வானவில் வாழ்க்கை ! vanavil vaalkai ! by chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, Mar 4, 2019.

  1. Chandrika krishnan

    Chandrika krishnan Active Member

    Joined:
    Jan 22, 2019
    Messages:
    173
    Likes Received:
    174
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Tq pa
     
  2. kannamma 20

    kannamma 20 Well-Known Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    475
    Likes Received:
    353
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Nice update. Kuzhali Guna and mathikkaga romba yosichu ovvoru visayamum seira . Super
     
  3. Chandrika krishnan

    Chandrika krishnan Active Member

    Joined:
    Jan 22, 2019
    Messages:
    173
    Likes Received:
    174
    Trophy Points:
    43
    Gender:
    Female
    வானவில்வாழ்க்கை -20

    அன்று ஊட்டியில் குணாவையும் மதியையும் தம்பதிகளாக ,அதுவும் சந்தோசத்தில் மிதக்கும் அழகான ஜோடியாக அவன் பார்க்கவும்,அவனுள்ளே தீ ஒன்று பற்றி எரிய தொடங்கியது.

    கொஞ்ச நேரம் அவர்களேயே பின்தொடர்ந்தவனுக்கு அவர்களின், கை கோர்த்து தோள் சாய்ந்து நடக்கும் அந்யோனியம், வெறுப்போடு பொறாமையையும் தூண்டியது.

    தனக்கு கிடைக்காத மதியும், தன்னை பந்தாடிய குணாவும், ஊரை விட்டு சென்றுவிட்டார்கள் என்றதும் முதலில் அவனுக்கு மகிழ்ச்சி தான். "இருவருமே உருப்படியாக எதுவும் படித்து முடிக்கவும் இல்லை, அது போக இப்போது அவனது கைங்கரியதால்...ஊரை விட்டும் ஓட்டியாகிவிட்டது . ..இனி இருவரும் சோத்துக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும் " என்று அவன் மனக்கோட்டை கட்டி , அதில் சந்தோசமாக லயித்து கொண்டிருக்க, இங்கே குணாவும் மதியும் ,அவன் நினைத்தது போல கஷ்டப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தது, அவனது கெட்ட புத்தியை இன்னமும் தூண்டி விட்டது.

    அவன் கருணாகரன். "கருணாகரன்" என்று பெயர் வைத்ததிற்கு பதிலாக"கறு- நாக -ரன் " என்று வைத்திருந்தால் அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

    குணாவையும் மதியையும் பின்தொடர்ந்து அவர்களை பற்றிய விவரம் அனைத்தையும் சேகரித்தவன் ,தன் மதிப்பிற்குறிய முதலாளிக்கு தொடர்பு கொண்டு, தான் கண்டறிந்த அனைத்து விபரங்களையும் கூறினான்.

    பிறகு இருவரும் சேர்ந்து சில திட்டங்களை வகுக்க, அதன் முதல் படியாக அன்று குணா வெளியே சென்ற நேரத்தில், மதியின் வீட்டுக்குள் நுழைந்தான் அந்த கேடுகெட்டவன்.

    அவனை அங்கே எதிர்பாராத மதிக்கு, முதலில் வியர்க்க தொடங்கியது.ஆனால் பிறகோ, இந்த ஒரு மாதமாக தனித்து இருந்து பழகி கொண்டவளுக்கு, கூடவே கணவன் கற்று தந்த தன்னம்பிக்கையும் சில தற்காப்புக்களும் துணை நிற்க, அவனை ஒரு நிமிர்வோடவே எதிர்கொண்டால் மதி.

    அவளது இந்த நிமிர்வை அவன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் தான் ஏற்று கொண்ட வேலையின் காரணமாக அவனுள் இருந்த வெறுப்புகளையும் வஞ்சங்களையும் மூட்டை கட்டி ஓரமாக வைத்தவன், பேச தொடங்கினான்.

    "மதி, எல்லாமே என் தப்பு தான் மா, புத்தி கெட்டு போய் இந்த நாய் செஞ்ச தப்புக்கு நீங்க எல்லாரும் தண்டனை அனுபவிக்கறீங்களே மா?" என்று அழுகுரலில் கூறியவன் தன்னையே அறைந்து கொண்டு மேலும் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினான்.

    அவனது மூர்க்க பேச்சை எதிர்பார்த்து நின்ற மதிக்கு அவனது கண்ணீரை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை?

    அவளை சூறையாட இருந்த கயவன் என்று அறிந்த போதும், மதியின் பூஞ்சை உள்ளம், அவனது நீலி கண்ணீரை கண்டு மனமிரங்க தான் செய்தது.

    "விடுங்கணா யாருமே, வேணும்னு அப்படி பண்றது இல்லை..சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மள சில நேரம் தப்பு செய்ய தூண்டுறது வளமை தானே" என்று மதியும் தன் திருவாயை திறந்து கூறி விட, அவனுக்கு துள்ளி குதிக்க வேண்டும் போல இருந்தது.

    "தான் நினைத்து வந்த காரியம், இவ்வளவு விரைவில் வெற்றி பெரும்" என்று நினைக்காத அவனுக்கு, மதியை பார்த்து வாய் விட்டு சிரித்து பரிகாசம் செய்ய வேண்டும் போல இருந்தது.

    தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாதவன், "ஐயோ, எப்படிப்பட்ட பாதகன் நான்.. என்ன கூட மனசார மன்னிக்கறியே மா... ஒன்ன மாறி ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கைய இப்படி வீணாகிட்டனே... படிக்கற புள்ள இப்போ என்னால கஷ்டப்படுறியே மா... ஊர்ல உங்க அம்மையும் அப்பாரும் அன்ன ஆகாரம் இல்லாம தினந்தினம் உன்ன நினச்சு அழுதுட்டு இருக்காங்களே மா...அந்த பையன் குணா..எவ்ளோ சொத்துக்கு சொந்தக்காரன், என்னால அவன் இப்போ வேலைக்காரனாட்டம் தினக்கூலிக்கு போறானே" என்று அவர்களுக்காக வருந்துபவன் போலவே, தெளிவாக இருந்த மதியின் உள்ளதை குழப்பி விட்டான் கருணாகரன்.

    அவன் கூறியது மதியை வருத்தியது. தான் இருந்த போது, தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத அவளது பெற்றோர், இன்று அவளுக்காக உருகுவதை கேட்கவும் மதிக்கு ஆனந்த கண்ணீரே வந்தது. உடனே அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டும் போன்ற பரபரப்பு அவளை தொற்றிக்கொண்டது.ஆனால் குணா பற்றி அவன் கூறுவது உண்மை தானே. எவ்வளவோ செழிப்பாக வாழ வேண்டிய தன் கணவன், அவளை காப்பாற்றியது தவிர என்ன குற்றம் செய்து விட்டான் ? நினைக்கவே மதிக்கு அழுகையாக வந்தது.

    இப்படி இருவேறு துருவங்களின் உணர்ச்சி கலவையில் மதி மூழ்கி இருக்க, குணா வரும் ஓசையை அவள் கவனிக்க வில்லை.

    அவர்கள் இருந்த வீட்டிற்கு பின்பக்கமாக ஒரு வழியும் இருந்தது. குணா வரும் ஓசையை கண்டுகொண்ட கருணாகரன், "மதி, பின்னாடி வரிசை வீட்டுல என் கூட்டாளி ஒருத்தன் இருக்கான் மா ,இந்த வீட்டோட பொரவாசல் வழியா போனா பின்னாடி இருக்க லைன் வீட்டுக்கு போகலாம்ல ?" என்றவன் அப்பாவியாக கேட்க, அவனின் சூட்சமம் அறியாத மதியும், "யார் அந்த கூட்டாளி,அதும் தன் வீட்டிற்கு பின்னால் ?" என்று கூட விசாரிக்காமல், அவனை பின்பக்க வழியாக வழியனுப்பினால்.

    சரியாக குணா முன் வாசல் வழியாக வீட்டினுள் வர, அவன் பின்பக்கமாக வெளியே சென்றான்.அதுவும் அவன் முகத்தை குணா நன்கு பார்க்குமாறு.
     
  4. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    661
    Likes Received:
    414
    Trophy Points:
    63
    Gender:
    Female
    karunagaran than ivanga prachanaiku karanama?
     
    Chandrika krishnan likes this.
  5. Thamaraikannan

    Thamaraikannan Member

    Joined:
    Feb 8, 2019
    Messages:
    97
    Likes Received:
    55
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Occupation:
    Homemaker
    Location:
    Tamilnadu
  6. Chandrika krishnan

    Chandrika krishnan Active Member

    Joined:
    Jan 22, 2019
    Messages:
    173
    Likes Received:
    174
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Tq sis
     
  7. kannamma 20

    kannamma 20 Well-Known Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    475
    Likes Received:
    353
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Nice story ..karunakaran seitha sathi Guna mathi pirichatha?
     
    Chandrika krishnan likes this.
  8. Chandrika krishnan

    Chandrika krishnan Active Member

    Joined:
    Jan 22, 2019
    Messages:
    173
    Likes Received:
    174
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Adhuvum taan pa
     
  9. Tamilvanitha

    Tamilvanitha Well-Known Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    411
    Likes Received:
    285
    Trophy Points:
    63
    Gender:
    Female
  10. Chandrika krishnan

    Chandrika krishnan Active Member

    Joined:
    Jan 22, 2019
    Messages:
    173
    Likes Received:
    174
    Trophy Points:
    43
    Gender:
    Female
    வானவில்வாழ்க்கை -21

    உள்ளே நுழைந்த குணா,ஒரு நிமிடம் தடுமாறினான் ."உண்மையிலேயே தான் கண்டது அந்த வஞ்சகனை தானா ?அது அவன் என்றால் ,மதி எப்படி அவனை உள்ளே அனுமதித்தாள்?" என்ற குழப்பத்தோடு அவன் மதியிடம் வர ,அப்பொழுது தான் கணவனின் வரவை கண்ட மதி, வேகமாக அவனை நெருங்கி அவனை அணைத்துக்கொண்டாள் .

    தன் மார்பில் தஞ்சம் புகுந்தவளை அவனும் அணைத்துக்கொண்டு ,அவளது அணைப்பில் லயிக்க தொடங்கினான்.

    ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம், மார்பில் ஈரத்தை உணர்ந்தவன் பதற்றத்தோடு அவளை விலக்கி ,மதியின் முகம் பார்க்க ,அங்கே கண்ணீர் கோடாக வழிய ,மதி விசும்பினாள்.

    "மதிம்மா, என்னாச்சுடா ?" என்ற அவனது ஒற்றை கேள்வியில், மதியும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பித்தாள்.

    அவள் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்ட குணாவிற்கு,அவள் அளவு அவனை நம்ப தோன்றவில்லை.

    "பாம்பாய் அன்று படமெடுத்த பகைவன்,அடிபட்ட நாகமாய் இன்று பழி தீர்க்க பதுங்குகிறானோ?" என்றே குணாவிற்கு தோன்றியது.

    "மதி, இங்க பாருமா..எனக்கு என்னவோ அவன் மறுபடியும் உங்கிட்ட வாலாட்ட தான் இந்த மாரி பொய் நாடகம் ஆடுறானோன்னு தோணுதுமா ...அவன் இயல்புலேயே நல்லவனோ கெட்டவனோ?அது நமக்கு முக்கியம் இல்லடா, இப்போ நீயும் நானும் சந்தோசமா இருக்கோம் ..அத கண்டதையும் யோசிச்சு கெடுத்துக்க வேண்டாம், நான் ஏன் கஷ்டப்படறேன்னு நீ நெனைக்கற.? பணம் காசு இருந்தா தான் சந்தோசமா இருக்க முடியுமா? என் இத்தனை வருஷ வாழ்க்கைல, என் அம்மா என்னைவிட்டு போனதுக்கு அப்பறமா, நா என் மதிம்மா கூட இருக்கறப்ப தான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்...சோ என் அம்மா எப்பவும் எதை நெனச்சும் பீல் பண்ண கூடாது..புரியுதா?" என்றவளை சமாதான படுத்தினான்.

    அவன் கூறியதை முழுதாக மதியும் ஏற்று கொண்டாள். அவன் அருகாமையில் அவள் துன்பங்கள் அனைத்தையும் மறந்து துயில் கொண்ட இரவுகள் பல. குணாவோ, தன் தாயே தன்னிடம் தஞ்சம் அடைந்தது போல எண்ணி, தாரத்தை தங்கமாய் தாங்கின நாட்கள் பல.

    அன்று காலை, குணா வேலைக்கு கெளம்பி கொண்டிருக்க, மதி அவனுக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தாள்.

    தீடீரென உலகமே தட்டாமாலை சுற்ற, அப்படியே மயங்கி தரையில் சரிந்தாள் மதி.

    அவள் மயங்கியதை கண்ட குணாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பின்பே புத்தி வேலைசெய்ய, வேகமாக ஓடி தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

    சற்றே மயக்கம் தெளிந்து அவள் கண்விழிக்க, கண்களில் கண்ணீரோடு அவளை கட்டிக்கொண்டான் குணா.

    அவள் சொல்ல சொல்ல கேட்காமல், அவளை அருகில் உள்ள நாட்டுமருத்துவச்சியிடம் கைத்தாங்கலாக அவன் தூக்கி செல்ல, மதிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

    அவளை சோதித்த அந்த மருத்துவச்சியும், அவள் உண்டாகி இருப்பதாக கூற, ஆனந்தத்தில் அங்கேயே குணாவை தழுவிக்கொண்டாள் மதி.

    குணாவின் முகம் ஒருநிமிடம்,மகிழ்ச்சியில் மலர்ந்தாலும், அதன் பின் சிந்தனையில் மூழ்கியது.

    "தன்னளவிற்கு கணவன் இந்த செய்தியில் மகிழ வில்லை "என்று உணர்ந்த மதிக்கு முகமே வாடி விட்டது .

    மௌனமாகவே வீட்டிற்கு திரும்பிய இருவரும், வீட்டிற்கு வந்த பின்பும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    "என்னாச்சு பிரசான்னவுக்கு ?குழந்தை உண்டானதுல அவருக்கு ஏன் சந்தோசமே இல்லை?அமைதியாவே இருக்காரே ?இது பத்தி அவர்கிட்ட கேட்கலாமா வேண்டாமா ?" என்ற குழப்பத்தில் மதி இருக்க,

    குணவோ" மதி,ஏற்கனவே சின்ன பொண்ணு,அவ இன்னும் மேஜர் கூட ஆகல?ரெண்டு.. பேரா அவங்க இருக்கறப்பவே வாய்க்கும் வயிற்றுக்கும் சரியா இருக்கே? இந்த நெலமைல குழந்தை முக்கியம் தானா? மதியே இன்னும் நல்லது கெட்டது சரியா தெரியாம கொழந்த மாறி தான் இருக்கா? இப்போ குழந்தை பெத்துக்கறது கண்டிப்பா அவ உடம்புக்கும் நல்லது இல்ல, மனசுக்கும் நல்லது இல்ல..ஏற்கனவே அந்த கருணாகரன் வந்துட்டு போனதுல இருந்து ,அவ பிறந்த வீட்ட நெனச்சு ஏங்கரா ....இதுல ப்ரஸவம்ல ஆனா கண்டிப்பா பெரியவங்க துணைக்காக மனசு ஏங்குமே" என்றெல்லாம் பலவாறாக சிந்தித்த குணா, இதை எப்படி மதியின் மனம் புண்படாதவகையில் எடுத்து கூறுவது என்று சிந்தித்தான்.
     
    kavitha11 and Rabina like this.

Share This Page