ராவணாம்பிகை/ Ravanaambigai By Chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, May 18, 2019.

 1. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை -16

  அக்கடிதத்தில் கண்களை ஓட்ட தொடங்கினான் ரகு,

  அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய என் ராஜாவுக்கு,

  தங்கள் சொற்படியே நான் நடந்துவருகிறேன். தங்கள் தம்பியின் கடைக்கண் பார்வை என்மேல் விழ தொடங்கிவிட்டது. இனி தாங்கள் சொல்லியது போல அந்த புது மனிதரை எங்கள் வீட்டிற்கு அனுப்புங்கள். தோப்பனாரை நான் சமாளித்து கொள்கிறேன். மற்றபடி குழப்பம் வேண்டாம்.உங்களுக்கே உரித்தான பதவியும் பணமும் உங்களை சேரும். அந்த முட்டாள் ரகுவின் குறுக்கீடு இருக்காது. தங்களின் அன்புக்காக எது செய்யவும் நான் இருக்கிறேன் கண்ணா… நம் காதலை ஏற்றுக்கொண்ட உங்களின் தந்தைக்கு எனது நமஸ்காரங்களை தெரிவியுங்கள். நம் திட்டப்படி அனைத்தும் முடிந்ததும் உங்களை அடைவேன்.

  உங்கள் காதல் கண்மணி

  கடிதத்தை படித்த ரகுவிற்கு அதில் உள்ள எழுத்துக்கள் எடுத்துரைத்த பொருளை நம்பமுடியவில்லை.

  யாருக்காக அவன் தனது உற்றார் உறவினர் அனைவரையும் எடுத்தெறிந்து வந்தானோ அவளே பொய்த்து போனதை அவனால் ஏற்க்கமுடியவில்லை.

  இருந்தும் மனதின் ஓரத்தில் ஆசை அடித்துக்கொண்டது.

  “ஒருவேளை இதுவும் இந்த ராட்சசனின் சூழ்ச்சியாக இருக்குமோ? அதற்காகத்தான் அவனது அலுவலகத்துக்கு வர சொன்னானா? வேண்டும் என்றே தான் இந்த உரையை கீழ் தள்ளி இருப்பானோ?”

  ரகுவின் மூளை அதிவேகமாக வேலை செய்தது.

  சட்டென கையில் இருந்த புகைப்படத்தை திருப்பி பார்த்தவன் மேலும் அதிர்ந்தான்.

  அதில் அழகாக புன்னகை புரிந்தவாறு நின்றாள் தீக்ஷ. அவள் அருகே நிற்பது சாட்சாத் ரகுராமன் தான்.

  “இந்த படம் எப்படி ராவணனுக்கு கிட்டியது? தீக்ஷவை இவனுக்கு தெரியுமா? இவனது நோக்கம் தான் என்ன? ராஜாராமின் வெறும் அம்பு என்றும் எண்ணமுடியவில்லையே? பிறகு யார் இவன்? பல வருடங்களாக நம்மை பின்தொடர்கிறானோ? “

  ரகுவின் மனம் குழம்பிவிட்டது.

  கடிதமும் படமும் சொல்லிய இருவேறு கதைகளின் உண்மை தன்மை அறியாது தள்ளாடினான்.

  அதை கண்ட ராவணனின் கண்களில் கர்வம் குடிகொண்டது.

  அதுவரை மௌனமாகவே இருந்த இருவரில், முதலில் ரகு பேச தொடங்கினான்.

  “மிஸ்டர். ராவணன் “

  “எஸ் மிஸ்டர். ரகுராமன் “

  “இதுக்கான அர்த்தம் என்ன? “

  “பார்த்தாலே புரியுமே “

  “புரிகிறது? ஆனால் நான் கேட்பது அர்த்தம்? “

  “அர்த்தம்…. ரைட்…. “

  “எஸ் அர்த்தம் தான்… உங்ககிட்ட இருக்கவேண்டிய அர்த்தம்? “

  “தேவை “

  “தேவை? “

  “ஆம் தேவை!!”

  “உனக்கு கூட தேவையா? “

  “தேவை அனைவர்க்கும் பொது “

  “ஆமாம்.. உன் தேவை? “

  “....ரைட்…… “

  “??????? “

  “நிம்மதி “

  “நிம்மதியா? “

  “திருப்தி “

  “புரியல….”

  “புரியல… என் தேவை நிம்மதி திருப்தி “

  “அதற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?? “

  “அது உன் பாடு “

  “அவ்ளோ திமிரா?? “

  “டெபநெட்லி “

  “உன் திமிர தரைமட்டம் ஆக்குவேன் “

  “யூ ஆர் ஆல்வெய்ஸ் வெல்கம் “

  “ராவணானா…………”

  “எஸ்… நான் தான் “

  அவனது பதிலில் கோவம் தலைக்கேற விடுவிடுவென வெளி சென்று விட்டான் ரகு.

  ராவணின் இதழில் ஏளன புன்னகை ஒன்று எட்டிப்பார்த்தது. பின் அது பொய்யோ என்று என்னும்படி மீண்டும் கல்லாக இறுகிவிட்டான்.

  வெளியே சென்ற ரகுவின் உள்ளம் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தள்ளாடியது.

  குழப்பம் புடைசூழ தனது குடியிருப்புக்கு சென்றான்.

  கதவை தட்டும்போதே, கதவு திறந்தது.

  மூக்குத்தியின் ஜொலிப்புக்கு போட்டி போட்டுகொண்டு அவள் முகம் ஜொலிக்க, மங்கலமாய் நின்ற நிஷியை கண்டவனின் உள்ளம் தடுமாறியது.

  அவளை மனையாளாக பார்க்க முடியவில்லை அவனால்.

  இருந்தும் அவளை சந்தேகிக்கவும் முடியவில்லை. ஒதுக்கவும் முடியாது ஒண்டவும் முடியாது தடுமாறினான்.

  அவன் முக வாடலை கண்டவள், “என்னாச்சு என் கண்ணனுக்கு? “ என்று கொஞ்சியவாறு அவன் முகவாயை நிமிர்த்த, தீ சுட்டார் போல அவள் கையை தட்டி விட்டான் ரகு.

  “கண்ணா…. கடிதத்தில் ராஜாவை அவள் விளித்திருந்த முறை… அவனுள் பயத்தை உண்டு பண்ணியது “

  “கடவுளே எது எல்லாம் பொய்யாக வேண்டும் “ என்று அவன் உள்ளம் பரிதவித்தது.

  தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன், மிரண்டு விலகி நின்றவள் அருகே வந்தான்.

  “சாரி மா… கொஞ்சம் டென்ஷன்… ஒரு காபி கிடைக்குமா? “ என்று அன்பாக வினவ,

  முகம் மலர உள்ளே ஓடினாள் அவள்.

  சில நிமிடங்களில் எல்லாம் அவனிடம் வந்தவள் காபியை அவன் எதிரே வைத்தாள்.

  அதை ஒதுக்கி, அவள் கைகளை பற்றி சாப்பாடு மேஜையில் தன் அருகே அமர்த்தியவன்… சில நேரம் மௌனம் காத்தான்.

  “என்னங்க “ என்றவள் தொடங்க,

  சிந்தனை கலைத்தவன் “நிஷி எனக்கொரு ஹெல்ப்… பண்ணுவியா? “ என்று கேட்க…

  காலையில் இருந்து அழைத்த பாப்பு போய் நிஷி வந்துவிட்டதை ஒரு நெருடலோடு கவனித்தவள், அதை ஒதுக்கி

  “சொல்லுங்க “ என்றாள் குரலில் எதையும் காட்டாமல்.

  “நான் சொல்ல சொல்ல எனக்கு ஒரு கடிதம் எழுதி தரமுடியுமா? “
  என்று அவளை ஊடுருவி அவன் வினவ,


  மகிழ்ச்சியாக தலை அசைத்தாள் நிஷி.

  யோசனையோடு அவளையே நோக்கியவாறு அவன் நிஷி எழுதிய கடித்ததையே பெயர் மாற்றி சொல்ல…

  முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதை உன்னிப்பாக கவனித்து எழுதி முடித்தாள் அவள்.

  “இதோ பாருங்க… சரியா இருக்கானு? “

  காகிதத்தை வாங்கி பார்த்தவன் மனம் தளர்ந்தது. அக்கடிதத்தில் உள்ள அதே கையெழுத்து !!!

  இருந்தும் மீண்டும் ஒரு முயற்சியாக,இராவணன் வசம் இருந்த கடிதத்தை அவளிடம் தந்து வாசிக்க சொன்னான் ரகு.
   
  Rabina likes this.
 2. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  857
  Likes Received:
  538
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice. ravanan kudutha lettet unmaya.
   
  Chandrika krishnan likes this.
 3. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  177
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  Nice updates
   
  Chandrika krishnan likes this.
 4. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Hmmm.. nxt epila theriyum pa
   
 5. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Tq pa
   
 6. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female
  ராவணாம்பிகை -17

  ரகு கையில் தந்த கடிதத்தை வாங்கிய அவன் மனைவியும், எவ்வித தொய்வும் இன்றி படித்துமுடிக்க, ரகு யோசனையில் இறங்கினான்.

  “என்ன? “ என்பதுபோல அவனை பார்த்தவள், மனதில் ஏதோ நெருட, நிதானமாக கடிதத்தின் வரிகளில் மனதை செலுத்தினாள்.

  அதன் சாரஹம்சம் புரிபட, அமைதியே உருவாய் இருக்கும் நிஷியின் உள்ளே தகித்தது.

  இதை எதையும் கவனிக்காது நிர்சிந்தையாக தன்னுள்ளேயே போராடி கொண்டிருந்த ரகுவை, அனல் பறக்கும் பார்வை கொண்டு விழிமொழி பேச அவள் முற்பட, அவனோ தலை தாழ்த்தி தரையோடு பார்வையை பதித்திருந்தான்.

  “ரகுராமன் “ என்ற அவளது தீடிர் அழைப்பில், அதிர்ந்து நிமிர்ந்தவன், அவள் குரலில் உள்ளது கோவமா ஆங்காரமா அல்லது என்ன உணர்வு என்பது புரிபடாமல் தடுமாற, அவளோ தீக்கோலமாய் நின்றாள்.

  இத்தனை சத்தமாக கணீர் என்று அவள் பேசி, அவன் பார்ப்பது இதுவே முதல் தடவை.

  அவளது இந்த சீற்றமும் கூட முதல் தடவை தான்.

  பெண்மையின் தன்மையை சீண்டியாதால் சிலிர்த்த சீற்றம் அது !
  கொண்டவனின் சந்தேகம் கொன்ற மனதின் கொதிப்பு அது !

  ஊரார் தூற்றிய போதும்… கட்டியவன் காதலில் கட்டுண்டு கண்ணியவள் கன்னிமையை யாருக்கு காணிக்கை ஆக்கினாளோ.. அவனே எரிக்கனலாக சந்தேக தீயில் சிக்குண்டதால் வெக்குண்ட சீதையின் சினம் அது..!!

  அந்த உணர்வு புரிந்துகொள்ள கூடியது அல்ல..!!
  உணர்ந்துகொள்ள கூடியது !!

  கோடான கோடி வருடம் உருண்டாலும், நிலவே கரைந்தாலும், சில ஆண்களின் சந்தேகத்தீயில் கருகும் மென்மனதின் குமுறல் அது!!

  இதிகாச ரகுராமனை வஞ்சித்த விதி… கலிகால ரகுராமனை மட்டும் விட்டு விடுமா என்ன??
  விளையாட்டை தொடங்கியது.


  “நிஷி “ என்று ரகு அவள் கையை பற்ற முற்பட, அதை உதறினாள் அவள்.

  “இதை நீங்க நம்பறீங்களா? “ என்று தீனமாக ஒலித்தது அவள் குரல்.

  “இல்லை “ என்று தலையசைத்தான் அவன்.

  “அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? சந்தேகம்…. அப்படி தானே? “

  ரகுவால் பதில் சொல்ல முடியவில்லை.

  அவன் மௌனமே அவனை காட்டிக்கொடுத்துவிட்டது.

  “ இந்த கடிதத்தை யார் தந்தா? “

  “ராவணன்… “

  “அவன் என் வாழ்க்கைய அழுச்ச பாவி… இது அதுல சேர்த்தி “

  “ஆனா இந்த கையெழுத்து? “ அப்போதும் நம்பாமல் ஒலித்த அவன் குரலில் அவளுக்கு சலிப்பு தட்டியது.

  “நான் இதை எழுதிருப்பேனு நீங்க நம்பறீங்களா? யோசிச்சு சொல்லுங்க “ என்றால் நிமிர்வோடு.

  அந்த நிமிர்வு அவனை சிந்திக்க தூண்டியது.
  அவளது தற்போதைய கோவம்.. மிடுக்கு அனைத்தையும் ஆராய்ந்தவன் “இல்ல நிஷி “ என்று உறுதியாக கூறிய போதும் அவன் கண்களில் அலைப்புறுதல் இருந்தது.


  அதை கண்டுகொண்டாள் நிஷி.

  பதில் பேசாது கடிதத்தை மேஜை மீது வைத்தாள்.

  அங்கே ரகு தீக்ஷவோடு நிற்கும் புகைப்படம் இருந்தது.

  அதை அவள் கையில் எடுக்க, ரகுவோ “அது என் தோழி தீக்ஷ “ என்றான் வெற்று குரலில்.

  அப்படத்தை சிலநொடிகள் ஆராய்ந்தவள் “பொய் “ என்றால் ஒற்றை சொல்லாக…

  “எது பொய்? “ என்றான் ரகு சினம் துளிர்க்க..

  “இவ தோழி இல்ல உங்க காதலி “ என்றால் அவள் நிச்சயமாக…

  “அது எப்படி உனக்கு தெரியும்… நீ நேர்ல பாத்தியா? “ என்று அவன் பாய…
  அவள் வெறுமையாக சிரித்தாள்.


  முதலில் பொருள்புரியாது மலைத்தவன், அடுத்த கணமே அவள் சிரிப்பின் இலக்கணம் புரிந்தவனாய் வாடினான்.

  “அவனுக்கு எப்படி அவள் சொன்ன பழியில் கோவம் வந்ததோ… அப்படி தானே அவளுக்கும்…. அவன் சொன்னது போல அவன் மட்டும் என்ன அந்த கடிதத்தை அவள் எழுதியதை நேரில் கண்டானா? பின் எப்படி சந்தேகம் கொள்ளலாம்? அதுவும் ஒரு மனசாட்சியற்ற மிருகத்தின் சதியை அவன் எப்படி ஏற்றான்? “ சிந்தித்த ரகுவிற்கு, இங்கிருந்து கிளம்பியது முதலே ராவணன் தன்னை குழப்ப முயற்சிதானோ என்ற சந்தேகம் தோன்றியது.

  அந்த குழப்பம் விளைவித்த தடுமாற்றத்தில் தானே அவன் ஆராயாமல் நடந்து கொண்டது.

  ரகுவின் மனம் இலகிவிட்டது. அவசரப்பட்டு நிஷியை சோதித்த தன்னை எண்ணி மனம் நொந்தான்.

  அவளிடம் மன்னிப்பு கோரக்கூட அவனுக்கு தகுதி இல்லாதது போல் தோன்றியது.

  மனம் உருக, மனம் கொய்தவளின் கோவத்தை தணிக்க, அவன் ஒரு அடி எடுத்துவைக்கும் போது, வெளியே ‘காலிங் பெல்லை ‘ யாரோ விடாமல் அழுத்தினர்.

  அதில் எரிச்சல் உற்றவன், சென்று கதவை திறக்க அங்கே நின்றான் சஞ்சீவ்.

  “என்னடா ஆச்சு? “ என்றவனிடம் ரகு பதற்றமாக வினவ,

  “மாப்பி...உன்ன பாக்க தாண்டா வந்தேன்… என்ன செய்யறீங்களோனு தவிப்புல… ஆனா பக்கத்துல வரப்ப தான் டா ஊர்ல இருந்து போன் வந்துச்சு… “ என்று நிறுத்தி அவன் மூச்சுவாங்க…

  “என்னனு சொல்லி தொலைடா? “ என்றவனை உலுக்கினான் ரகு.

  “நிஷி… நிஷி மேல இருக்க கோவத்துல…. “

  “கோவத்துல??? “

  “உங்க அப்பாவும் தம்பியும் அவ தங்கைய பிடிச்சுட்டு வந்துட்டாங்களாம் டா… அவ அப்பா அம்மா ஊற விட்டு போய்ட்டாங்களாம்… அந்த பொண்ண உன் தம்பி ராஜா தரதரனு இழுத்துட்டு போனானாம் டா… “ என்றவன் சொல்லி முடிக்க,

  “ஐயோ தான்யா “ என்று அலறினாள் நிஷி.

  அடுத்த பத்தாவது நிமிடம் மூவரும், பதட்டத்தோடு அக்குடியிருப்பில் இருந்து வெளியேறினர்.

  சற்று தள்ளி இருந்த மரத்தடியில் கீழ் காரினுள் அமர்ந்திருந்த ராவணனின் முகத்தில் வெற்றி புன்னகை தவழ்ந்தது.

  தவழ தானே செய்யும்?
  அவன் பழித்தீர இன்னும் ஒருபடி தானே உள்ளது !!!
   
  Rabina likes this.
 7. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  857
  Likes Received:
  538
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud
   
  Chandrika krishnan likes this.
 8. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  177
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  Twist mela twist varuthu . Ravananoda nokkam enna ? Yara hurt panna ivlo seiran
   
  Chandrika krishnan likes this.
 9. Chandrika krishnan

  Chandrika krishnan Well-Known Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  268
  Likes Received:
  266
  Trophy Points:
  63
  Gender:
  Female

  ராவணாம்பிகை -18
  நிஷி தவிப்போடு பேருந்தில் அமர்ந்திருக்க, ரகுவோ தீவிர சிந்தனையிலும் சஞ்ஜீவோ கலக்கத்தோடும் இருந்தான்.
  அவர்கள் பேருந்தில் ஏறும் வரை பார்த்துக்கொண்டு நின்ற இராவணன், தனது கைபேசியில் ராஜாராமனை தொடர்பு கொண்டான்.


  “சொல்லுங்க சார் “

  “அவங்க கிளம்பியாச்சு… எல்லாம் தயார் தானே? “

  “ஆமா சார்…. நீங்க???? “

  “நான் இனி தேவை இல்ல… என்னோட கையாள் ஒருத்தர் மட்டும் அங்க இருப்பாங்க… “

  “சரிங்க சார்… “

  அத்தோடு அவன் தொடர்பை துண்டித்தவன், வேறொருவனை தொடர்பு கொண்டான்.

  “அண்ணா… “

  “தம்பி… அங்க எல்லாமே நம்ம திட்டப்படி நடக்குது… அந்த ராஜாவும் நம்ம சொல்படி ஆடறான்… இதுதான் சரியான சமயம்… நீ என்ன செய்யணும்னு உனக்கு தெரியும்ல… “

  “கண்டிப்பா அண்ணா… காரியத்தை முடுச்சதும் உங்கள பாக்க வரேன்… “

  “சரியா இருபது நிமிஷம்… அதுக்குள்ள முடுச்சுரு… தகவல் சொல்றபடி போலீஸ் வரதுக்குள்ள நீ தப்பிக்கணும்… இதுல ஏதாச்சும் ஒன்னு தவறுனா கூடா நம்ம இத்தன வருஷ காத்திருப்புக்கு பலன் இல்லாம போயிரும் “

  “புரியுது அண்ணா.. தவறாது.. நம்புங்க… “
  அந்த தொடர்பையும் துண்டித்தவன்… அவனது இல்லத்திற்கு சென்றான்.


  விளக்கு போடாது திரைகள் மூடி இருட்டித்து கிடந்த அவனது அறையில் சென்று படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை.

  பசித்த புலிபோல குறுக்கும் நெடுக்கும் நடந்தவன், அதற்க்கு மேல் பொறுமை இழந்தவனாக கைப்பெட்டியோடு கிளம்பி விட்டான்.

  பழிவெறியில் தூக்கமின்றி அவன் தவித்த நாட்களும் இரவும் முடிவுக்கு வரும் நேரம்.

  கையை கட்டிக்கொண்டு இங்கே அமர அவனுக்கு விருப்பமில்லை.

  அவன் பழி நிறைவேறுவதை அவன் கண்குளிர காண பேராவல் கொண்டான்.

  அதன் காரணமாக பூஞ்சோலையை நோக்கி அவன் கார் பறந்துகொண்டிருந்தது.
  --------------------------------------------------------------------


  தஞ்சாவூரில் இறங்கி வாடகை கார் பிடித்து ரகு நிஷி சஞ்சீவ் பூஞ்சோலையை அடையும் அதேநேரம் ராவணன் அங்கே இருந்தான்.

  காலம் தாழ்த்தாமல், நிஷியை அழைத்துக்கொண்டு கோவமாக ரகு அவன் இல்லத்தை நோக்கி செல்வதை, ஊரே வேடிக்கைபார்த்தது.

  பின்னே பார்க்காதா என்ன?
  நேற்று அத்தனை பேசிவிட்டு இன்றே ஊருக்குள் வந்தவனை பரிகாசிக்காமல் இருக்கத்தான் அவர்களால் முடியுமா?


  அவன் வீட்டின் முன் கூட்டமாக இருந்தது.

  அவன் பாதி வழி வரும்போதே, ராஜாராம் அவனை தடுத்தான்.

  தன் நெஞ்சில் கைவைத்து தன்னை தடுத்த தமையனை வெட்டும் பார்வை பார்த்தான் ரகு.
  “நேத்து அவ்ளோ பேசுன… இன்னிக்கு நாதி அத்து போய் திரும்பி வர உனக்கு வெக்கமா இல்ல? “ என்றவன் ரகுவை தூற்ற,


  “இதோ பார்.. உன்கூட சண்டைபோட நாங்க வரல.. என்மேல கோவம்னா என்மேல மட்டும் காட்டு… எதுக்கு என் மனைவியோட தங்கையை பிடிச்சு வந்து கொடும படுத்துற? “ என்று ரகு நிதானமாகவே வினவ, அவர்களை சுற்றி நின்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

  “என்னடா நடிக்கற? “ என்றபடி கூட்டத்தை பிளந்துக்கொண்டு சக்கர நாற்காலியில் வந்தார் கனகு.

  அவரை தள்ளிக்கொண்டு வந்தான் ராவணனால் தம்பி என்று கைபேசியில் அழைக்கப்பட்டவன்.
  கனகத்தின் நாற்காலி கையில் இரு அருவாள் இருந்தன.


  அதை ஜாடையாக அந்த புதியவன் ராஜாவிற்கு காட்ட, முகம் விகசிக்க அவனும் பிறர் கவனத்தை ஈர்க்காத முறையில் தலையசைத்தான்.

  ரகுவோ நிஷியோ மற்றவர்களோ அப்போது கனகத்தோடு ரகு தர்க்கம் செய்வதை கவனித்துக்கொண்டிருந்தனர்.

  அதே சமயம் மற்றொரு புதியவன் கனகத்தின் அருகே வந்து நிற்க, அந்த தம்பியானவன் ரகு அருகே வந்து நின்றுக்கொண்டான்.

  ரகுவை சொத்துக்காக தான் வந்ததாக அவன் தந்தையும் தமையனும் சொல்ல, ஊராரும் அதை நம்பினார்கள்.

  ஏன்னெனில், சஞ்சீவ் சொன்னது போல தன்யாவை யாரும் இழுத்துவரவில்லை.

  அது நிஷிரகுவை அவ்வில்லத்திற்கு அழைத்துவர, ராவணன் போட்ட தூண்டில்.

  உண்மை தெரியாத சஞ்சீவும் பாவம் அவனை அறியாமலேயே நண்பனின் துரோகியாக நின்றான்.

  நிலவரத்தை புரிந்துகொண்ட ரகு, “இது ராவணனின் சூழ்ச்சியோ? “ என்று எண்ணி சுதாரிக்கும் முன்னே, வாக்குவாதம் முற்றியதில், நிஷியை காரணம் ஆக்கி அவளை அடிக்க பாய்ந்தான் ராஜா.

  அதில் சினம் மிக, ரகு அவனை தாக்க கைகலப்பு ஏற்பட்டது.

  ராஜா இதற்காகத்தானே காத்திருந்தான்.
  தந்தையின் அருகே இருந்த அருவாளை உருவி அவன் ரகுவை வெட்ட பாய, அதே நேரம் சினம் மிகுதியில் துள்ளிய ரகுவின் கைகளில் அருவாளை திணித்திருந்தான் அந்த தம்பி.


  கூட்டத்தில் யார் அருகில் என்று கூட புரியாது, ரகு விபரீதம் உணர்ந்து விலகும் முன்பே அங்கே களப்பலி நடந்தேறி இருந்தது.

  ரகுவின் கை அருவாளில் ரத்தம் சொட்ட, தரையில் ராஜாவும் அவன் தந்தை கனகமும் துடித்துக்கொண்டிருந்தனர்.

  நிசப்தம் அங்கே நிலவ, கோர காட்சியை கண்டு நிஷி மயங்கி சரிய, ராஜா கனகத்தின் துடிப்பு அடங்கி விட்டிருந்தது.

  நொடிப்பொழுதில் நடந்துவிட்ட இந்த விபத்தின் தாக்கத்தில் ரகு அரண்டு விழிக்க, கொலை பழி ரகுவின் மீது விழுந்தது.

  கூட்டத்தை பிளந்து கொண்டு போலீசுக்கு தகவல் சொல்ல அந்த தம்பி ஓடினான்.

  அடுத்த இருபதாவது நிமிடம், ரகுவின் கைகளில் விலங்கு பூட்ட பட்டது.

  நிஷியை மயக்கத்தின்நின்று எழுப்ப யாரும் இல்லை.

  நடந்தவற்றை ரகு வீட்டின் மாடியில் இருந்து கண்டுகளித்த ராவணனின் மனதில் சொல்லொனாத நிம்மதி குடிகொண்டது. கூடவே திருப்தியும்.

  ரகுவை அழைத்துச்சென்ற பின், அவன் பார்வை மயங்கி கிடந்த நிஷி மீது விழுந்தது.

  அவனால் அதை சகிக்க முடியவில்லை. மனம் பிசைந்தது. அவளின் நிலை அவனை தாக்கியது.
  கிளம்பி சென்னைக்கு சென்றுவிட்டான் ராவணன்.


  அன்றிரவு அவனுக்கு நிம்மதியான உறக்கம்.
  அடுத்தநாள் காலை நிஷி அவன் முன் நிறுத்தப்பட்டாள். அவளை அவனது இருப்பிடத்திற்கு கொணர்ந்த ராவணனின் முகம் கருத்திருந்தது.


  அவள் ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன்பே, அவன் கை அசைவில் இரு பெண்கள் அவளை அழைத்துசென்றுவிட்டனர்.

  அதன்பின், அவன் எண்ணியது போலவே ரகுவிற்கு ஆயுள் தண்டனை கிட்டியது.

  செய்யாத குற்றத்திற்காக ரகு பதினான்கு வருடம் சிறைவாசம் செய்ய வேண்டுமாம்…
  என்ன தவறென்று கூட அறியாத பாவத்திற்காக நிஷி கணவனை பிரிய வேண்டுமாம்….  இது தான் அவர்கள் தலையெழுத்தா? அல்லது ராவணனின் கைங்கர்யஎழுத்தா??
   
  Tamilvanitha and Rabina like this.
 10. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  857
  Likes Received:
  538
  Trophy Points:
  93
  Gender:
  Female
  apdi ena ragu panan intha thandana avanuku...
   

Share This Page