வைகுண்ட ஏகாதசி 2020 விரதம்: முழுபலனையும் அடையும் வழிகள்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Jan 6, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஏகாதசி விரதத்தை முடிப்பது எப்படி? என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா?

  வைகுண்ட ஏகாதசி தினத்தின் போது எப்படி விரதம் இருக்க வேண்டும். அவர்கள் துவாதசி தினத்தில் எப்படி விரதத்தை முடித்து பூஜை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்...
  [​IMG]
  ஏகாதசி விரதத்தை முடிப்பது எப்படி? என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்ட...
  வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம்.
  வைகுண்ட ஏகாதசி என்பது ஒருநாள் தான் அதன் முன் வரும் பகல் பத்து, பின் வரும் இரா பத்து மிக விஷேசமானது. திருமங்கை ஆழ்வார் பெற்ற வரத்தின் படி, நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் அருளிச்செய்திருக்கும் ஆயிரம் பாசுரங்கள் அமுதம் போன்றவை. இவற்றை நீங்கள் கேட்டு அருள வேண்டும் என வரம் கேட்டார்.

  சரி என ஒப்புக்கொண்டு வரம் கொடுத்த பெருமாள், தினமும் 100 பாடல்கள் வீதம் பத்து நாட்கள் 1000 பாசுரங்களைக் கேட்பதாக அருளினார் அதற்கு இராபத்து என பெயர் வைத்தார். அதன் பின்னர் உன் மீது பாடப்பட்ட நாலாயிரம் திவ்யபிரபந்தங்களையும் கேட்டு அருள வேண்டும் என கேட்க, சரி சொல்ல இதை எப்படி கேட்க என நினைத்த பெருமாள் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் பகல் பத்து என பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர உள்ள பாசுரங்களை கேட்டு அருள்வதாக கூறினார்.  வைகுண்ட ஏகாதசி 2020 விரதம்: முழுபலனையும் அடையும் வழிகள்

  அப்படி ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களை கேட்ட பெருமாள் வைகுண்ட வாசல் வழியாக வெளியே வரும் போது அவரை தரிசிக்க பக்தர்கள் விரதம் இருந்து வணங்குவது வழக்கம்.

  [​IMG]
  பத்ராசலம் சீதா ராமர் கோயில்

  வைகுண்ட ஏகாதசி விரதம்
  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளை தரிசிக்க பக்தர்கள் தசமி அன்றும், ஏகாதசி முழுவதும் விரதம் இருப்பதோடு, ஏகாதசி பகல், இரவில் தூங்காமல் கண் விழித்து பெருமாளின் பாசுரங்களை கேட்டு, பெருமாளை சேவித்து அவனின் அருளைப் பெற பகதர்கள், வைகுண்ட வாசல் வழியாக வரும் பெருமாளை தரிசித்து, சொர்க்க வாசல் வழியாக நுழைந்து தரிசிக்க மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வைகுண்ட ஏகாதசி நாளில் விரதமிருந்து சொர்க்கவாசலில் பெருமாளை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்


  சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும். எல்லாம் வல்ல பெருமாளின் திருவடியை சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் இறைவன் தனது பக்தர்களையும் அந்த வாசல் வழியாக அழைத்துச்சென்று அருள்பாலிக்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தொடங்கி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரை தமிழகம் முழுவதும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து முடிந்து ராப்பத்து விழாவின் தொடக்கமாக சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மார்கழி மாதம் பெருமாள் கோவில் நடைபெறும் மகத்துவமான விழா வைகுண்ட ஏகாதசி திருவிழா. 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமே சொர்க்கவாசல் திறப்புதான். பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் இறைவனைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,600
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஏகாதசி விரத மகிமை

  தாயைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை, காசியை மிஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அது போல் ஏகாதசி விரதத்தை விட சிறந்த விரதமும் இல்லை. அந்த அளவுக்கு மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் உயர்ந்ததாகும். அதிலும் மார்கழி மாதத்தில் சுக்லபக்ஷ திதியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் தான் மிக உயர்ந்த விரதம்.
   

Share This Page