ராவணாம்பிகை/ Ravanaambigai By Chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, May 18, 2019.

 1. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  471
  Likes Received:
  324
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Omg. Raghu jail la ya ? Nishi pavam .
   
 2. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை -19

  ராவணன் !! இந்தப் பேரை எண்ணும்பொழுது அவனுக்கே வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

  இருக்கத்தானே செய்யும்?

  இதோ ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது.. ஆனாலும் இன்றுநடந்தவை போல அவன் மனதில் பதிந்துவிட்ட இந்த இரண்டு நாட்களை அவனால் மறக்க முடியவில்லை.

  இரண்டே நாட்கள்...இருக்குடும்பங்களின் விதியை தன் மதியால் காலில் போட்டு மிதித்து அவன் மகிழ்ந்த நாட்கள்.

  அதில் ஒருகுடும்பம் தண்டனைக்கு உரியது தான் !!

  ஆனால் மற்றொன்று?

  ரகு நிஷியை காதலித்தான். நிஷி ரகுவை காதலித்தாள்.. இதை தவிர்த்து அவள் செய்த பிழை என்ன? அவள் குடும்பம் செய்த பிழை தான் என்ன?

  ஒரே பிழை… ரகு அவளை காதலித்தது..

  அதுமட்டும் அல்லாது அனாதையான அவளை அந்த அக்கிரகார குடும்பம் ஆசையை வளர்த்தது.
  தன் சுயநலத்திற்காக, பழிவெறிக்காக, அவளை பகடைக்காயாக பயன்படுத்த அவன் முடிவெடுக்க காரணம் அவைதான்.


  ஆக யாரோ செய்த குற்றத்திற்கு, இவன் தண்டனைத்தர நடுவில் கசக்கி எறியப்பட்டது என்னவோ அந்த அபலையின் வாழ்க்கைதான்.
  இயல்பிலேயே அரக்ககுணம் கொண்டவனாக இருப்பின், ராவணை அது அசைத்து பார்த்திருக்காது.


  ஆனால் அன்பை மட்டுமே நேசிக்கும் ஒருவன்..சூழ்நிலை காரணமாக கொலைப்பாதகனாக மாறியபோதும், தப்பிழைக்காத தாரகை தவிப்பதை தாங்கமுடியவில்லை அவனால்.

  நிஷியை அழைத்துவந்த பின்னர், அவளிடம் தன் தரப்பு நியாயத்தை அவன் சொல்ல முற்பட்ட போதும், அவள் அதை காதுகொடுத்து கேட்டால் இல்லை !!

  அவளது தாய்தந்தையை அழைத்துவந்து அவளிடம் ஒப்படைத்தபோதும் அவள் அலைப்புறுதல் அணையவில்லை.

  காதல் என்பதன் ஆழம் புரியாத ராவணனோ திகைத்தான் !!

  ஒருநாள் மட்டுமே அவளோட வாழ்ந்த ஒருவனுக்காக அவள் அழட்டுவதை கண்டு வியந்தான் !!

  ஒருநாள் என்ன? ஒரு மணி துளி போதும்… பெண்ணவள் என்னவன் என்று மனதால் ஒருவனை மணம் செய்தால், அது அவள் பிணம் ஆகியபோதும் அழியாத ஆழ்கடல் அமுதென்று !! அவன் அறியவில்லை பாவம்.

  நிஷியின் கோவம் ராவணன் வசம் திரும்பியது.
  அவனை வதைக்க அவள் அவளையே தண்டித்துக்கொண்டாள். அவளது துன்பம் கண்டு அவன் குற்றவுணர்வில் வாடுவதை அவள் புரிந்துகொண்டாள்.


  அதையே அவளது ஆயுதம் ஆக்கிக்கொண்டாள்.
  உண்ணாமல் உறங்காமல் அழுதுகரைந்து மௌன யுத்தம் புரிந்தாள்.


  ராவணனுக்கு வாழ்வே வெறுத்தது. தனது சொத்துக்களை மேற்பார்வை பார்க்க நம்பிக்கையான ஒரு ஆளை நியமித்துவிட்டு குடும்பத்தோடு ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ தொடங்கினான்.

  ஏழு வருடத்தில் எத்தனையோ மாறிவிட்டது. அவன் மனம் உட்பட.!!

  நிஷிக்காக, அவளது துன்பம் போக்க, ரகுவை வெளிக்கொணர முடிவு செய்தான் அவன்.
  பாதி தண்டனை குறைவதில்லை வருத்தம் தான். இருந்தும் அவளுக்காக அம்முடிவை எடுத்தான்.
  அது சம்மந்தமாக வக்கீலுடன் பேசி ஒருவாரம் ஆகிவிட்டது. இன்னும் நல்லதாக ஒருதகவலும் இல்லை.


  அதற்குள், சுப்ரஜாவும் அவனை வற்புறுத்தி இந்த சுற்றுலாவுக்கு அழைத்து வந்துவிட்டாள்.

  வந்ததும் நல்லது தான், அந்த பெண்ணை மீண்டும் பார்க்கமுடிந்ததே.. என்று கடைசியாக எண்ணியவனின் இதழில் புன்னகை அரும்பியது.

  கண்விழித்து பார்த்தவன், ரயில் பெட்டியே இருட்டாக இருப்பதை கண்டு வியந்தான்.
  பின் சற்று நேரம் வானத்து மதியை வெறித்தவன், உள்செல்ல திரும்ப அங்கே நின்றுகொண்டிருந்தாள் சாம்பவி.


  அவளை கண்டு அவன் முகம் திருப்பினாலும், மனம் ஏனோ உற்சாகம் கொண்டது.

  அவளும் அவனை தான்
  பார்த்துக்கொண்டிருந்தாள்.


  சில வினாடிகள் கடந்தும் அவன் திரும்பாமலே நிற்க, “எக்ஸ்குஸமீ சார் “ என்று மெதுவாக அழைத்தாள் சாம்பவி.

  சந்தேகத்தோடு திரும்பிப்பார்த்தவன் “நானா?? “ என்பதுபோல் ஜாடையாக கேட்க, “ஆம் “ என்று புன்னகையோடு தலையசைத்தாள் அவள்.

  “சொல்லுங்க “ என்றவன் அப்புன்னகை ஏற்று வினவ,

  “சாரி சார் “ என்றால் அவள்.

  “ஏனோ?? “ அவன் குரலில் இருந்த உணர்வை புரிந்துகொள்ளமுடியாமல்..

  “அத்தை பேசுனதுக்கு.. அவாளுக்கு யார்ட்ட எப்படி பேசறதுனே தெரியாது… “ என்றவள் இழுக்க..

  “ஆனா பேசாமட்டும் தெரியும்… ஹ்ம்… “ என்றவன் கேலியாக முடிக்கவும் இறுக்கம் தளர்ந்து அவளுக்கு பெருமூச்சு வந்தது.

  அதை கவனித்தவன் “அவ்ளோ பயமா? “ என்று புருவம் உயர்த்தி பார்க்க..

  “அது… பாக்க வேற தெலுகு படத்துல வர ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாறி இருந்தேங்களா.. என் அத்தையோ நத்தமாறி… அதான் ஒரு கலவரம்… அத்தைய தூக்கிட்டேங்கன்னா என்ன செய்யறதுன்னு.. “ என்று அசடுவழிந்தாள் பவி.

  அவன் தோற்றத்தை அவள் கேலி செய்த முறையில் வழக்கம் போல் கோவப்படாமல், அதை ரசிக்க தோன்றியது ராவணனுக்கு.

  தன்னை நினைத்தே வியந்தவன், “அத்தைய தூக்கி என்னமா யூஸ்? “ என்று கேட்டு, பொருள் பொதிந்த பார்வையோடு அவளை நோக்க, அவளுக்கு அதை எப்படி ஏற்பது என்றே புரியவில்லை.

  அவன் சொன்னதை கவனிக்காதவள் போல “சரிங்க சார்.. நா போறேன்…… “ என்று அவசரமாக வார்த்தைகளை உதிர்த்து அவள் நகர முற்பட, ஒருகையை ஆனாசியமாக நீட்டி அவளை வழிமறித்தவன்..

  “டுர் முழுக்க ஒன்னா தானஇருக்கப்போறோம்… உங்க பேர் என்னனு சொல்லலாமே? “ என்று கேட்க

  அழகாக முறுவலித்தவள் “சாம்பவி “ என்று உரக்க….

  “வெறும் சாம்பவியா? “ என்றான் அவன் கண்களில் ஆவலோடு..

  அவன் கண்ணின் மொழியை அறிந்துகொண்டபோதும், வெளிக்காட்டாது

  “வெறும் சாம்பவி இல்லைங்க சார்...வி.
  சாம்பவி… “ என்று சொல்லி கிழுக்கி சிரிக்க..


  “ஹ்ம்ம்.. ஹ்ம்ம். ரொம்ப கஷ்டம் தான்…” என்று பயங்கரமாக சிந்திக்கலானான் அவன்.

  “அப்படி என்ன கஷ்டம்? “

  “இப்போ வி. சாம்பவியோட விரிவாக்கத்துக்கு நான் எங்க போவேன்.. உங்க கணவர் கிட்டயே கேற்றவேண்டிதான் “ என்றவன் ஒரு எட்டு வைக்க..

  கலகலவென நகைத்தவள் “கேக்கறதுக்கு மொதல்ல கல்யாணம் ஆக வேணும்ல “ என்று ஆர்வத்தில் சொல்லியபின்பே, தன் மடத்தனத்தை உணர்ந்து அசடுவழிந்தாள்.

  ராவணன் வாய்விட்டே நகைத்தான்.

  அவன் சிரிப்பின் கம்பீரம் அவளை காந்தமாய் கவர்ந்தது.
   
  Rabina likes this.
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  804
  Likes Received:
  497
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice ud...
   
  Chandrika krishnan likes this.
 4. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  176
  Likes Received:
  115
  Trophy Points:
  43
  Nice story . 7yrs mudinjatha? What next ?
   
  Chandrika krishnan likes this.

Share This Page