27 நட்சத்திரங்களுக்கு ஒரே இடத்தில் பரிகார மரங்கள்

Discussion in 'Temples and worship' started by webadmin, Nov 18, 2014.

 1. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  View attachment 33

  சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு எதிரே வாசவி சுபிட்ஷா ஹால் உள்ளது. இந்த ஹாலின் அருகே சுபிட்ஷா நட்சத்திர பிருந்தாவனம் உள்ளது. இந்த பிருந்தாவனத்தில் ஒரே இடத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய விருட்சங்கள் உள்ளன. பிருந்தாவனத்தின் நுழைவு வாயிலில் வலம்புரி விநாயகர் சன்னதி உள்ளது. இதற்கு அடுத்து ராகு, கேது சிலையும், துளசி, நெல்லிக்கனி மரம் உள்ளது. இந்த தெய்வங்களை வணங்கிவிட்டு பிருந்தாவனத்தை சுற்றி வந்து வழிப்பட்டால் துன்பம் நீங்குவதாக பிருந்தாவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  இது குறித்து வாசவி மகிளா சமாஜத்தின் நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய விருட்சங்கள் வாலாஜா பேட்டையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம் வாசவி சுபிட்ஷா ஹாலில் தான் உள்ளது. இந்த சுபிட்ஷா பிருந்தாவனத்தின் சுற்றளவு 270 அடியாகும். பிருந்தாவனத்தின் தரைதளம் அக்குபஞ்சர் முறைப்படி கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதை 27 முறை சுற்றி வந்ததால் இரண்டை கால் கிலோமீட்டர் சுற்றி வந்ததற்கு சமமாகும்.

  இங்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். பிருந்தாவனத்தை சுற்றும்போது சுத்தமான மூலிகை காற்றும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. மேலும் காலில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் அவர்களுக்குரிய விருட்சங்களை வழிபட்டு, தண்ணீர் ஊற்றினால் வாழ்க்கையில் தண்ணீரை போல துன்பம் நீங்கும்,“ என்றனர்.

  வ.எண் நட்சத்திரம் செடி, மரங்கள்

  1. அஸ்வினி எட்டிமரம்
  2. பரணி நெல்லிமரம்
  3. கிருத்திகை அத்திமரம்
  4. ரோகினி நாவல்மரம்
  5. மிருகசீருஷம் கருங்காலி மரம்
  6. திருவாதிரை செங்கருங்காலி மரம்
  7. புனர்பூசம் மூங்கில்மரம்
  8. பூசம் அரச மரம்
  9. ஆயில்யம் புன்னைமரம்
  10. மகம் ஆலமரம்
  11. பூரம் பலாசம் மரம்
  12. உத்திரம் அலரிமரம்
  13. அஸ்தம் அத்திமரம்
  14. சித்திரை வில்வம்மரம்
  15. சுவாதி மருதுமரம்
  16. விசாகம் விளாமரம்
  17. அனுஷம் மகிழம்பு மரம்
  18. கேட்டை பிராய்மரம்
  19. மூலம் மராமரம்
  20. பூராடம் வஞ்சிமரம்
  21. உத்திராடம் பிலாமரம்
  22. திருவோணம் எருக்கஞ்செடி
  23. அவிட்டம் வன்னிமரம்
  24. சதயம் கடம்பு மரம்
  25. பூரட்டாதி தேவராமரம்
  26. உத்திரட்டாதி வேம்புமரம்
  27. ரேவதி இலுப்பைமரம்
   

Share This Page