ராவணாம்பிகை/ Ravanaambigai By Chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, May 18, 2019.

 1. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ஹ்ம்ம்... பின்னாடி போக போக புரியும் பா
   
 2. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq sis
   
 3. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  369
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Hei super updates...ravanan thali katta porana ?
   
  Chandrika krishnan likes this.
 4. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq pa
   
 5. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை -5

  தன்னை மறுத்திக்கொண்டு நின்ற அந்த கனவானை கண்டு அஞ்சியவள், அவன் தாலியை எடுக்கவும் கலங்கிவிட்டாள் நிஷி.

  தனக்கு நடக்கவிருக்கும் விபரீதம் குறித்து அவள் மூளை எச்சரிக்கை மணி அடிக்க, அவனை தள்ளிவிட்டு ஓடலாமா? என்ற யோசனை தோன்றியது.

  அவள் தள்ளி அவன் நகர்வானா? பலம்கொண்ட மதயானையை பூப்போன்ற தளிர்க்கரங்கள் கொண்டு தள்ளினாள் பலன் ஏது?

  தோன்றிய மாத்திரத்திலேயே அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை அவள் மனம் வருத்தத்தோடும் வேதனையோடும் உணர்ந்தது.

  என்ன செய்வது? இவன் யார்? ஏன் எனக்கு கண்ணி வைக்கிறான்? ஏஏ ராமா என்னை காப்பாற்று.... என்று மனதார எண்ணிக்கொண்டவள், ராவன் அந்த கயிற்றை அவள் கழுத்தில் கட்ட முற்பட...

  அவன் கைக்கும் உடலுக்கும் இடையே கிடைத்த இடத்தில் புகுந்து ஓடினாள் நிஷி..

  தன்னை அவமதித்து அவள் செல்வதை ஏற்காத அவன், அவளை பின்தொடர்ந்தான்.

  அவளது ஓட்டத்திற்கு, அவனது நடையே ஈடாக இருந்தது. அலட்சியமாக கைகளை வீசி அவளது கூந்தலை பற்ற அவன் எத்தனிக்க, அவன் கைகளில் சிக்காது குனிந்து கொண்டாள் அவள்.

  அவள் ஒவ்வொருமுறை தப்பவும் அவனது ஆத்திரம் ஹோமகுண்டதில் ஊற்றிய நெய் போல பற்றிக்கொண்டு எரிந்தது.

  "ராமா...ராமா.... " என்று மனதார அவள் ப்ராத்தித்துக்கொண்டே ஓட, ராமனும் செவி சாய்தானோ என்னவோ, அவள் முன் ரகுராமனும் இன்னும் சில கோவில் காரியஸ்தர்களும் பேசிக்கொண்டே வந்தனர்.

  அலையகுலைய ஓடிவந்தவள் எதிரே வந்தவர்களை கண்டதும் நிம்மதி அடைய, வேகமாக ரகுவின் பின் சென்று ஒளிந்தவாறு நின்றுகொண்டாள்.

  அவளை தொடர்ந்து வந்த ராவனின் தோற்றப்பொலிவையும் கையில் இருந்த தாலி கயிரையும் கண்ட மற்றவர்கள் நடக்கவிருந்த சம்பவத்தை யூகித்து அதிர, ரகுவிற்கு அவனை கொன்றுவிடும் அளவிற்கு கோவம் வந்தது.

  மரியாதையை கைவிட்டவன் "அடேய் ராவணா..... காலையில் போகட்டும் என்று பொறுத்திருந்தால், இப்போது இது என்ன அநியாயம்...? அபலை பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் அடைய நினைக்கிறாயே? உனக்கென்று தர்மம் இல்லையா? ஆனாலும் உன்னிடம் எப்படி இருக்கும்? உன் குணத்திற்கு ஏற்ற பெயர் தானே உனக்கு? அந்த பிரம்மனின் ரிஷியாகிய பவுட்சல்யனின் பேரனும் வம்சிமுனி கைகேசியின் புதல்வனான அந்த ராவணாசுரனுக்கு எந்த விதத்தில் குறைந்தவன் நீ?
  மனதால் இணைந்த எங்களை, என் நிஷியை அடைய நினைக்கும் நீயும் அந்த ராவணனும் எந்த விதத்தில் மாறு? உன் நோக்கம் என்ன? அன்று அவனுக்கு ஒரு காரணம் இருந்தது,..இன்று உன்னுடைய காரணம் என்ன கூறு? ஏன் இப்படி அதிரடியாய் எங்கள் வாழ்வில் புகுந்து நிம்மதியை அழிகிறாய்? சொல்லு? " என்றவன் விளிக்க..

  அவன் பேசுவதை பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த ராவன், அவன் பேசிமுடிக்கவும்...தனது வலது காதை நன்கு அழுத்தி தேய்த்து கொண்டான்..

  அவன் செயலிலும் அலட்சியத்திலும், சாதுவான ரகுராம் சூடாகிவிட, கணநேரத்தில் அவன் கைகளில் இருந்த தாலியை கைப்பற்றி நிஷியின் கழுத்தில் கட்டிவிட்டான்.

  இதை எதிர்பாராத நிஷியே அதிர்ந்த விழிக்க, கோவிலில் கூடி இருந்த மக்களிடையே சலசலப்பு உண்டானது.

  நடந்தவற்றை கவனித்த ராவனோ கோவமும் படவில்லை... அவனை தடுக்கவுமில்லை...

  மாறாக ரகுராமையும் நிஷித்தலோகினியையும் கண்டு எக்காளமாக மனதிற்குள் புன்னகைத்துக்கொண்டான்.

  அவன் எதிர்பார்த்தும் இந்த திருப்பத்தை தானே !!!

  நிஷியை பயம் காட்டி அவன் துரத்தவேண்டும்.... பயத்தில் அவள் ரகுவிடம் தஞ்சம் புகவேண்டும்.... அக்மார்க் காதலனாக அவனும் அவளை காக்க அவளை மணக்கவேண்டும்... இது தானே ராவனின் திட்டமும்...

  அந்த வகையில் தனது திட்டம் பலித்ததில் ராவனுக்கு மகிழ்ச்சிதான்... ! ! ஆனால் இது போதாதே...

  இதுவெறும் முதல்கட்ட வெற்றிதான்.. இன்னும் அவர்கள் இவருக்காக அவன் திட்டமிட்டிருப்பதை அறிந்தால் அவர்கள் என்ன செய்வார்களோ?

  சவால் பார்வையோடு "இனி என் நிஷியை என்ன செய்வாய்? " என்பதுபோல ரகுராமன் ராவணனை நோக்க,

  அசராமல் அந்த பார்வையை தாங்கி நின்ற ராவன்... உணர்ச்சியற்ற முகத்தோடு அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டான்.

  புரியாமல் நின்றனர் நிஷிரகுராம் தம்பதியினர்.
   
  Rabina and Prabha_kannan like this.
 6. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த ராவணனுக்கு அதன்பின் உறக்கம் பிடிக்கவில்லை..

  "நிஷிரகுராம் "என்றவள் பெயரே மீண்டும் மீண்டும் அவனுள் உருவேற எழுந்து, நிஷியின் அறைக்குள் சென்றான் ராவன்.

  மயங்கிய நிலையில் அப்படியே படுத்திருந்தால் அவள். அவள் அருகில் இருந்த தட்டில் உணவு அப்படியே இருந்தது.

  ஒரு நெடுமூச்சுடன் கதவை சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தவன், உறங்கிவிட்டான்.

  அடுத்தநாள் காலை கிளம்பி தனது அலுவலுக்கு சென்றவன், மாலை தனது இருசக்கர வாகனத்தில் தன் உடன் வேலைபார்க்கும் மாதவியோடு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது அது நிகழ்ந்தது.

  அவன் முன்னே சென்றுக்கொண்டிருந்த கார், தீடிரென இடது பக்கம் ஒடித்து திரும்பி 'க்ரீச் ' என்ற சத்தத்துடன் தாரை தேய்த்துக் கொண்டு நிற்கவும், பின்னே வேகமாக வந்த அவனின் இருசக்கர வாகனம் காரின் பின் பகுதியில் மோதி நின்றது.

  மோதிய வேகத்தில் காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஸ்ரீமதி எதிரே முட்டிக்கொண்டாள்.

  வேகமாக கதவை திறந்துகொண்டு இறங்கியவள் "பகவானே.... இந்த லோகத்துல இப்படியும் மனுஷாள் இருக்காளே... அடே பீட... கண்ணு என்ன உன் பொடனிலேயா வெச்சுருக்க... பின்னாடி ஒரு ஸ்தி்ரீ உக்காந்திருந்தா போதுமா? நோக்கெல்லாம் எங்க நல்ல சாவு வர போறது? " என்று வசைமாரி பொழிய தொடங்கினாள்.

  "மாமி... நீங்கோ செத்த வாய மூடிட்டு சும்மா இருக்கேளா!! இல்லைனா வண்டிய ஆத்துக்கு திருப்பவா? " என்று கேட்டு கொண்டே கரோட்டியின் இருக்கையில் இருந்து இறங்கிவந்தால் சாம்பவி.

  "ஏண்டி மா... நான் ஏதும் சொல்ல பிடாதோ? " என்றவள் பக்கம் ஸ்ரீமதி திரும்ப,

  அதற்குள் அந்த வண்டிக்காரன் தனது கவாஸ்கி நிஞ்சாவை புழுதி பறக்க கிளப்பி கொண்டு விருட்டென சாம்பவியின் உடலை உராய்ந்து படி சென்றான்.

  அதில் சற்றே சாம்பவி நிலை தடுமாற, "அட சண்டாளா... இது என்ன ஜென்மம் டா நாராயணா? " என்றபடி அவளை தாங்கிக்கொண்டாள் ஸ்ரீ.

  கண்ணை விட்டு மறையும் வரை அந்த வண்டியை பார்த்துக்கொண்டு நின்ற சாம்பவிக்கு... அதன் எண் மனதில் பதிந்துவிட்டது.

  மாதவியை அவளது விடுதியில் விட்டுவிட்டு வேறொரு வேலையையும் முடித்துவிட்டு, ராவன் வீடுவந்து சேர இரவாகி விட்டது.

  களைத்த முகமும் கசங்கிய மனமுமாய் வந்தவனை கண்ட அவன் தங்கை, "டேய் அண்ணா... என்ன டா இதெல்லாம்? எங்க போயிருந்த? நாளைக்கு நாம சுற்றுலா கெளம்பறோம்.. அது உனக்கு கொஞ்சமாச்சு ஞாபகம் இருக்கா.. அப்பாவும் அம்மாவும் உனக்காக ரொம்ப நேரம் காத்திருந்துட்டு இப்போ தான் தூங்குனாங்க... " என்றவளை...

  "நீ சாப்பிட்டியா? " என்று கேட்டான் ராவணன்.

  "ஆச்சு... நீ சாப்பிட்டியாணா? " என்றவள் கேட்க, ஆமோதிப்பாக ஒரு தலை அசைப்புடன் வேறு மொழி சொல்லாது அவன் மாடிக்கு சென்றுவிட்டான்.

  தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்துவிட்டு லுங்கி பனியனுக்கு மாறி கயிற்று கட்டிலை போட்டு நிலவை வெறித்தபடி மல்லாக்க படுத்தவனுக்கு... நிஷா பேசியது மனதில் ஓடியது.

  "வேண்டாம் நிஷா... என்பக்கம் வராதே " என்று மனதோடு அவளை எச்சரித்தவன், கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

  ஏனோ அந்த மாமியின் அருகே வந்து நின்ற அந்த மற்றொரு பெண்ணின் முகம் மூடிய இமைகளுக்குள் வலம் வந்தது.

  " கெட்டி மேளம் கெட்டி மேளம் " என்ற சத்தத்தோடு மங்கள வாத்தியம் முழங்க, தனது தோப்பனாரின் மடிமீது மடிசார் அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான் ராவணன்.

  நிமிர்ந்து அவன் முகம் நோக்கிய அவளை அவன் காதலோடு காணும் போதே, தீடிரென அந்த முகம் நிஷாவின் முகமாக மாறியது.

  அதிர்ந்து அவன் விழித்தட்டி விழிப்பதற்குள் அந்த பெண் தீப்பிடித்து கருகி விட்டால்.... "

  படீரென எழுந்து அமர்ந்தவனுக்கு ஒருநிமிடம் தனக்கு தோன்றியது கனவா நினைவா என்று குழப்பமாகவே இருந்தது.

  வேகமாக துடித்த இதயம் எங்கே வாய் வழியே வெளியே குதித்துவிடுமோ என்று அஞ்சியவன் மீண்டும் படுக்கவே யோசித்தான்.

  சரி ஏதோ கனவு... எதற்காக நடுங்கவேண்டும்? நிஷா பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால் இப்படி வந்துவிட்டது போல என்றெண்ணி தன்னையே சமாதானம் செய்து கொண்டவன், கண்மூடி உறங்க தொடங்கினான்.

  அடுத்த நாள் அனைவரும் வடஇந்தியா சுற்றுலா செல்ல, ரயில் நிலையத்தில் காத்திருக்க.. அவன் குடும்பம் போலவே அந்த சுற்றுலாவுக்கு வந்த பிற குடும்பங்களில் அந்த கார்கார பெண்ணின் குடும்பமும் இருந்தது.

  யாரிடமோ பேசிக்கொண்டே அவன் புறம் திரும்பிய சாம்பவி அவனை கண்டதும் முகத்தை சுளித்து கொண்டாள்.
   
 7. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  369
  Trophy Points:
  63
  Location:
  trichy

  Athanaium kanava ???
   
  Chandrika krishnan likes this.
 8. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  369
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Nice update
   
  Chandrika krishnan likes this.
 9. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Elappa நிஜம்
   
 10. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  263
  Likes Received:
  262
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq
   

Share This Page