வானவில் வாழ்க்கை ! vanavil vaalkai ! by chandrika krishnan

Discussion in 'Serial Stories' started by Chandrika krishnan, Mar 4, 2019.

 1. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன் தன் எண்ணத்தை கூற, அவனது அக்கறையிலும் அன்பிலும் மதி நெகிழ்ந்தாலும், உண்டான வாரிசை அழிக்க அவள் சம்மதிக்கவில்லை.

  நீண்டநேர விவாதத்திற்கு பிறகு, அவளது ஆசைக்காக குணாவே இறுதியில் விட்டுகுடுத்தான்.

  "என்னமோ மதி, நீயாச்சு வாரிசாச்சு" என்றவன் அலுத்துக்கொள்ள, அவன் சம்மதித்த மகிழ்ச்சியில் "ஆஹா என் வாரிசையா வேணாம்னு சொல்றீங்க...அவன் வந்ததும் அவனை வெச்சு உங்கள என்ன பாடுபடுத்த போறேன்னு பாருங்க" என்று குதூகலமாக அவள் கூற, அவளது மகிழ்ச்சியில் லயித்த குணா, மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

  ஆனால் அவர்கள் அறியாத ஒன்று, மதியும் குணாவும் மருத்துவச்சியிடம் சென்று வீடு திரும்பிய வரை, அவர்களை கருணாகரன் பின்தொடர்ந்து.

  வீட்டினுள் அவர்கள் பேசியதை எல்லாம் ஒட்டுக்கேட்டவன், மீண்டும் தன் முதலாளியை தொடர்பு கொண்டான்.

  முதலில் போட்ட திட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்து,அடுத்த திட்டத்தை தயார் செய்தார்கள்.

  அதன் படி அடிக்கடி மதியின் வீட்டிற்கு, குணா இல்லாத சமயத்தில் அவன் விஜயம் செய்தான்.கொஞ்ச கொஞ்சமாக மதியின் உள்ளத்தில், அவளுக்காக தவிக்கும் பெற்றோர் பற்றியும், குணா படும் துன்பங்கள் பற்றியும் கூறி,அதற்கு தானே காரணம் என்று சொல்லி நீலி கண்ணீர் வடிக்கவும் அவன் தவறவில்லை.

  அதே நேரம் குணா கண்படவே, அவர்கள் வீட்டில் இருந்து பின்பக்கமாக
  செல்வதையும் அவன் மாற்றவில்லை.


  குணா அவனை பற்றி எச்சரித்த போதும், தனக்காக வாடும் தன் தாய் தந்தையை பற்றி அறிந்துக்கொள்ள துடித்த மதியின் மனம், கருணாகரனின் வரவை எதிர்க்கவில்லை.

  அவள் செய்த மற்றொரு தவறு,அவன் வருகை பற்றி குணாவிடம் கூறாமல் விடுத்தது.

  "எங்கே அவன் வருவது பற்றி கூறினால், தன் மேல் உள்ள அன்பினாலும் தான் வாடக்கூடாது என்ற அக்கறையினாலும், பிரசான்ன அவன் வரவை தடுத்துவிடுவானோ" என்ற பயமே அவளை தடுத்தது.

  அவனது வரவை பற்றி அறிந்த குணாவும்,"மதியாகவே தன்னிடம் இது பற்றி கூறுவாள்? நாமாக கேட்டாள் விசாரிப்பது போல தோன்றும்...அதை நினைத்து அவள் இன்னும் வருந்துவாள் " என்றெண்ணியே அது குறித்து அவளிடம் ஏதும் கேட்காமல் இருந்தான்.

  அன்று குணா வேளைக்கு சென்றுவிட, தனித்திருந்த மதியிடம் அலைய குலைய ஓடி வந்தான் கருணாகரன்.

  "அயோ மதிம்மா.... உனக்கு இப்படி ஒரு நிலையா? அப்பாருக்கு திடிர்னு நெஞ்சுவலி வந்துருச்சேமா..." என்றவன் கண்ணீர் வழிய கூற,

  "அயோ, அண்ணா என்ன சொல்றேங்க? எனக்கு ஒன்னும் புரியலையே?" என்று பதற்றமானாள் மதி.

  "ஆமாமா, இந்த வாரம் ஊருக்கு போனப்ப அவங்கள சந்திச்சு உன்ன பத்தி சொன்னேன்டா..உடனே உன்ன பாக்கணும்னு ரெண்டு பேரும் துடுச்சுக்கிட்டு கெளம்புனாங்க.. என்கூட தான் குன்னூர் வர வந்தாங்க...அங்கேயே அப்பாக்கு நெஞ்சுவலி வந்துருச்சு மா...பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல, அவங்கள சேத்துட்டு, உங்கிட்ட வெவரம் சொல்ல ஓடியாந்தேன்" என்று நெக்குருக கண்ணீர் குரலில் ஒப்பித்தான் கருணாகரன்.

  " கடவுளே, இந்த நேரம் பாத்து அவரு வேற வெளியே போய்ட்டாரேனா? நா அப்பாவையும் அம்மையையும் ஒடனே பாக்கணுமே" என்றவள் குழம்ப, அவனுக்கு குதூகலமாக இருந்தது.

  அவன் எதிர்பார்த்து வந்ததும், இத்தனை நாட்கலாய் காத்திருந்தும், இந்த நாளுக்காக தானே.

  சோகமாக முகத்தை வைத்து கொண்டவன்,"மதி ,இப்படி கவலை படுவேன்னு தெரிஞ்சு தான், நா வரவழியிலேயே குணாவை டி எஸ்டேட்ல பாத்து வெவரம் சொன்னேன். குணா உன்ன கூட்டிட்டு போக சொல்லுச்சுமா..அவரு வேல முடுஞ்சதும் அங்கேயே நேரா வந்துறேன்னு சொன்னாப்புல மா" என்று கூற, மதி யோசித்தாள்.
   
  kavitha11 and Rabina like this.
 2. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  730
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice update
   
  Chandrika krishnan likes this.
 3. dharshini

  dharshini Well-Known Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  376
  Likes Received:
  289
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice story
   
  Chandrika krishnan likes this.
 4. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Tq sis
   
 5. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Tq pa
   
 6. kavitha11

  kavitha11 Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  348
  Likes Received:
  228
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Omg. Kullanarithanam seiran karunakaran. But mathi yosikkama avana ivlo namburale
   
 7. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வானவில்வாழ்க்கை -22

  குணாவிற்கு கருணாகரனின் மீதுள்ள வெறுப்பு பற்றி மதிக்கு நன்றாகவே தெரியும் . அவனை தன் கணவன் நம்பவில்லை என்பதும் அவள் அறிந்ததே !

  "ஒருவேளை கருணாகரன் கூறுவது போல குணாவிடமே இது குறித்து, அவன் கூறியிருந்தால், கண்டிப்பாக குணாவின் பதில் இதுவாக இருக்காது!

  அப்படி எல்லாம் கருணாகரனை நம்பி அவனோடு அவளை அனுப்பி வைப்பவன் அவன் அல்ல! அவனாகவே நேரில் வந்து அவளை அழைத்து சொல்லுவான்.

  அவளை விட அவனுக்கு அவனது வேலை ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்லவே ?" என்று சரியாகவே சிந்தித்த மதிக்கு, தீடிரென தன் அருகில் நிற்பவனை நினைத்து வியர்க்க தொடங்கியது.

  "ஒருவேளை இதெல்லாம் இவனின் நாடகமாக இருக்குமோ ?

  பிரசன்னா சொன்னது போல, தனக்குள் இருக்கும் பாசத்தை தூண்டிவிட்டு, அதில் குளிர் காய நினைக்கிறானோ?

  உண்மையிலேயே இவன் மனம் திருந்தியவனாக இருந்தால், அவள் தனித்திருக்கும் வேளையில் மட்டுமே ஏன் எப்பொழுதும் அவளை சந்திக்க வேண்டும்?

  இதில் ஏதேனும் சூழ்ச்சி உள்ளதோ? ஐயோ பிரசன்னா சொன்னதை கேட்காமல் விட்டுவிட்டேனே ?

  இப்போது இவன் கூறுவதை உண்மை என்று நம்பி இவனோடு செல்வது ஆபத்தாக முடிந்துவிட்டால்? என்னசெய்வது ?" என்று காலம்கடந்து அவள் சிந்திக்க,

  அவள் எண்ணப்போக்கை அறியாதவன் "சீக்கிரம் கெளம்பு மதி, ஏற்கனவே தாமதம் ஆகுது" என்றவளை துரிதப்படுத்தினான்.

  "எதற்கு தாமதம்?" என்றவள் சிந்திக்க, அப்பொழுது தான் "இது அவள் கணவன் வீடு திரும்பும் நேரம் " என்பதையே உணர்ந்தாள்.

  அது மட்டும் அல்ல, இத்தனை நாட்களாக, சரியாக அவன் பின்பக்கமாய் வெளியேறுவதையும் , அதே நேரம் குணா முன்பக்கமாய் உள்ளே வருவதையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பார்த்தவளுக்கு, உள்ளே திக்கென்று இருந்தது.

  கருணாகரனின் செயலுக்கான அர்த்தங்கள் காலம் கடந்து புரிய, அவனிடம் ஆவேசமாக திரும்பிய மதி "சீ நாயே ! இந்த தடவ உன் எண்ணம் நிறைவேற நா விடமாட்டேன்டா" என்று சற்றும் யோசியாமல் கூற, அவள் முகத்தில் எதையோ ஸ்பிரே செய்தான் அந்த கொடூரன்.

  அந்த ஸ்பிரே அவள் சுவாசத்தில் கலக்க, மூர்ச்சையாகி சரிந்தாள் மதி.

  கீழே சரிந்தவளை, மரத்தின் பின்னல் மறைத்து வைத்திருந்த தன் காரின் முன்சீட்டில் அமர வெய்தவன், டிரைவர் சீட்டில் அமர்ந்து குணாவின் வருகைக்காக காத்திருந்தான்.

  அங்கோ குணாவை தேடி, அவன் தந்தை வந்திருப்பதாக கூறிய தன் சகதொழிலாளியை நம்பாமல், எஸ்டேட்டில் இருந்து வெளியே வந்த குணா, உண்மையிலேயே அங்கு அவன் தந்தை நிற்பதை கண்டு அதிர்ந்தான்.

  "எதற்க்காக இந்த மனிதர், நம்மை தேடி வந்தார்? சொத்து முழுவதும் நம் பெயரில் இருப்பதால்,அதை எழுதி வாங்க வந்திருப்பாரோ ?அப்படி தான் இருக்கும், மற்றபடி பாசத்திற்காக ஓடிவருவது அவர் குணம் அல்லவே "என்று எகத்தாளமாக நினைத்தவன், "அவர் கேட்பதை தந்து விட்டு, முழுவதுமாக அந்த பந்தத்தில் இருந்து இன்றே வெளிவந்துவிடவேண்டும்..எனக்கு தான் காலமெல்லாம் துணையாக என் மதி இருக்கிறாளே!" என்ற முடிவுடன் அவரை நோக்கி சென்றான்

  அவன் வருவதை கண்டுவிட்ட அவன் தந்தை குருநாதன், பதட்டதோடு அவனிடம் ஓடிவந்தார்.

  "குணா, கண்ணா எப்படிடா இருக்க?" என்றவர் ஆசையாக அவன் தலையை வருடவும், ஒரு சிலுப்பில் அவரது கையை தட்டிவிட்டான் குணா. அடிபட்ட உள்ளத்தை மறைத்துக்கொண்டவர், "நீ என்ன நம்பாட்டியும் பரவலப்பா, ஆனா அந்த பொண்ணு மதிய நம்பாதா...நேத்து தான்யா எனக்கு தகவல் வந்துச்சு, அந்த புள்ள குடும்பமே, கொஞ்சம் தரங்கெட்ட குடும்பமாம் பா, உன்ன மாரி பணக்கார பசங்களோட பழகி, பொறவு அத வெச்சு மிரட்டி காசு புடுங்குவாங்கலாம் யா...இது எனக்கு முன்னமே தெரியாம போயிருச்சே யா.." என்றவர் ஆற்றாமையோடு கூற,

  "சீ வாய்ய மூடுங்க, உங்கள என் அப்பான்னு சொல்லவே நா கூசுது, இதே பழிய வேற யாராச்சு மதி மேல போட்டுருந்தா , இந்நேரம் அவன் உயிரோட இருக்க மாட்டான்" என்றவரை எச்சரிப்பது போல பார்த்து கொண்டே, ஆவேசமாக குணா சீற,
   
 8. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  "நீ என்ன வெஞ்சாலும் பரவால்ல பா...ஆனா அந்த பொண்ணுகிட்ட இருந்து நா உன்ன காப்பாத்தியே தீருவேன், பணத்துக்காக உன் அப்பன் அவமேல அபாண்ட பழி போடறேனு நினைக்காத, உண்மையாவே அவ நல்லவ இல்ல, அன்னிக்கு எங்களோட ஒருத்தன் நின்னானே, அவன் பேரு கூட" என்று சிந்தித்தவர் ,குணா சந்தேகத்தோடு "கருணாகரனா ?" எனவும் ",

  "ஆமாப்ப அவன் தான்,அவன் தான் அன்னிக்கு அந்த புள்ள கிட்ட தப்பா நடந்துக்க இருந்தானாமே, நீ அத காப்பாத்தல போயிருக்க, ஆனா அவன் தான்யா எங்களுக்கு போன் பண்ணி தகவலே சொன்னான்...அது புரியாம நானும் உன்ன வெஞ்சுட்டேன்,கடைசில நேத்து தான்யா எனக்கு விவரம் எல்லாமே தெரிஞ்சுது, அவனும் கூட்டு களவாணியாம்ல, உன்ன என்ன நேக்கா அந்த புள்ள வீட்டுக்கு வர வெச்சு அதோட வலையில சிக்க வெச்சுருக்கு பாருப்பா " என்றவர் உருகவும், குணா தடுமாறினான்.

  "இல்லப்பா, நீங்க ஏதேதோ சொல்லி என் மனச மாத்தி, என்ன என் மதிக்கிட்ட இருந்து பிரிக்க பாக்கறீங்க,நா நம்பமாட்டேன் " என்று அவருக்கு கூறுவது போலவே, தனக்கும் அவன் உரைத்து கொள்ள,

  "குணா, எனக்கு வந்த தகவல் படி, இன்னிக்கு அந்த பொண்ணு அந்த பய கருணாகரனோட, அது ஊருக்கு தப்பிக்குதாம், அது வேற ஏதோ மாசமா இருக்காம்ல, அத வெச்சும், அது மைனர் பொண்ணாம்ல ,அத வெச்சும் உன் மேல கேஸ் போட்டு காசு பறிக்க போகுறகலாம்" என்று அவன் தந்தை உறுதியாக கூறினார்.

  "ஆஹா என் வாரிசையா வேணாம்னு சொல்றீங்க...அவன் வந்ததும் அவனை வெச்சு உங்கள என்ன பாடு படுத்த போறேன்னு பாருங்க " என்ற மதியின் குரல் குணாவின் காதில் ரீங்காரமிட தொடங்கியது.

  "லஞ்ச் பாக்ஸில் வேண்டும் என்றே தான் தன்னுயைட ஐடியை வைத்தாலோ? பெற்றவர்கள் துரத்தியதும் யார் என்றே தெரியாத அவனை நம்பி அவனோடு எப்படி வந்தாள் ? இந்த திருமணம்? கருணாகரனின் வரவு பற்றி என்னிடம் கூறாத காரணம்? வாரிசை அழிக்க அவள் ஒத்துக்கொள்ளாதது?"

  அவனது கேள்விகள் அனைத்திற்குமே, இப்போது வேறொரு பதில் கிடைத்தது.


  இருந்தும் அவற்றை நம்பாமல், மதியின் மீது தன் நம்பிக்கை அத்தனையையும் தேக்கிக்கொண்டு குணா, அவர்களின் இருப்பிடத்திற்கு ஓட, அங்கே கருணாகரனோடு மதி காரில் செல்வது,அவன் கண்களுக்கு புலப்பட்டது.

  நம்பமாட்டாமல் மீண்டும் அவன் உற்று நோக்க, அவனது நம்பிக்கை காதல் எல்லாம் ஒரே நொடியில் தவிடு போடி ஆகிபோனது.

  அதன்பின் தன் தந்தையிடம் ஏதும் எதிர்த்து பேசாமல், அவரோடு ஊருக்கு கிளம்பினான் குணா.

  ஆனால் அந்த பாதகனின் வலையில் சிக்கிய மதியின் நிலைமை ?
   
  Rabina likes this.
 9. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வானவில்வாழ்க்கை -23

  குணாவின் உள்ளமெல்லாம் கல்லாக இறுகி இருந்தது ."தன் காதல் பொய்த்துவிட்டதாக" எண்ணி தன்னை தானே வருத்திக்கொண்டான் குணா .

  மயக்கத்தில் இருந்த மதியை ஏற்றி கொண்டு சென்ற கருணாகரனுக்கு, அவளை தன் வெறி எல்லாம் தீர காயப்படுத்த வேண்டும் என்று தான் ஆசை .ஆனால் அவளை பழுதில்லாமல் ஒப்படைத்தால் தானே, அவனுக்கு அவன் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

  சில மணி நேர சந்தோஷத்திற்காக, பல லட்ச பணத்தை கோட்டைவிட, அவன் முட்டாள் இல்லையே ?

  வாக்களித்தது போலவே, நேராக வண்டியை குன்னூருக்கு விட்டான். அங்கே மதிக்காக அவளது தாயும் தந்தையும் பரிதவிப்போடு காத்திருந்தனர்.

  மயக்கத்தில் இருந்த மதியை கண்டதும் அவர்களின் உடல் பதற தொடங்கியது."என்னப்பா கருணா இதெல்லாம் ?" என்று மதியின் தந்தை நா தழுதழுக்க கேட்க,

  "நான் தான் சொன்னேன்ல சார், அந்த குணா ராஸ்கல் சின்ன பொண்ணுங்கள மயக்கி விலைக்கு விக்கறவன்னு...இன்னிக்கு மட்டும் சரியான நேரத்துல நான் அங்க போகலைனா நம்ம மதிய இந்நேரம் யாருக்காச்சு வித்துருப்பான்" என்றவன் படபடப்புடன் கூறினான்.

  "தங்களின் மூர்க்க தனத்தால், தங்கள் மகளின் வாழ்க்கையே பறிபோய் இருக்குமே "என்று ஏற்கனவே வருந்தி கொண்டிருந்த மதியின் பெற்றோர், கருணாகரனின் வாய்மொழியை கேட்டு கண்ணீர் சிந்தினர்.

  அப்போது அங்கே கருணாகரனின் முதலாளி வரவும், " நீங்க மட்டும் எங்களுக்கு தகவல் சொல்லலைனா, எங்க மகளை நாங்க இழந்திருப்போம்ங்க..ரொம்ப நன்றிங்க " என்றவர்கள் கை எடுத்து கும்பிட்டார்கள் .

  "இதுல என்னங்க இருக்கு ?ஏதோ என்னால முடிஞ்சது..முதல புள்ளைய கூட்டிட்டு போங்க..அவன் தேடிட்டு வந்தரப்போறான்" என்று அவரும் பெருந்தன்மையாக அவர்களது நன்றியை ஏற்று, மதியையும் அவளது பெற்றோரையும் வேறொரு காரில் ஏற்றினார்கள்.

  மதியின் குடும்பத்தோடு, அவர்களின் கார் புறப்பட்டதும், கருணாகரனுக்கு சேர வேண்டிய பணம் அவனிடம் தூக்கி எறியப்பட்டது. அதை எடுத்து கொண்ட அவனும்,அந்த நல்ல முதலாளிக்கு கூழை கும்பிடு போட்டுவிட்டு சென்றான்.

  அந்த முதலாளி, வேறு யாரும் அல்ல ,மோகனா. குணாவின் சித்தி என்னும் பதவிக்கு உரியவள். அவனது அன்னையின் உடமைகளை தனதாக்கி கொள்ள பாடுபடுபவள்.

  குருநாதரின் சொத்து அனைத்தும் அவரது மனைவி வடிவின் மூலமாக வந்தவை .உயிலின் படி சொத்து அனைத்திற்கும் வாரிசு, பிரசன்ன குணாளனே!! அவளுக்கோ அவளது மக்களுக்கோ அதில் ஒரு துரும்பு கூட கிடைக்காது.

  அதுவே அவன் வாரிசு இல்லாமல் செத்து விட்டால்....அனாமத்தாய் கிடக்கும் சொத்துக்கு அவள் தானே ராணி !

  அவளது அந்த பேராசை தான், கருணாகரனுக்கு தீனி போட்டது.

  மதியையும் குணாவையும் ஊட்டியில் சந்தித்தது குறித்து, முதலில் கருணாகரன் அவளிடம் கூறிய போது ,அவள் அதில் பெரிதாக ஈடுபட்டுகொள்ளவில்லை.

  ஆனால், மதி கருவுற்றிப்பதாக கூறியதுமே. அவள் விழித்து கொண்டாள்.

  அதன் படி திட்டத்தை தீட்டி கருணாகரனை ஊட்டிக்கு அனுப்பியவள், தக்க தருணத்திற்காக காத்திருந்தாள்.

  அன்று மதியை கடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி கருணாகரனுக்கு உத்தரவு போட்டவள், தன் கணவனிடம் சென்று அவரை உருவேற்றி ஊட்டிக்கு அனுப்பினாள். அதே போல, மதியின் பெற்றோரிடம் சென்று அவர்களுக்கு தக்க பேசி, அவர்களையும் அழைத்து கொண்டு குன்னுருக்கு வந்து சேர்ந்தாள்..

  அவளது திட்டபடியே, அனைத்தும் நடக்கவும் அவளுக்கு பேரானந்தமாக இருந்தது.

  அவளது வெற்றிக்கு இன்னும் ஒரே ஒரு படி தான்!!

  அதன்படி ,பொறுமையாக சென்று கொண்டிருந்த மதியின் காரை தாண்டி வேகமாக ஒரு லாரி சென்றது. அதை பின்தொடர்ந்து மற்றொரு லாரியும் அவர்களை முந்த, அதற்கு வழிவிட்டு, மதியின் கார் பக்கவாட்டில் ஒதுங்க, அந்த இரண்டாவது லாரி அவர்கள் காரை மோதி கிழே தள்ளியது.
   
  Rabina likes this.
 10. Chandrika krishnan

  Chandrika krishnan Active Member

  Joined:
  Jan 22, 2019
  Messages:
  235
  Likes Received:
  234
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வேகமாக சரிவில் உருண்ட காரில், ஜன்னல் ஓரமாய் இருந்த மதியை , பாதியிலே அவளது பெற்றோர் கிழே தள்ளிவிட, அவர்கள் மட்டும் காரோடு விழுந்து வெடித்து சிதறினார்கள்.

  அந்த பெரும் விபத்தில் இருந்து தப்பித்த மதியை, மருத்துவமனையில் சேர்த்தனர் காவலர்கள்.

  தகவல் அறிந்து மதியை காண வந்த அவளது சித்தி தமயந்தியும் சித்தப்பா ராஜனும், அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டனர்.அவள் வயிற்றில் வளர்ந்த அந்த சிசு அந்த கண்டத்தையும் தாண்டி அவள் வயிற்றிலேயே பத்திரமாக இருந்தது, அந்த கடவுளின் செயல் தான்.

  "ஆனால் தங்கள் மகளின் எதிர்கால வாழ்விற்கு,அந்த குழந்தை தடையாகி போகுமோ?" என்றெண்ணிய தமயந்தியும் ராஜனும், குழந்தையை களைத்து விடுமாறு மருத்துவரிடம் கேட்டு கொண்டனர்.

  ஆனால், "மதியின் கருப்பை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், குழந்தையை கலைப்பது அவளது உயிருக்கே எமனாக கூடும்" என்றும் மருத்துவர் கூறியதால், அந்த வாரிசு தனது அடுத்த கண்டத்தையும் தாண்டியது.

  மறுநாள் விபத்து குறித்து அறிந்த குணா, விக்கித்து நின்றான்.அவனது மனநிலையை மாற்றுவதற்காக அவன் தந்தை அவனை வெளிநாடு அனுப்ப முடிவு செய்தார்.

  "அச்சச்சோவ்...ஆதித்தான்..இவங்க ரெண்டு பேரும் தேரூர மாரி எனக்கு தோணல..சரியான உமனா மூஞ்சீங்க" என்ற குழலியின் பரிகாசத்தில் இருவருமே, தங்களின் மோன நிலையில் இருந்து வெளிவந்தனர்.

  அவர்களின் குளமாகிய கண்களை கண்ட ஆதியும் "ஏய் கீது, சீக்கரம் அந்த அண்டா குண்டால தூக்கிட்டு ஓடியா...சென்னைல ஏற்கனவே தண்ணிக்கு பஞ்சம் " என்று தன் பங்கிற்கு அவர்களை வார, அவர்களின் கேலியில் கொஞ்சமே கொஞ்சம் புன்னகை செய்ய முயன்று மதியும் குணாவும் தோற்றனர்.

  அவர்களின் முயற்சியையும் சோர்வையும் கண்ட குழலி, ஆதியை பார்த்து கண்ணடித்தாள். " அடியாத்தி அதுக்கு நீ வேற ஆள பாரு" என்று ஆதி சீனுங்க,குணா சிரித்து விட்டான்.

  ஆனாலும் மதியின் முகத்தில் சிரிப்பு வராததை கண்ட குழலி," அத்தான்,நேத்து நீங்க என்கிட்ட ஒரு டான்ஸ் ஆடி காட்டுனீங்களா, பிரபுதேவா மாறி..அதே மாறி இன்னிக்கும் ஆடி காட்டுங்க அத்தான்" என்று குழலி கொஞ்சும் குரலில் ஆதியிடம் கெஞ்ச,

  "நா எப்போடா ஆடுனேன்... அதுவும் பிரபுதேவா மாறி?? இது என்ன புது புரளியால இருக்கு...பயபுள்ள நம்மள வெச்சு ஏதோ பிளான் பண்ணிருச்சு...என்ன பெருசா..டான்ஸ் தான.. ஆடி வெப்போம்" என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு ஆதீயும், பிரபுதேவாவின் விழுதாக மாறி, குழலி சொன்னதற்கும் ஒரு படி மேலாக சென்று

  "ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி "
  என்று பாடிக்கொண்டே ஆட தொடங்கினான்.

  சற்று நேரம் அவனது ஆடல் பாடலில் லயித்த குழலி, வேகமாக உள்ளே சென்று மோப் கட்டையை எடுத்து வந்தாள்.

  அவளை குறுகுறுவென்று பார்த்து கொண்டே, ஆதி பாடி ஆடி, அவனருகே வந்த குழலி "ஆட்றா ராமா ஆடு" என்று குச்சியால் தரையில் தட்ட, மதியினால் சிரிப்பை அடக்க முடியாமல் போனது.

  " அடிப்பாவி உன் பிரெண்ட சிரிக்க வெக்க, என்ன கொரங்காக்கிட்டியே?" என்பது போல ஆதி பரிதாபமாக பார்க்க, குழலி வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்கினாள்.
   
  Rabina and Suganyasomasundaram like this.

Share This Page