வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகள்!!

Discussion in 'Non Fiction' started by NATHIYAMOHANRAJA, Feb 13, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சொந்த பிளாட்டிற்கும் வாடகை பிளாட்டிற்கும் இது பொருந்தும்


  வீடு கட்டுவதற்கு முன்பு இருக்கும் காலி மனை, அதன் மணம்-குணம்-நிறம் அதோடு அதனுடைய சுற்றளவு – பரப்பளவு காலி மனை இருக்கும் திசை அதைச் சுற்றிக் காணப்படும் வீதி மனையின் உயரம் அல்லது பள்ளம், இவை அந்த மனையில் வீடு கட்டிக் குடிபோகும் மனிதருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
  இதற்கு ஜாதகமும் – தசாபுக்தியும் நல்லபடியாக இருக்க வேண்டும். ஜாதகம் இல்லாதவர்களும் – ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் ‘நியூமராலஜி’ படி தங்கள் மனைகளை நல்லபடியாக மாற்றிக் கொள்ள முடியும்.
  இது சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்ல – வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் வாடகை மனையில் தொழிற்சாலை கட்டி நடத்துபவர்களுக்கும் கூடப் பொருந்தும்.
  இப்பொழுது பெரும்பாலான நகரங்களில், ஊர்களில், ஏன் சில வளர்ச்சியடைந்த கிராமப்புறங்களில் கூட அடுக்குமாடிக் கட்டிடங்கள் தான் காணப்படுகின்றன. மனை கிடைப்பதே அரிதாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும் அது சரியான அதிர்ஷ்டத்தைத் தருமா என்று கவலை ஏற்படுகிறது. ஜனத்தொகை நாளுக்கு நாள் அதிகமாகும் இந்நாட்டில் இப்பொழுது மனை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அடுக்கு மாடி வீடாவது கிடைக்குமா? என்று ஏங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
  அப்படியே கடனை வாங்கியோ, நகைகளை விற்றோ, பிளாட் வாங்கினாலும் அது வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருக்கிறதா என்று பெரும்பாலும் பார்ப்பதில்லை. பின்னர் ஏற்படும் பிரச்னைகளை வைத்து அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்ற கவலையிலேயே ஆயுட் காலத்தின் பெரும்பகுதி முடிந்து விடுகிறது.
  ஏகப்பட்ட பணத்தைப் போட்டு அது தனியார் கட்டிய பிளாட்டாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தால் கட்டப்பட்ட பிளாட்டாக இருந்தாலும் சரி, வாங்கிய நபர்கள் தங்கள் வாழ்க்கையை வளமாக்க தாங்கள் பெற்றுள்ள பிளாட்டை எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த மனையடி சாஸ்திரம் பார்க்கப்படுகிறது.
  சொந்தமாக பிளாட் உள்ளவர்களுக்குத்தான் இந்த மனையடி சாஸ்திரம் பொருந்துமா? என்று பிளாட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கேட்கலாம். சொந்த பிளாட்டாக இருந்தாலும் வாடகைக்குப் பிளாட்டில் குடியிருப்பதாக இருந்தாலும், அவர்களுக்கும் இந்த மனையடி சாஸ்திரம் பொருந்தும்.
   

Share This Page