வாஸ்து சாஸ்திரம்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Feb 14, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  உங்கள் வீட்டில் பீரோ சரியான இடத்தில் இருக்கா?


  நாம் சம்பாதிக்கும் பணம் நகை போன்ற மதிப்புள்ள பொருட்களை வைக்கும் பீரோ மற்றும் லாக்கர் வாஸ்து சாஸ்திரப்படி எந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
  நாம் பலருக்கும் அதிக உழைப்பு போட்டாலும் அதற்கான வருமானம் வரவில்லையே, பணம் வந்தாலும் தங்கவில்லையே விரையச் செலவு ஆகின்றதே, சேமிப்பு என்பதே செய்யமுடியவில்லையே, கொடுத்த கடன் திரும்பக் கிடைக்குமா? என்று பலவித வருத்தங்கள் இருப்பதுண்டு.
  அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பா? சிலர் வீட்டை மாற்றிவிடலாமா? வாடகை வீடு என்றால் மாற்றிவிடலாம், சொந்த வீடு என்றால் என்ன செய்வது என்று யோசிப்பார்கள்.
  [​IMG]
  ஒருவருது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் ஏதோ தவறான செயல்பாடுகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு என்னதான் செய்வது என்றால்? நம் வீட்டில் ஒருசில விஷயங்களைச் சின்ன சின்ன மாற்றம் செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்கலாம்.
  நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் நகை வீட்டில் பத்திரமாக வைக்கும் முக்கிய இடமாகப் பீரோ உள்ளது. அந்த பீரோவை நாம் சரியான திசையில் வைத்துள்ளோமா என்பதைக் கவனியுங்கள்? முதலில் பீரோவை வாஸ்து படி எந்த திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தவிர்த்து நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  வாஸ்துபடி அடிப்படை திசைகள் என்றால் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என மொத்தம் எட்டு திசைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 45 டிகிரிக்கள் உள்ளன.
  சாஸ்திரப்படி நிருதி மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும். அந்த திசையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சிலருக்கு எந்த திசையை நோக்கித் திறக்க வேண்டும் என்று சந்தேகம் வரும். தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைக்கலாம்.
  [​IMG]
  சரி, ஒருவேளை சிலரின் வீட்டில் இந்த மாதிரியான அமைப்பு இல்லை என்றால் என்ன செய்வது?
  இந்த மாதிரியான அமைப்பு இல்லை என்றால்? வாயு மூலை அதாவது வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கியும் பீரோவை வைக்கலாம். இதனால் நம் வீட்டில் வீண் செலவுகள் குறைந்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
  உங்க வீட்டில் பீரோவை மாற்றி வைத்திருந்தால் உடனே சரியான திசையில் அதை சரிசெய்துவிடுங்கள். இப்படிச் செய்வதால் நம் பிரச்னைகள் தீரும் என்றால் அதைச் செய்து பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே..
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பித்ரு தோஷ நிவர்த்தி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

  பித்ரு தோஷ நிவர்த்தி செய்யும் போது எந்தெந்த காரியங்களை செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
  செய்ய வேண்டியவை
  • அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்து பூஜைகளைச் செய்ய வேண்டும்.
  • பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் வேறு தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக் கூடாது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.
  • மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காகவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
  • மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.
  • பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப் பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.
  • மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
  செய்யக் கூடாதவை
  • பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில், தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்குச் செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
  • தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
  • அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
  • சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.
  • சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பிறந்த குழந்தையால் தந்தைக்கு ஆபத்து ஏற்படுமா?

  வேத ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் என்பது தகப்பனையும், ஐந்தாம் பாவம் என்பது குழந்தையையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  அதுவே கிரகமாக சொல்லும்பொழுது தந்தை என்பது சூரியனையும் புத்திரன் என்பது குரு என்பதாகவும். மரணம் என்றவுடன் பிறந்த குழந்தையால் தோஷம் அல்லது குழந்தை பெற்றோரை முழுங்கி விட்டது என்றெல்லாம் கூறுவர் அது சரியானதல்ல!
  குழந்தை எப்பொழுது பிறக்குமோ அது கடவுள் கிருபை. தந்தை மறைவுக்கு அவரின் கர்மா பதிவால் ஆயுள்தான் அவரவர் விதி ஆகும். இங்கு யாரையும் பழிக்கக்கூடாது. தந்தையின் மரணம் என்பது குழந்தையின் ஜாதகத்தின் மூலம் எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம். ஜோதிடர்கள் ஆயுள் பற்றிச் சொல்லமாட்டார்கள். இதுவும் ஒரு சில காரணங்களுக்காக சொல்லப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி அறிந்துகொள்ளலாம். நாம் இன்று பார்ப்பது தந்தைக்கு ஆபத்து பற்றிய ஒரு விரிவைப் பார்ப்போம்.
  • சூரியன் இருபுறம் பாவர்கள் சூழ; சூரியனை பாவர்களும் பார்வையிட்டால், ஜாதகன் கருவில் இருக்கும்பொழுது அவனுடைய தந்தைக்கு உயிய் ஆபத்து ஏற்படும்.
  • லக்கினத்தில் மூவரான சனி, சூரியன், சந்திரன் ஒன்றாக அமர்ந்திருக்க ஐந்தாமிடத்தில் செவ்வாய் நின்றிக்க தந்தைக்கு உயிர் ஆபத்து மற்றும் செவ்வாய், கேது சூரியன் ஆகிய மூவரும் ஒரே ராசியில் கூடி சுபர்கள் பார்வை பெறாமல் இருந்தால் ஜாதகர் பிறந்த சிறிது காலத்தில் தந்தை மரணமடைவர்.
  என்பார் சன்மம் தனில்காரி
  இரவி சசிமூ வரும்இருக்கத்
  தன்பார் ஐந்தில் குசன்இருக்கத்
  தந்தைக்கு அரிட்டம் தான் ! பின்னும்
  அன்பார் குசன்செம் பாம்பிரவி
  யாக மூவர் உடன்கூடப்
  பின்பா ராமல் மூன்றாண்டில்
  பிதாவுக்கு அரிட்டம் பேசுவரே! (ஜாதக அலங்காரம்)

  • ஜாதகரின் 4-க்குடையவன் ஒன்பதில் இருந்தால் தந்தைக்கு வரும் பிரச்னையை குறிக்கும் எப்படி என்று கேட்கின்றீர்களா?? எடுத்துக்காட்டாக ஜாதக கட்டத்தில் மகர லக்கினம் என்று எடுத்துக்கொள்வோம் அங்கிருந்து ஒன்பதாம் இடம் என்பது கன்னி ஆகும். அது தந்தை ஸ்தானம் ஆகும். அங்கு செவ்வாய் அமர்ந்தால் ஜாதகரின் தந்தைக்கு அவரின் தசா புத்தியில் ஆபத்து நிகழும். ஏனென்றால் தந்தை ஸ்தானத்துக்கு செவ்வாய் அஷ்டமாதிபதி ஆவார்.
  • ஐந்துக்கும் ஒன்பதிக்குடையவனும் சூரியனுடன் சேர்ந்து இருக்க இவர்களை சனி பார்க்க தந்தைக்கு உயிர் ஆபத்து வரும். சூரியனுடன் 5, 9க்குடையவரகள் சேர்ந்து அமர்ந்து இவர்களுடன் செவ்வாய் சனி கூடி மூன்றாமிடத்தில் நின்றால் ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பர் என்று அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் கூறப்படுகிறது.
  • ஒன்பதுக்கு உடையவனின் ஸ்புடத்திலிருந்து குளிகன் அல்லது மாந்தி ஸ்புடத்தை கழிக்கும்பொழுது எந்த ராசிக்கு வருகிறதோ அந்த ராசியில் கோட்சர குரு சஞ்சரிக்கும் வருடத்தில் மரணம் நிகழ வாய்ப்புண்டு.
  • சூரியன் ஸ்புடத்திலிருந்து 9-குடையவர் ஸ்புடத்தை கழிக்கும்பொழுது எந்த ராசி வருகிறது என்று பார்க்கவேண்டும் அந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் தகப்பனுக்கு ஆபத்து வரும் காலம்.
  • 8, 9, 10 ஆகிய மூன்றிலும் பாவர்கள் நிற்க, ஒன்பதுகுடையன் மறைவு ஸ்தானத்தில் பலவீனமாக அமர்ந்திருக்க, இந்த அமைப்பில் ஒன்பதாமிடத்தில் செவ்வாய் சூரியனோ நின்றிருந்தாலும் அல்லது வேறு எந்த பாவர் நின்றாலும் ஜாதகனின் தந்தைக்கு அற்பாயுள்.
  • லக்கான பாவமான ஒன்றாமிடத்தில் செவ்வாய்; ஒன்பதில் சனி நின்றிருந்தால் கண்டம் அதுதவிர 9-க்குடையவருடன் செவ்வாய் சனி சேர்ந்திருக்க சுபர் உதவினாலும் அப்பாவின் ஆயுள் ஆபத்துதான்.
  • ஒன்பதாமிடத்தில் செவ்வாய், சனி பார்வை இருந்தால் சூரியனான தந்தைகாரகன் அஷ்டமாதிபதி மற்றும் விரயாதிபதி என்று சொல்லும் பன்னிரண்டாம் அதிபதியுடன் சூரியன் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் சிறுவயதில் தந்தை மரணம் சம்பவிக்கும்.
  • சூரியன் சனி அதோடு 9-க்குடையவன் இணைந்து இருந்தால் ஆபத்துதான்; இவற்றில் இந்த மூவரையும் குரு பார்க்க, 5-க்குடையவன் உச்சமானால் தந்தைக்கான உயிர் ஆபத்து தள்ளிப்போகும்.
  • பிதுர்காரகனாகவும் 9-க்குடையனாகவும் சனி பாவர்களுடன் சேர்ந்து 4, 6, 8 அமர்ந்திருக்க, 9-ல் கேது இருக்க, அந்த ஒன்பதாமிடத்தில் சனி கோச்சாரப்படி சஞ்சரிக்கும் காலம் தந்தைக்கு கண்டம் ஏற்படும்.
  இவ்வாறெல்லாம் இருந்தால் ஆபத்து நடந்துவிடும் என்று அர்த்தம் ஆகாது. ஜோதிடத்தில் மாணவர்கள் இன்னும் நுணுக்கமாக ஆராயவேண்டும். தந்தையின் விதி என்பது அவரின் தசா புத்தி கோட்சாரம் என்னும் நுணுக்கம் பதில் சொல்லும்.
  தந்தையின் ஆபத்து பற்றி இதில் கூறப்பட்ட அனைத்தும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டது என்றாலும் அதில் ஒரு சில சூட்சம விதியும் உள்ளது. கர்ம காரகனோடு எந்த கிரகம் பின்னி இருக்கிறதோ அவற்றை பின் தொடர்கிறது நம் பிறவி கர்மா. அவை அனைத்தும் எம்பெருமான் அறிவான். ஓம் நமச்சிவாய!
  குருவே சரணம்!
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  லட்சுமி குபேர பூஜை வழிபடும் முறை!

  தீபாவளி திருநாளில் சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான தேவதை குபேரனையும் வைத்து பூஜிப்பது சில இடங்களில் பரம்பரைப் பழக்கமாக உள்ளது.
  அந்தவகையில், லக்ஷமி குபேர பூஜை செய்யத் தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.
  லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும்.
  லட்சுமி குபேர பூஜை வழிபடும் முறை!
  மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்கு குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
  பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள்,
  குபேராய நமஹ… தனபதியே நமஹ..
  என்று மனதில் துதித்துகொண்டே இருக்கலாம்.
  பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும்.
  [​IMG]
  நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
  தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால், 108 ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.
  [​IMG]
  தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு.
  தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
   

Share This Page