வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்

Discussion in 'Beauty Tips' started by NATHIYAMOHANRAJA, Sep 4, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வீட்டில் இருந்தபடியே ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :
  காய்ச்சாத பால்
  ஏதாவது பழக்கூழ் (பழத்தை நல்ல அரைத்தது)
  ஃபேசியல் செய்யும் முறை :
  மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து முகம் வரை தடவி, பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பழக்கூழைக் கொண்டு கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் மீது விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்தாற் போல் வைத்து செய்ய வேண்டும்.
  மசாஜ் செய்யும்போது எந்த காரணத்தைக் கொண்டும் நடுவில் கையை எடுக்காமல் செய்யவேண்டும். அவ்வாறு எடுக்க நேரிட்டாலும் ஒரு கை முகத்திலேயே இருக்க வேண்டும். முகம் முழுவதும் நுனி விரல்களைக் கொண்டு மெதுவாக தட்டிவிட வேண்டும். மசாஜை கழுத்திலிருந்து ஆரம்பித்து விரல்களை மெதுவாக மேல்நோக்கி தாடைக்கு கொண்டு வரவேண்டும்.
  தாடையின் நடுப்பகுதியிலிருந்து பக்கவாட்டில் செய்ய வேண்டும். தாடையிலிருந்து மேல்நோக்கி கன்னப்பகுதிகளில் செய்ய வேண்டும். உதட்டினைச் சுற்றியும், உதட்டின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.முதல் மூன்று விரல்களைக்கொண்டு சிரிப்பு வரிகளின் (Laugh Line) மீது மசாஜ் செய்ய வேண்டும்.
  கன்னத்தில் முதல் மூன்று விரல்களைக் கொண்டு கிள்ளியும் மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் மேலும், மூக்கின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு நடுவில் குறுக்காக முதல் விரலைக்கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களை பிடித்தும் விட வேண்டும்.
  நெற்றியில் முதல் இரு விரல்களைக் கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும். பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்களில் அழுத்திவிட வேண்டும்.
  பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்கள் தாடையின் நடுப்பகுதி, மூக்கின் பக்கவாட்டு இடம், நெற்றி மேல்முடிவில், புருவங்களின் நடுவில், கண்புருவங்களின் முடிவின் சிறிது கீழ்பகுதி, மூக்குத்தண்டிற்கும், கண்களின் ஆரம்ப பகுதி ஆகும் தூக்கம் வராதவர்களுக்கு கைகளை சுண்டுவிரல்களின் பக்கமாக வைத்து நெற்றியில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
  இவ்வாறு மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும். கண்பாவைகளை மெதுவாக அழுத்திவிட வேண்டும் இது தான் ஃபேசியல் செய்யும் முறையாகும்.அனைத்து விதமான பழங்களையும் ஃபேசியல் செய்ய பயன்படுத்தலாம். மேலே கூறப்பட்டுள்ள முறைப்படி வீட்டில் இருந்தபடியே குறைந்த செலவில் உங்களை அழகு படுத்திக் கொள்ளலாம்.
   
  Tamilvanitha likes this.

Share This Page