ஸ்டேஷன்களில் பொதுமக்களை வரவேற்க போலீசாருக்கு பயிற்சி

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 13, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    4,451
    Likes Received:
    469
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சேலம்: சேலம் மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை வரவேற்கும் வகையில் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் எந்த ஒரு காவல் நிலையத்திலும் சரியாக வரவேற்பாளர் இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் வரவேற்பு காவலர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. சேலம் மாநகரத்தில் இருந்து 35 ஆண் மற்றும் பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்ற பேராசிரியர் ஞானசேகரன் பொதுமக்களை வரவேற்பது எவ்வாறு என்பது குறித்து பயிற்சி அளித்தார். இதையடுத்து கமிஷனர் சங்கர் பேசுகையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு பொதுமக்கள் வருவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது.

    அவர்கள் தைரியமாக காவல் நிலையம் வந்து புகார் கொடுக்க வேண்டும். நம்மை தேடி காவல்நிலையம் வரும் பொதுமக்களிடம் எதற்காக வந்துள்ளனர். அவர்களின் பிரச்னை என்ன என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நம்பிக்கை வரவைக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். அவ்வாறு வருபவர்களிடம் ஒருமையில் பேசக்கூடாது. அன்போடு பேசி அவர்களுக்கு வேண்டிய தீர்வை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    இதில் 35 காவலர்களுக்கு பயிற்சி வழங்கினாலும் இதிலிருந்து 20 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காவல் நிலையங்களில் வரவேற்பு பணி வழங்கப்படும். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அவர்கள் பணியில் இருப்பார்கள். வாரத்திற்கு ஒருநாள் அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படும். இந்த 20 காவலர்களும் மாநகர கமிஷனர் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல் படுவார்கள். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அவர்கள் நுண்ணறிவு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு நொடல் அதிகாரியாக உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த பயிற்சி முகாமில் துணை கமிஷனர்கள் தங்கதுரை, ஷியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் கர்ப்பகம், எஸ்ஐ கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

Share This Page