ராவணாம்பிகை/ Ravanaambigai By Chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, May 18, 2019.

 1. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  863
  Likes Received:
  544
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice
   
  Chandrika krishnan likes this.
 2. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  304
  Likes Received:
  246
  Trophy Points:
  43
  Gender:
  Female
  கதை அருமை. ராவணணின் தாக்குதல் யாருக்காக ? யாரை நோக்கி ?
   
  Chandrika krishnan likes this.
 3. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  அவனின் எதிரிக்காக....
   
 4. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை -8

  ரகுராமன் நிஷியோடு, அந்த ஊரின் பெரிய தலைகளும் அக்ரகாரம் நோக்கி படையெடுத்தன.

  மந்தை ஆடுகள் போல மங்குணித்தனமாக அந்த ரகுவை தொடர்ந்து செல்லும் மனிதர்களைப் பார்க்க ராவணனுக்கு சிரிப்பாக தான் இருந்தது.

  நிஷியின் வீட்டின் முன் சென்று நின்ற ரகுவை... உள்ளே செல்லவிடாமல் சூழ இருந்தோர் தடுக்க... அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு, தனது பெற்றோரை அழைக்க உள்ளே சென்றால் நிஷித்தலோகினி.

  அவள் வருவதையோ வெளியே கேட்ட கூக்குரலையோ கேளாதவர் போல, அந்த பள்ளிகொண்ட பெருமாள் முன் சப்பணிட்டு அமர்ந்து பாசுரம் பாடிக்கொண்டிருந்தார் வைகுண்டம்.

  "அப்பா " என்று பலமுறை அழைத்தும் அவர் அவள் புறம் திரும்பவே இல்லை.

  காரியமே கண்ணாக அவர் அமர்ந்திருக்க, அந்த உதாசீனத்தில் நிஷிக்கு கண்ணீர் முட்டியது.

  அவள் தாயார் லக்ஷ்மியோ அடுக்களை பக்கம் இருந்து தலையை மட்டும் நீட்டி, நடப்பதை ஒரு கையாளாகத் தனத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

  கைகளை பிசைந்துக்கொண்டிருந்த நிஷி, பூஜை அறைப்பக்கம் ஒரு எட்டு எடுத்து வைக்க, "நில் " என்று கூவினார் வைகுண்டம்.

  புரியாது அவள் பரிதவிப்போடு முடுக் முடுக் என்று விழிப்பது, அவரை தாக்கிய போதும்... ராவணனின் வசம் சூழ்நிலை கைதியாக அவர் சிக்கி இருப்பதால் அவருக்கும் வேறு வழி தெரியவில்லை.

  பாகுபாடின்றி இத்தனை நாளாக சொந்தமகள் போல சீராட்டி வளர்த்த அந்த அன்பு மகளை... இன்று சுடுசொற்கள் கூறி வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம்... அவர் உயிரை கொல்லாமல் கொன்றது.

  மனதையும் முகத்தையும் கல்லாகி கொண்டவர்...

  "எதுக்குடி அம்மா இந்த ஆத்துக்குள்ள வந்த? " என்று கடுமையான குரலில் வினவினார்.

  "அப்பா... இது என் ஆத்து இல்லையா? நா உங்க சௌந்தர்யப்புத்திரி இல்லையா? நீங்களும் ஏன்பா இப்படி விஷத்திரமா நடந்துக்கிறேள்? அந்த பாவி... இன்னிக்கு காலம்பற நம்ம ஆத்துக்கு வந்தானே அவன் யாருப்பா.? அவனால தான்....இதோ பாருங்கோ... சாமி சந்நதிலியே நேக்கு விவாகம் முடிந்துடுத்து.... அது மாத்திரம் இல்லப்பா... அவன் சொல்றான்... நா தாசிகுல பெண்ணாம்... நம்ம ஊர் தலைவர் ரகு இருக்கிறச்சே... அவன் ஊரார் முன்னாடி பட்டயம் காண்பிக்குறான் பா... வாங்கோ... நீங்க வெளிய வந்து சொல்லுங்கோ... நா உங்க பொண்ணுன்னு எல்லார் முன்னாடியும் சொல்லி... அந்த ராட்சசன் முகத்துல கரி அள்ளிப் புசுங்கோப்பா.... வாங்கோ... " என்றுரைத்து அவள் அவரது கைப்பிடிக்க அருகே செல்ல...

  ஒருஎட்டு பின்னடித்தார் அவர்.

  "அப்ப்பாபா " என்று காற்றாகிவிட்ட குரலில் அவள் அழைக்க,

  " நீ எந்தன் மகளும் இல்ல... நா உன் தோப்பனாரும் இல்லை... அனாதையா கைல கிடைச்ச உன்ன மகளா வளர்த்தோம்... கொஞ்சநாள் முந்த தான் உன் பூர்விகம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிஞ்சுது.... அந்த ஆள் யாருனு கேட்டியோனோ? அவன் தாண்டி உனக்கு ஆம்படையான்.... " என்று சொல்லியவாறே சாமி படம் பக்கம் திரும்பிக்கொண்டார் அவர்.

  கண்களில் அவர் தி்டத்தையும் தாண்டி பெருகிய ஜலத்தை மறைக்கும் முயற்சி அது என்பதை அறியாத நிஷியோ.... அதிர்ச்சியில் சிலையென சமைந்துவிட்டாள்.

  வெளியே நின்ற அனைவருக்குமே உள்ளே நடந்த சம்பாஷணை தெளிவாக கேட்டது, ரகுராம் உட்பட.

  கூட்டத்தின் சலசலப்பை ஊடுருவியது ராவணின் கணீர் குரல்.

  "இப்போ என்னையா சொல்றீர்? உம் தலைவர் என்ன முடிவு செய்ய போகிறார்? "

  இதை கேட்ட ரகுராமிற்கு முகத்தில் தெளிவும் உறுதியும் ஒருங்கே பிறந்தது.

  தன்னை தடுத்துக்கொண்டிருந்த சில கைகளை தகர்த்து, நிஷியின் வீட்டிற்குள் தடாலடியாக நுழைந்தவன்... நிஷியின் கையை இறுக்கமாக பற்றியாவரே வெளி முற்றத்தை அடைந்தான்.

  தன்னை கோபமாகவும் ஏமாற்றமாகவும் எரிச்சலாகவும் பார்த்த பல கண்களின் சந்திப்பை தவிர்த்து, தன் நிலையை மகிழ்ச்சியாக ரசித்துக்கொண்டிருந்த தனது எதிரியின் விழி இரண்டையும் சந்தித்த ரகு...

  " இந்த நொடி முதல்... நிஷி தான் என்னுடைய துணைவி... அத யாருனாளையும் மாத்த முடியாது... அழிந்த போன சில வழக்கங்களை மீண்டும் இந்த தலைமுறைக்கு திணிக்கணும்னு யாரும் கனவுல கூட கற்பனை செய்யவேண்டாம்... அது நிறைவேறாது... நிறைவேறவும் நான் விடமாட்டேன்.... " என்று கூறியவன் அவளையும் அழைத்துக்கொண்டு... மற்றோரின் தூற்றுதலையும் பொருட்படுத்தாது... அவனது இல்லத்தை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

  வெற்றியின் அடுத்த படியிலும் ஏறிவிட்ட திருப்தியில், ராவணனின் முகத்தில் அகந்தை வந்து அமர்ந்துகொண்டது.

  இனி ரகுராமின் வீட்டில் என்ன நடக்கக்கூடும் என்பது அவன் அறிந்தது தானே? அந்த நிச்சயம் தந்த மிதப்பில் அனாயசமாக படி ஏறி தனக்கு அளிக்கப்பட்டிருந்த மாடி அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக்கொண்டான் அவன்.

  சற்று நேரத்திற்கெல்லாம் சிவந்த கண்களோடு படி ஏறி வந்தார் வைகுண்டம்..

  அவரை கண்டவன், தன் கைப்பெட்டியில் இருந்த மூன்று காவி உரைகளுள் ஒன்றை மட்டும் எடுத்து, அவர் கைகளில் தந்தான்.

  அதிர்ச்சியோடு அவர் அவனை நோக்க, "மொத்த காரியமும் முடிஞ்ச பிறகுதான் மத்தது " என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.

  கவலையும் கோவமும் கலந்த முகத்தோடு அவ்விடம் விட்டு நகர்ந்தவரின் உள்ளம், மானசீகமாக அவனுக்கு சாபம் கொண்டிருந்தது.

  அங்கே ரகுராமின் இல்லத்திலோ மற்றொரு போராட்டம் நிகழ்ந்துக்கொண்டிருந்தது.
   
  Rabina likes this.
 5. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை -9

  ரகுராமின் தந்தை கனகசுந்தரம் அவ்வூரின் தலைவர் மட்டும் அல்ல.. தலைக்கனமும் கொஞ்சம் அதிகமே கொண்டவர்.

  சாதி இனவெறி அவரோடு கலந்துவிட்ட ஒன்று.

  அவர் மனைவி மல்லிகை கூட அவரது சாதி வெறியால் பலியானவர்.

  மூன்று வருடங்களுக்கு முன்பு, தீடிரென காய்ச்சலில் அவள் உடல் குலுங்க, அன்று பார்த்து அவர்கள் வீட்டின் மோட்டார் வாகனம் பழுதாகி நின்றுவிட்டது.

  அவசரத்திற்காக அவர் வீட்டின் வேலைக்காரன் வாடகைக்கு ஒரு வண்டி பிடித்துக்கொண்டு வர, வேற்று சாதிக்காரனின் வண்டியில் ஏற மாட்டேன் என்ற அவரது பிடிவாதத்தால் அவர் மனைவியின் உயிர் பிரிந்தது.

  அவரது மூத்த மகனான ரகுவிற்கு, இவ்விஷயத்தில் அவரை அறவே பிடிக்காது.

  அண்ணனின் வழியில் அவனது தம்பி விஜியராமனும் சேதுராமனும். ஆனால் ரகுவின் முதல் தம்பியான ராஜாராமன் அப்பாவின் அச்சு.

  ஊர் தலைவர் மகன் என்ற லாபத்தை இஷ்டத்திற்கும் அனுபவிக்கும் ஆடவன்.

  ஒரு வருடத்திற்கு முன்பு தான் வரப்பில் வழுக்கி விழுந்து கனகசுந்தரம் படுத்த படுக்கையாகி இருந்தார்.

  ரகு அவரது இடத்திற்கு வந்ததில் இருந்து ராஜாராமின் சுதந்திரம் பறிபோனது.

  அதனாலயே அவர்கள் இருவருக்கும் அடிக்கடி உள்நாட்டு போர் மூளும்.

  அன்றும் அப்படித்தான், ரகு நிஷியின் கழுத்தில் தாலி கட்டியதும் ராஜாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.

  தலைமையும் அவனுக்கு அழகு மங்கையும் அவனுக்கா என்ற பொறாமையோடு, நிஷி தாசி குலப்பெண் என்ற செய்தியும் கிடைக்க அவன் உள்ளம் குதூகலித்தது.

  ரகு நிஷியோடு அவன் வீட்டிற்கு செல்லும் முன்பே, ராஜா விரைந்து தனது தந்தையிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான்.

  ஆகவே நிஷிரகுராம், தம்பதியாக அவர்கள் வீட்டை அடைந்தபோது, அவர்கள் இருவரையும் வாசலிலேயே நிறுத்திவிட்டனர் வேலைக்காரர்கள்.

  வெளி முற்றத்தில் சாய்வு நாற்காலியில் தலையணை உதவியோடு ஒருக்களித்து அமர்ந்திருந்தார் கனகம். அருகில் குரோதத்தோடு ராஜாராமன்.

  அவனை கண்டதுமே ரகுவிற்கு புரிந்துவிட்டது. இருப்பினும் ஒரு முயற்சியாக “அப்பா “ என்றவன் தொடங்க…

  “சீ வாய்ய மூடு “ என்று ஆங்காரமாக அதட்டினார் அவர்.

  “அப்பா.. அண்ணன் காரணமா தான் பா இப்படி செஞ்சிருக்கும் “என்று ரகுவின் கடைசி தம்பிகள் இருவரும் தொடங்க,

  “அவனுக்கு வக்காலத்து வாங்கற நன்றிகெட்ட நாய்ங்க யாரும் இந்த வீட்டுக்குள்ள இருக்க வேண்டாம் “ என்று அவர் உறும..

  இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட இருவரும் கப்சிப் என்று அடங்கிவிட்டனர்.

  “யாரும் எனக்காக பேசவேண்டாம்… நா உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க வரல… அது கிடைக்காதுனு எனக்கு எப்போவோ தெரியும்.. என்னோட ஊர் தலைவர்ங்கற பதவிய தூக்கி வீசிட்டு போகத்தான் வந்தேன்… சாதில ஊறி போன இந்த ஊர் எனக்கு வேண்டாம்… “ என்று தோரணையாகவே பேசினான் ரகு.

  அவனை இடைவெட்டிய அவன் தந்தையோ “கண்ட கண்ட தாசி பெண்கல கண்டு மயங்கின ஒருத்தன்… நெனச்சாலும் இனி அந்த பதவிய தக்கவச்சிக்க முடியாது… அதுனால தான் முன்கூட்டி நீயே சரணடைய வந்தியோ “ என்றார் எகத்தாளமாக.

  “அதுவும் ஒருவிதத்துல உண்மைதான்.. பெண்ண பெண்ணா பார்க்காத மிருகங்கள் இருக்கற இடத்துல மனுஷன் என்ன செய்ய முடியும்? ஆறறிவு மனிதனா இருந்தா பேசி போரிடலாம்… மிருகத்துக்கிட்ட பணிஞ்சு போய் தானே ஆகணும்…. “ என்றான் அவனும் பதிலுக்கு.

  தந்தை மகன் என்ற உறவு மறைந்து அங்கே தர்மமும் அதர்மமும் தர்க்கம் செய்ய தொடங்கியது.

  நெருப்பில் குளிர்காய தொடங்கினான் ராஜாராமன்.

  ஊர் மக்களின் வாயிற்கு ஒரு வருடத்திற்கு பேச தேவையான அவல் கிடைக்க தொடங்கியது.

  ஆனால் ஒருஜீவன் மட்டும் அங்கே பரிதவிப்போடு கண்ணீர் பெருக்கி கொண்டிருந்தது.

  ‘தன்னால் தானே தன் மனம் கவர் நாயகன் இன்று தன் தந்தையோடு தண்டலிடுகிறான். யார் அந்த அரக்கன்? எதற்காக
  என் வாழ்வில் வந்தான்? ஒரு நாளில் என் பாதையை முட்கள் நிரம்பியதாக மாற்றிவிட்டானே? நான் செய்த பாவம் தான் என்ன? பெற்றவர்கள்.. இல்லை இல்லை வளத்தவர்கள் கூட என்னை வெறுக்கும் படி பழி சொல்லிவிட்டானே பாவி…. இனி தலை நிமிர்ந்து நான் நடக்க முடியுமா??? தள்ளி நின்று பேசியவன் எல்லாம் இனி எள்ளி நகைப்பானே… !! அது என்ன தாசி குலம்… வாய் கிழிய பேசும் பெரிய மனுஷங்கள் எல்லாம் தங்களது இச்சைக்காக உருவாக்கியது தானே !! இதில் எத்தனை பேர் உத்தமர்கள்….. இப்படி என்னை பழி சொல்லி தவிக்க விட்டு விட்டானே பாவி…. பேரை பார் பேரை… ராவணனாம்…பாவி பாவி… “


  அவள் மனம் இடைவிடாது அவனை பலித்துக்கொண்டும் தன்னிலை குறித்து புலம்பி கொண்டும் இருந்தது.

  அந்நிலையில் அவளால் அது மட்டும் தான் செய்ய முடிந்தது.

  அவள் வளர்ந்த சமூகம் பெண்களை பேதைகளாகவே வளர்த்திவிட்டது. இந்த குமுறல்கள் கூட மனதோடு தான்.. வாய்விட்டு சொல்லும் தைரியம் அவளுக்கும் இல்லை.

  பெண்கள் மிகவும் முன்னேறி விட்ட இந்த காலத்தில் கூட, அவளை ஒரு கூட்டிற்குள்ளேயே வளர்த்துவிட்ட அவளது குடும்பம் மீது கூட அவளுக்கு கோபம் வந்தது.

  ‘ஒருவேளை படித்து இருந்தால்… அதன் மிடுக்கு இருந்தால்.. பரத்தி என்று சொல்லும் பாரை பந்தாடி இருப்பேனோ ‘ என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் அவளுள் தோன்றியது.

  அவள் அறிந்தது எல்லாம் பாமாலையும் சோஷத்திரமும் தானே !!!
  குழப்பம் கோவத்தோடு சுயபட்சாதாபமும் இப்போது அவளோடு சேர்ந்துகொண்டது.


  ‘ஆதியும் அந்தமுமாய் அவள் அறிந்தது எல்லாம் அந்தாதி தானே !!
  அகிலம் என்று போற்றியது அவள் அன்னையை தானே !!
  நீயே மூலம் என்று எண்ணிய தந்தை நிர்முலமாகி விட்டாரே !!’ அவள் மனம் ஊமை கண்ணீர் வடித்தது.


  “இந்த நிலையில் தன்யா கூட இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்… அவளும் தான் ‘அக்கா அக்கா’ என்று எத்தனை பாசமாக என்னை சுற்றி வருவாள்… ஒருவேளை அவளை போல நானும் படிக்க அடம் பிடித்து வெளிஊர் சென்றிருக்க வேண்டுமோ”

  அவள் மனவோட்டங்கள் பாதியில் இருந்தன… யாரோ அவளது கையை பற்றவும் பதறி விழித்தவள், ரகு என்று அறிந்ததும் அமைதியானாள்.

  “ஏதோ பேசுகிறானே? ஏன் அவன் முகம் இப்படி சிவந்து இருக்கிறது? “

  மெல்ல அவள் மனம் தனது போராட்டங்களில் இருந்து வெளிவந்தது. மந்தமான காதுகளில் ரகுவின் குரல் ஒலித்தது.

  “என் வாழ்வு சாவு… ரெண்டுல எது நடந்தாலும் அது என் நிஷிக்கூட தான் “

  அவன் உதிர்த்த வார்த்தைகளோடு அவள் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீரும் உதிர்ந்தன.

  கரம் பற்றி கூட்டத்தை கிழித்து கொண்டு நடந்தான் ரகு.

  அவனை பார்த்து விதி கெக்கோலி கொட்டி சிரித்தது.. ராவணனை போலவே !!
   
  jayalashmi and Rabina like this.
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  863
  Likes Received:
  544
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud
   
  Chandrika krishnan likes this.
 7. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  304
  Likes Received:
  246
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வணக்கம் சந்திரிகா

  ராவணன் எதற்க்காக இந்த குழப்பங்களை ஏற்படுத்துகிறான் ? ரகு நிஷி திருமணத்தினால் இவனுக்கு நன்மை என்ன ? நிஷி தாசி குலத்தை சேர்ந்தவள் என சொல்ல காரணம் ??
   
  Chandrika krishnan likes this.
 8. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  174
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  Story Going nice . Waiting for next
   
  Chandrika krishnan likes this.
 9. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq sis
   
 10. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  வினை விதைத்தவன் வினை அறுப்பான்
   

Share This Page