 18, 2019.

 1. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  வணக்கம் நண்பர்களே...

  கருவாப்பையா மற்றும் வானவில் வாழ்க்கைக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

  எனது மூன்றாவது கதையான "ராவணாம்பிகை " விரைவில் தொடங்கப்படும்.

  அதற்கும் தாங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  அன்புடன்
  சந்திரிகா கிருஷ்ணன்
   
  Rabina and Kavyakeerthi like this.
 2. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  177
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  All the best Chandrika ..
   
  Chandrika krishnan likes this.
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  835
  Likes Received:
  518
  Trophy Points:
  93
  Gender:
  Female
  All the best chandrika krishnan
   
  Chandrika krishnan likes this.
 4. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
   
 5. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq pa
   
 6. Thamaraikannan

  Thamaraikannan Active Member

  Joined:
  Feb 8, 2019
  Messages:
  147
  Likes Received:
  78
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Homemaker
  Location:
  Tamilnadu
  I am eagerly waiting for your story. All the best.
   
  Chandrika krishnan likes this.
 7. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq so much pa
   
 8. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை - 1

  அந்த அதிகாலை நேரத்தில், அந்த அக்ரகாரம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

  தெருவெல்லாம் ஈரமாக மாமியெல்லாம் வாசலை தெளித்து இருபத்தியொரு தொடங்கி பதினொன்னு முடிய சிக்கு கோலமும் சில நவநாகரிக மாமியின் பெண்கள் ரங்கோலியும் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

  ஒருபக்கம் பஜனை குழு ஒன்று மார்கழி குளிரையும் அனுபவித்துக்கொண்டே "நாராயண நாமம் " இசைத்து கொண்டு இருக்க... பஜனையில் பங்குபெறும் சாக்கில் அந்த ஊரின் இளவட்டங்களில் சில, மாறுவேடத்தில் கோலம் போடும் கோகிலாக்களையும் காயத்ரிக்களையும் ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தனர்.

  அந்த அக்ரகாரத்தின் ஆச்சார ஆசான் நம்பியுடையார் , திண்ணையில் அமர்ந்து வாயில் வெத்தலையை குதப்பியவாறே அந்த விஷமிகளை இனம் கண்டுபிடித்துக்கொண்டிருந்தார்.

  "ஓய் அய்யங்காரே... செத்த இங்க வாரீலா " என்றவர் அந்த இளம் குடிமியை கைகாட்டி அழைக்க,

  உள்ளே உதறிய போதும் பொய்யான பணிவுடன் அவரருகே சென்றான் அந்த அம்பி.

  "நீங்கோ இந்த அக்ரகாரத்துலா தான் வசிக்lகரேலா? நா இதுக்கு முந்தி உங்கள பாத்தது கிடையாதே... அம்பியோட தோப்பனார் பேர் என்னவோ? "

  வெத்தலையின் எச்சில் எதிரில் நிற்பவன் மேல் தெறிக்க கேள்விகேட்டவரை, அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்தவன், அவர் அவனை கண்காணிப்பதை அறிந்ததும் தலையை கவிழ்த்திக்கொண்டான்.

  "என்ன சொல்லி சமாளிப்பது? உனக்கு இந்த வம்பு தேவைதானா? " என்று தன்னையே அவன் நொந்துகொண்டிருக்க.. அவர் தொண்டையை கணைத்தார்.

  "கேட்கறேனோ இல்லியோ? வாயில என்னத்த மெல்ரெல்... பதில் சொல்லும் ஓய்? " என்றவர் அதட்டவும்,

  அவரை போலவே வாயை குதப்பலாக வைத்துக்கொண்டவன்,

  "உங்கள மாறித்தான் சாஸ்த்திரியாரே.... நானும் வெத்தலைப்பெட்டி தான் ஓய்... கொஞ்ச நிறைய போட்டுடன்... உங்க கேள்விக்கு பதில் சொல்றச்சே தெரிச்சுரும்.... பரவாலையா ஓய் " என்று சொல்லிக்கொண்டே அவன் துப்புவது போல பாவனை செய்ய, அவர் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு அமர்ந்துகொண்டார்.

  "அப்பாடா... ஒருவழியா பதில் சொல்லாம சமாளிச்சாச்சு "என்றவன் பெருமூச்சு விட்டுக்கொண்டே திரும்ப, அங்கே அவள் நின்றாள்.

  யாருக்காக அவன் வேடமிட்டுக்கொண்டு, தனது பிறப்பு வளர்ப்பு பெருமையெல்லாம் மறந்து இங்கே இந்த நொடி இப்படி நிற்கிறானோ... அதற்கு காரணமானவள்.

  குளித்துமுடித்து தலையில் கட்டி இருந்த ஈர துண்டும், மஞ்சள் முகத்தில் அழகாக இட்டிருந்த செந்தூரமும் அதன் மேல் சன்ன கீற்றாக அந்த வெள்ளை திருநீறும்... ஊதாவும் வாடாமணியும் கலந்த பூப்போட்ட தாவணியை ஒருபக்கம் தூக்கி இடிப்பில் அவள் சொருகி இருந்த அழகும்... அந்த பக்கம் மட்டும் கெண்டைக்கால் வரை பளபளத்த சருமமும்... அதை கவ்வி இருந்த இரட்டை வடை சரமும் ஐந்து முத்துக்கள் கோர்த்த அன்னம்பதித்த கால்கொலுசும் அவள் அழகை வஞ்சனை இல்லாமல் வாரிவழங்கி எடுத்துக்காட்டியது.

  குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தவளின் நெற்றில் இருந்து உருண்ட வேர்வைத்துளி ஒன்று, அவள் கன்னம் வழியாக இறங்கி, கழுத்தில் குதித்து, தோளில் விளையாடிக்கொண்டிடுக்க, அதை கண்ட அவனோ, அந்த வேர்வை துளிமீது பொறாமை கொண்டிருந்தான்..

  கலர்பொடி கையோடு அவள் அந்த வேர்வையை வழிக்கவும் தான் அவனுக்கு நிம்மதிவந்தது.

  வழிக்கையில் அந்த மஞ்சள் நிற பொடி... அவள் கன்னத்தின் மீது ஆசை கொண்டு அவளை கிள்ளிக்கொள்ள.. இப்போது அவனது பொறாமை அந்த கோலப்பொடியின் மீது...

  யாரோ தன்னை பார்ப்பதுபோல உணர்ந்தவள் சட்டென்று திரும்பிப்பார்க்க.. அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான்.

  அவள் விழிகள் அவன் கண்களை சந்தித்ததும்.. உள்ளே குளிர் பரவியது அவளுக்கு..

  ராமாயணத்தில் வரும் வாசகம் தான் அவளுக்கு அந்த நொடியில் பொறியில் சிக்கியது..

  "அண்ணலும் நோக்கினார்.. அவளும் நோக்கினாள் "

  அந்த மஞ்சள் முகம் அந்திவானமாய் சிவந்துவிட, வெட்க புன்னகையோடு விருட்டென உள்ளே ஓடிவிட்டாள் அவள்.

  ஒரு புன்னகையோடு அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அவன், ஒரு ' டெம்போ ' வரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தான்.

  அக்ரகாரத்தில் வெட்டிந்யாயம் பேசிக்கொண்டிருந்த இருந்த சில தலைகளும் கோலம்போட்டுக்கொண்டிருந்தவாளும்.. பஜனை குழுக்களும்.. தடதட சத்தத்துடன் வந்த அந்த வண்டியை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

  படங்களில் வருமே.. பறவைகள் பறப்பது நிற்பது போலவும்.. கடல் அலைகள் ஸ்தம்பிப்பதுபோலவும்.. அதுபோலவே அவர்களும் தத்தம் வேலைகளை விடுத்து வாய்ப்பார்த்துக்கொண்டு நின்றனர்.

  வந்த வண்டி நேராக அந்த அழகியின் வீட்டுவாசலில் நிற்க.. உள்ளே இருந்து குதித்த அந்த ஆஜானுபாகுவை கண்ட அந்த போலி குடுமி இளைனனுக்குமே திக்கென்று தான் இருந்தது.

  ஆறடிக்கு கூடுதலான உயரம்.. அகண்ட தோள்களின் பின் இரு ஆண்மகன்கள் ஒளிந்துகொள்ளலாம்.. மேல் சட்டையின் முழுநீள கையையும் தாண்டி அவனது உருண்டு திரண்ட அங்கம் அச்சுறுத்துபையாக இருந்தன.

  முகமும் அப்படித்தான்.. கல்லில் வார்த்த சிலைபோல எடுப்பாக இருந்தது..வடிவம் மட்டும் கல்லாக இல்லை... மனமும் தான் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா?

  கால்களை சற்றே அகட்டிவைத்துக்கொண்டும் இடிப்பில் இருகைகளையும் வைத்துக்கொண்டும் ..தன் முழு உயரத்திற்குமாய் நிமிர்ந்து தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை துச்சமான பார்வை சுலட்டலில் பதிவுசெய்து கொண்டிருந்தவனின் விழிகள்.. வாசற்படியில் ஒற்றை காலில் நின்று கொண்டு பாதி கதவின் மறைவின் பின்னிருந்த எட்டிப்பார்த்த அந்த அவளின் மீது நிலைத்து நின்றது.

  தன் மீது படிந்த அவனது பார்வையில் உடல் உதறல் எடுக்க... மான்விழியாலின் மருண்ட தோற்றம் அவனை கவர்ந்தது.
   
  Rabina likes this.
 9. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  835
  Likes Received:
  518
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice start ...
   
  Chandrika krishnan likes this.
 10. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  476
  Likes Received:
  327
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice start
   
  Chandrika krishnan likes this.

Share This Page