வ‌ணிக‌ம் செய்திகள்

Discussion in 'Technology News' started by NATHIYAMOHANRAJA, Mar 23, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  Long Lasting பேட்டரி: ஆன்லைன் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி M21!

  அதிக பேட்டரி திறன் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

  இந்த வருடத்தின் துவக்கம் முதலே சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்த பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது.

  மிட்நைட் பிளாக் மற்றும் ராவென் பிளாக் நிறங்களில் அறிமுகம் ஆகியுள்ள சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று முதல் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்கியுள்ளது.
  [​IMG]
  சாம்சங் கேலக்ஸி எம்21 சிறப்பம்சங்கள்:
  # 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  # கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
  # மாலி-G72MP3 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
  # 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
  # டூயல் சிம், கைரேகை சென்சார்
  # 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  # 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
  # 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
  # 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  # 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கம்மி விலையில் விற்பனைக்கு லைன் கட்டி வரும் Redmi!!

  சியோமி நிறுவனத்தின் Redmi Note 9S ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


  சியோமி நிறுவனம தனது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் தான் Redmi Note 9 ப்ரோ, Redmi Note 9 மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில் Redmi Note 9S ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது.

  கடந்த ஆண்டு வெளியான Redmi Note 7S ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக Redmi Note 9S இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.12,000 என்ற சிறப்பு விலையில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனா வைரஸால் 2 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் வாய்ப்பு உள்ளதாக ஐ.நா சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


  கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளது ஒருபுறமிருக்க, மறுபுறம் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நாடுகளிடையேயான பொருளாதார வீழ்ச்சியை கணக்கிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு 2020ன் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவின் பொருளாதாரம் 13.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

  பொருளாதார அமைப்பில் ஏற்படும் சீர்குலைவுகள் உள்நாட்டு சிறுவணிகர்களை மிகவும் பாதிக்கும் எனவும், இதனால் உலகம் முழுவதும் இரண்டு முதல் இரண்டரை கோடி மக்கள் வரை தங்களது வேலையினை இழப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

  இவற்றில் 74 லட்சம் பேர் அதிக வருமானம் பெறும் நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், இதனால் உழைப்பாளர்களின் உழைப்பு 3 ட்ரில்லியன் டாலர்கள் வரை இழப்பை சந்திக்கும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஐய் ஜாலி!! WFH Dude-களுக்கு டெய்லி 5ஜிபி BSNL டேட்டா ஃப்ரீ...

  பிஎஸ்என்எல் நிறுவனம் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.


  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஊயியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்காக Work@Home என்னும் டேட்டா ப்ளானை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

  ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவச இணைய சேவையை Work@Home என்னும் டேட்டா ப்ளான் மூலமாக வழங்குகிறது. இந்த சேவையின் கீழ் தினமும் 5ஜிபி டேட்டா இலவசமாக ஒரு மாதத்திற்கு வழங்கப்பட உள்ளது.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வீட்ல சும்மா இருந்தா போர் அடிக்கும்ல... டேட்டா + டாக்டைம் அள்ளிக்கொடுக்கும் அம்பானி!

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆட்-ஆன் ரீசார்ஜ் மீது சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.


  கடந்த 2018 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் ரீசார்ஜ் சேவையை வழங்கியது. தற்போது இந்த ரீசார்ஜ் சேவையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

  ஆம், ஆட்-ஆன் ரீசார்ஜ் செய்யும் போது முன்பை விட இருமடங்கு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் வழங்கப்படுகிறது. அதாவது, முறையே ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட்-ஆன் ரீசார்ஜ் 400 எம்பி, 1 ஜிபி, 3 ஜிபி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது.

  ஆனால், த்ற்போது இந்த மாற்றத்திற்கு பிறகு 800 எம்பி, 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இதேபோல வாய்ஸ் கால் அழைப்புகளுக்கான நிமிடங்களும் இருமடங்கு அதிகமாகக்கப்பட்டுள்ளது.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மூடப்பட்ட பள்ளிகள் : கைகொடுக்கும் பைஜூஸ், அனக்காடமி !

  கொரோனா வைரஸ் எதிரொலியால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் படிக்க ஆன்லைன் தளங்கள் உதவி செய்ய முன்வந்துள்ளன.


  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு பாடத்திட்ட பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படாத சூழலில் மாணவர்கள் முழுவதுமாக படிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்படிருந்தாலும் வீட்டிலுள்ள மாணவர்கள் அடுத்த வகுப்பு செல்லும் முன் நடப்பு பாடத்திட்டங்களை முழுமையாக கற்று தேற வேண்டியது அவசியமாக உள்ளது.

  இந்நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக படிப்பதற்கு சிறந்த கல்வி அப்ளிகேசன்கள் வாய்ப்புகளை அளித்துள்ளது. இந்தியாவில் பலரால் ஆன்லைன் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் பைஜூஸ் அப்ளிகேசன் தனது சேவையை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பைஜூஸ் பயன்படுத்தும் மாணவர்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் இறுதி வரை இந்த அப்ளிகேசனை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக தங்கள் பாடங்களை படித்து கொள்ளலாம். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் விளக்கம் அளிக்கும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளதாக பைஜூஸ் நிறுவன துணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் தெரிவித்துள்ளார்.

  மற்றும் சில பிரபல கல்வி அப்ளிகேசன் சேவை நிறுவனங்களான Unacademy மற்றும் nCatalyst ஆகிய சில நிறுவனங்களும் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி பயில சில ஆஃபர்களை அறிவித்துள்ளனர்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம்

  கடந்த வாரத்தில் பெரும் விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை தற்போது மெல்ல குறைந்து வருகிறது.


  கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது விலை மெல்ல சரிவை சந்தித்து வருகிறது.

  அதன்படி சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து ரூ.30,672க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.34 குறைந்து ரூ.3,834-க்கு விற்பனையாகி வருகிறது.

  எனினும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் ஷாப்பிங் செல்வதை தவிர்த்து வருவதால் நகைக்கடைகள் வெறிச்சோடி காணப்படுவதாக வியாபாரிகள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வெய்ட்டிங் இஸ் ஓவர்: விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ!!

  சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.


  கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...

  ரெட்மி நோட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:
  # 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
  # கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
  # ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
  # அட்ரினோ 618 GPU
  # 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
  # டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
  # 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79
  # 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  # 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
  # 2 எம்.பி. டெப்த் சென்சார்
  # 16 எம்.பி. செல்ஃபி கேமரா
  # 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

  விலை விவரம்:
  1. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999
  2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அதிரடியாக விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

  விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீது ரூ.4,000 விலை குறைப்பை நிகழ்த்தியுள்ளது.


  விவோ நிறுவனம் கடந்த ஆண்டு 8 ஜிபி ரேம் கொண்ட விவோ Z1X ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் பின்னர் இதே ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை ரூ.21,990 க்கு அறிமுகப்படுத்தியது.

  தற்போது இந்த வேரியண்ட் மீதான விலையில் ரூ.4,000 வரை குறைத்துள்ளது. விலை குரைப்பிற்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,990-த்திற்கு பிளிப்கார்ட் மற்றும் விவோ இ-ஸ்டோரில் கிடைக்கிறது.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பட்ஜெட் விலையில், மேக்ஸிமம் ஃபீசர்சுடன் ரெட்மி நோட் 9 மேக்ஸ்!!

  சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  ரெட்மி நோட் 9 மேக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி துவங்குகிறது. இவை அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...

  ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
  # 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
  # கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 618 GPU
  # ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
  # ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
  # 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
  # டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
  # 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89 (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
  # 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  # 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
  # 2 எம்.பி. டெப்த் சென்சார்
  # 32 எம்.பி. செல்ஃபி கேமரா
  # 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

  விலை விவரம்:
  1. 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999
  2. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999
  3. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999
   

Share This Page