விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பற்றி நீங்கள் அறிந்திராத சுவையான தகவல்கள்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Sep 8, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  உலகெங்கிலும் வாழும் ஹிந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழுமுதற்கடவுள் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் வருகின்றன வியாழனன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவிருகிறது. அப்படிப்பட்ட இந்த தருணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் பின்னணியில் இருக்கும் வரலாறு என்ன ?, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் எப்படி இந்த விழா கொண்டாடப்படுகிறது ? என்பது போன்ற சுவையான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விநாயகர் சதுர்த்தி விழாவின் வரலாறு :


  பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வந்தாலும், இன்றிருப்பது போல மிகப்பெரிய பொது நிகழ்வாக மாறியது 1600களில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்தில் தான். முகலாயர்களின் அடக்குமுறைக்கு எதிராக ஹிந்துக்களை ஒன்று திரட்டுவதற்காகவே இப்படி பொது விழாவாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மன்னர் சிவாஜி உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விநாயகர் சதுர்த்தி விழாவின் வரலாறு :


  மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பால கங்காதர திலகர் தான். 1893ஆம் ஆண்டு 'சர்வஜன கணேஷ் உத்சவ்' என்ற பெயரில் இவர் ஆரம்பித்து வைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்று லட்சக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் மிகப்பெரிய விழாவாக மாறியுள்ளது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  புராண வரலாறு :

  லிங்க புராணத்தின் கூற்றுப்படி அரக்கர்களின் கொடுமைகளில் இருந்து தங்களை காத்திட சிவபெருமானை நோக்கி தேவர்கள் தவமிருந்ததாகவும், அவர்களின் வேண்டுதலின் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவரே விக்ன கர்த்தர் எனப்படும் விநாயகர் என்றும் சொல்லப்படுகிறது.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் :

  இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. இந்தியாவுக்கு வெளியே ஹிந்துக்கள் அதிகம் வாழும் நேபாளம், அமேரிக்கா, மொரீசியஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொண்டாட்ட முறைகள் :


  விநாயகர் சதுர்த்தியின் போது பக்தர்களால் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன.

  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள், மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளன்று தற்காலிகமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மகாராஷ்டிரா :


  இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக விமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மராத்தியரும் தத்தமது வீடுகளில் சிறிய அளவில் விநாயகர் சிலையை வைத்து பூசை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதோடு நின்றுவிடாமல் தனித்தனி குழுக்களாக பிரிந்து மும்பை நகரம் முழுக்கவும் பந்தல்கள் அமைத்து விதவிதமான உருவங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆந்திர பிரதேசம் :


  மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது ஆந்திர பிரதேச மாநிலத்தில் தான். இங்கே வாழும் மக்கள் தங்கள் வீடுகளில் களி மண்ணினாலும், மஞ்சளாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜிக்கின்றனர். பொது வெளியில் பந்தல்களில் வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஹைதராபாத் நகரின் முக்கிய ஏரியான ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்படுகின்றன.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆந்திர பிரதேசம் :


  2013ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது ஹைதிராபாத்தில் 'கைர்தாபாத் கணேஷ்' என்றழைக்கப்பட்ட 59அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக செய்யப்பட்ட மிக உயரமான விநாயகர் சிலையாக இந்த சிலை சொல்லப்படுகிறது.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,501
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கோவா :

  கிருஸ்தவர்கள் அதிகமாக வாழும் கோவா மாநிலத்தில் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. கொங்கனி மொழியில் 'சாவத்' என்றழைக்கப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பே துவங்கிவிடுகின்றன. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது தினமும் வான வேடிக்கைகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் என களைகட்டுகின்றன. மேலும் இங்கே விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் 'நவ்யசி பஞ்சம்' எனப்படும் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
   

Share This Page