வாரிசு ....! Varisu By Mythili Ramjee

Discussion in 'Short Stories' started by Mythili Ramjee, Dec 8, 2018 at 10:53 PM.

 1. Mythili Ramjee

  Mythili Ramjee New Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  6
  Likes Received:
  4
  Trophy Points:
  1
  Gender:
  Female
  [​IMG]

  "ஷர்மிளா, என்னமா.. இன்னுமா நீ தூங்கலே? உடம்புக்கு என்ன ஆறது? இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம். இப்படி ராத்திரி பூரா வேலை செய்தால் எப்படி? குழந்தைக்கும் என்ன ஆகும்? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ" கனிவாகவும், நேசத்துடனும் சொன்ன கணவன் விக்னேஷ் ஹார்லிக்ஸ் கையில் வைத்துக்கொண்டு இவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
  "கொடு விக்னேஷ். நீ ஏன் இப்படி டென்ஷனாக இருக்கே? ஒன்னும் இல்லை. இதோ தூங்கப்போறேன். நீயும் படு." அலட்டிக்காமால் பேசிய ஷர்மிளாவை ப்ரம்மிப்பாய் பார்த்தான் விக்னேஷ்.
  இவர்களுக்கு கல்யாணம் ஆகி 4 ஆண்டுகள் முடிந்தன. இவன் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். பெரியப்பா வீட்டில் சில காலம் வாழ்ந்தான். பின்பு எல்லாம் ஹாஸ்டல்தான். பாசத்திற்காக ஏங்கிய நாட்கள் பல.
  தன் சொந்த முயற்சியால் கடும் பாடுபட்டு சலுகைகளில் படித்து பட்டம் பெற்றான். பின்பு, நண்பர்கள் துணையோடு கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று ஒரு தனியார் கம்பெனியில் சேர்ந்தான். இரவு, பகல் பாராமல் உழைத்தான். வாழ்க்கையில் தான் இழந்த அத்தனை சுகங்களையும் பெறவேண்டும் என்கிற வைராக்கியம்.
  இவனது கம்பெனியில் வேலை செய்பவள் தோழிதான் இந்த ஷர்மிளா.
  விக்னேஷை பல முறை பார்த்திருக்கிறாள் ஷர்மிளா. பல ஷிப்ட்களில் அவன் வேலை செய்வதைப் பார்த்து பிரமித்தும் இருக்கிறாள். அவன் மீது பரிதாபம் என்று கூற முடியாது. ஆனால் ஒரு வித அக்கறை இருப்பதுபோல் உணர்ந்தாள். அவனைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து தன தோழியிடம் விசாரித்தாள். விக்னேஷின் முழு விவரம் தெரிந்ததும் கட்டாயம் அவனை சந்தித்து சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று ஏனோ மனதில் தோன்றியது.
  தன்னுடைய 2 வயதில் அம்மாவை இழந்து, அத்தை வீட்டில் வளர்ந்தவள் ஷர்மிளா. அப்பா வேறு கல்யாணம் செய்து கொண்டு வெளியூரில் வாழ்ந்து வந்தார். வருடத்திற்கு ஒருமுறை வந்து இவளை பார்ப்பார். அவ்வளவுதான். அம்மா, அப்பா பாசம் எப்படி இருக்கும் என்பதெல்லாம் இவளுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. அத்தைக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் கணவனை இழந்தவள். வாரிசு எதுவும் இல்லை. இவளைத் தன்னுடனே வைத்துக் கொண்டாள். நன்றாகத்தான் வளர்த்தாள். இருப்பினும், சில சமயங்களில் இவளை வெறுத்துப் பேசியதும் உண்டு. "ஆமாம். உன் அம்மா போயி சேர்ந்துட்டா, அப்பா ஏதோ கடமைக்கு உன்னை வந்துப் பார்க்கிறான், என் தலையில் தான் எல்லாம்" அப்போதெல்லாம் எங்காவது போய் விடலாமா என்று கூட தோன்றியதுண்டு இவளுக்கு. ஆனால், எங்கு போவது? கதி "பாவம் அத்தை. அப்பாவே விட்ட பிறகு இவள் என்னை நல்லாத்தானே பார்த்துக்கறா? பொறுமையாக இருக்கணும்" மனதை தேர்த்திக்கொள்வாள்.
  நன்றாகப் படித்தாள். நல்ல வேலைக் கிடைத்தது. தனக்கு கல்யாணம் செய்ய, மாப்பிள்ளைத் தேட எந்த ஒரு தொந்தரவும் அத்தைக்கு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். தனக்கு ஏற்ற துணையை தானே நல்ல விதமாய் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
  இதைப் பற்றி அத்தையிடமும் பேசி அவளின் ஆலோசனை, விருப்பம், இவற்றை தெரிந்து கொள்ளவும் தயங்கவில்லை ஷர்மிளா.
  அன்று விடுமுறை. இருவரும் 7 மணிக்குத்தான் எழுந்தனர். ஷர்மிளா சூடாக காபி போட்டு அத்தையுடன் உட்கார்ந்தாள். "அத்தை, நீ என்னை இத்தனைக் காலம் கஷ்டப் பட்டு வளர்த்துட்டே. எனக்காக மாப்பிள்ளை பார்க்கும் சிரமத்தை உனக்கு கொடுக்க நான் விரும்பல. உன் சம்மதம் கிடைத்தால் நமக்கு ஏற்றார் போல் ஒருவரை நானே தேர்ந்தெடுப்பேன். உன் விருப்பத்தை சொல்லு" பவ்யமாய் கேட்டாள் ஷர்மிளா.
  முதலில் அதிர்ந்த அத்தை, சற்று சுதாரித்துக்கொண்டு "ஷர்மி, உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ எதையும் முறை தவறி செய்யமாட்டே. உனக்கு ஏற்ற ஒருவன் கிடைத்தால் கட்டாயம் சொல்லு. எனக்கு 100% சம்மதம். சந்தோஷமா?" பாசத்தோடு பேசிய அத்தையை ஆசையோடு அணைத்தாள் ஷர்மிளா.
  ஒரு சிறிய ரெஸ்டாரண்டில் ஷர்மிளா, விக்னேஷ் மற்றும் இவளின் தோழி.
  மிக இயல்பாய் பேசினான் விக்னேஷ். யதார்த்தமாகவும்.
  "ஷர்மிளா, எனக்கு சொத்து எல்லாம் ஒன்றும் கிடையாது. நான் சம்பாதிப்பதுதான். எனக்கு சொந்தம் என்று சொல்லிக்க விரல் விட்டு எண்ண முடியாது. நீ யோசி. எனக்கும் கொஞ்சம் டைம் கொடு எந்த ஒரு முடிவையும் அவசரப் பட்டு எடுத்து பின்பு தவிக்கக்கூடாது. நமக்கு சின்ன வயசில் பாசம் கிடைக்கவில்லை என்கிற ஒரே ஒரு ஒற்றுமையை வைத்துக்கொண்டு எதையும் முடிவெடுக்காதே. வாழ்க்கை என்பது பல கட்டங்கள் நிறைந்தவை. ஒவ்வொன்றையும் தாண்ட பல மனிதர்களின் துணை நமக்குத் தேவை. யோசிப்போம். அடுத்தவாரம் சந்திக்கலாம்"
  மிகவும் அழகாய் பேசிய விக்னேஷ், ஷர்மிளா மனதத் தொட்டு விட்டான்.
  அத்தையிடமும், தோழியிடமும் நிறைய பேசினாள். தனக்கு விக்னேஷ் பொருத்தமானவன் என்கிற முடிவிற்கு வந்தபின் மறு வாரம் சந்திக்க ஒப்புக்கொண்டாள்.
  தன் விருப்பத்தை தயக்கமின்றி கூறிய ஷர்மிளாவை அப்பொழுதுதான் முழு மனதோடு நேருக்கு நேர் பார்த்தான் விக்னேஷ், "சரி, நான் உங்க அத்தையை வந்துப் பார்க்கிறேன் நாளைக்கு" என்றான் தெளிவாய்.
  "எனக்கு யாரும் சொந்தக்காரர்கள் என்று என் நினைவில் இல்லை. என்னைப்பற்றி எல்லாம் சொல்லிவிட்டேன். வீட்டின் பராமரிப்பு இல்லாமல் வளர்ந்தவன் நான். எனக்கு உங்கள் பெண்ணைக் கொடுக்க விருப்பம் என்றால் எனக்கும் சம்மதம்" வெளிப்படையாய் பேசிய விக்னேஷை மிகவும் பிடித்தது அத்தைக்கு.
  இரண்டு மாதங்களில் கல்யாணம் ஆனது.
  6 மாதங்களில் மாரடைப்பால் அத்தை காலமானாள். இருந்த ஒரு சொந்தம் மறைந்ததில் சற்று கலங்கிய இருந்த ஷர்மிளாவிற்கு மிகவும் ஆறுதலாய் இருந்தான் விக்னேஷ்.
  இதோ, அவனின் பாசம் முழுக்க அவளுக்காக. அவள் வயிற்றில் வளரும் தன் வாரிசுக்காக!
   
  HELEN MARY and kani _mozhi like this.
 2. Rabina

  Rabina Active Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  222
  Likes Received:
  137
  Trophy Points:
  43
  Gender:
  Female
 3. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  270
  Likes Received:
  169
  Trophy Points:
  43
  Gender:
  Female

Share This Page