வைகாசி மாத ராசிபலன்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, May 15, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,217
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கும்பம்:

    குரு, ராகு, சனி ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை செய்வார்கள். ஜூன் 10 வரை சுக்கிரன், மே முதல் புதன் ஆகியோரும் நற்பலன்களைத் தருவார்கள். மாதம் செயலில் வெற்றி, பொருளாதாரச் செழிப்பு, மகிழ்ச்சி ஆகிய அனுகூலப் பலன்களைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுக மாகக் காணப்படும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு பொன், பொருள் ஆகியவை சேரும். கணவன் - மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்க ளால் ஆதாயம் உண்டாகும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுவதாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
    பணியாளர்கள் உற்சாகமாக பணிகளில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவிஉயர்வு கிடைக்கும்.
    தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் இடையூறும், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கும் மறையும். திடீர் பணவரவு இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
    கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசாங்கத்தின் சார்பில் விருதுகள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
    மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
    பெண்களுக்கு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 15, 20, 22, 23, 30, 31, ஜூன் 1, 2, 5, 6, 11
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
    சந்திராஷ்டம நாள்கள்: மே 24, 25
    பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அபிஷேகம், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,217
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மீனம்:

    சூரியன், செவ்வாய், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரனாலும் புதனாலும்கூட ஓரளவு நன்மைகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவப்பெயர் நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், குரு 8-ல் மறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
    தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.
    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
    கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம்.
    மாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
    பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.
    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மே 16, 22, 23, 24, 25, 31, ஜூன் 3, 4, 7, 9, 13
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
    சந்திராஷ்டம நாள்கள்: மே 26, 27, 28
    பரிகாரம்: வெள்ளியன்று மாலையில் லட்சுமி வழிபாடு, வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.
     

Share This Page